25 ஆம் வளைவு, போகஹவெவ , தனமல்வில பிரதேசத்தில் வசிக்கும் முனசிங்ககே வாசனா சந்தமாலி 23 வயதுடைய யுவதியாவாள். வீட்டில் காணப்பட்ட வறுமை நிலை காரணமாக தனது பாடசாலைக் கல்வியை சாதாரண தரத்தோடு முடித்துக்கொண்ட சந்தமாலி , குடும்பத்துக்கு சுமையாக இருக்க விரும்பாத காரணத்தாலும் தனது செலவுக்காவது ஒரு தொகை பணத்தை தேடும் பொருட்டு கொழும்புக்கு வேலை தேடிச் சென்றாள். தனமல்லவில மற்றும் கொழும்பு பிரதேசத்தில் வெவ்வேறு தொழில்களைத் தேடித் தேடிச் செய்தாள் வாழக்கையில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற நோக்கில் வேலையில் தீவிரமாக மூழ்கி சம்பாதிக்கத் தொடங்கிய சந்தமாலி, ஒரு இடத்தில் தனது வாழ்க்கையை தொலைத்துவிட்டிருந்தாள். அவள் செய்த தவறை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தாள். அழுதழுது தோய்ந்துபோன அவள் தனது வாடகை அறைக்குச் சென்று தனது வாழக்கையை எண்ணிக் கவலைப்பட்டாள். கடைசியாக தனது வாழ்வை எவ்வாறேனும் சாதகமாக்கிக்கொள்ள வேண்டுமென அவள் திட்டமிட்டாள். இதன் பொருட்டு சமூகத்தில் யாரும் செய்யாத, செய்யத் துணியாத முயற்சியொன்றையே மேற்கொண்டாள்.
பணம் சம்பாதிக்கக்கூடிய லேசான வழிமுøறையை அவள் தெரிவு செய்திருந்ததால் திஸ்ஸமஹாராம , கதிர்காமம் மட்டுமன்றி கொழும்பிலும் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வேண்டியளவுக்கு அவளுக்கு நண்பர்கள் இருந்தனர். இவளுக்கான தங்குமிட வசதி மட்டுமன்றி இதர பல வசதிகளும் இலகுவாக கிடைக்கப்பெற்றிருந்தன. காரணம் இவள் அவர்களுடன் தனது இரவுப்பொழுதைக் கழித்தமையாகும். வீட்டாருக்கும் தனது உறவினர்களுக்கும் தெரியாமல் இரகசியமாக தனது தொழிலை அவள் மேற்கொண்டு வந்தபோதும் அவள் செய்த ஏதோவொரு தவறு காரணமாக அவளது வாழ்க்கை சரிந்துவிட்டதென்றே கூறவேண்டும். தவறான வழியை தெரிவுசெய்துகொண்ட அவளுக்கு வாழ்க்கையின் இளைமைப் பருவத்திலேயே இவ்வுலகைவிட்டுச் செல்ல நேர்ந்தது விதியின் செயலன்றி வேறெதுவுமில்லை.
கடந்த மாதம் 13 ஆம் திகதி பகல் 12 மணியளவில் மந்தும பட்டபெந்திகே தினேஷ் ஹசந்த குமாரவின் கைத்தொலைபேசிக்கு நன்கு பரீட்சயமான சந்தமாலியின் கைத்தொலைபேசியிலிருந்து அழைப்பொன்று வந்தது. தினேஷ் 39 வயதுடைய திருமணமாகாதவர். இவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் வாடகைக்கு பெற்றுகொண்ட இடமொன்றில் அறைகளை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார். சந்தமாலியிடமிருந்து தினேஷûக்கு அவசர அழைப்பொன்று வந்தது. ”அண்ணா 2,3 நாட்கள் தங்கியிருக்க அறையொன்று வேண்டும். ஆனால் என்னிடம் பணம் இல்லை” என சந்தமாலி தொலைபேசியில் தினேஷûக்கு தெரிவித்தாள். ”சரி...சரி.. நீங்கள் வாங்களேன்” என அவன் பதிலளித்தான். அதன்போது இன்னுமொரு வேண்டுகோளையும் சந்தமாலி தினேஷிடம் முன்வைத்தாள். ”அண்ணா என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. நான் வரும் ஆட்டோவுக்கு நீங்கள்தான் பணம் கொடுக்க வேண்டும். இந்த உதவியை உங்களால் செய்ய முடியும்தானே ” என தினேஷிடம் அவள் கேட்டவுடனேயே ”சரி.. முதலில் வாங்கலேன் பார்த்துக்கொள்வோம்” என தினேஷ் பதில் வழங்கிய மறுகணமே அம்பலந்தொட்டையில் ஆட்டோவொன்றை வாடகைக்கு அமர்த்திய சந்தமாலி, பகல் 2.10 மணியளவில் தினேஷின் விடுதிக்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்த ஆட்டோவின் வாடகைப் பணம் 1,800 ரூபா அதையும் தினேஷ் கொடுத்தான். சந்தமாலிக்கும் தினேஷûக்கும் இடையில் இருக்கும் சிநேகிதமே இதற்குக் காரணமாகும்.
ஹோட்டலுக்கு தட்டுத் தடுமாறிவந்த சந்தமாலியிடம் , என்ன ஒரு மாதிரி இருக்கின்றீர்கள். சுகமில்லாமல் இருக்கிறாயா? என தினேஷ் கேட்டதற்கு , அண்ணா நான் கருகலைப்பு செய்துள்ளேன். இன்னும் சில நாட்களுக்கு இங்கேதான் இருக்கப் போகிறேன் என சந்தமாலி தெரிவித்தாள். அதற்கிணங்க ஹோட்டல் உரிமையாளரான தினேஷ் அவளுக்கு 16 ஆம் இலக்கமிடப்பட்ட அறையை தயார் பண்ணிக்கொடுத்தான். அதற்கிணங்க 13, 14 மற்றும் 15 ஆம் திகதி என அந்த மூன்று நாட்களும் ஹோட்டல் அறையில் இருந்த சந்தமாலி வித்தியாசமான வலிகளுக்கு ஆளானாள். அவள் மேற்கொண்ட கருக்கலைப்பு காரணமாகவே அவளுக்கு இந்த வேதனைகள் ஏற்பட்டன. 15 ஆம் திகதி மாலை வேளையில் அவளுக்கு அதிக வலி ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவள் ஹோட்டல் உரிமையாளரான தினேஷிடம் கூறி சில வகையான மருந்துப்பொருட்களையும் உணவுகளையும் வாங்கிக் கொண்டார். இவற்றை தொலைபேசி மூலம் தினேஷûக்கு தெரிவித்தே பெற்றுக்கொண்டாள்.
அவள் தனது வேதனையை அடிக்கடி ஒருவரிடம் தெலைபேசிமூலம் தெரிவித்துக்கொண்டே இருந்தாள். தொலைபேசி மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய வெவ்வேறு மருந்து வகைகளையும் உணவு வகைகளையும் வாங்கி உட்கொண்டு வந்தாள். 16 ஆம் இலக்க அறையில் இருந்த அவள் 16 ஆம் திகதி அதிகாலையிலேயே தினேஷிடம் உதவியொன்றைக் கோரினாள். ”இன்று குளிக்கலாம் என்று டாக்டர் என்னிடம் தெரிவித்தார். நான் குளிக்க உதவி செய்ய முடியுமா? ” எனக் கேட்டாள். அவளின் வேண்டுகோளை நிராகரிக்க தினேஷûக்கு இயலாமல் போய்விட்டது. இதற்கு முன் பல தடவை சந்தமாலியுடன் தினேஷ் உல்லாசமாக இருந்ததே காரணமாகும். சந்தமாலியின் வேண்டுகோளுக்கிணங்க 16 ஆம் திகதி காலை 6.30 மணியளவில் அவள் குளிப்பதற்கு தினேஷ் உதவி புரிந்தான். குளித்துவிட்டு வந்த சந்தமாலியை அறையில் இருக்குமாறு கூறிவிட்டுச் சென்ற தினேஷ் பால் கோப்பையொன்றை கொண்டுவந்து கொடுத்து குடிக்குமாறு கோரினார். இது காலை உணவுக்கு முன்னராகும். பாலைக் குடித்த அவள் வேதனை தாங்க முடியாமல் கட்டிலில் ஒருவாறு சாய்ந்துகொண்டாள். தினேஷ் இருவருக்கும் காலை உணவு தயாரிக்கவென சமையலறைக்குச் சென்றான். உணவு தயாரிக்க சமையலறைக்குச் சென்ற தினேஷ் மீண்டும் சில விநாடிகளின் பின்னர் சந்தமாலி இருக்கும் அறைக்கு வந்தான். வந்தவன் அதிர்ச்சியில் ஆடிப்போனான். அவள் கட்டிலிலிருந்து கீழே விழுந்துகிடந்தாள். விரைந்து அவளருகில் சென்ற தினேஷ் சந்தமாலியை கூப்பிட்டாலும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதனால் பயந்துபோன தினேஷ் அருகில் இருந்த ஆட்டோவொன்றில் அவளை ஏற்றிக்கொண்டு தெபரவெவ பொது வைத்தியவாலைக்குச் சென்று அனுமதித்தான். இதன்போது நேரம் காலை 8 மணியாகும். அங்கு அவளை பரிசோதித்த வைத்தியர்கள் அவள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த திடீர் மரணம் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர். அதற்கிணங்க திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு தலைமையதிகாரி ஜீ.ஐ.எஸ்.கே. என் மல்தெனிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் குறித்த சம்பவம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளின் கட்டளைக்கிணங்க பரிசோதனைகளை ஆரம்பித்தனர். முதலாவதாக குறித்த ஹோட்டலுக்குச் சென்ற பொலிஸார் சந்தமாலி தங்கியிருந்த அறையை முழுப் பரிசோதனை செய்தனர். அதன்போது அவள் வைத்திருந்த ஒரு தொகை மருந்து வகைகள் , இரத்தம் தோய்ந்த துணிகள் சில , அவளது தேசிய அடையாள அட்டை மற்றும் அவளது பயணப் பொதியையும் தங்கள் உடைமையாக்கினர். அதன்போது அவளது பணப்பையை பரிசோதனை செய்த பொலிஸாருக்கு முக்கியமான பல சாட்சியங்களை கண்டுகொள்ள முடியுமாக இருந்தது. அவளது பணப்பைல் காணப்பட்ட பல பஸ் டிக்கெட்டுகள்தொடர்பில் பொலிஸார் அதிக அவதானம் செலுத்தினர். அவற்றை கூர்ந்து பரிசோதித்த பொலிஸாருக்கு உயிரிழந்த சந்தமாலியுடன் இன்னுமொருவர் கொழும்புக்குச் சென்றிருந்ததாகவும் அவ்வாறே மேலுமொருவருடன் மாத்தறை நோக்கிப் பயணித்திருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
2019.06.11 ஆம் திகதி தனமல்விலயிலிருந்து கொழும்பு வரை பயணிகள் பஸ்டிக்கெட்டுகள் இரண்டு மற்றும் 2019.06.13 ஆம் திகதி கொழும்பிலிருந்து மாத்தறை வரை அதிவேகப் பாதையில் பயணிக்க பெற்றுக்கொண்ட பஸ் பயணச்சீட்டு இரண்டு என்பன இதற்கு சாட்சியமளித்தன. மாத்தறைக்கு சென்றுள்ள சந்தமாலி மற்றும் இன்னுமொருவர் அங்கிருந்து பஸ்ஸில் திரும்பி வந்துள்தாகவும் பின்னர் அம்பலந்தொட்ட பிரதேசத்தில் சந்தமாலிக்கு அதிக வலி ஏற்பட்டதன் காரணமாக பஸ்ஸை விட்டு இடையில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவொன்றில் திஸ்ஸமஹாராமையில் உள்ள தனது நெருங்கிய நண்பனின் ஹோட்டலுக்கு அவள் மட்டும் தனியாகச் சென்றிருப்பதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு இருந்த ஒரே சந்தேகம், உயிரிழந்த சந்தமாலி எந்த இடத்தில் யாரால் இந்த கருக்கலைப்பை செய்துகொண்டாள் என்பதாகும். மேலும் இந்த சந்தர்ப்பத்தின் போது சந்தமாலியுடன் யார் சென்றனர்? என்ற வினாவும் எழுந்தது. விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பில் அதிக பிரயத்தனம் மேற்கொண்டு தேடுதல் முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் போது உயிரிழந்த சந்தமாலியின் கைத்தொலைபேசியிலிருந்து பல தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் பொலிஸாரினால் அவதானம் செலுத்தப்பட்டது.
அவள் உயிரிழந்ததற்கு சற்று முன்னரும் கூட அவளுடன் தொலைபேசியில் கதைத்தாக கூறப்படும் வைத்தியரென நம்பப்படும் சந்தேக நபர் மற்றும் மேலும் சிலரின் இலக்கங்களூடாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு இன்னும் சில காரணிகளும் கிடைக்கப்பெறுகின்றன.
வாழ்க்கையை தவறான பாதைல் கொண்டு சென்ற சந்தமாலிக்கு இறுதியில் தனது வாழக்கையை தொலைத்துக்கொள்ளவே முடியுமாகி போய்விட்டது. ஹோட்டலில் சுயநினைவிழந்து கிடந்த சந்தமாலி தெபரவெவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும் கூட உயிரிழந்து விட்டிருந்தாள். அவள் செய்திருந்த கருக்கலைப்பு காரணமாக அதிக இரத்தம் வெளியேறியதனாலேயே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
இன்றுவரை திஸ்ஸமஹாராம , தெபரவெவ , செல்லக்கதிர்காமம் , கதிர்காமம் உள்ளிட்ட சுற்றுப்புற பிரதேசங்களில் எந்தவித சலனமுமில்லாது ஹோட்டல் விடுதிகளில் நடத்திச் செல்லப்படும் வித்தியாசமான வியாபாரங்கள் ஏராளமானவை என்றே கூற வேண்டும். விடுதிகள் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்படும் இவ்வாறான விபச்சார நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடத்திச் செல்லப்படுகின்றன. இப்பகுதிகளுக்கு பொறுப்பான உயரதிகாரிகளின் கண்களில் மண்னை தூவியவாறே இந்நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கதிர்காமம் மற்றும் யால போன்ற சுற்றுலாப் பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து ஒரு சில தங்குமிட விடுதி உரிமையாளர்கள் விபசாரத் தொழிலை மேற்கொண்டு வருவதாகவும் இன்னும் சில விடுதிகள் இளைஞர் யுவதிகளுக்கு இரகசியமாக சுகம் அனுபவிப்பதற்கான இடமாகவும் காணப்படுகின்றமை கவலைதரும் விடயமாகும். தங்கல்ல வலயத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி லக்சிறி கீதால், திஸ்ஸமஹாராம உதவிப் பொலிஸ் அதிகாரி ஜயந்த டி சில்வா , திஸ்ஸமஹாராம பொலிஸ் தலைமையதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ .டி. காரியவசம் உள்ளிட்ட அதிகாரிகளின் கட்டளைக்கிணங்க திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு தலைமையதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் டீ.ஜீ.ஐ. எஸ். கே. என். மல்தெனிய, பொல>ஸ் கொஸ்தாபல்களான புஷ்பகுமார(38003) , கோனார (69551), சந்தருவன்(91147), ஆகிய பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக