2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்துக்குப் பிறகு பெருந்தோட்டங்களுக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் தனிவீட்டுத்திட்டம் முக்கியமானது. 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மாடிலயன் மற்றும் தனிவீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவை பெருவாரியாக விஸ்தரிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டுக்குப்பின்னர் 100 நாள் வேலைத்திட்டம், பசுமை வீட்டுத்திட்டம், புதியவாழ்வு வீட்டுத்திட்டம், ஹரித ரன் வீட்டுத்திட்டம் மற்றும் இந்திய வீட்டுத்திட்டம் என பல தனிவீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. இவை பெருந்தோட்ட மக்களின் நலன்களில் முக்கியமான விடயங்களாக இருந்தாலும் அவை தரமான நிர்மாணங்களாக அமைந்திருந்தனவா என்பது தொடர்பிலே நாம் ஆராய வேண்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டின் தேசிய கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்கறிக்கையில் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம் தொடர்பாக பல்வேறு குறைபாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது மக்களின் உரிமைகளை சுரண்டும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 2014 - 2017 ஆம் ஆண்டு வரையிலும் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணங்களில் ரூபா 1,392.73 மில்லியன் பெறுமதியான வீடுகள் மற்றும் ரூபா 23.30 மில்லியன் பெறுமதியான உடகட்டமைப்பு வசதிகளை வழங்குதல் தொடர்பான பௌதீக பரிசோதனையொன்றினை மேற்கொள்ளும்போது அவதானிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:
தோட்ட அமைப்புகளிடமிருந்து உப ஒப்பந்தம் கையளிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பணிகளை பூர்த்தி செய்யும் இயலுமை தொடர்பில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பினால் பரீட்சித்தலொன்று இடம்பெற்றிராததுடன், நிர்மாணங்கள் மற்றும் பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய ஒப்பந்தங்கள் போதுமான இயலுமை இல்லாத ஒப்பந்தக்காரர்களால் மற்றும் ஒப்பந்தக்காரராக பதிவு செய்திராத நபர்களால் நிறைவேற்றப்படுவதாக தளப் பரிசோதனைகளின் போது அவதானிக்கப்பட்டது.
மதிப்பீடு மற்றும் தொழிற்துறையில் காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட அளவைகளிடையே பாரியளவான வேறுபாடுகள் நிலவின. கிறின் கோல்ட் ஹவுசின் செயற்றிட்டத்தின் திட்டத்துக்குரிய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பின் மதிப்பீடு நுவரெலியா மாவட்டத்தினுள் காணப்படும் கட்டிடங்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவீடுகளுக்கு தயாரிக்கப்பட்ட மதிப்பீடுகள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பின் மதிப்பீட்டினை விட 30 சதவீதத்தால் அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டது.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பினால் கூட்டுறவு சங்கங்களுடன் உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டு அமைச்சின் செயற்றிட்டங்கள் அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன், கூட்டுறவு சங்கங்களால் ஒப்பந்த இயலுமை பரிசோதிக்கப்படாது உப ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய வருடமொன்றிற்கு 10 மில்லியனுக்கு அதிகமான செயற்றிட்டங்கள் பெறுகை நடைமுறைக்கு புறம்பாக ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கியிருந்தமை அவதானிக்கப்பட்டது.
அனைத்து செயற்றிட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு முன்னர் தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி அமைப்பின் பரிந்துரை பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அதன் பரிந்துரைகளுக்கமைய செயற்பட்டுள்ளதா என கணக்காய்வின் போது திருப்தி கொள்ள முடியாதிருந்ததாகவும் மேலும் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் குடியேறுவதற்கு முன்னர் தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி அமைப்பின் பரிந்துரைகளுக்கமைய நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும், அவ்வாறு அங்கீகாரம் பெற்றுக்கொண்டதாக சான்றுகள் முன்வைக்கப்பட்டிருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தோட்டப்பிரிவின் கீழ் தேசிய நிலைபேறான அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்காக 2016 மார்ச் மாதம் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சால் அரங்கேற்றப்பட்ட பெருந்தோட்ட சமுதாய சமூக அபிவிருத்திக்கான தேசிய செயல் நடவடிக்கைத் திட்டத்துக்கமைய 2016 – 2020 ஆகிய ஐந்து வருடங்களினுள் அடைந்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள இலக்குகளுக்கமைய 2017 ஆம் ஆண்டிற்குரிய அடைவு இலக்குகள் மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான செயல் நடவடிக்கைத்திட்டத்துக்கமைவான இலக்க அடைவு ஆகியவற்றுக்கிடையே கருத்திற்கொள்ளக்கூடிய வேறுபாடொன்று பின்வருமாறு நிலவுவதாக அவதானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மலையக மக்களை முன்னிலைப்படுத்தி செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் பெரும்பாலானவை முறையற்ற வகையிலும் மதிப்பீடுகளுக்கு ஏற்றவகையில் மேற்கொள்ளப்படாமையும் பரவலாக காணப்படும் விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறான முறையற்ற வேலைத்திட்டத்தின் காரணமாக பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் நீடித்து நிலைக்குமா அல்லது எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக்கூடிய வகையில் அமையுமா என்பது சந்தேகமே. தற்போதும் கூட நிர்மாணிக்கப்பட்டுள்ள தனிவீடுகள் சாதாரண காலநிலைக்குக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் கவிழ்ந்து வீழ்வதை அவதானிக்கக்கூடிய சூழல் காணப்படுகின்றது. ஆனால் வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, கூரைகளுக்கு ஆணிகள் பொருத்தி முடியாத சந்தர்ப்பத்தில் மழை வந்ததால் கூரைகள் கவிழ்ந்துவிடுவதாக செய்திகள் வெளியிட்டு விடுகின்றார்கள்.
மலையகத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் கட்சிகளுக்குரியதோ அல்லது கட்சிப்பணத்திலோ, அரசியல்வாதிகளின் பணத்திலோ மேற்கொள்ளப்படுவதில்லை. இவை மக்களுக்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு உதவிகளிலும் மக்களின் வரிப்பணத்திலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டமாகும். இந்த அபிவிருத்திகளை தரமானதாகப் பெற்றுக்கொள்ள மக்களுக்கு உரிமையுண்டு. அதனை தடுப்பது சட்டவிரோதமாகும். ஆனால் தற்போது எதிர்ப்பு அரசியலை முன்னிலைப்படுத்தி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதால் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதே தவிர தரம் கண்டுகொள்ளப்படுவதில்லை.
இவற்றை விடவும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமையளித்து வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது அனைத்தும் கிடப்பில் கிடக்கி;றன. இந்நிலையில் பண்டாராவளை, கிறேக் பெருந்தோட்;டப் பிரிவில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரு கூடாரங்களில் ஏற்பட்ட தீயினால் அங்கு தங்கியிருந்தவர்களின் நிலைமை இன்னும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய தனிவீட்டுத் திட்டத்தின் மாதிரி அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை யாவுமே நடைமுறைக்கு வரவில்லை என்பதே பெரும் குறைபாடாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட 50 நாள் ஆட்சியின்போது, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக பொறுப்பேற்றிருந்த எஸ்.அருள்சாமி தலைமையில் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் தரம் தொடர்பாக ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் குழுவின் அறிக்கையும் வெளிவரவில்லை. 50 நாள் ஆட்சியும் நிலைக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பித்த 1000 ரூபா பிரசாரம் மட்டும் இன்று வரையும் நிலைத்திருக்கும் அளவுக்கு வீட்டுத்திட்டங்களின் தரம் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை. மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வீட்டு;த்திட்டங்கள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக தோட்ட கூட்டுறவு சங்கங்களின் மூலமாக வீட்டுத்pட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் ஒப்பந்தக்காரர்களை தோட்ட நிர்வாகங்களே தேர்ந்தெடுக்கும் ஒரு நிலையும் காணப்படுகின்றது. எனவே முதலில் நிர்மாணங்களை ஆரம்பிக்கும் முன்பாக ஒப்பந்தங்கள், கட்டுமாணப்பொருட்கள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி, பயனாளிகளின் முன்னுரிமை போன்ற பல்வேறு விடயங்களையும் ஆராய வேண்டியுள்ளதுடன் வீட்டுத்திட்டத்தையும் துரிதப்படுத்த வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக