பட்டினியை தாங்கிக்கொள்ள முடியாத சிறுவயதையுடைய மலித் மிஹிரங்க தேசப்பிரிய ராஜபக்ஷ கடந்த மே மாதம் 14 ஆம் திகதி இவ்வுலகைவிட்டுச் சென்றுவிட்டான். பல நாட்களாகவே நோயாளியாக இருந்த மலித், தூங்கிக்கொண்டிருக்கும்போதே உயிரிழந்துவிட்டான். முழு நாளும் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவன் இறுதியாக கிராமவாசிகளின் உதவியுடன் அன்று இரவே தெபரவெவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டான். அவனை பரிசோதித்து பார்த்த வைத்தியர் அவன் இறந்து பல மணிநேரம் ஆகிவிட்டது என்று கூறிவிட்டார். இறுதியாக அவனது உடல் அம்பாந்தோட்டை மாவட்ட பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே சோகச் செய்தியைக் கேட்கமுடிந்தது. சின்ன வயதேயான மலித் போஷாக்குக் குறைவால் ஏற்பட்ட மந்தபோஷணை காரணமாகவே உயிரிழந்திருக்கிறான் என வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உயிரிழந்த மலித்தவின் வைத்திய அறிக்கை அம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார சேவை அத்தியட்சகர் தீபிகா பட்டபெந்தியவின் கைகளில் கிடைக்கப்பெற்றபோது, அந்த அறிக்கையைப் பார்த்த அவர் திகிலடைந்தார். இது தொடர்பில் இவர் சம்பந்தப்பட்டவர்களிடம் வினவியதோடு, இச் செய்தியானது ஊடகங்கள் வாயிலாக முழு நாட்டுக்கும் பரவியது. உயிரிழந்த மலித்தின் தந்தை துசித சந்தன ராஜபக்ஷ (வயது -37) நன்னீர் மீன் வியாபாரத்தை தொழிலாகக் கொண்டவர். பிறிதொரு மீனவரிடமிருந்து விலைக்கு வாங்கும் நன்னீர் மீன்களை ஓரிருவருக்கு விற்று அதில் வரும் கொஞ்ச பணத்தைக் கொண்டு தனது 4 பிள்ளைகளினதும் மனைவியினதும் வயிற்றை நிரப்பும் பொருட்டு அரிசி மற்றும் பலசரக்குப் பொருட்களை வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் கொண்டு வரும் சமையல் பொருட்கள் எந்த வகையிலும் இவர்களின் பசியை ஆற்றப் போதுமானதல்ல. அதுபற்றி அவருக்கு யோசிக்கத் தோன்றுவதில்லைப் போலும். ”எனது தொழில் மீன் வியாபாரமாகும். அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு இயலுமானளவுக்கு எனது பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பேன். எனது பிள்ளைகளுக்கு பெரியளவில் எதையும் செய்ய என்னால் முடியாது. என்னால் முடிந்தளவுக்கு அவர்களை பார்த்துக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
மலித்தின் மூத்த இரு சகோதரர்களும் சகோதரியும் மிகவும் கஷ்டமான வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஒழுங்கான ஆடைகளைக் கூட அணிய வசதியில்லாமலேயே இருந்தது. அவர்களைப் பார்த்தால் போஷாக்கு குறைவின்றி மந்தகதியில் இருப்பதை அவதானிக்கலாம். இவர்கள் மூவரும் பாடசாலையில் தரப்படும் காலை உணவையே உண்கின்றனர். அதுபோக, வீட்டுக்கு வந்தால் தினந்தோறும் சோறும் பருப்புக்கறியும் தான் என இவர்களின் தாயார் கூறுகிறார். பால்மாவை தாங்கள் கண்களிலும் காண்பதில்லையென இவர் கூறுகிறார். இவர்கள் தகரக் கொட்டகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர். இந்த வீடானது எந்தவகையிலும் இவர்களுக்கு உகந்ததல்ல என்ற தகவலும் கூறப்படுகிறது. எந்தவித வசதிகளும் அந்த வீட்டில் இல்லாத போதும் வீட்டுத் தலைவனும் அதை நிவர்த்தி செய்ய எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
இந்த வீட்டுக்குப் பதிலாக வீடு அபிவிருத்தி அமைச்சால் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்காக 5 இலட்சம் ரூபா உதவித் தொகையாக கிடைக்கப்பெற்றபோதும், அதை வாங்கிக்கொள்ள துசித விரும்பவில்லையென்று கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். ”துசித யாரிடமும் உதவிபெற விரும்புபவன் அல்ல. வீட்டுக்கு முன்னாலுள்ள அத்திவாரம் கூட ஊர் மக்கள் இணைந்தே போடப்பட்டதாகும். இதற்குக் கூட துசித அனுமதிக்கவில்லை. பின்னர் பொலிஸாரைக் கூட்டிவந்தே அத்திவாரமிட்டோம். பின்னர் அந்த வீட்டை நிர்மாணிக்க முடியாமல்
போய்விட்டது . அதனால் உதவித் தொகையும் நிறுத்தப்பட்டுவிட்டது” என கிராமவாசிகள் தெரிவித்தனர்.
விஜயபுர கிராமத்தவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். ”துசித ஐ.தே.க. கட்சியின் தீவிர உழைப்பாளியாவான். சில வேளைகளில் மீன் வியாபாரத்துக்குச் செல்லாது பொது வேலைகளில் ஈடுபடக் கூடியவன். வீட்டைக் கட்டியெழுப்ப துசித ஒருநாளும் முயற்சி செய்யாத போதும் கிராமத்தை வளமாக்கவேண்டி அனைத்தையும் முன்னின்று
செய்யக்கூடியவன்” என கிராமவாசி ஒருவர் தெரிவித்தார். மலித் உயிரிழந்தவுடன் இறுதிச் சடங்குகளை செய்ய அமைச்சர் சஜித்தின் காரியாலயத்திலிருந்து உதவி கிடைக்கப்பெற்றது. கிராமத்தவர்களும் உதவி செய்தனர். இன்றுவரை இந்தக் குடும்பத்துக்கு கிராம மக்கள் உதவி செய்தே வருகின்றனர். உணவு , பானம் என்பவற்றைக் கொண்டு
வந்து கொடுத்துவிட்டுக் போவார்கள். என்ன காரணத்துக்காக துசித இவற்றை வேண்டாம் என்கிறார் என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை” என்று இன்னொரு கிராமவாசி தெரிவிக்கிறார்.
என்ன காரணமென்றாலும் அநியாயமாக 11 மாதக் குழந்தை
மந்தபோஷணை காரணமாக உயிரிழந்துவிட்டது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இதுவரை சமுர்த்தி உதவிபெறும் 52,000 பேர் காணப்படுகின்றனர். இருப்பினும், இந்த சமுர்த்தி உதவித் திட்டம் துசிதவின் குடும்பத்துக்கு கிடைத்திருக்கவில்லை. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்டச் செயலாளர் வினவிய போது, ”இந்த உதவியைப் பெற குடும்பத் தலைவன் எதிர்ப்புத் தெரிவித்தமையாலேயே அந்தக் குடும்பத்துக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்திருந்தார். குடும்பத் தலைவன் இதனை மறுத்திருந்தாலும் அதைப் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டிய பொறுப்பு உரிய அதிகாரியையே சாரும் என மாவட்ட செயலாளர் விசனம் தெரிவித்திருந்தார். இது தவிர, துசிதவின் குடும்பத்துக்கு குடும்ப வருமானத்திற்கு மேலதிகமாக அரசாங்கத்தால் வழங்கப்படும் போஷணைப் பொதியும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை. திஸ்ஸமகாராம பிரதேச செயலாளர், போஷணைப் பொதி பெற்றுக்கொள்வதற்கு உரித்தான படிவம் இந்தக் குடும்பத்தால் தனக்கு நிரப்பித் தரப்படவில்லையென்றே தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மாவட்டச் செலாளர், அரசாங்க அதிகாரிகளின் கடமையானது, சேவையானது உரிய நேரத்துக்கு போய்ச்சேர நடவடிக்கை எடுப்பதாகும் எனத் தெரிவித்தார். பிரதேச செயலகத்தால் தமது பொறுப்பு உதாசீனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர மேலும் தெரிவிக்கையில்; அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை ஒழுங்காகச்
செய்யாததன் காரணமாகவே இந்தக் குழந்தை அநியாயமாக உயிரிழந்துவிட்டதாக காட்டமாகத் தெரிவித்தார். இந்தத் துயரச் சம்பவமானது ஒரு மாதம் கழித்தே எனக்குத் தெரியவந்தது. இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன். ஒரு கிராமத்துக்கு, அந்தக் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்க பொதுமக்களின் பணத்தில் வாழ்கின்ற பல அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் உரிய வகையில் தமது கடமைகளைப் பொறுப்புடன் செய்திருந்தால் இந்த உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். முதல் வேலையாக
அந்தக் குடும்பத்தின் சுகாதார நிலைமை பற்றி குறித்த அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த வகையில் முதலில்
அந்தக் குடும்பத்திலுள்ள தாய், தந்தையின் மனநிலை பற்றி தேடிப்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அது அந்த அதிகாரிகளின் கட்டாய கடமையாகும். பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேரும் பட்சத்தில் அதனைத் தேடிப்பார்க்க எமது காரியாலயத்தில் நன்னடத்தை அதிகாரி ஒருவர் இருக்கிறார். அவர் தனது கடமையை சீராகச் செய்யவேண்டும். ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் இந்த துரதிர்ஷ்ட மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு தன்னால் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரணம் அந்தக் குடும்பத்துக்கு என்ன காரணத்துக்காக பெற்றுக்கொடுக்கப்படவில்லை, பெற்றோரின் மனநிலை தொடர்பிலும் பிள்ளைகள் மேற்கொண்டு அவர்களிடம் இருக்கலாமா என்ற காரணங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார். மேலும் அந்தக் குடும்பத்தைக் கட்டியெழுப்ப குறுகிய மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களின் அவசியம் தொடர்பிலும் கவனஞ்செலுத்துமாறும் தானும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார். ஏதோவொரு திட்டத்தின் கீழ் இந்தக் குடும்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தக் குடும்பத்துக்கு உதவி புரிய நாட்டிலுள்ள பலர் முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதொன்றாகும்.
குறித்த பிரதேசத்திலுள்ள குடும்பநல சுகாதார அதிகாரி தனது கடமையை சீராக நிறைவேற்றியிருந்தால் இந்த மரணம் சம்பவித்திருக்காதென பல பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மாவட்ட சுகாதார சேவை அத்தியட்சகரிடமும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் இவர் தெரிவிக்கையில்;
குடும்பநல சுகாதார அதிகாரி தமது கடமையை சரியாகத்தான்
செய்துள்ளார். அவரால் எந்தத் தவறும் இடம்பெற்றிருக்கவில்லை. இந்தக் குழந்தை இறந்துபோனது பெற்றோரின் கவனக்குறைவாலாகும். தனது அதிகாரிகளின் கீழ் எந்தவொரு தவறும் இடம்பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்; குடும்பநல சுகாதார அதிகாரி குறித்த வீட்டுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளார். குழந்தையின் பாரத்தை பார்த்திருக்கிறார். திரிபோஷ வழங்கவும்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த பெற்றோர் ஒருதடவைதான் கூட்டத்திற்கு சென்றிருக்கின்றனர். இது அவர்களின் உதாசீனப்படுத்தலாகவே கருதமுடியும்.
இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டப் பிள்ளைகள் போஷாக்கு மட்டத்தில் 2 ஆம் இடத்தில் உள்ளனர். இந்த மாவட்டத்துக்குள் மந்த போஷணை காரணமாக பிள்ளையொன்று இறப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் வறுமை என்ற காரணத்தால் குழந்தையொன்று மந்த போஷணையில் உயிரிழக்க வாய்ப்பில்லை. எமது சமூகத்தில் இவ்வாறான பிள்ளைகளுக்கு ஒரு பிடி சோறையாவது கொடுக்க முடியாத சூழல் இன்னும் ஏற்படவில்லை. இந்தக் குழந்தையின் உயிரிழப்புக்குப் பின்னரும் அந்தக் குடும்பத்திலுள்ள ஏனைய பிள்ளைகள் தொடர்பிலும் தேடிப்பார்க்க வேண்டுமென உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பில் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிகள் மீது பழியைச் சுமத்திவிட்டு இந்த மரணம் தொடர்பிலான முறைப்பாடுகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ளமுடியாது. அரசியல்வாதிகளால் இப்பிரதேசத்தில் பல அதிகாரிகள் வெறுமனே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உரிய முறையில் தங்களது பணிகளை மேற்கொள்ளவில்லையென்றே கிராமவாசிகள் கூறுகின்றனர். அம்பாந்தோட்டை மாவட்டம் முழுவதும்
அந்தளவுக்கு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் மாவட்டத்திலுள்ள பிரதான பிரச்சினைகளை அறிந்துகொள்ள அரசியல்வாதிகளின் முடியாமல் போய்விட்டது.
ஆரம்ப காலத்தில் முன்னாள் விவசாய அமைச்சராக இருந்த மகிந்த அமரவீர , அம்பாந்தோட்டை மாவட்டத்துக்குள் மலசலகூட வசதியில்லாது 15,000 குடும்பங்கள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தாங்கள் இது தொடர்பில் வெட்கமடைவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தக் குடும்பம் மட்டுமல்ல, பல குடும்பங்கள் இவ்வாறு வறுமைக் கோட்டுக்குள் காணப்படுகின்றன. இந்தக் குடும்பங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இந்த நாட்டில் அரசியல்வாதிகளின் பிள்ளைகளோ அமைச்சு செயலர்களின் பிள்ளைகளோ மந்த போஷணை காரணமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெறாது . மாறாக, உயிரிழப்பது கிராம மக்களின் பிள்ளைகளேயாவர். இந்தப் பாரபட்ச நிலைமை நாட்டுக்குள் இருக்கும் வரை இவ்வாறான உயிரிழப்புகளைத் தடுக்க முடியாதென்றே கூறவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக