எனது தந்தை இறந்து 10 வருடங்களில் பல மிக்கதலைவராக கூறப்படும் தற்போதைய தலைவர் அமைச்சராக, இராஜாங்க அமைச்சராக, பிரதி அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக, அரசியல் பலம் மிக்கவராக கூறப்படும் ஒருவர் தன் கட்சிக்கு என்றுள்ள மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெரும் அளவுக்கு ஏன் கட்சியை வளர்க்கவில்லை. நான் போட்டியிட்டு அவர் தோல்வியடையும் நிலை எனது பலமா அல்லது அவர்களின் பலவீனமா?. நான் தான் மலையக மக்கள் முன்னணியாக இருப்பேன். இப்போது முன்னணி ஒரு மாயத்தலைமையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கமே இல்லாத இயக்கமாக இறுதிமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக அதனை அதற்கே உரிய வீரியத்துடன் வளர்ப்பேன் என்று தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளரும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேற்சை சின்னத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவருடனான நேர்காணல் வருமாறு:
1. தாங்கள் அரசியலுக்குள் பிரவேசித்து முதலாவது தேர்தலை எதிர்கொள்கின்றீர்கள். அந்த அனுபவம் எப்படியிருக்கிறது?
என் தந்தையின் அரசியல் கருத்துக்களையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு என்னை ஏற்றுக்கொள்பவர்களைப் புரிந்துக்கொண்டு புதிய தலைமுறைகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதால் இப்பயணம் எனக்கு அதிக பொறுப்பையும் அதேநேரம் சாதிக்கவேண்டுமென்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2. மலையகத்தில் மூத்த அரசியல் தலைவர்கள் இல்லாத ஒரு நேரத்தில், இளம் சந்ததியினரை மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கின்றார்களா?
எனது தந்தை தனது அரசியலை ஆரம்பிக்கும் போது அவருடைய வயது 21. அவரை ஆதரித்தவர்களின் வயதும் இளமையானதே. ஆனால் கருத்து பலமும் காலத்துக்கேற்ப சிந்தனையும் அவரை மக்கள் தலைவனாக்கியது. ஆரோக்கியமான துணிவான கருத்துகளுக்கு முன்னால் மூத்ததலைவர்கள் என்ற சம்பிரதாயம் நிச்சயம் தோல்வியடையும்.
3. மலையக மக்கள் முன்னணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமை, உங்களை தேர்தலில் தோல்வியடையச் செய்வதற்கான செயற்பாடா?
எவ்விதத்திலும் இல்லை. மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைமை என்னை மட்டுமல்ல, என் தந்தையின் விசுவாசிகளை மட்டுமல்ல, அவரின் கொள்கைகளையே உதாசீனப்படுத்தியதை நான் துணிந்து எதிர்த்ததன் விளைவுதான் இது. ஆனால் அவர்களின் முடிவு முதிர்ச்சியற்றது என்பதனை விரைவில் உணர்வார்கள். எனவே எவ்விதத்திலும் தோல்வியடைவது நானல்ல நிச்சயமாக அவர்கள்.
4. மலையகத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பிரதிநிதிகளின் பங்கு இல்லாமைக்கான காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்?
பெண்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் சகலமட்டத்திலும் ஏற்படவேண்டும். பெண்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் தைரியத்தையும் துணிவையும் ஏற்படுத்திக்கொண்டால் இது சாத்தியமாகும். ஒரு சட்டத்தரணியாக, தாபகத்தலைவனின் மகளாக எனக்கே எனது அமைப்பில் இருந்தே இவ்வளவு எதிர்ப்புகள் எழுகின்றன என்றால், சாதாரண பெண்கள் எப்படி இதனை எதிர்க்கொள்ளபோகிறார்கள். ஆணாதிக்கத்தை உடைத்துக்கொள்ளும் பண்பினை கல்வித்துறையில் இலக்கியத்துறையில் தொழில்வாய்ப்புகளில் பெண்கள் ஏற்படுத்திவருவது போன்று அரசியலிலும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
5. எதிர்வரும் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றவுடன், மீண்டும் மலையக மக்கள் முன்னணியிலிருந்து அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
மலையக மக்கள் முன்னணிக்கு அவர்கள் என்னை அழைக்கத்தேவையில்லை. நான் தான் மலையக மக்கள் முன்னணியாக இருப்பேன். இப்போது முன்னணி ஒரு மாயத்தலைமையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கமே இல்லாத இயக்கமாக இறுதிமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக அதனை அதற்கே உரிய வீரியத்துடன் வளர்ப்பேன்.
6. மலையகத்தில் பல தலைவர்கள் ஆட்சி செய்திருந்தாலும் மக்களுடைய வாழ்வாதாரம் இன்னும் கீழ் மட்டத்திலேயே இருக்கிறது. அதற்கு காரணம் என்ன?
இதற்கு என் தந்தை அருமையான விளக்கத்தைக் கொடுத்திருந்தார். நாம் என்னென்ன உரிமைகளுக்கு உரியவர்கள் என்று மக்களும், மக்கள் என்னென்ன உரிமைகளுக்கு உரித்தானவர்கள் என்பதனை தலைமையும் புரிந்து கொள்ளாதவரை இந்த அவலம் தொடரும் என்று அப்போதே கூறினார். 1977 இலிருந்து 2020 வரை 43 வருடங்களாக எமது தலைமைகள் கபினட் அமைச்சர்களாக, பிரதியமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டுமன்றி மாகாணசபை, பிரதேசசபை, நகரசபைகளிலும் அதிகாரமிக்கவர்களாக இருந்தும் கூட மக்களின் பிரச்சினை அப்படியேதான் இருக்கிறது. இந்நிலையில் ஏனைய சமூகங்களுக்கு நிகராக நாம் எப்போது வளரப்போகிறோம். தனிவீட்டுத்திட்டம், இலவச மின்சாரம், சமுர்த்தி, தமிழ் கிராமசேவகர் போன்ற அரச வளங்கள் இவற்றை என் தந்தை அறிமுகப்படுத்தியது போல சமூக நலன் சார்ந்த விடயங்கள், தொழில் சார்ந்த பேதங்களுக்கு அப்பால் நிறைவேற்றப்பட வேண்டும். தொழிற்சார்ந்த போட்டி எமது வளர்ச்சியை தடைசெய்கிறது என்பது என் கருத்து. 43 வருடங்கள் என்பது ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம். ஆனால் வெறுமனே கழிந்துவிட்டது.
7. தாங்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி சார்பாக இரு ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சி என்று கூறப்படுகிறதே?
இது பலவீனத்தின் முனகல் ஆகும். எனது தந்தை இறந்து 10 வருடங்களில் பல மிக்கதலைவராக கூறப்படும் தற்போதைய தலைவர் அமைச்சராக, இராஜாங்க அமைச்சராக, பிரதி அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக, அரசியல் பலம் மிக்கவராக கூறப்படும் ஒருவர் தன் கட்சிக்கு என்றுள்ள மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெரும் அளவுக்கு ஏன் கட்சியை வளர்க்கவில்லை. நான் போட்டியிட்டு அவர் தோல்வியடையும் நிலை எனது பலமா அல்லது அவர்களின் பலவீனமா? பிரதேசசபை, நகரசபை தேர்தல்களில் கூட சொந்த சின்னத்தில் போட்டியிட தைரியமில்லாதவர்கள் இதைப்போன்று பலக்கதைகளைக் கூறலாம். அண்டிவாழும் அரசியல் எனக்குத் தேவையில்லை.
8. தேர்தலில் வெற்றி பெற்றவுடன், தந்தையாரின் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு முயற்சிப்பீர்களா?
நிச்சயமாக, எனது நோக்கம் மட்டுமல்ல என்னை ஆதரிப்பவர்கள் அனைவரினதும் எதிர்ப்பார்ப்பும் இதுதான். சாதித்துக்காட்டுவேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக