மீண்டும் இரத்தினக்கல் திருட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 5, 10 ரூபா திருட்டல்ல. 10 கோடி ரூபா திருட்டுச் சம்பவமாகும். மாணிக்கக்கல்லின் எடை 8 கிலோவாகும். இளம் யுவதி உள்ளிட்ட பல இளைஞர்களால் இந்தத் திருட்டுச் சம்பவம் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளதோடு இந்தச் சம்பவமானது மகரகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சம்பவம் இவ்வாறே இடம்பெற்றது.
வெல்லவாய பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பிரதீப் என்பவருக்கு மாணிக்கக்கல் ஒன்று கிடைத்துள்ளது. நீல வர்ண வகையைச் சேர்ந்த மாணிக்கக்கல் என்று கூறி பிரதீப் அந்தக் கல்லை விற்பனை செய்ய பல வியாபாரிகளிடம் எடுத்துச் சென்றான். எல்லா வியாபாரிகளுமே அந்தக் கல்லை சோதனை செய்துவிட்டு அந்தக் கல் பெறுமதியற்றது என்றே கூறியுள்ளனர். தான் மிகவும் நெருக்கமாக பழகும் யுவதியொருவரிடம் குறித்த விடயத்தை பிரதீப் சொன்னான். அவள் ஊருபொக்க பிரதேசத்தில் வசிப்பவள். 28 வயதுடைய யுவதியான இவள் வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு நபர்களுடன் பழகுபவளாவாள். ”எனக்குத் தெரிந்த மாணிக்க வியாபாரியொருவர் மகரகம பிரதேசத்தில் இருக்கிறார். நாங்கள் இந்தக் கல்லை அவரிடம் கொடுத்துப் பார்ப்போம்”என அந்தப் பெண் பிரதீப்பிடம் கூறினாள். அந்த வியாபாரி மகரகம பிரதேசத்திலுள்ள கோடீஸ்வரர். துணி வியாபாரம் மற்றும் இரத்தினக்கல் வியாபாரம் என்பவற்றில் பெயர் போனவர். இந்தப் பெண்மகரகம வியாபாரியை 2011 ஆம் ஆண்டு முதலே அறிந்துகொண்டிருந்துள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் மகரகமவில் உள்ள கைத்தொலைபேசி வியாபார நிலையமொன்றில் அவள் வேலை செய்து வந்தாள். 2011 ஆம் ஆண்டே அந்தக் கைத்தொலைபேசி நிலையத்திற்கு அவள் வேலைக்காக வந்திருந்தாள். அதற்கு முன்பிருந்தே இந்த வியாபாரி குறித்த கைத்தொலைபேசி நிலையத்துக்கு அடிக்கடி வந்துபோனவராவார். பார்ப்பவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்ட அந்தப் பெண் அந்த நிலையத்துக்கு வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் மகரகம வியாபாரி தன்னுடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அந்தப் பெண்ணையே பயன்படுத்திக்கொண்டார். அவளும் புன்சிரிப்புடன் அந்த வியாபாரியிடம் நலிந்து கதைத்து அவரது தேவைகளை நிவர்த்தி செய்து கொடுத்தாள். இவ்வாறு தொடங்கிய இவர்களது உறவு நீண்டு சென்று இருவரும் நெருங்கிப் பழகக்கூடியளவுக்கு கொண்டு வந்து விட்டு விட்டது. இந்தப் பெண் அந்தக் கடையிலிருந்து விலகினாலும் இவர்களது பந்தம் சிதைந்துவிடாமல் தொடர்ந்தது. வெல்லவாய பிரதீப் மாணிக்கக்கல் பற்றி கூறியதும் அவள் உடனே அந்த வியாபாரியிடம் கதைத்து கொடுக்கல்- வாங்கல் பற்றி தீர்மானித்துக்கொணடாள்.
”அந்தக் கல் பெறுமதியென்றால் மகரகமவிலுள்ள எனது வீட்டுக்கு வரச் சொல். நாங்கள் பார்த்து வாங்குவோம். நீயும் வா” என வியாபாரி பெண்ணின் தொலைபேசி உரையாடலை துண்டித்துக்கொண்டார். பிரதீப்புக்கு ஓரளவு நம்பிக்கை வந்துவிட்டது. அடுத்த நாள் அதிகாலையிலேயே மாணிக்கக்கல்லை எடுத்துக்கொண்டு மகரகம வியாபாரியின் வீட்டுக்கு பிரதீப் பெரும் எதிர்பார்ப்புடனும் பல கனவுகளுடனும் சென்றான். நல்ல வரவேற்புக்குப் பின்னர் மாணிக்கக்கல் வியாபாரி பிரதீப் கொண்டுவந்த மாணிக்கக்கல்லை கையில் எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தார். இது சுத்தமான மாணிக்கக்கல் இல்லை. போலியானது . இதில் எந்தப்பெறுமதியும் இல்லையென மகரகம வியாபாரி சிறிய புன்முறுவலுடன் தெரிவித்திருந்தார். இல்லை இது உண்மையான மாணிக்கக்கல். வேண்டுமென்றால் நாம் பரிசோதித்துப் பார்ப்போம். என மாணிக்கக்கல் பற்றி அடி நுனி அறிந்துவைத்திருந்த பிரதீப் தெரிவித்தார். மேலும் கல்லை ஏல விற்பனை செய்வதற்கு பிரதீப் இணங்கியிருக்கவில்லை. சரி...அப்படியானால் நாங்கள் கல்லை பரிசோதித்து பார்த்துவிடுவோம் என்று கூறிய மகரகம வியாபாரி , இது தொடர்பில் நன்கு பரீட்சையமான ஒருவரை கூட்டிவர ஏற்பாடு செய்தார். வியாபாரியின் வேண்டுகோளுக்கிணங்க வந்திருந்த அந்த வியாபாரியும் கல்லை பார்த்துவிட்டு பெறுமதி இல்லையென்றே தெரிவித்தார். பிரதீப்பின் சகல கனவுகளும் சுக்குநூறாகிப்போயின. அந்தப் பெண்ணின் வெளிர் நிற முகமும் சுருங்கிவிட்டது.
நாங்கள் சொல்வதில் எங்களுக்கு நம்பிக்கையில்லையென்றால் கொஞ்சம் இருங்கள். என்னிடமுள்ள உண்மையான நீல நிறமுள்ள கல்லை காட்டுகிறேன் என்று கூறிய மகரகம வியாபாரி தனது விசாலமான வீட்டுக்குள் சென்று கைகளில் கல்லொன்றை கொண்டு வந்து மேசையின் மத்தியில் வைத்தார். பிரதீப்பும் அந்தப் பெண்ணும் வைத்த கண் வாங்காது அந்தக் கல்லை கையிலெடுத்து முகத்துக்கு நேரே வைத்து உற்றுப் பார்த்தனர். இந்த மாதிரியான கல் ஒன்று இருந்தால் எமது எல்லா தேவைகளும் பூர்த்தியாகிவிடும். சுதந்திரப் பறவை போல் இருக்கலாமென அந்தப் பெண் பகல் கனவு கண்டாள். பிரதீப்பின் மனதிலும் அவ்வாறான நினைவலைகளே ஓடிக்கொண்டிருந்தன. இந்தக் கல்லையும் எத்தனையோ வியாபாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றனர். இருப்பினும் எனது பெறுமானத்துக்கு யாரும் இதுவரை முன்வரவில்லை. 10 கோடிக்கு குறைவாக கொடுக்க மாட்டேன் என்றார்.
இது நல்ல நிறத்திலான மாணிக்கக்கல் . இந்த மாதிரி பெரிய கல்லை இலகுவில் தேடிக்கொள்ள முடியாது. நான் இதை ஒப்பநாயக்க பிரதேசத்திலுள்ள ஒருவரிடமிருந்து வாங்கினேன். விற்பதற்கும் சங்கடமாய் இருக்கிறது. இருந்தாலும் இதை வைத்துக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. நல்ல விலைக்கு வந்தால் விற்றுவிடுவேன் என மகரகம வியாபாரி அந்த பெண்மீதுள்ள நம்பிக்கை காரணமாக கல் பற்றிய முழு விபரங்களையும் தெரிவித்தார். அவர் கூறிய தகவல்கள் பிரதீப் மற்றும் அந்தப் பெண்ணுக்கு தங்களின் கனவுகளுக்கு உரமூட்டுபவையாக அமைந்தன. இவர்களிருவரும் மகரகம வியாபாரி வீட்டிலிருந்து ஒரு மனநிலையில் செல்லவில்லை. அந்த வியாபாரி காண்பித்த மாணிக்கக்கல்லே அவர்களின் மனத்திரையில் ஓடியது. இறுதியாக பிரதீப்பும் அந்தப் பெண்ணும் எப்படியாவது அந்தக் கல்லை திருடிவிட வேண்டுமென திட்டம் தீட்டினார்கள்.
முடிந்தளவுக்கு கல்லை குறைத்து மதிப்பிட்டு சின்ன விலைக்கு அதை பெற்றுக்கொள்வோம். நான் இதைபற்றி கதைக்கிறேன். என்னை நன்கு கவனிக்க (பணம் மூலம்) வேண்டும். மீண்டும் அந்தப் பெண் மகரகம வியாபாரிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பிரதீப்பிடமுள்ள மாணிக்கக்கல்லை சிறிய விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு பணித்தாள் ”இவ்வளவு பாரிய தொகை பெறுமதியுடைய மாணிக்கக்கல்லை வீட்டில் வைத்திருக்க உங்களுக்கு பயமில்லையோ. யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் திருடர்கள் வந்து இதை திருடிக்கொண்டு போனால் யாரிடம் சொல்வது...” என அந்தப் பெண் வியாபாரியிடம் மாணிக்கக்கல்லை பாதுகாத்துக்கொள்ளுமாறு சொல்லாமல் சொன்னாள். நான் எங்கு சென்றாலும் மாணிக்கக்கல்லையும் எடுத்துக்கொண்டு தான் செல்வேன். காரிலும் சாரதி இருக்கையின் கீழேயே வைத்துக்கொள்வேன். கல்லை திருட வேண்டுமென்றால் என்னை கொன்றால் மட்டுமே முடியும் என மகரகம வியாபாரி அந்தப் பெண்ணிடம் கூறினார். என்னதான் திறமையான வியாபாரியென்றாலும் பெண்ணின் மாய வலையில் மாட்டிக்கொண்டார். வீட்டிலும் காரிலும் மாணிக்கக்கல்லை எங்கு மறைத்து வைத்துள்ளார் என்பதை மறைக்காமல் பெண்ணிடம் தெரிவித்தார். இந்தத் தகவல்களூடாக செயற்பட்ட பிரதீப்பும் பெண்ணும் மாணிக்கக்கல்லை திருடுவதற்கான தினத்தையும் நேரத்தையும் திட்டமிட்டுக்கொண்டனர்.மகரகமவிற்கு வந்த அந்தப் பெண் மாணிக்கக்கல் வியாபாரியை சந்தித்து பிரதீப்பின் மாணிக்கக்கல்லை குறைந்த விலையில் விற்பனை செய்ய உரையாடிக்கொண்டிருந்தாள். மாணிக்கக்கல் வியாபாரியும் பெண்ணின் கதையை நம்பிவிட்டார். அதற்கிணங்க மகரகமவில் உள்ள சுற்றுலா ஹோட்டலொன்றின் பெயரைக் கூறி அவ்விடத்துக்கு வருமாறு பிரதீப்பிடம் அந்தப் பெண் கூறினாள். பிரதீப்புக்கு கூறிய நேரத்தை விட ஒரு சில மணித்தியாலத்துக்கு முன்னரே அந்தப் பெண்ணும் வியாபாரியும் அந்த சுற்றுலா ஹோட்டலுக்குச் சென்றனர். அந்த நேரத்தில் பிரதீப்பும் இன்னும் இருவருடன் அந்த ஹோட்டலுக்கு வந்தான். ஆனால் சுற்றுலா ஹோட்டலுக்குள் பெண்ணும் வியாபாரியும் பிரதீப் மட்டுமே சென்றனர். பிரதீப்பின் இரு நண்பர்களும் வெளியிலேயே இருந்துவிட்டனர். வியாபாரி காரை விட்டு இறங்கி ஹோட்டல் அறையை நோக்கிச் செல்கையில் இந்தப் பெண் கார் கதவை முழுமையாக மூடாது ஓரளவு திறந்து வைத்துவிட்டே சென்றாள். ஹோட்டலொன்றின் அறையை வாடகைக்கு பெற்று மாணிக்கக்கல் தொடர்பில் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்று கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் வெளியில் நின்றுகொண்டிருந்த பிரதீப்பின் இரு நண்பர்களும் மாணிக்கக்கல் வியாபாரியின் காரின் சாரதி இருக்கைக்குள் இருந்த மாணிக்கக்கல்லை திருடிக்கொண்டுபோய்விட்டனர். திட்டத்தின்படி குறைந்த விலைக்கு மாணிக்கக்கல்லை விற்க முடியாதெனக் கூறிய பிரதீப் சுற்றுலா ஹோட்டலிலிருந்து வெளியேறிச் சென்றான். வியாபாரியும் அந்தப் பெண்ணும் மீண்டும் காரருகே வந்து கார்க் கதவை திறக்கும் போது கதவு பூட்டப்படாமல் இருந்ததைக் கண்டு வியாபாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. விரைந்து செயற்பட்ட வியாபாரி ஆசன இருக்கைக்குக் கீழ் மாணிக்கக்கல் இருக்கின்றதா என்பதைப் பார்த்தார். கல்லை காணவில்லை. வியாபாரிக்கோ வியர்த்துக் கொட்டியது. காரை வேகமாக உயிர்பெறச் செய்து பெண்ணையும் ஏற்றிக்கொண்டு பிரதீப்பையும் அவனுடன் வந்த இருவரையும் தேடிக்கொண்டு பாதையெங்கும் அலைந்து திரியலானான். இருப்பினும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தகவலில்லை.
பின்னர் வியாபாரி அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு பொரலஸ்கமுவ பொரிஸ் நிலையத்துக்குச் சென்று சம்பவம் தொடர்பில் முறைபாடு பதிவு செய்தார். உடன் விரைந்து செயற்பட்ட பொரஸ்கமுவ பொலிஸ் நிலைய தலைமையதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பிரியங்கர சில்வாவால் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு குற்ற விசாரணைப் பிரிவின் தலைமையதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான முதித தல்பதாதுவின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவானது , முதல் விசாரணை சுற்றுலா ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமெரா சோதனை செய்யப்பட்டது. மாணிக்கக்கல் திருடும் காட்சி அந்த கமெராவில் அப்படியே பதிவாகியிருந்தது. அதன் பின்னர் அந்தப் பெண்ணை பொலிஸார் விசாரணை செய்தனர். அவளிடம் பிரதீப்பின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்ட பொலிஸட அதிகாரிகள் அந்த இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தினர். அந்த சந்தர்ப்பத்தில் அந்த இலக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.பெண்ணால் எதையும் மறைக்கமுடியாமல் போய்விட்டது. எல்லா உண்மைகளையும் கொட்டித் தீர்த்து விட்டாள்.
அவள் வழங்கிய தகவல்களின் படி மாணிக்கக்கல்லை திருடுவதை திட்டமிட்டிருப்பது அவளுடன் சேர்ந்து பிரதீப்பாகும். உதவிக்கு ருவனும் இன்னொருவரும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். பிரதீப்பும் ஏனைய இருவரும் ருவனின் காரிலேயே மகரகமவிற்கு வந்திருந்தனர். இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் மாலையிலிருந்து இரவுப்பொழுதை கழித்தது இன்னொரு ஹோட்டலொன்றிலாகும். விசாரணையின் பின்னர் அந்த ஹோட்டலுக்குச் சென்று சி.சிரி.வி. கமெராவை சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ருவனின் கார் இலக்கத்தகட்டிலுள்ள இலக்கத்தை கண்டுகொள்ள முடியுமாயிற்று.வாகன இலக்கத்தை வைத்து விசாரணைகளை மேற்கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. பெண் குறிப்பிட்ட தகவல்களுக்கேற்ப ருவன் , பெல்லன்வில பிரதேசத்தில் வசிக்கும் ஒருவராவார். இருப்பினும் ருவன் இருக்கும் இடம் அந்தப் பெண்ணுக்கு சரியாகத் தெரியாது. ஆனால் பொலிஸ் அதிகாரிகள் மிகவும் சூட்சுமமான பரிசோதனைகளை மேற்கொண்டு ருவனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். பொலிஸார் இவனது வீட்டுக்குச் செல்லும் போது வீட்டில் அவனது மனைவியும் இரு பிள்ளைகளுமே இருந்தனர். பொலிஸாரால் ருவனின் மனைவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கையில் பிரதீப்பிடமிருந்து மாணிக்கக்கல் வியாபாரிக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.
”நாங்கள் கல்லை திருடிவிட்டோம். இருந்தாலும் அதில் எங்களுக்கு பிரச்சினையொன்று உள்ளது. நாங்கள் அந்தக் கல்லை உங்களுக்கு தருகிறோம். எங்கள் யாரையும் பிரச்சினையில் சிக்கவைத்துவிட வேண்டாம்” என வியாபாரிக்கு பிரதீப் கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் வியாபாரி பொலிஸாருடனேயே இருந்தார். பின்னர் பொலிஸாரின் கூற்றுக்கிணங்க , வியாபாரி பிரதீப்புக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு கல்லை எடுத்துக்கொண்டு ரத்மலானை மெலிபன் சந்திக்கு வருமாறு கூறினார். மாணிக்கக்கல் வியாபாரியின் கூற்றை நம்பிய பிரதீப் , கல்லை எடுத்துக்கொண்டு மெலிபன் சந்திக்கு வந்தான். பிரதீப்புக்கு தப்பிக்க முடியாமல் போய்விட்டது. எதிர்பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார் அவனை சுற்றிவளைத்து கைது செய்தனர். பிரதீப்பிடம் விசாரணை மேற்கொண்டு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செயற்பட பொலிஸ் அதிகாரிகள் அன்றைய தினமே ருவன் மற்றும் காரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்த மாதம் முதலாம் திகதிக்குள் மாணிக்கக்கல்லுடன் திருட்டுச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்ய இயலுமாகிப்போனது. இவ்வளவு விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகள் பாராட்டப்படவேண்டியவர்களே. இப்போதும் இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பிரதீப்பிடம் இருக்கும் கல் புதையலில் கிடைக்கப்பெற்றதொன்றாகவிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
மகரகம வியாபாரியின் முன்ஜென்ம புண்ணியமோ அந்தக் கல் மறுபடியும் அவரிடமே சென்றடைந்தது. தந்தை தாயை விற்கும் இக்காலத்தில் இவ்வாறான உண்மைத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் போது நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும். அவருக்கு மட்டுமல்ல இந்தச் சம்பவம் ஏனையோருக்கும் நல்ல உதாரணமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக