கலுதொட்டகே உதய பிரதீப் குமார என்பவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார். 39 வயதைத் தாண்டியவர். இவர் சில காலம் இராணுவ அணிவகுப்புப்பிரிவில் கடமையாற்றி வந்துள்ளார். சுமார் 12 வருட காலம் இராணுவச் சேவையில் இருந்த அவர், பின்னர் அதிலிருந்து விலகினார்.இவர் 2011 ஆம் ஆண்டே இவ்வாறு விலகினார். குமாரவின் மனைவி கொட்டவில விதானலாகே தொன் அயேஷா திமுதி மஞ்சரி ஆவாள். இவள் அக்மீமன , பின்னத்துவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாøயொன்றில் சேவை புரிந்து வந்தாள். இவர்கள் இருவரினதும் மூத்த மகன் கலுதொட்டகே அயேஷ் முதித மாவில , உபநந்த வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருகின்றான். குடும்பத்தின் இரண்டாவது மகளான கலுகொட்டகே தேவிஹாரா அந்தப் பாடசாலையிலேயே தரம் 2 இல் கல்வி கற்று வருகின்றாள். இளையவனான கலுகொட்டகே எசந்து நிசதிதவும் குறித்த பாடசாலையில் தரம் 1 இல் கல்வி கற்று வருகிறான். இவர்கள் பிலான, கொடகந்தபிரதேசத்தில் வசித்து வந்தனர். பிரதீப் குமார தனது மூன்று பிள்ளைகள் மீதும் மனைவி மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். மனைவி ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்ற பின்னர் பிள்ளைகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் பிரதீப் குமாரவே மேற்கொண்டு வந்தார். இவர் வீட்டில் இருக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிள்ளைகள் மூவரும் இவரைச் சுற்றியே தொங்கிக் கொண்டிருப்பர். அதுமட்டுன்றி பிரதீப் குமார பிலான பிரதேச மக்களிடத்தில் நன்கு பிரசித்திபெற்ற ஒருவராகவும் விளங்குகிறார். இவர் இசைத்துறையிலும் கலைத் துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஊரில் நடைபெறும் பெரஹரா நிகழ்வில் பேன்ட் இசைப்பதும் இவரே. பிரதேசத்தில் இடம்பெறும் பொது நிகழ்வுகளிலும் தனது பணத்தை செலவழித்தே பங்குபற்றி வந்தார். இதனால் ஊர் மக்கள் இவர் மீது அதீத மரியாதையும் கொண்டிருந்தனர். மேலும் நீதி நியாயத்துக்காக போராடும் ஒருவராகவும் இவர் காணப்படுகின்றார்.
சம்பவ தினமான கடந்த 4 ஆம் திகதி குமார வீட்டிலேயே இருந்தார். நேரம் காலை 9 மணியளவில் இருக்கும். பாடசாலையிலிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அந்த அழைப்பில் தேவிஹாரா சுகயீனமடைந்து காணப்படுவதாகவும் வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறப்பட்டிருந்தது. குமார அவசர அவசரமாக தனது மோட்டார்சைக்கிளில் பாடசாலை நோக்கிச் சென்றான். சென்ற வேகத்தில் மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மகளுடன் வீட்டிலிருந்து குமார , இளையவனை கூட்டி வருவதற்காக மகளுடன் மீண்டும் மானவில உபநந்த வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு நோக்கிச் சென்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் பகல் 12 மணியை அண்மித்துக்கொண்டிருந்தது. முதலாம் வகுப்பு மாணவர்களை கூட்டிச்செல்ல வந்த பெற்றோர்கள் நுழைவாயில் அருகே காத்துக்கொண்டு நின்றனர். சிறிது நேரம் அங்கு காத்து நின்ற குமார, மகளை ஒருகையில் பிடித்துக்கொண்டு ஆரம்பப் பரிவு பிரதான நுழைவாயிலை திறந்துகொண்டு பாடசாலைக்குள் நுழைந்தார். அதன்போது பிள்ளைகளின் பாதுகாப்புக்காக வேண்டி இரண்டாவது நுழைவாயிலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கடமையில் இருந்தார். பாடசாலை வளாகத்துக்குள் செல்ல வேண்டாமென குறித்த இராணுவச் சிப்பாய் குமாரிடம் தெரிவித்தார். இருப்பினும் குமார அவை எவற்றையும் பொருட்படுத்தவில்லை. இராணுவச் சிப்பாய் கூறியதையும் மீறி பாடசாலை வளவுக்குள் நுழைந்தார். பின்னர் இராணுவச் சிப்பாய் காவலில் இருந்த இரண்டாவது நுழைவாயிலுக்கருகில் சென்று அதைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் குமாரவுக்கும் இராணுவச் சிப்பாய்க்கும் இடையில் பலத்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பாடசாலைக்குள் செல்லவேண்டாமென அந்த இராணுவச் சிப்பாய் குமாரவுக்கு தெரிவித்தார். அந்த நேரத்தில் முதலாம் தரத்தில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் நுழைவாயிலுக்கருகில் வந்துசேர்ந்தனர். இருப்பினும் இராணுவ வீரரின் பேச்சுக்கு குமார அடிப்பணியவேயில்லை. அனுமதியின்றியே அந்த இரண்டாவது நுழைவாயிலூடாக உள் நுழைந்தார். கோபமடைந்த இராணுவ வீரர் தனது துப்பாக்கியால் குமாரவை சுட்டார். அந்த துப்பாக்கிச் சூட்டில் குமாரவின் வயிற்றைத் துளைத்துக்கொண்டு சென்ற குண்டானது அடுத்த பக்கத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. வெட்டி சாய்க்கப்பட்ட மரம் போல தனது மகளின் முன்னால் குமார சரிந்து வீழ்ந்தார். அவரது உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டேயிருந்தது. குமார தனது தலையை உயர்த்தியவாறு ஏதோ சொல்ல முன்வந்தார். அந்தச் சின்ன மகளுக்கோ இவை அனைத்தையும் நினைத்தும் பார்க்க முடியவில்லை. தனது கண் முன்னாலேயே தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாது விழிபிதுங்கி நின்றாள்.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்த பெற்றோர் கடும் சங்கடத்துக்குள்ளாகினர். பயந்து அச்சத்துடன் நிலைகுலைந்து நின்றனர். அதுமட்டுமன்றி அங்கிருந்து பெற்றோர்களும் மாணவர்களும் பயப்பீதியில் நடுங்கிப் போய்விட்டனர். பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி அங்கிருந்த பெற்றோர்களும் இவ்வாறான ஒரு சம்பவத்துக்கு முகம் கொடுத்திருக்கவில்லை. கீழே சுயநினைவின்றிக் கிடந்த குமாரவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல பலரும் முன்வந்தனர். அவர்கள் குமாரவை தூக்கிக்கொண்டு நுழைவாயிலுக்கு வெளியே சென்றனர். அந்தச் சந்தர்ப்பத்தில் குமாரவின் உடலிலிருந்து வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் பரவி நனைந்திருந்தது . அங்கிருந்தவர்கள் 119 என்ற அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டனர். அம்பியூலன்ஸ மூலம் கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு குமார கொண்டு செல்லப்பட்டார். அதன்போது குமார உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு இந்தப் பிள்ளைகளின் தந்தையின் திடீர் மரணம் பிலான கொடகந்தவத்த பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. ஊரிலுள்ள அனைவரும் குமாரவின் திடீர் மரணத்தால் சோபையிழந்தனர். குமார ஏற்கனவே ஊரில் நடைபெறும் பொது விசேட நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கியமையே காரணமாகும். இந்தச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இவரின் மூத்த மகன் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தான். தனது தந்தை இவ்வாறு கொலை செய்யப்படுவார் என அவன் ஒருபோதும் நினைத்ததில்லை . குமாரவின் குடும்ப உறவினரொரு குமார இந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரிந்தும் இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டது மாபெரும் தவறு எனக் கூறினார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அங்கிருந்து பெற்றோர் இராணுவ வீரரை குறைக்கூறி முறைப்பாடு தெரிவிக்கத் தொடங்கினர். ”என்னால் ஒன்றும் செய்ய முடியாது. எனது வேலையை நான் செய்தேன். பிள்ளைகளுக்கு ஏதாவது நடந்திருந்தால் யாரும் என்னை குறைக்கூற மாட்டீர்கள் ” என இராணவச் சிப்பாய் அந்த நேரத்தில் கூறியதாக அறியவருகிறது.
எது எவ்வாறாகிலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் எதிர்மறைக்கருத்தே தெரிவிக்கப்படுகின்றது. அதாவது சந்தேக நபரான குமார இராணுவச் சிப்பாயின் துப்பாக்கியை பறிக்க முயற்சி செய்தபோதே இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை அந்த இராணுவச் சிப்பாய் தெரிவித்த காரணத்தினாலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் இவ்வாறு ஊடகங்களில்கருத்து தெரிவித்தார். இருப்பினும் இந்தக் கருத்தை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. குமார அத்துமீறி பாடசாலைக்குள் நுழைந்தது உண்மையே. தனது மகளுடன் பாடசாலை வளவுக்குள் நுழைந்த குமார கடமையிலிருந்த இராணுவ வீரரின் துப்பாக்கியை பறிக்க முயற்சி செய்தார் என்பதை அவரின் குடும்ப உறவினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இது கட்டுக்கதையென்றே குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளாமல் தனது பூரண அதிகாரத்தையும் பயன்படுத்தியிருக்கலாமென்றே அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தால் 3 பிள்ளைகள் தமது தந்தையை இழந்து தவிப்பதே எஞ்சியுள்ளது. மனைவிக்கு அன்பான கணவர் இல்லாமல் போய்விட்டார். குடும்பமொன்று அநாதையானது மட்டுமே எஞ்சியது. மகளான தெவிஹாரா அந்தச் சம்பவத்தை பார்த்தத்திலிருந்து இன்னும் மீள நினைவுக்குத் திரும்பவில்லை. எந்நேரமும் தம்பியை கூட்டு வர பாடசாலைக்குச் சென்றபோது அப்பாவை சுட்டுவிட்டார்கள் . அப்பா எனது காலடியிலேயே விழுந்து விட்டார் என மகள் புலம்பிக் கொண்டேயிருப்பது பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.
பிள்ளைகள் மீதும் மனைவி மீதும் அதீத அன்பு கொண்ட குமாரவின் உயிரானது நடுத்தெருவில் போனதற்கு யாராலும் ஈடுசெய்ய முடியாது. கொலை செய்யப்பட்ட குமாரவின் ஆரம்ப மரண விசாணையை காலி செயற்றிட்ட நீதவான் லலித் பத்திரன அந்த இடத்திலேயே மேற்கொண்டார். குமாரவின் வயிற்றுப்பகுதியை துளைத்த குண்டு மறுபக்கத்தில் வந்திருப்பதாக பிரேத பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் அதிக இரத்தம் வெளியேறியமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். குமாரவின் பிரேத பரிசோதனையை விசேட நீதிமன்ற வைத்தியதிகாரி ஜானகி வருஷா ஹென்னதி மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவருடைய பிரேத பரிசோதனை கராபிடிய ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சம்பவத்தின் சந்தேகநபரான இராணுவச் சிப்பாயை அவரது துப்பாக்கியுடன் அக்மீமன பொலிஸார் கைது செய்தனர். இந்த இராணுவ வீரர் காலி இராணுவக் காவலரன் முகாமில் சேவை செய்தவர் என்பது பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக