தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெளிவானது
அச்சமூட்டுவதன் காரணமாகவே பெருந்தோட்டங்களில் பெரும்பாலும் இடுகாடுகளும் சுடுகாடுகளும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து மிக நீண்ட தூரத்திலேயே காணப்படுகின்றன. நகர்ப்புறங்களில் காணப்படுகின்ற இடப்பற்றாக்குறை காரணமாக குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே சுடுகாடுகளும், இடுகாடுகளும் வந்துவிட்டன. அவற்றைத் தவிர்த்து பிரபலங்களின் இறுதிக்கிரியைகளை பொதுவெளியில் நிகழ்த்தும் ஒரு வழக்கும் எமது சமூகத்தில் காணப்படுகின்றது. இதுவே இந்த கட்டுரையை எழுதுவதற்கும் காரணமாக இருக்கின்றது.
அண்மையில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் மலையக சிரேஷ்ட தொழிற்சங்கவாதி சிங் பொன்னையாவின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற பின்னர், மைதானத்தை முறையாக சுத்தப்படுத்தவில்லையென்ற குற்றச்சாட்டு எழுந்ததோடு நீரால் கழுவப்பட்ட கழிவுகள் சுற்றுப்புறத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் மைதானத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் விசனம் தெரிவித்திருந்தனர். இவ்விடயம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஹட்டன் - டிக்ஓயா மாநகர சபையிடம் (CPC/NE/HDUC/CO1/RTI) தகவல் கோரப்பட்டிருந்த நிலையில் சில தகவல்களை எம்மால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
1957ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவான ஹட்டன் டன்பார் மைதானமானது, ஹட்டன் பிரதேச் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகள், கழகப் போட்டிகள், அரசியல் நிகழ்வுகள் எனப் பல்வேறு விடயங்களுக்காக தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததோடு, இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும் இடமாகவும் மாறியிருக்கிறது. டன்பார் மைதானம் உருவான பின்னர் இன்றுவரையில் ஐந்து பிரமுகர்களுடைய தகனக் கிரியைகள் இங்கு நடந்து முடிந்திருக்கின்றன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஆரியத்திலக்க, முன்னாள் இ.தொ.க பிரமுகர் ராஜூ, அட்டன் பௌத்த விகாரையின் முன்னாள் பிரதான மதகுரு, முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் அருள்சாமி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிங் பொன்னையா என ஐவரின் இறுதிக் கிரியைகளே இங்கு இடம்பெற்றிருக்கின்றன. இம்மைதானத்தில் தகனக்கிரியைகளை மேற்கொள்ள எவ்விதமான கட்டணங்களும் அறவிடப்படுவதில்லையென நகரசபையால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹட்டன் நகர் பகுதிகளில் இறப்பவர்களை பெரும்பாலும் ஹட்டன் குடா ஓயா பகுதியில் இருக்கும் இடுகாட்டில் புதைத்து வருகின்றனர். அத்தோடு தற்போது கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமாக இருக்கும் கொமர்ஷல் மின் மயானத்தில் எரிக்கும் நிலை இருக்கும் நிலையில், இதற்காக ஒருதொகைப் பணத்தினை செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆனால் ஹட்டன் டன்பார் மைதானத்தில் தகனக்கிரியைகளை மேற்கொள்ள கட்டணம் அறவிடப்படுவதில்லை. இதனால் சகல ஹட்டன் பிரதேச வாசிகளுக்கும் இந்த வாய்ப்பைக் கொடுக்கலாமே என்ற கேள்விக்கு ஹட்டன் - டிக்ஓயா நகரசபையே பதில் கூற வேண்டும்.
முக்கிய பிரமுகர்களின் தகனத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைத்தருவதன் காரணமாக அவ்வாறான தகனக்கிரியைகளை இலகுவாக மேற்கொள்ள இம்மைதானம் பயன்படுத்தப்பட்டது என நகரசபையால் கூறப்பட்டுள்ளது. அதேவேளை அண்மையில் மரணமான சிரேஷ்ட தொழிற்சங்கவாதி அமரர் சிங் பொன்னையாவின் தகனக் கிரியைகள் டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற வேளையில் இடம்பெறவிருந்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டமை மற்றும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் இறுதியாக இடம்பெற்ற இறுதிக் கிரியைகளின் பின்னர் முறையான ரீதியில் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக நகரசபையால் கூறப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு இளைஞர் வலுவூட்டல்கள் அசைமசராகவிருந்த ஆறுமுகன் தொண்டமானின் ஒரு கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் புதிய புற்தரைகள் பார்வையாளர் அரங்கு, விளையாட்டுக் கழகங்களுக்கான கட்டிடங்கள் மற்றும் மைதானத்தைச் சுற்றி வேலிகள் என்பன அமைக்கப்பட்டன. தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட புற்தரைகளிலேயே தகனக் கிரியைகள் இடம்பெற்று வருகின்றன. தகனக் கிரியைகள் இடம்பெற்ற. பின்னர் இங்கு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள சிறுவர்கள் அச்சப்படும் ஒரு நிலை காணப்படுகின்றது. எந்தவொரு பெருந்தோட்டங்களிலும் மயானங்களில் விளையாடும் ஒரு நிலை இல்லை. ஆனால் நகர்ப் புறங்களில் விளையாட்டு மைதானங்கள் தற்காலிக மயானங்களாக மாற்றப்படுவது ஆச்சரியமானதே.
டன்பார் மைதானத்தின் மூலம் மாதாந்தம் பெறப்படும் வருமானம் தொடர்பில் வினவியபோது, விளையாட்டு நிகழ்வுகளுக்காக முன்பதிவுக் கட்டணம் டன்பார் மைதானத்திற்காக அறவிடப்படுகின்றது. சராசரியாக மாதாந்தம் 20,000 ரூபாவரை வருமானம் பெறப்படுகின்றது. மைதானத்தின் பேணல் நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் சராசரியாக 18,000 ரூபா செலவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முறையாகப் பேணல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறும் நிலையில், விளையாட்டு வீரர்களுக்கும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை மைதானத்தில் மேற்கொள்வது சிறந்ததொரு நடவடிக்கையாக அமையாது.
பிரமுகர்களின் தகனக் கிரியைகளை மேற்கொள்ள தனியானதொரு கட்டிடத்தை நகர சபை அமைத்து கட்டண அறவீட்டுடன் பேணல் வேண்டும். அல்லது ஹட்டன் நகரசபைக்குச் சொந்தமாக மின் மயானத்தை பாரிய திடலுடன் அமைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் எந்தவொரு தகனக் கிரியைகளுக்கும் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவதற்கு தடைவிதித்து நகரசபையில் பிரேரணை நிறைவேற்ற வேண்டும். மைதானங்களை மயானங்களாக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக