கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூலை, 2020

5000 ரூபா கொடுப்பனவிலிருந்து விலக்களிக்கப்படும் பெருந்தோட்ட மக்கள்

நாட்டில் நிலவிய சுகாதார நெருக்கடிகள் தற்போது சீர்செய்யப்பட்டுள்ள நிலையில் மக்களுடைய வாழ்வாதாரம் இன்னும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை. மறுபுறம் அரசாங்கம் தேர்தலில் செலுத்தும் கவனத்தை மக்களுடைய தேவைகளின் மீது செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாகவே சுமத்த முடியும். இவற்றில் அரசாங்கத்தின் பேரிடர் நிலைமை காரணமாக சமூக நன்மைகள் நிகழ்ச்சித்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளையும் அவற்றில் மேற்கொள்ளப்படும் அதிகார து~;பிரயோகத்தினையும் ஆராய்வது அவசியமாகும். அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவுகள் பெரும்பாலான மாவட்டங்களில் மே மாதத்துடன் வழங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பெருந்தோட்டப்பகுதிகளில் ஜுன் மாதம் கடக்கின்ற நிலையிலும் இன்னும் வழங்கி முடிக்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஜுன் மாதத்துக்கான கொடுப்பனவுகளை தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தலினால் அரசாங்கம் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் மே மாதத்துக்கான கொடுப்பனவுகளே இன்னும் பெருந்தோட்டப் பகுதிகளில் வழங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் அண்மையில் வட்டவளை பிரதேசத்தில் கரோலினா, தெபட்டா, அகரவத்தை, மவுன்ஜீன், ரொசல்ல உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த 800 பேர் வரையானவர்களுக்கு இன்னும் 5000 ரூபா கிடைக்கப்பெறவில்லையென கூறி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதேவேளை மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் பெயர் பட்டியல் கிடைப்பதில் தாமதம் காணப்படுவதாக கூறி கொடுப்பனவு வழங்குவது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாதவர்கள் தினந்தோறும் சமுர்த்தி அலுவலகத்துக்கு சென்று ஏமாற்றத்துடனேயே திரும்பி வரும் நிலை காணப்படுகின்றது.

இதேவேளை பலாங்கொட, வலயபொட பகுதியில் 500 ரூபா செலுத்தி சமுர்த்தி வங்கி கணக்கொன்றை ஆரம்பித்தால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென்று சமுர்த்தி அதிகாரியினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 5000 ரூபா பெற்றுக்கொண்ட சமுர்த்தி வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் கிராம சேவகர் பிரிவிலுள்ள சமுர்த்தி அதிகாரியினை சந்தித்து அங்கத்துவ கணக்கொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தேவையான தகவல்களை சமுர்த்தி அதிகாரியிடம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அவ் அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சுற்றறிக்கையின் பிரகாரம் பயனாளிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆரம்பத்தில் கிராம சேவகர் உத்தியோகத்தர்களும் சமுர்த்தி அதிகாரிகளும் தயாராக இல்லை.
கிராம மக்கள் தொடர்பாகவும் அவர்களுடைய பொருளாதாரம் தொடர்பிலும் நன்கு அறிந்த இவர்கள் வறுமையானவர்களை விட்டு தமக்கு பழக்கமானவர்களுக்கும் சிபாரிசின் பேரிலும் பெயர் பட்டியலை தயாரிக்கும் நிலை காணப்படுகின்றது. மக்களுக்காக சேவைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தனிப்பட்ட நலன்களில் அக்கறை செலுத்தி செயற்படும் நிலை தற்போது மேலோங்கியுள்ளது. பெருந்தோட்டங்களில் தொழில் புரியாத பலர் தலைநகரை நம்பியே தொழில் செய்து வந்தனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட சுகாதார இடர் காரணமாக அவர்களால் மீண்டும் தொழிலுக்கு செல்வது இயலாத காரியமாக காணப்படுகின்றது. இவ்வாறானவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் அலைய வைப்பது நியாயமானதல்ல.

அரசாங்கத்தின் பேரிடர் நிலைமை காரணமாக சமூக நன்மைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவைச் செலுத்துதல் தொடர்பாக வெளியிடப்பட்ட Pவுகுஃ03ஃ2020 ஆம் இலக்க 2020.03.31 ஆந் திகதிய சுற்றிக்கை மற்றும் Pவுகுஃ03ஃ2020(iஎ) ஆம் இலக்க 2020.04.03 ஆந் திகதிய சுற்றறிக்கைகளுக்கு மேலதிகமாக வெளியிடப்பட்ட இறுதி சுற்றறிக்கையில் காத்திருப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளிகளை மீண்டும் மீளாய்வு செய்து, தகுதியற்ற குடும்ப அலகுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்து நீக்கவும், நிலவும் நிலைமை காரணமாக உண்மையாகவே வாழ்வாதாரத்தை இழந்துள்ள, இந்தப் பயன்களை வழங்கும்போது முன்னுரிமை வழங்க வேண்டிய குடும்ப அலகுகள் காணப்படின் அவ்வாறான குடும்ப அலகுகளை பட்டியலில் இணைத்து முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான குடும்ப அலகுகள் நாளாந்த வாழ்வாதாரங்களை இழந்து வாழ்வதற்கான வழியின்றி ஆதரவற்ற நிலைமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினால், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, அவர்களுக்கு உத்தேச 5000 ரூபா கொடுப்பனவை மிகவும் துரிதமாக செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதோடு, இப்பணியை உயர்ந்தபட்ச வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமாகவும் மேற்கொள்ளவும் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியான அனைத்து குடும்ப அலகுகளுக்கும் அந்த பயனை வழங்கவும், தகுதி பெறாத குடும்ப அலகுகளுக்கு அந்த பயன் செலுத்தப்படுவதனைத் தவிர்ப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், கட்டுமானத்துறைக்கு ஏற்புடைய சேவைகளை வழங்கும் பிரிவினர், கைத்தொழில் துறையில் ஈடுபடுவோர், பிரதேச மற்றும் கிராமிய மட்டத்தில் சேவைகளை வழங்குவோர், கிராமிய ரீதியாக விற்பனைகளில் ஈடுபடுவோர் போன்றவற்றுடன் முன்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பேருந்துச் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், அரச சேவையில் ஈடுபடாத ஆயுர்வேத மருத்துவ சபையில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், கைவினைஞர்கள், கைத்தரி புடவை கைத்தொழிலாளர்கள், நீதிமன்றங்கள் மூலம் பராமரிப்புக் கொடுப்பனவுகளைப் பெறும் பெண்கள், வருமானத்தை இழந்த சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் ஆகிய தொழில் பிரிவுகளைச் சேர்ந்த குடும்ப அலகுகளை இப்பட்டியலில் உள்ளடக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளடக்கப்படாவிட்டாலும் மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய பிள்ளைகளும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே நிவாரணங்களை பெறுவதிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்க முடியாது. ஆனால் ஒரு குடும்பத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் நிவாரணத்தொகையினை பெற்றுக்கொண்ட சம்பவங்கள் அதிகம் பதிவாகியிருக்கின்றன. இதனால் நிவாரணங்களை பெறத் தகுதியான பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாகக் கூறினால் அரசாங்கம் வழங்குகின்ற ஐயாயிரம் கொடுப்பனவின் மூலம் சரிந்துபோன வாழ்வாதாரத்தினை மீட்டு விட முடியாடிதென்பது பலருக்கும் தெரியும். ஆனால் அரசாங்கம் வழங்குகின்ற சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு சகலருக்கும் தகுதியிருக்கின்றது. இவற்றில் தகுதியானவர்களை தெரிவு செய்வதிலேயே தவறிழைக்கப்படுகின்றது. எனவே பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு நிவாரணங்கள் சென்றடைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக