கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

3 ஜூலை, 2019

பாதுகாப்பான பாதாள அறை

வடக்கில் எங்கு பார்த்தாலும் தற்போது இராணுவ முகாம்களே காணப்படுகின்றன. வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்வதும் ஆட்களை நிறுத்தி  சோதனை மேற்கொள்வதும் முடிவின்றித் தொடர்கின்றன. மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால் இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் வடக்கில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை  மீண்டும் அனைத்துப் பிரதேசங்களிலும் உருப்பெற்றுள்ளதாகவே எண்ணத்  தோன்றுகின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையையோ அச்ச நிலைமையையோ வடக்கு மக்களும் சரி, தெற்கு மக்களும் சரி, மலையக மக்களும் சரி நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜையும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றே கூற வேண்டும். இருப்பினும் காலத்தோடு சேர்ந்து சூழ்நிலைகளும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன.

முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் கொழும்பிலேயே குண்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டன. இருப்பினும் அந்தப் பிரதேசங்களை காட்டிலும் வடக்குப் பிரதேசங்களிலேயே இந்நாட்களில் அதிக தேடுதல்கள் , சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வவுனியாவிலிருந்து வடக்கு செல்லும் அனைத்து வாகனங்களும்  அதி தீவிர சோதனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணத்தை பாதுகாப்புப் பிரிவினர் இவ்வாறு கூறுகின்றனர். அதாவது வெடிப்பொருட்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான ஆயுதங்களை கடத்திய 20 வாகனங்கள் தெற்கிலிருந்து வடக்குப் பகுதிக்குச் சென்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாலேயே இந்தத் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.


கொழும்பில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வடக்கிலும் குண்டுவெடிப்பை மேற்கொள்ள தீவிரவாதிகள் முயற்சி செய்திருப்பினும் அது ஏதோவொரு வகையில் கிடைக்கப்பெற்ற தகவலால் தடுக்கப்பட்டிருக்கிறது என புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது. இந்த எல்லா செயற்பாடுகளுக்கும் மத்தியில் வடக்கில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் சம்வங்கள் காரணமாக இந்த நாட்களில் முழு வடக்குப் பகுதியுமே யுத்த பூமியாக காட்சியளிக்கின்றது. வடக்கில் யுத்தம் முடிவுற்று கிட்டதட்ட 10 வருடங்கள் அண்மித்துள்ள இந்நிலையில் , யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றுக்குள் நிலக்கீழ் பதுங்கு குழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதுங்குக் குழியானது மிகவும் ஆடம்பரமாக காணப்படுவதோடு அதன் வேலைகளோ இன்றும் முடிவடையாமல் காணப்பட்டன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சிலருக்கு யாழ்ப்பாணத்தின் நாவாந்துறை 5 சந்திப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அதிகாரிகள் சிலரைக் கொண்ட குழுவொன்று அவ்விடத்திற்குச் சென்றது. வீட்டின் கீழ் மாடியில் ஒரு இடத்தில் அகற்றக்கூடிய கொங்கிறீட் பலகையொன்று காணப்பட்டுள்ளது. அதை நீக்கியபோது அந்த நிலக்கீழ் பதுங்குக்குழி தென்பட்டுள்ளது. ஒழுங்கு முறைப்படி பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கொங்கிறீட் பலகையை அகற்றிவிட்டு குழிக்குள்ளால் உள்நுழைந்த போது அலங்காரம் செய்யப்பட்ட படிக்கட்டுகளை கொண்ட வீட்டுக்குள் செல்கையில் வணிக அறைக்குச் செல்ல அவர்களால் முடியுமாகிப் போனது.

முழு வீட்டையும் சோதனை செய்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு இந்த நிலக்கீழ் பதுங்குகுழிக்கு அருகில் காணப்பட்ட சிறைக்கூடம் இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது எனலாம். தங்களால் அந்த நிலைமையை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றே அவ்வதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிலக்கீழ்  பதுங்குகுழி தொடர்பில் வீட்டுரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டார். அவர், அந்த பதுங்குழியானது யுத்த நேரத்தின் போது புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றார். இருப்பினும் இதன் புனர் நிர்மாணங்கள் அனைத்தும் புதிதாகவே காணப்படுகின்றன. புதிய சீமெந்து இடப்பட்ட இடங்களையே அதிகமாகக் காணக்கூடியதாகவுள்ளது. நிலத்துக்கு மாபிள்கள் பிடிக்கப்பட்டு இந்த பதுங்குகுழியானது மிகவும் ஆடம்பரமாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலக்கீழ் பதுங்குகுழி ஏதோவொரு பாதுகாப்புக் கருதி  அமைக்கப்பட்டிருக்கலாமென நம்பிக்கை கொண்டாலும் அதற்கு அண்மையிலேயே அமைக்கப்பட்டுள்ள சின்ன சிறைக்கூடம் என்ன? என்ற காரணம் பெரிய கேள்வியாக காணப்படுகின்றது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரின் கருத்தானது, பெறுமதியான பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரணேயன்றி அது சிறைக்கூடம் இல்லையெனவும் தெரிவித்தார். இதை யாரும் நம்பமாட்டார்கள். நாங்கள் நினைத்தது யாரோ சிலருக்காக பாதுகாப்பு வழங்குவதற்காகவே இந்த நிலக்கீழ் பதுங்குகுழியை அமைத்திருக்கிருக்கலாமென்றே. ஏதோவொரு இடத்தில் தாக்குதல் மேற்கொண்ட குழவினரை இந்த இடத்துக்கு கூட்டிவந்து அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கக்கூடுமென்ற கருத்தும் பரவலாக காணப்படுகின்றது. இவையெல்லாம் மிகவும் மறைமுகமாக இரகசியமாக காணப்படுவதால் இன்னும் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இந்த சம்பவத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை பகுதியிலுள்ள சகல வீடுகளிலும் முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் இன்ன பிற இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். அந்த தேடுதல்களின் போது யாழ்பாணம் மானிப்பாய் வீதியில்  அமைந்துள்ள மதீனா முஸ்லிம் பள்ளிவாசலிலிருந்து சந்தேகத்துக்கிடமான பல பொருட்கள் பைகளுடன் அகப்பட்டுள்ளன. பைகள் மற்றும் பெருமளவு பெட்டிகளில் காணப்பட்ட இந்தப் பொருளைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ள முடியாமலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனி, தேயிலைத் தூள் ஆகிய பைக்கற்றுகள் வெளிநாடொன்றிலிருந்து பாரிய தொகையில் கிடைக்கப்பபெற்றிருந்த போதிலும் அந்த பைக்கற்றுகளை திறந்து பார்த்த போது அதற்குள் வேறு ஏதோ பொருள் பைக்கற்றுக்களில் அடைத்து காணப்பட்டமையினால் பாதுகாப்பு பிரிவினருக்கு இது தொடர்பில் பல கேள்விகள் மேலெழுந்துள்ளன. வெடிக்கும் பொருள் இல்லையென்பதை பாதுகாப்பு தரப்பினர் மிக துல்லியமாக அறிந்துகொண்டிருப்பினும் இந்தப் பொருள் மூலம் ஏதேனும் நாசகாரச் செயலை மேற்கொள்ள முடியும் என்றடியால் இவற்றை முஸ்லிம் பள்ளிவாசல்களுக்குள் இரகசியமாக மறைத்து வைத்திருக்கலாமென பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் மாதிரிகள்சில சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அனுப்பப்பட்டிருப்பினும் அது தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் இதுவரை நிறைவு பெறவில்லை. அறிக்கைகளும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் வேறு சிலரால் பாதுகாப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவல்களின்படி, உணவுப் பண்டங்களில் கலக்கக்கூடிய நச்சுப் பதார்த்தமாகவோ அல்லது சில காலங்களுக்கு முன்னர் நாட்டை பாரியளவில் அல்லோலக்கல்லோலப்படுத்திய கருக்கலைப்பு மாத்திரையாக இருக்கக்கூடுமெனவும் கூறப்படுகின்றது. எது எப்படியாயினும் வடக்கிலுள்ள சகல பிரதேசங்களிலும் வாள் போன்ற கூரிய ஆயுதங்கள் அகப்படத் தொடங்கியுள்ளன. வாள்கள் பெட்டிகள் கணக்கிலேயே கண்டெடுக்கப்படுகின்றன. சகல பிரதேசங்களிலும் அகப்படும் இரு வகையான வாள்களிலும் ஒரே தன்மை காணப்படுவதை அறிந்துகொள்ள முடிகிறது. பெரிய நீண்ட வாள்கள் , சிறிய சின்ன வாள்களே அவை.

வவுனியா பட்டானிச்சூர் பிரதேசத்தில் பாரிய இரு வாள்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபரொருவர் இந்த வாள்கள் அவர்களது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டவையென பொலிஸாருக்கு கூறியுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பிளாஸ்ரிக் குழாயொன்றுக்குள்ளிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 37 வயதுடைய இந்த முஸ்லிம் நபர் இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்த தகவலில் , கண்டி உட்பட பல பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கும் சிலருக்கும் இடையில் கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய முரண்பாடுகள் காரணமாக அந்த சந்தர்ப்பத்தில் டுஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி ஒரு குழு முஸ்லிம் வீடுகளுக்கு வாள்களை பகிர்ந்தளித்ததாக தெரிவித்தார். தனதும் தனது குடும்பத்தினரதும் பாதகாப்பு கருதியே குறித்த இரு வாள்களையும் தனது வீட்டில் வைத்திருந்ததாக அந்த முஸ்லிம் நபர் தெரிவித்தார். மேலும் வவுனியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் இவ்வாறன வாள்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கின் சில இடங்களில் வாள்களுக்கு மேலதிகமாக குண்டு வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் டெட்னேட்டர் மற்றும் வயர்களும் மேலும் அதற்கு பதிலாக வேறு சில பொருட்களும் தற்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வடக்கு மக்கள் மீண்டும் அச்சமடையத் தொடங்கியுள்ளனர். என்னதான் யுத்தத்தின் அனுபவம் அவர்களுக்கிருந்தாலும் இந்த சூழ்நிலை அவர்களுக்கு புதியதாகவே இருந்தது. இந்த சூழ்நிலையில் வடக்கு மக்கள் மட்டுமன்றி அங்குள்ள அரசியல்வாதிகள் கூட பீதிக்குள்ளாகியுள்ளனர். யுத்தம் முடிவடைந்த கையோடு வடக்கில் பாதுகாப்புக்காக இருந்த இராணுவத்தினரை வெளியேற்றுமாறு அங்குள்ள அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்த போதும் தற்போதைய சூழ்நிலையில் வடக்கின் பாதுகாப்புக்காக இராணுவத்தினரை ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுத்து வருவதும் வேடிக்கையான விடயமாகும்.

தீவிரவாதிகளால் மதத்தை அடிப்படையகாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்கள் முடிவு காணாது என்பதாலும் வடக்கின் சகல பிரதேசங்களிலும் அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால்  பொதுமக்களின் பாதுகாப்பு இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமானது. அதனால் எக்காரணம் கொண்டும் வடக்கின் பாதுகாப்பை குறைக்கவோ பாதுகாப்பு அரண்களை அகற்றவோ கூடாதென முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் பொலிஸ் மா அதிபரும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக நாட்டில் நடமாடித்திரியும் தீவிரவாத குழுக்களுக்கு வெவ்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவதாகவும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும் குறித்த தீவிரவாதக் குழுவுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லையென்றே அவர்கள் கூறுகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் வெறும் வாக்குமூலத்தை மற்றும் பெற்றுக்கொண்டு அவர்களை இலகுவில் விடுதலை செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடுமென்று பொலிஸ் அதிகாரிகளிடம் வடக்கு மாகாண முன்னாள் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் , இந்தக் கொடூர சம்பவத்திற்கு சர்வதேச அளவில் உதவிகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவையனைத்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தறுவாயில் வடமாகாணத்தின் பிரதான 5 மாவட்டங்களும் சுற்றிவளைக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. சகல இடங்களிலும் சோதனை மேற்கொள்வது , வாகனங்களை நிறுத்துவது , பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்கள் வீடுகளுக்கு புகுந்து சந்தேகத்துக்கிடமானவற்றை தேடுவது என அரங்கேறிகொண்டிருக்கின்றன. இந்த நிலைமையில் வட பகுதியின் எப்பகுதியைப் பார்த்தாலும் இராணுவ மயமாகவே காட்சியளிக்கின்றது. இதனால் வட பகுதி மக்கள் மேலும் ஒரு அச்ச சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக