நாட்டுக்கு பலவிதமான பிரச்சினைகள். அதனால் நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்துடனும் பீதியுடனுமே வாழ்ந்து வருகின்றனர். பத்திரிகை , வானொலிச் செய்திகளில் நாளைய நாள் எப்படியோ என்ற டநிலைமையே காணப்படுகின்றது. நாளைய பொழுது நாள் நன்மைபயக்குமோ என்ற அச்சவுணர்வு பலரிடம் காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் பல்வேறு வகையான வியாபாரிகளின் கட்டுக்குள் அடங்கியுள்ள நாட்டை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டி பொலிஸார் உள்ளிட்ட இராணுவத்தினரும் கடும் பிரியத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிரதிபலனாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலான குற்றத்தடுப்புப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாரியளவில் பல வியாபாரங்களை மேற்கொண்டு வந்த ஒருவரை கைது செய்திருந்தனர். இந்தச் சம்பவம் அட்டன், கினிகத்தேனை பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.
வலான குற்றத்தடுப்புப் பிரிவின் மேற்பார்வையாளரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரஷாந்தவுக்கு கிடைக்கப்பபெற்ற தகவலின் படி செயற்பட்ட அதிகாரிகள் குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர் 23 வயதான தமிழ் இளைஞரொருவராவார். விசாரணைகள் மேற்கொண்டதில் கடந்த தினமொன்றில் வலான குற்றத்தடுப்புப் பிரிவின் மேற்பார்ரை அத்தியட்சகருக்கு அவரின் தனிப்பட்ட உளவாளியொருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய , அட்டன் கொட்டகலை பிரதேசத்தில் ஒரு நபரால் அதிக பணத் தொகையில் கருச்சிதைவு மேற்கொள்ளப்படுவதாகவும் அது வியாபாரமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுவரை இந்த வியாபாரத்துக்கு பல பெண்கள் அடிமையாகியிருப்பதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செயற்பட்ட உதவிப் பொலிஸ் அதிகாரி , சம்பவம் தொடர்பில் தனது சக அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து எப்படியாவது அந்நபரை கைது செய்யுமாறும் அதற்கான தகவல்களை வழங்கி கூறினார். அதற்கிணங்க செயற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று அண்மையில் இந்தக் கைது நடவடிக்கையை சாத்தியமாக நிறைவேற்றிருந்தது.
தனது மனைவிக்கு உடனடியாக கருக்கலைப்பு செய்யவேண்டுமென கூறி சம்பந்தப்பட்ட சந்தேகநபரை தொலைபேசியூடாக தொடர்புகொண்ட பொலிஸட சார்ஜன்ற் ஒருவர். முதலில் சந்தேக நபருடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார். சில நாட்கள் கழித்து மீண்டும் சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சார்ஜன்ற் அவரிடம் தான் அரசாங்க நிறுவனமொன்றில் வேலை செய்வதாகவும் தனது மனைவிக்கு அவசரமாக கருக்கலைப்பு செய்யவேண்டுமெனவும் இதனால் தான் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும்அந்த பொலிஸ் சார்ஜன்ற் சந்தேக நபரிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இருவருக்குமிடையில் நீண்டதொரு தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. அந்த உரையாடல் பின்வருமாறு அமைந்தது. டாக்டர் நான் அன்று உங்களிடம் கதைத்தவர். ஆம்... சொல்லுங்கள். என்னிடமிருந்து என்ன உதவியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? நான் அன்று எனது மனைவியின் கருக்கலைப்பு தொடர்பாக உங்களிடம் பேசியிருந்தேன். அதை கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டும் டாக்டர். நீங்கள் சொல்லும் எந்தநேரத்திலும் எங்களால் வரமுடியும். கூடிய விரைவில் மேற்கொள்ளக்கூடியவாறு நேரம் ஒன்றை மட்டும் எங்களுக்கு ஒதுக்கித் தாருங்கள் என டாக்டரிடம் சார்ஜன்ற் கேட்டிருந்தார். சரி... உங்களால் நாளை தினம் பெரகலைக்கு வரமுடியுமா ? என டாக்டர் வினவ, சரி நாளை நாங்கள் தவறாமல் வருவோமெனவும் இது எங்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி என்றும் சார்ஜன்ற் தெரிவித்தார்.
அதற்கிணங்க அரச உயர் பதவியில் வேலை செய்வது போன்று தன்னை வேடமிட்டுக்கொண்ட பொலிஸ் சார்ஜன்ற் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் அடுத்தநாள் பாணந்துரையிலிருந்து வலான - அட்டனில் அமைந்துள்ள பெரகல பகுதிக்கு கிளம்பிச் சென்றதோடு இந்தக் குழவில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இணைந்துகொண்டார். குறிப்பிட்ட நேரத்துக்குள் பெரகலையை நெருங்கிய பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு இரு குழுக்களாகப் பிரிந்ததோடு பொலிஸ் சார்ஜன்ற் அதிகாரியும் பெண் பொலிஸ் அதிகாரியும் வேறொரு வாகனத்தில் ஏறி சந்தேக நபரை பார்க்க இளம் கணவன் - மனைவி என்ற கோதாவிலேயே செல்கின்றனர்.
இரு தரப்பாரும் பேசிக்கொண்டதற்கிணங்க உரிய இடத்துக்கு உரிய நேரத்தில் வருகைத் தந்த பொலிஸ் சார்ஜன்ற் , டாக்டர் நாங்கள் வந்துவிட்டோம் என்று தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு சந்தேக நபரிடம் தெரிவித்தார். கொஞ்ச நேரம் பொறுங்கள். இதோ நான் வந்துகொண்டிருக்கின்றேன். இன்று விடுமுறை நாள் என்பதால் கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பதிலுக்கு டாக்டர் தெரிவித்திருந்தார். சரி.. பரவாயில்லை டாக்டர். நான் எனது வாகனத்தில் வரவில்லை. அதுதான் கேட்டேன் என சார்ஜன்ற் அதிகாரியும் பதிலளித்திருந்தார். ஒருவாறு இரு தரப்பாரும் சந்தித்துக்கொண்டனர்.
நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள் என டாக்டர் கேட்க , நாங்கள் கித்துல்கல பிரதேசத்திலிருந்து வருகிறோம் என பொலிஸ் சார்ஜன்ற் அதிகாரியும் பெண் பொலிஸ் அதிகாரியும் தெரிவித்தனர். சொல்லியிருந்தால் நாங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்திருப்போமே. அதற்காக வேறு தொகை அறவிடப்படுமென அந்த டாக்டர் தெரிவித்தார். எவ்வளவு தொகை செலவாகும் எனக் கூறமுடியுமா டாக்டர் ? அதாவது....மருந்துக்கான செலவு சுமார் 10 ஆயிரம்தான். எஞ்சிய பணத்தை நாங்கள் கொண்டுவந்து தரும் வாகனச் செலவுக்கு மட்டும்தான் அறவிடுவோம். தொகை எவ்வாறிருப்பினும் ஒரு நாளைக்கு 20 பேர்வரை எங்களிடம் மருந்தெடுக்க வருவார்கள் என்று அந்த டாக்டர் அவர்களிடம் தெரிவித்தார். இந்த உரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது ஏனைய பொலிஸ் அதிகாரிகள் குழு அந்த இடத்தை இரகசியமாகச் சுற்றிவளைத்து மிகவும் அவதானத்துடன் எந்த நேரத்திலும் பொலிஸ் சார்ஜன்றிடமிருந்து தங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும் என்ற நிலையிலேயே நின்றுகொண்டிருந்தனர்.
இதன்போது பொலிஸ் சர்ஜன்றிடம் இந்த டாக்டர் மேலும் தெரிவித்ததாவது , நாங்கள் விநியோகிக்கும் இந்த மருந்தானது வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்டதொன்றெனவும் அதை இங்கு விற்பனை செய்வதற்கு தன்னிடம் அது சம்பந்தமான அனுமதிப்பத்திரம் கூட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட சில கருக்கலைப்பு மருந்துகள் போலியானவையெனவும் அவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும் அதனால் கருகலைப்பு ஒழுங்கு முறையில் இடம்பெறாதெனவும் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் கொடுக்கப்படும் மருந்துகளை அதன்படி உட்கொண்டால் அதன் பிரதிபலன்கள் ஒரு நாளைக்குள் கிடைத்துவிடுமென்றும் டாக்டர் தெரிவித்தார். அதற்கிணங்க அந்த மருந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த பொலிஸ் சார்ஜன்ற், தனது மனைவிபோல் வேடமிட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரியிடம் அவரது விருப்பத்தையும் கேட்டார். இந்த சந்தர்ப்பத்தில் பெண் பொலிஸ் அதிகாரியை பார்த்து சந்தேகநபரான டாக்டர், தங்கையின் வயதென்ன என்று கேட்டார். 28 வயதென அவ்வதிகாரியும் கூறினார். ஐயோ....பயப்படவேண்டாம். என்னிடம் மருந்து வாங்க 17,18 வயதுப் பிள்ளைகளும் வருவார்கள். நீங்கள் ஏன் வீணாக பயப்படுகின்றீர்கள்.நான் சொல்கின்றது போல மருந்து எடுத்துக்கொள்ளுங்கள் . இரண்டு மூன்று நாட்கள் செல்லும் போது எல்லாம் சரியாகிவிடும். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லையென அந்த டாக்டர் மேலும் தெளிவுபடுத்தினார்.
அந்த சந்தர்ப்பத்தில் கூட தான் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டுள்ளதை அறியாத சந்தேக நபர், அதன் பின்னர் மருந்தை பாவிக்கும் முறை பற்றியும் அதை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் உபதேசம் செய்துகொண்டிருந்தார். அதுவரை போலியான நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்த சார்ஜன்ற் அதிகாரிக்கு மேலும் தகவல்கள் தேவைப்படவில்லை என்றே கூறவேண்டும். அதுவரை அனைத்து தகவல்களையும் சந்தேக நபர் தெரியப்படுத்தியிருந்தார். சந்தேக நபரை கைது செய்வதற்கு அவர் வழங்கிய தகவல்கள் போதுமானவை என்பதை சார்ஜன்ற் ஊகித்துக்கொண்டார். அதனால் விரைந்து செயற்பட்ட அவ்வதிகாரி சந்தேக நபரை கைது செய்யும் சந்தர்ப்பத்தில் ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அதன் பின்னரே மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்தனர். தனக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியதென்று தெரிந்துகொண்ட சந்தேகநபர் சட்டவிரோதமாக இதுவரை காலமும் தான் இரகசியமாக மேற்கொண்டு வந்த இந்த வியாபாரம் பற்றிய சகல தகவல்களையும் ஒன்றுவிடாமல் அவ்வதிகாரிகளிடம் தெரிவித்திருந்தான். அந்தத் தகவல்களுக்கிணங்க குறித்த சந்தேக நபர் அந்த மருந்துகளை கொழும்பில் அமைந்துள்ள நிறுவனமொன்றிலிருந்தே பெற்றுகொண்டிருந்தான். இந்நபரால் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கருக்கலைப்பு நடவடிக்கைக்கு தன்னிடம் வரும் பெண்களிடம் 6 மருந்து குளிசைகளை வழங்குவாராம். இவற்றுள் 4 மருந்து குளிசைகளை குடிக்கச் சொல்லியும் ஏனைய இரு குளிசைகளை உடம்பில் செலுத்துமாறு கூறியே வழங்குகின்றார். இந்த சட்டவிரோத மருந்தை பெற்றுகொள்பவர்களிடம் குறித்த நபரால் 10,000 ரூபா பெற்றுகொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வலான குற்றத்தடுப்புப் பிரிவு ஒன்றியத்தின் இந்த சுற்றிவளைப்புக்கு மத்திய மாகாண உணவு மற்றும் ஓளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அதிகாரிகளின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட மருந்து இவர்களால் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டது. அதில் குறித்த சந்தேக நபர் இந்த மருந்தை சட்டவிரோதமான முறையில் தன்னருகே வைத்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்ததில் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் பல மருந்துகளை பொலிஸார் தேடி தம்வசப்படுத்தினர். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் போது சந்தேக நபரால் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது இந்த மருந்தை இலங்கைக்கு கொண்டுவரும் நிறுவனத்தின் மத்திய மாகாண விநியோகஸ்தர் தானே எனவும் அதற்கான அனுமதிப்பத்திரத்தை தான் பெற்றுகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பின்னர் இது தொடர்பில் சந்தேக நபரிடம் வினவப்பட்ட போதும் அவரால் அதனை ஒப்புவிக்க முடியாமல் போய்விட்டது.
சில காலமாகவே சந்தேக நபரால் இந்த வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில், அதனூடாக ஏராளமான பெண்கள் அவரால் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளனர். சில காலம் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் சேவையாற்றியிருந்த குறித்த நபர் , மருந்துகள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து தெரிந்துகொண்டபின்னரே இந்த வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திச் சென்றிருந்தார். இவர் வழங்கிய தகவல்களுக்கமைய அப்பிரதேசத்திலுள்ள இன்னுமொரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனூடாக அப்பிரதேசத்திலுள்ள இன்னுமொரு மருந்து விநியோகக் கடையையும் பொலிஸார் சுற்றிவளைத்ததோடு அங்கிருந்த சட்டவிரோத மருந்துத் தொகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கருக்கலைப்பு என்பது நாட்டின் சட்டத்திட்டங்களின் படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். சட்டத்தின்படி கருக்கலைப்பொன்றை செய்வதனால் அது அனுமதிக்கப்பட்ட வைத்தியரொருவரின் வைத்திய அறிக்கை மூலமேயாகும். அதுவும் சட்டரீதியாகவே இடம்பெற வேண்டும். இந்நாட்டில் எந்தவித அச்சமுமின்றி கள்ளத்தொடர்புகளைப் பேணி வரும் எத்தனையோ பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். இதனூடாக சட்டரீதியற்ற கருக்கலைப்பு வியாபார சந்தையானது உயர் பெறுமதியைக் கொண்ட இடமாக முன்னிலை வகிக்கிறது எனலாம். எந்தவித சந்தேகமும் பயமும் இன்றி ஒரு சில பெண்கள் இதற்கு முன்னுரிமை கொடுப்பதோடு அதற்காக நிர்ணயிக்கப்படும் தொகை÷யோ உயர் மட்டமாகும். சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் ஒரு சிலர் அதற்காக குறடு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதோடு , இன்னும் சிலர் மனித உடலுக்கு ஒத்துவராத வெவ்வேறு மருந்துப்பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நாட்டின் பல பிரதேசங்களிலும் இந்த வியாபாரிகளால் மேற்படி கருக்கலைப்பு இடம்பெற்று வந்துள்ளதை அறியமுடிகின்றது. மனித வாழ்வோடு மரண விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் இந்த வியாபாரிகள் அதற்காக போலி அனுமதிப்பத்திரத்தைக் கூட முன்வைத்து வியாபாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடந்த தினமொன்றில் அட்டன் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவரும் அவ்வாறான ஒருவரே. இறுதியில் அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பில் உதவிப் பொலிஸ் அதிகாரி ஹேமல் பிரஷாந்தவின் கட்டளைக்கிணங்க வலான குற்றத்தடுப்புப் பிரிவு ஒன்றியத்தின் தலைவரும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ரஞ்சித் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் உப பொலிஸ் பரிசோதகர் தர்மசிறி பொலிஸ் சார்ஜன்ற் அதிகாரிகளான ஐயலால் , ஜயதிலக, அசோக குமார மற்றும் கான்ஸ்டபிள்களான உதயகுமார, சுசந்திகா போன்றோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக