கடந்த 5 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் பாரிய களேபரமடைந்திருந்தது. துப்பாக்கிகள் சகிதம் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் விமான நிலையத்தை சுற்றிவளைத்திருந்தனர். இது போதாதென்று இலங்கை பொலிஸ் அதிகாரிகள் வேறு. அரச புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு , குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளும் விமான நிலையத்துக்குள்ளும் சூழவும் நிரம்பி வழிந்தனர். சுருக்கமாகச் சொல்வதாயின் கட்டுநாயக்க விமான நிலையம் இலங்கை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகக் கூறலாம்.
விமான நிலையத்தின் பணிப்பாளர் சபை மட்டுமன்றி விமான பயணிகளில் அநேகமானோர் நினைத்தது அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் அல்லது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முன்கூட்டியே இலங்கைக்கு வருவது பற்றி தெரிவிக்காது, அவசரமாக வந்து இறங்குகிறார்களென்றே. அப்படியல்லாவிடில் அரச தலைவரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகிறார் என்றே நம்பினர். அந்தளவுக்கு விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விமான நிலையத்திலுள்ள பலர் வரும் அரச தலைவரோடு செல்பி எடுக்கும் ஆர்வத்தில் இருந்தனர். இல்லாவிடில் வரும் அரச தலைவர் யார் என்று பார்க்கும் ஆவலில் இருந்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சிலர் துப்பாக்கிகளுடன் அதிகாலை 5.5 மணியளவில் தரையிறங்கிய யு.எல். 226 ஸ்ரீலங்கா விமானத்தை சுற்றிவளைத்தனர். விசேட அதிரடிப்படை அதிகாரிகள் விமானத்தை சுற்றிவளைத்ததும் அதில் வந்த விமானப்பயணிகள் நிலைக்குலைந்து போயினர். கடந்த பல மாதங்களாக இலங்கை ஊடக நிறுவனங்களின் தலைப்புச் செய்தியாகக் காணப்பட்டது, எமது நாட்டுக்கு மிகவும் பெருமையைத் தேடித்தந்த இந்த இளைஞனின் செய்தியே. மிகவும் வறுமை நிலையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவன், பின் சர்வதேச அளவில் வெற்றிகண்டான். டுபாய் நாட்டுக்குச் சென்று பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் ,ஈரான், லாவோஸ் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொடுக்கல்- வாங்கல்களில் ஈடுபட்டு சர்வதேச வர்த்தகத்துக்குள் நுழைந்தான். பெரும் பிரயத்தனத்துக்கு மத்தியிலேயே இவன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டான். சர்வதேசத்தை வெற்றிக்கொண்ட இந்த இளைஞன் 4 வருடங்களுக்கு பிறகு தனது தாய்நாட்டுக்கு காலடி எடுத்து வைக்கும் சந்தர்ப்பத்தை இதற்கும் மேலான ஏற்பாடுகளுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இந்த இளைஞன் அவசரமாக இலங்கைக்கு வந்த காரணத்தால் விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கத்தால் முடியாமல் போய்விட்டது. அதற்கான நேர காலமும் ஒழுங்காக அமையவில்லை. அதனால் குறித்த கோடீஸ்வர இளைஞனுக்கு
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தது. ஸ்ரீலங்கன் விமானத்திலிருந்து இறங்கிய இந்த இளைஞன், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் துப்பாக்கி பாதுகாப்புக்கு மத்தியில் மிகவும் கம்பீரமாக விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் இருப்பிடத்துக்கு வந்தான். அரச தலைவர்களுடன் செல்பி எடுக்க ஆயத்தமாகியிருந்த அனைவரும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் துப்பாக்கிப் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட இளைஞரைக் கண்டு மிரண்டு போயினர்.
இந்த இளைஞனின் வெளிநாட்டு கடவுச்சீட்டு புத்தகத்தில் கம்பஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவன் என்றிருந்தது. 1979 பெப்ரவரி 20 ஆம் திகதி பிறந்த தினமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. வியாபார உலகில் கொடிகட்டிப் பறந்து டுபாய் நாட்டையே மிரட்டிப்போட்ட இந்தக் கோடீஸ்வரனின் கடவுச்சீட்டில் வேலை என்ற இடம் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது ஆச்சரியமே. இந்தக் கோடீஸ்வரன் 201 5ஜூன் 2 ஆம் திகதி இலங்கையிலிருந்து டுபாய்க்கு தப்பிச்சென்றிருந்தான். பின்னர் இவன் அபுதாபி விமான நிலையத்துக்குச் சென்றிருந்தான். அப்பொழுதிலிருந்தே சுமார் 4 வருட காலமாக டுபாய் நாட்டில் இருந்துகொண்டு இலங்கையை உலுக்கிச் செயற்பட்ட அந்த இளைஞனால் முடியுமாகவிருந்தது.
விசேட அதிரடிப்படை , பொலிஸ் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு மத்தியில் மிகவும் ஆறுதலாக நடந்து வந்த அந்த இளைஞன் குடிவரவு- குடியகல்வு திணைக்களத்திலிருந்த கதிரையில் அமர்ந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு ”குட் மோர்னிங் ” சொல்லிக்கொண்டேயாகும். அந்த சந்தர்ப்பத்தில் விமான நிலையத்திலிருந்து அனைவரும் மாகந்துர மதூஷ் என்ற இந்த இளஞனைக் கண்டதிலிருந்து மிகுந்த அச்சத்திலேயே இருந்துள்ளனர். அவனுக்கு எந்தவித அச்சமோ வெட்கமோ இருக்கவில்லை. குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நிதானமாகப் பதிலளித்தான். பல ஆண்டுகளாக முழு நாட்டையும் அச்சத்துக்குள்ளாக்கி, தொன் கணக்கில் ஹெரோயினை இலங்கைக்கு அனுப்பி, நாட்டிலுள்ள அப்பாவி இளைஞர்களை நாசமாக்கி , அவர்களின் குடும்பத்தாரின் நிம்மதியை சீர்குலைத்து மாகந்துர மதூஷ் என்ற கொடியவன் இப்போது அமைதியாகிவிட்டான்.
மாகந்துர மதூஷ் வந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு பத்திரம் போலியானவொன்று. அதில் உண்மையாகவும் சரியாகவும் இருந்தது மதூஷின் நிழற்படம் மட்டுமே. இந்தப் போலி கடவுச்சீட்டு மதூஷ் நாட்டிலிருந்து தப்பிச்செல்ல பயன்படுத்தியவொன்று என்பதை குற்ற விசாரணைத் திணைக்களம் , பொலிஸ் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எப்போதோ அறிந்து வைத்திருந்தனர். அதுவரை இந்த போலி கடவுச்சீட்டு பற்றி தகவல்களை குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளிடம் கொடுத்திருந்தது மதூஷ் திருட்டுத் தனமாக இலங்கைக்கு வந்தால் கைது செய்யலாம் என்ற எண்ணத்திலேயாகும்.
எமது நாட்டில் என்னதான் சட்டத்திட்டங்கள் பல காணப்பட்டாலும் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரிப்பதென்பது மிகவும் இலகுவான காரியமாகக் காணப்படுகின்றது. மதூஷ் இந்த போலிக் கடவுச்சீட்டை தயாரித்தது 24 மணித்தியாலத்துக்கு குறைவான காலமே சென்றது. குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பிறகு அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் மதூஷ் ஒப்படைக்கப்பட்டான். பின்னர் இந்த பாதாளத் தலைவனின் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் அவனை எடுத்தனர்.
மதூஷ் பிறந்தநாள் விழா நடத்திய தினம் டுபாய் பொலிஸாராõல் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆடம்பர ஆடைகளில் ஜொலித்தான்.பிறந்தநாள் விழாவொன்று வித்தியாசமான முடி அலங்காரமொன்றையும் அவன் போட்டிருந்தான். இருப்பினும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் போது அந்த அலங்காரம் இருக்கவில்லை. விமான நிலையத்தில் வைத்து மதூஷை குற்ற விசாரணைத் திணைக்களம் கைது செய்தது.
மதூஷின் தந்தை தச்சுத் தொழிலாளி என்பதால் சிறு வயதிலிந்தே தச்சுத் தொழிலைக் கற்றுக்கொண்டான். மதூஷின் பாதாளக் குழவில் அவனது நெருங்கிய சகாவான கெவ்மா அறிமுகமானது. மாத்தறை , மாகந்துர பஸ்ஸில் வைத்தேயாகும். அந்த சந்தர்ப்பத்தில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேலை செய்துகொண்டிருந்த கெவ்மா, தொழிலுக்கு வந்து போனதெல்லாம் மதூஷ் ஓட்டிச்சென்ற பஸ்ஸிலோயாகும். அந்தப் பழக்கத்தின் காரணமாக அந்த பஸ்ஸிலேயே கெவ்மா நடத்துனராக சேவைபுரிய தொடங்கினான். இருப்பினும் சாரதி தொழில் அவனுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பின்னர் தனியார் நிறுவனமொன்றில் வாகன திருத்துனராகக் கடமை புரிந்தான். அங்கிருந்தும் விலகி பின்னர் வைத்தியசாலையின் மருந்து கொடுக்கும் சேவகனாக கடமை புரிந்தான். இங்கு வைத்தே மதூஷின் முதல் மனைவி அவனுக்கு அறிமுகமாகிறாள். இவளும் இதே வைத்தியசாலையில் அதே தொழிலில் ஈடுபட்டு வந்தாள். மதூஷ் பிறந்தது கம்புறுபிட்டிய என்றபோதிலும் மனைவி மாகந்துரவை வசிப்பிடமாகக் கொண்டவள். தனது மனைவியின் ஊரில் வசித்து வந்த பின்னரே மாகந்துர மதூஷ் என அழைக்கப்பட்டான். மதூஷின் தாய் அவன் சிறுவயதிலிருக்கும் போதே உயிரிழந்துவிட்டார். அந்த நேரத்தில் ÷ஐ.வி.பி.யின் செயற்பாட்டாளராக காணப்பட்ட அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மதூஷின் இளைய சகோதரனும் பின்னர் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தான்.
கம்புறுபிட்டியில் அமைந்துள்ள பல அரச காணிகள் மதூஷின் தந்தையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இந்தக் காணி ஆக்கிரமிப்புத் தொடர்பில் அப்போது தொழில்நுட்ப அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட டெனீ ஹித்தெட்டியவுடன் மதூஷ் குடும்பம் பாரிய முரண்பாடுகளில் ஈடுபட்டிருந்தது. இந்தக் காணி ஆக்கிரமிப்பு முரண்பாடு நீண்டுகொண்டு சென்றமையால் டெனீயின் மச்சான் ஒரு நாள் மதூஷை சுட்டும்விட்டான். இந்தப் பிரயோகத்தில் மதூஷ் மயிரிழையில் உயிர் தப்பிக் கொண்டான். இதன் காரணாக டெனீயின் மச்சானை பழிதீர்க்கும் பொருட்டு சுட்டுக்கொன்றுவிட்டான். இந்தக் கொலையே மதூஷின் முதல் கொலை என்று குற்ற அறிக்கை புத்தகத்தில் பதிவானது. இந்தக் கொலைக்குப் பின்னர் கம்புறுபிட்டியில் இருந்த தனது எதிராளி ஒருவனையும் சுட்டுகொன்றான். இந்தச் சந்தர்ப்பத்தில் கொழும்பிலுள்ள பாதாளக் குழுவுடன் நெருங்கிய தொடர்பை மதூஷ் பேணிவந்தான்.
கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களிலுள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்கள் பலவற்றில் கொள்ளையடித்த மதூஷ் தனது குற்ற எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு முன்னுக்குச் சென்றான். மதூஷ் பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டு கைது செய்யப்பட்டது அவன் மேற்கொண்ட பாரியளவிலான கொள்ளைச்சம்பவம் ஒன்றிற்கேயாகும். மதூஷ் விளக்கமறியலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் கம்புறுபிட்டிய காணி விவகாரம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியது. டெனீ ஹித்தெட்டிய , மதூஷ் குடும்பம் அடாவடியாக பிடித்து வைத்துக் கொண்டிருந்த அரச காணியை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். மதூஷ் தனது நெருங்கிய இருவரை வைத்து டெனீயை கொலை செய்தான். இதனால் முழு தெற்கும் அச்சமடைந்திருந்தது . கொள்ளைச் சம்பவம் , கொலை செய்தல் , துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் விற்பனை போன்ற பாரிய குற்றச்செயல்களில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஈடுபட்டு வந்த , முழு நாட்டையும் பீதிக்குள்ளாக்கிய மாகந்துர மதூஷ் 2015 ஆம் ஆண்டே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றான். அந்த நேரத்தில் முழு இலங்கையிலும் பாரிய பாதாள வலைப்பின்னலொன்றை மதூஷ் அமைத்திருந்தான். 2015 வரை போதைப்பொருள் வியாபாரத்தில் முழு வீச்சாக ஈடுபட்டிருந்த மதூஷ் தென் மாகாணம் முழுவதும் ஹெரோயின் விநியோகிப்பதில் பிரதானியாக விளங்கினான். சில காலம் பாதளக் குழுவின் பிதாமகனாக அறியப்பட்டது நாவல நிஹால் கொலைகாரனாவான். தலைமறைவாக இருந்தே பல குற்றச்செயல்களை நாவல நிஹால் புரிந்துவந்தான். தனது சகாக்களை வைத்தே எதிரிகளை அழித்துவந்தான். நாவல நிஹால், களு அஜித் உள்ளிட்ட 6 பேரை முட்கம்பிகளில் சுற்றிக்கட்டி நுகேகொடையில் வைத்து உயிரோடு வானுக்குள் போட்டு நெருப்பு வைத்து கொலை செய்ததும் தனது சகாக்களை வைத்தேயாகும்.
பல குற்றங்களுடன் நேரடியாக தொடர்புபடாததால் நாவல நிஹாலுக்கு எதிராக சில முறைப்பாடுகளே காணப்பட்டன. நிகழ்கால பாதாள பிதாமகனாக அறியப்படுவது மாகந்துர மதூஷாவான். மதூஷûம் நாவல நிஹாலைப் போலவே குற்றங்களை புரிந்து வந்தான். நாவல நிஹால் குற்றம்புரிந்தது இலங்கையில் இருந்தவாரேயாகும். ஆனால் மதூஷே தனது ஹெரோயின் மற்றும் இதர குற்றச்செயல்களை செய்தது டுபாயிலிருந்தவாயோகும். பாதாள துப்பாக்கிதாரிகள் கு ழு என்னதான் குற்றங்களைச் செய்தாலும் பொலிஸாருக்கு எதிராக பிரயோகம் மேற்கொள்ளஎந்த சந்தர்ப்பத்திலும் முயற்சி செய்திருக்கவில்லை. இருப்பினும் மதூஷ் என்ற பாதாளத் தலைவன் பொலிஸாருக்கு எதிராகவே செயற்பட்டான். 2017 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சிலருக்கு பிலியந்தலை நகரின் மத்தியில் வைத்து மதூஷின் பாதாளக்குழுவினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரும் வீதியில் சென்றுகொண்டிருந்த சின்னப் பிள்ளையொன்றும் உயிரிழந்துள்ளனர். மேலும் இரு பொலிஸார் காயங்களுக்குள்ளாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வித்தியாசமான பல கதைகள் பொலிஸ் திணைக்களத்துக்குள் பரவிச் சென்றன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் பிலியந்தலைக்குச் சென்றது ஹெரோயின் தொகையொன்றை கைப்பற்றுவதற்கேயாகும். இந்த ஹெரோயின் தொடர்பில்நவாஸ் என்பவரால் தகவல் வழங்கப்பட்டிருந்தது. பொலிஸ் அதிகாரிகளுக்குஎம் போதைப்பொருள் அதிகாரிகளுக்குமிடையில் எவ்வாறான தொடர்பு உள்ளதோ எமக்குத் தெரியாது. எப்படியிருப்பினும் தகவலை வழங்கிய நவாஸ் என்பவர் சில பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டுக்கு மத்தியில் நாட்டிலிருந்து தப்பிச் சென்றது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
களுத்துறை சிறைச்சாலை பஸ்ஸுக்கு மதூஷின் வழிகாட்டலின் கீழ் மிகவும் மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியது. ரணால சமயங் என்ற பாதாளத் தலைவன் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர்உள்ளிட்ட 7 பேர் சிறைச்சாலை பஸ்ஸுக்குள் வைத்துச் சுடப்பட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் நாட்டின் பாதுகாப்பு சிறிதும் எண்ணிப்பார்க்கப்படவில்லை. பொலிஸ் சீருடையில் இருந்து அங்கொட லொக்கா என்ற பாதாளக்குழுத் தலைவன் உள்ளிட்ட பாதாளக் குழு, இந்த பிரயோகத்தை மேற்கொண்டது டுபாயிலிருந்து பாதாள உலகத்தை செயற்படுத்திக் கொண்டுவந்த மதூஷின் பூரண கட்டளைக்கிணங்கவேயாகும். மதூஷின் நெருங்கிய சகாவான ரிஸ்கான் , கொட்டாஞ்சேனைப் பகுதியில் மோட்டார்வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிலையமொன்றை நடத்திவந்தான். ”ட்ரோப்மீ” என அழைக்கப்பட்ட இந்த வாடகை நிலையத்துக்கு 10 கோடிக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்தது மதூஷே.
ரணால சமய்ங் கொலைக்கு பழிதீர்க்கும் முகமாக ரிஸ்கானை கொலை செய்ய கடுவல பாதாளக்குழு திட்டமிட்டது. கொட்டாஞ்சேனை பகுதிக்கு வந்த பாதாள உறுப்பினர்கள் ரிஸ்கானை சுட்டுக்கொன்றனர். மதூஷ் ரிஸ்கானை தனது சகோதரன் போலவே எண்ணினான். அதற்கேற்றவாறே உபசரிப்பும் செய்தான் . ர>ஸ்கான் கொலை செய்யப்பட்ட செய்தி மதூஷின் காதுகளுக்கு எட்டியதும் கடும் கோபமடைந்தான். இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கொன்று தீர்க்குமாறு தனது சகாக்களுக்கு மதூஷ் உத்தரவிட்டான். ரிஸ்கான் கொலையுடன் சம்பந்தப்பட்டிருந்த கொஸ்மல்லி என்ற பாதாள உறுப்பினரும் மதூஷின் குழுவிடம் மாட்டிக்கொண்டான். இவ்வாறு பல குற்றங்களுக்கு சொந்தக்காரனே மதூஷ் என்ற பாதாளக் குழு தலைவன். இவனுக்கு தண்டனை வழங்குவதென்றால் நாட்டில் புதிதாக சட்டமொன்று உருவாக்கப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக