கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

3 ஜூலை, 2019

குற்றச்சாட்டுகளை மறுக்கும் தனுஷ்

பாதாளத்தின் தந்தையென அழைக்கப்படும் மாகந்துர மதூஷ் டுபாய் நாட்டிலிருந்துகொண்டு பல கனவுகளுடன் வாழ்ந்து வந்தான். அப்படி கனவு கொண்டிருந்தவன் இப்போது இருப்பது நான்காம் மாடியிலாகும்.  நான்காம் மாடி என்றாலே குற்றம் புரிந்தவர்கள் இருந்த இடத்திலேயே மலம், சிறுநீர் கழிக்கும் காலமொன்று இருந்தது. இது பல வருதடங்களுக்கு முந்தைய சம்பவமாகும். ஆனால் மதூஷûக்கோ அவ்வாறு எந்தவித பயமும் இருக்கவில்லை. நான்காம் மாடி இவனுக்கு பழக்கப்பட்ட இடமாகும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொலை செய்யும் பொருட்டு எல்.ரி.ரி.ஈ. மேற்கொண்ட சதித்திட்டத்துக்கு சாட்சி ஆவணங்களை வழங்கியமைக்கான கேள்விகளைக் கேட்க இதற்கு முன்னர் மதூஷ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

கொள்ளைச் சம்பவங்கள் உட்பட பல குற்றங்களுக்கு நீர்கொழும்பு விளக்கமறியல் சிறையில் சிறையுணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மதூஷ் நான்காம் மாடிக்கு கொண்டுவரப்பட்டது  ஜனாதிபதியின் கொலை முயற்சி பற்றி விசாரணை மேற்கொள்வதற்கேயாகும். மாகந்துர மதூஷை அன்று நான்காம் மாடிக்கு அழைத்து வந்தது பயங்கரவாத விசாணைப் பிரிவின் விசாரணைகளுக்காகும். இன்று அவன் அழைத்துவரப்பட்டது குற்ற விசாரணை திணைக்களம் அல்லது புலனாய்வுப் பொலிஸாரின் விசாரணைகளுக்காகும். ரி.ஐ.ரி. அல்லது சி.ஐ.ரி. ஆகிய இரு பிரிவினரும் நான்காம் மாடியிலேயே இருக்கின்றனர். இரு பக்கத்திலும் சரிசமமாக இருப்பார்கள். மதூஷ் ரி.ஐ.ரி.யின் பொறுப்பிலெடுத்து விசாரிக்கப்படுவதற்கான காரணம் , எல். ரி.ரி. ஈ. இன் துப்பாக்கிகளங்கிய பொதியொன்று பரிசாக கிடைக்கப்பெற்றமை தொடர்பிலாகும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அம்பாந்தோட்டை பிரதேசத்தில் வைத்து கொலை செய்வதற்கு விடுதலைப்புலிகள் மாகந்துர மதூசிடமே உதவி பெறத் திட்டமிட்டிருந்தனர். வேறு பிரதேசங்களில் மகிந்தவுக்கு கிடைக்கும் பாதுகாப்பானது , அவரது பிரதேசமான அம்பாந்தோட்டைக்குள் செல்லும் போது பாதுகாப்பை பலப்படுத்துவதில்லை என்ற காரணத்தினாலேயே விடுதலைப்புலிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை அங்கு இலக்கு வைத்தனர் எனக் கூறப்படுகின்றது.


மாகந்துர மதூஷின் தலைமைத்துவத்தில் முன்னாள் ஜனாதிபதி சென்ற வாகனங்கள் சிலவற்றுக்கு கிளைமோர் குண்டொன்றை பொருத்தியிருந்தனர். இருப்பினும் அதன் இயக்கி செயற்படாத காரணத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இலக்குத் தவறினாலும் விடுதலைப்புலிகள் மதூஷûக்கு தருவதாகக் கூறிய ஆயுதப்பொருட்களை  பரிசாக வழங்கத் தவறவில்லை. அரசாங்கப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் பொலிஸ்  அதிகாரிகள் கூட பயன்படுத்தாத மைக்ரோ துப்பாக்கியொன்று தெற்கு பாதாளத்தில் மட்டுமே காணப்படுகின்றமை இதனாலேயாகும். மைக்ரோ வகையைச் சேர்ந்த சிறிய துப்பாக்கிகள் வேண்டியதொரு இடத்திற்கு இரகசியமாக மறைத்து செல்லக்கூடியதாக காணப்படுகின்றன. அதனாலேயே வெளிநாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் துப்பாக்கிதாரர்களின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்படிருந்தன. மாகந்துர மதூஷின் குற்றக்குழுக்களுக்கும் மைக்ரோ துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டடுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவின் பாதாள ஒழிப்புப்பிரிவினர் மதூஷ் பற்றி புலனாய்வு அறிக்கையை தயாரிக்கும் சந்தர்ப்பத்தில் வெளியான உண்மையாகும்.

மதூஷின் தகவல்களை முழுமையாக திரட்டிக்கொண்ட ரி.ஐ.ரி. யினர் சுமார் ஒருவருட காலமாக மதூஷை தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்ட போதிலும் எந்தவித பலனுமில்லை. மதூஷ் ரி.ஐ.ரி. ஐ. தன்னுடைய இடமாக மாற்றிக்கொண்டான். ஒருதடவை தனது ஊரில் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியொன்று பற்றிய தகவலை ரி.ஐ.ரி. அதிகாரிகளிடம் தெரிவித்தான். அதைத் தேடி ரி.ஐ.ரி. அதிகாரிகள் தெற்கு செல்கையில் மதூஷ் ரி.ஐ.ரி.யிலிருந்தவாறே தனது சகாக்களுடன் கதைத்திருந்தான். ரி.ஐ.ரி. அதிகாரிகள் துப்பாக்கியை கண்டுபிடிக்க முன்னரே அதன்ஸ் டிக்கரை கழற்றி மாற்றுமாறு மதூஷ் தெரிவித்திருந்தான். துப்பாக்கியை குற்ற விசாரணைகளுக்கு பொறுப்பேற்கும் போது இடம்பெற்ற கொலைச் சம்பவமோ அல்லது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள அந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது இந்த ஸ்டிக்கர் மூலமேயாகும்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்படும்  வெற்று தோட்டாக்களின் ஸ்டிக்கரை போதனை செய்து பார்த்தால் அந்த வெற்றுத் தோட்டா அந்தத் துப்பாக்கியிலிருந்து வெளியானதா , இல்லையா என்பது தொடர்பில் தேடிக்கொள்ள இந்த ஸ்டிக்கரே ஆதாரமாகக் கருதப்படும். ரி.ஐ.ரி. அதிகாரிகள் வாழைமரத் தோட்டமொன்றுக்குளிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை கண்டுபிடித்திருந்தாலும் பயனில்லாமல் போய்விட்டது என்றே கூற வேண்டும். காரணம் , இது தொடர்பில் ஏற்கனவே மதூஷ் தனது சகாக்களிடம் தெரிவித்தமையாகும். மதூஷ் தனது சகாக்களிடம் குறித்த தகவலை வழங்க ரி.ஐ.ரி. யில் கடமைபுரியும் கொஸ்தாபல் ஒருவரையே பயன்படுத்திக்கொண்டான். குறித்த கொஸ்தாபலுக்கு 25 ஆயிரம் ரூபா தருவதாகக் ககூறி அவரது  கைத்தொலைபேசியிலிருந்தே அந்தத் தகவலை தனது சகாக்களிடம் தெரிவித்திருந்தான் . இது தொடர்பில் தெரியவந்ததையடுத்து குறித்த கொஸ்தாபல் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அந்தளவுக்கு மதூஷ் ஒரு ஏமாற்றுப் பேர்வழியாவான். இருப்பினும் கிளியைப் போல் மரண பயம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் கூறியதையே திரும்ப கூறுபவன் என மதூஷ் பற்றி தெரிந்தே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாகந்துர மதூஷ் மீண்டும் மே மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 4 ஆம் மாடிக்கு காலடி எடுத்து வைத்தது சி.ஐ.ரி.விசாரணைகளுக்காகும். மீண்டும் நான்காம்  மாடிக்கு கொண்டு செல்லும் போது அதற்கு முன்தினங்கள் முழுவதும் மரண பயத்திலிலேயே மதூஷ் இருந்தான். எந்தச் சந்தர்ப்பத்திலிலும் மரண அச்சுறுத்தல் ஏன் மரணம் கூட சம்பவிக்கலாம் என மதூஷ் அறிந்துகொண்டிருந்தான். மதூஷ் இந்தத் தடவையும் சி.ஐ.டி.யின் பொறுப்பிலெடுக்கப்பட்டது , ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தமை தொடர்பில் விசாரணை ÷ம்றகொள்வதற்கேயாகும். மதூஷ் டமீது இந்தக்  குற்றச்சாட்டு சுமத்தப்படுவது ஊழலுக்கெதிரான அமைப்பின் நாமல் குமார கூறிய தகவல்களினாலேயாகும்.

நாமல் குமார தகவல்களில் , ரி.ஐ.ரி. க்குப் பொறுப்பான டரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா , மாகந்துர மதூஷின் ஒத்துழைப்போடும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நாமல் குமாரவின் தகவல்களின் படி விசாரணைகள் மேற்கொள்ள மதூஷ் 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டிருந்த போது நாமல் குமாரவும் 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டிருந்தான். நாமல் குமார இனக்கலவரதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே அழைக்கப்பட்டிருந்தான். நாமல் குமார ஏற்கனவே கூறியது போன்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பெயரும் பிரபுக்களின் கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டிருக்கிறதா என்ற வினாவுக்கு மதூஷ் மற்றும் நாமல் குமாரவிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டால் மட்டுமே விடை கிடைக்கக்கூடியதாகவிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சி.ஐ.ரி.யினர் இந்தக் காலப்பகுதியில், உயிர்த்த ஞாயிறு தினம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களெனக் கருதப்படும் ஐ.எஸ். தீவிரவாத குழுக்கள் பற்றிய விசாரணைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இதன் காரணமாக சி.ஐ.ரி. அதிகாரிகளால் மதூஷிடம் நீண்ட விசாரணை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


மாகந்துர மதூஷ் டுபாயிலிருந்து மேற்கொண்ட மனிதக் கொலை, போதைப்பொருள் வியாபாரம்,  கப்பம் பெறல் உள்ளடங்கிய அனைத்து குற்றச்செயல்கள் தொடர்பிலும் இப்போது உண்மையை சொல்ல தொடங்கியுள்ளான். மதூஷ் கூறும் தகவல்களின் உண்மை , பொய்யை இப்போது தெளிவாக அறிந்துகொள்ள முடியுமாகிப் போனமைக்குக் காரணம் , மதூஷûடன் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் புரிந்த கஞ்சிபான இம்ரானும் 4 ஆம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டமையேயாகும். மதூஷ் அபுதாபி பொலிஸாரிடம் மாட்டிக்கொள்வதற்கு ஹேரோயின் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டியாகும்.  மதூஷ் டுபாயிலிருந்து மேற்கொண்ட போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டிருந்த அமைச்சர்கள் மற்றும் அவன் நெருங்கி பழகிய அமைச்சர்கள் தொடர்பிலும் இதன்போது கூறினான். புதிதாக போதைப்பொருள் வியாபாரத்துக்குள் சேர்ந்துகொண்ட இளம் அமைச்சரொருவர் பற்றிய தகவலையும் மதூஷ் இடைக்கிடை கூறியிருந்தான். மதூஷûக்கு போதைப்பொருள் வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸின் உயரதிகாரிகள் மற்றும்  ஏனைய சிறு அதிகாரிகள் தொடர்பிலும் இடைக்கிடை  வெளிப்படுத்தினான். இவனின் இந்த வியாபாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது தொடர்பான தகவல்களும் வெளிவரத் தொடங்கின.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் தனது தலைமைத்துவத்திலேயே இடம்பெற்றது என்பதையும் மதூஷ் தெரிவித்திருந்தான். அத்துருகிரியவில் வைத்து குடு லாலித்ய , ரங்கஜீவவின் குழுவினரால் கொலை செய்யப்பட்டமைக்கு பழிதீர்க்கும் முகமாகவே மதூஷ் தலைமையில் ரங்கஜீவ கொலை திட்டமிடப்பட்டிருக்கிறது. குடு லாலித்யவின் மனைவியின் கூற்றுக்குமப்பால் துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாக மதூஷ் தலையிட நேரிட்டது தனது கள்ளக்காதலியான திலினியின் வேண்டுகோளுக்கேற்பவேயாகும். கலு துஷாரவின் மனைவியான திலினி , ரங்கஜீவவை கொலை செய்வதற்கு டுபாயிலிருந்து மதூஷை தொடர்புபட்ட வைப்பது வெலிக்கடை சிறையில் தனது கணவனான கலு துஷார கொலை செய்யப்பட்டமைக்கு பழி தீர்ப்பதற்காகும். இந்தக் கொலைச் சம்பவத்துக்கு நீர்கொழும்பில் முன்னாள் பாதாளக் குழுத் தலைவனான பெரோஸின் மச்சானான நவாஸின் உதவியை மதூஷ் பெற்றுக்கொள்கிறான். நவாஸ் ரங்ஜீவவை போதைப்பொருள் இருப்பதாக இரகசியத் தகவலொன்றை வழங்கி பிலியந்தலைக்கு மதூஷின் திட்டமிடலின்படி அழைத்துக்கொண்டான். ரங்கஜீவவை கொலை செய்த பின்னர் நவாஸையும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளச் சென்ற அசிதவையும் மன்னார் மூலமாக படகொன்றில் வரச் சொல்லி இந்தியாவுக்கு அவர்களை நான் வரவழைத்துக்கொண்டேன். அவர்கள் இந்தியாவில் இருப்பதாக மதூஷ் தெரிவித்தான்.

களுத்துறை எத்தனமடலவில் ரணால சமயங் உள்ளிட்ட 5 பாதாள உறுப்பினர்களும் சிறை அதிகாரிகள் இருவரையும் கொலை செய்வதற்கு தான் டுபாயிலிருந்து குழுவொன்றை நியமித்ததாக மதூஷ் ஏற்றுக்கொண்டான். களுத்துறை சம்பவத்துக்குத் தேவையான ஆயுதங்களை அங்கொடை லொக்கா கொண்டு வந்திருந்தான். தான் வாகனத்தை மட்டுமே கொடுத்ததாகச் சொல்லி களுத்துறை சம்பவத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ள மதூஷ் இப்போதே கதையொன்றை வடிவமைத்துக் கொண்டான். தொழில்நுட்ப அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டெனீ ஹித்தெட்டிய கொலைக்குப் பிறகு குற்றமொன்றுக்கு உடந்தையாகவும் கட்டளை வழங்கிய பேரிலும் மதூஷ் சுற்றிவளைக்கப்பட்டிருப்பது களுத்துறை எத்தனமடல கொலைச் சம்பவம் மற்றும் அங்குணுகொல பெலஸ்ஸவில் கொஸ்மல்லி தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச் சம்பவத்துக்காகவேயாகும்.

கொஸ் மல்லியின் கொலை டுபாயிலிருந்து திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாக கஞ்சிப்பான இம்ரான் தெரிவித்திருந்தான். களுத்துறை சம்பவத்துக்கு துப்பாக்கிகளை பெற்றுக்கொடுத்தது மதூஷே என இதற்கு முன் கைதான குற்றவாளிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து மதூஷ் இப்போது தப்பித்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இரகசிய பொலிஸ் அதிகாரிகளும் , ஜனாதிபதியின் கொலைக் குற்றச்சாட்டின் இரகசியங்களை வெளியிடுத் கையோடு களுத்துறை சம்பவம் மற்றும் டெனீ ஹித்தெட்டிய சம்பவத்துக்கு சாட்சியங்களைத் திரட்டி மாகந்துர மதூஷûக்கு மரண தன்டணை பெற்றுக்கொடுப்பதற்கே முயற்சி செய்து வருகின்றனர். இவனுக்கு மரண தண்டனையைப் பெற்றுகொடுத்தாலும் மீண்டும் மேன்முறையீடொன்றை முன்வைத்து ஜனாதிபதி சட்டத்தரணிகளையாவது விலைக்கு வாங்கி இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எவ்வளவு தொகையென்றாலும் செலவழிக்க அவனிடம் பணம் இருக்கின்றது.

4 ஆம் மாடியிலிருந்து எப்படியாவது தப்பி விரைவாக சிறைக்குச் சென்று குற்ற உலகை மீண்டும் ஆட்சி செய்யும் கனவும் மதூஷûக்கு இருக்கக்கூடும். மதூஷ் சிறைவாசம் அனுபவித்தால் கட்டாயம் மரண தன்டனையிலிருந்து தப்பிக்கொள்வதற்கான வாய்ப்பு அதில் காணப்படுவது தெளிவானது. டுபாயிலிருந்து தான் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றங்களை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஒப்புக்கொள்ள முடியும் என்பதாலாகும். மீண்டும் சிறைக்குச் சென்றால் தப்பித்துக்கொள்ள முடியும் என்பது மதூஷûக்குத் தெரிந்த விடயமே. இதனால் செய்யக்கூடியதெல்லாம் அதற்கு முன்னர் மதூஷின் சகாக்கள் மற்றும்  ஆயுதங்கள் , துப்பாக்கிகளை தேடி இவனின் குற்ற வலையமைப்பை முடக்குவதேயாகும். இந்தத் திட்டத்தை தனியே இரகசிய பொலிஸாரால் மட்டுமே மேற்கொள்ள முடியாது. இவர்கள் ஷஹ்ரரானின் குழுவிடம் விசாரணைகளை மேற்கொள்ள முதலிடம் வழங்கியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரின் உதவியோடு மதூஷின் பாதாளக் குழுக்களின் அடி ? நுனியை தேடிச் சென்றால் மதூஷின் இரகசியம் யாவற்றையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வர முடியும். மதூஷ் தெரிவிக்கும் தகவல்களின்படி இப்போது அங்கொட லொக்காவும் சரணடைய தயாராகிக் கொண்டிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. அங்கொட லொக்கா டுபாயில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அவன் இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறான் என்பதை மதூஷûம் உறுதிப்படுப்பியுள்ளார். அங்கொட லொக்கவையும் நாட்டுக்கு அழைத்து வந்தால் பாதாள உலகம் சிதைந்து சின்னாபின்னமாகிப் போக நிறைய வாய்ப்புகள் உண்டு. பாதாள வலைப்பின்னலை அடியோடு ஒழித்துவிடலாம். ஐ.எஸ். தாக்குதல்கள் பற்றி தேடிக்கொண்டிருக்கும் இத்தறுவாயில் பாதாள உலகத்தை இல்லாது செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக