கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கடந்த 28 ஆம் திகதி வரை 359க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500க்கும் மேற்பட்டோர் கடுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் 41 பேர் வெளிநாட்டவர்களாவர். இவர்களுள் அடையாளம் காணப்படாத 14 சடலங்கள் காணப்படுகின்றன. உயிரிழந்த வெளிநாட்டவர்களின் இந்தியா, பிரித்தானியா, டென்மார்க், துருக்கி, சவூதி அரேபியா, பங்களாதேஷ், போர்த்துக்கல், நெதர்லாந்து, ஜப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, சுவிஸ்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த வெளிநாட்டவர்களில் பெருமளவில் சர்வதேசளவில் பேசப்பட்டவர்கள் டென்மார்க் நாட்டுக்காரரான ஒன்திரே ஹோல்ச் பொவ்ல்சனின் மூன்று புதல்வர்களாவர். இதற்குக் காரணம், டென்மார்க்கில் அவர் பிரசித்தி பெற்ற செல்வந்தராகக் காணப்பட்டமையேயாகும். எசொஸ்ஸ் நிறுவனத்தில் பாரியளவான
பங்கினைக் கொண்ட பல பில்லியன்களுக்குச் சொந்தக்காரர். மேலும் வீரோ மோடா மற்றும் ஜெக் என்ட் ஜோன்ஸ் என்கின்ற ஆடம்பர ஆடை அணிகலத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் விளங்குகிறார். தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் 46 வயதான பொவ்ல்சன் விடுமுறை நாட்களை கழிப்பதற்காகவே இலங்கைக்கு வந்திருந்தார். இவர்கள் உயிரிழந்தது தாக்குதலுக்குள்ளான எந்த ஹோட்டலில் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 5 நட்சத்திர ஹோட்டல்கள் மூன்று இந்த குண்டுத் தாக்குதலில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இவர்கள் ஷங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்திருக்கலாம் என்ற தகவலும் பரவலாகச் சொல்லப்படுகின்றது. இவர் இலங்கைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதில், தான் மற்றும் தனது மனைவி இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் தங்கள் பெற்றோர் ஆரம்பித்த மற்றும் முன்னேற்றமடையச் செய்த வியாபாரம் தங்களது பிள்ளைகளுக்கு மட்டுமன்றி உலகிலுள்ள பல குழந்தைகளுக்கு பிரயோசனப்படுவது மட்டுமன்றி அவர்களின் எதிர்கால சுபிட்சமான வாழ்வுக்கும் பக்க துணையாக அமையும் என நேர்காணலின் போது பொச்ல்சன் தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தானும் மனைவியும் இறந்த பின்னர் தங்களது அனைத்து சொத்துகளும் செல்வங்களும் தங்களது 4 பிள்ளைகளுக்கே சொந்தம் என்றார். உயிரிழந்தவர்களில் 48 வயதுடைய தாயும் அவரது 12 வயது மகளும் உள்ளடங்குகின்றனர்.
பிரித்தானியர்கள் சிலரும் இந்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டவுரிஸினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சிங்கப்பூரில் வசித்துவந்த பிரித்தானியர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இதில் உயிரிழந்துள்ளனர். கெனடீஸ் என்ற சட்ட நிறுவனத்தில் சேவை புரியும் தந்தையான பென் நிகொல்சன் மட்டும் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக் கொண்ட போதும் பெண் சட்டத்தரணியான அவரின் மனைவி எனிடா நிகொல்சன் (42 வயது), மகன் எலெக்ஸ் (14 வயது) மற்றும் 11 வயதுடைய மகளான எனபெல் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் ஷங்கிரிலா ஹோட்டலிலேயே தங்கியிருந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் குண்டுத் தாக்குதலில் உயிர் தப்பிய பென் நிகொல்சன் தெரிவித்ததாவது; எனது மன வருத்தத்தைத் தெரிவிக்க வார்த்தையில்லை. ஒரே ஒரு ஆறுதலாக எனக்கு இருப்பது அவர்கள் அங்கவீனமாகாது அவ்விடத்திலேயே உயிரிழந்தமையாகும். எனது மனைவியின் உயிரிழப்பு எனக்கு பேரிழப்பாகும். எனது பிள்ளைகளுக்கு முழுமையான அன்பை செலுத்தும் ஒரு தாய். எங்களது பிள்ளைகள் ஒருநாள் வளர்ந்து பெரியவர்களாகி வாழும் வாழ்க்கையை கண்டுகளிக்க நாங்கள் மிகவும் எதிர்பார்ப்புடனேயே இருந்தோமென தனது கவலையை ஊடகங்களிடம் தெரிவித்தார். உயிரிழந்த எனிடா சிலகாலம் பிரித்தானிய திறைசேரியில் சட்ட ஆலோசகராக கடமையாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானிய நாட்டவர்களின் தீயணைப்பு வீரராக 30 வருட காலம் தனது சேவையை முன்னெடுத்து பல உயிர்களைக் காப்பாற்றிய பில் ஹெரொப் மற்றும் அவரது மனைவியான வைத்தியர் செலீ பிரேட்லியும் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கு
நெருக்கமானவர்கள் இவர்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடன் அவர்களுக்காகவே வாழந்தவர்கள் என்ற முறைமையிலேயாகும். 2012 ஆம் ஆண்டில் பில் தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். மேலும் 19 வயதுடைய டெனியல் லின்சே மற்றும் அவருடைய 15 வயது சகோதரியான அமெலீ ஆகிய இருவரும் குண்டுத் தாக்குதலில் இறந்துபோன பிரித்தானிய நாட்டுக்காரர்களில் உள்ளடங்குகின்றனர். லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட இவர்கள் தமது தந்தையுடன் ஷங்கிரிலா ஹோட்டலில் காலை உணவை உட்கொண்டிருந்த வேளையிலேயே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களது தாயும் இரு சகோதரர்களும் இந்தப் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. குண்டுத் தாக்குதலில் உயிர் தப்பிய தந்தை, திடீரென மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தங்களுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லையென்றும் அடுத்து மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புக்கே அவர்கள் இரையாகினர் என்றும் தெரிவித்தார்.
இந்த குண்டுத் தாக்குதல்களில் இந்தியர்களும் உயிரிழந்திருக்கின்ற அதேவேளை இவர்களுள் 7பேர் பெங்களூரில் வசித்துவந்தவர்களாவர். கர்நாடகா முதலமைச்சர் எச். டி குமாரசுவாமி இந்தச் சம்பவத்துக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த சிலரை தான் தனிப்பட்ட ரீதியில் அறிந்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இவர்களில் சிலர் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் சேவையாற்றிவிட்டு 18 ஆம் திகதி தேர்தல் முடிந்த பின்னரே விடுமுறையைக் கழிக்கவென இலங்கைக்கு வந்துள்ளனர். கே. ஜீ ஹனுமந்தாரயப்பா, எம். ரங்கப்பா, கே. எம். லக்ஷ்மி நாராயன், லக்ஷ்மன கவுடா ரமேஷ், எச். சிவகுமார், ஏ. மரேகவுடா மற்றும் எச். புத்தராஜு ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இந்தியாவின் கேரள பிரதேசத்தில் பிறந்து தனது கணவருடன் டுபாயில் வசித்துவந்த 58 வயதுடைய ரசீனா காதர் குகாடி, இலங்கைக்கு வந்திருந்தது இங்குள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்கேயாகும். கணவர் அன்று காலையிலேயே புறப்பட்டுச் சென்றிருந்ததோடு வேறு ஒரு விமானத்தில் செல்ல ஆயத்தமாகியிருந்த ரசீனா குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். உயிரிழந்த ஏனைய இரு இந்தியர்களும் வேமுராய் துள்சிராம் மற்றும் எஸ். ஆர். நாகராஜ் என அறியப்பட்டுள்ளனர். துருக்கியைச் சேர்ந்தவர்களான செர்ஹான் செர்குக் நாரிசி மற்றும் ஜிகித் அலி கெவுஸ் ஆகிய இரு பொறியியலாளர்களும் இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொழிலொன்றுக்காக கொழும்புக்கு வந்த தனது மகனாக செர்ஹான் மின் பொறியியலாளரெனவும் உயிரிழக்கும் சந்தர்ப்பம் வரை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் செயற்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவரின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அன்று காலை 5 மணியளவில் காலை வணக்கம் என எனது வட்ஸ்அப்புக்கு மகன் குறுஞ்செய்தியொன்றை அனுப்பியிருந்தார். அதன் பிறகு மகனிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை என செர்ஹானின் தந்தை தெரிவித்தார். உயிரிழந்த மற்றைய வரும் துருக்கி நாட்டைச் சேர்ந்த பொறியியலாராவார். இவர் துருக்கி இஸ்தான்புல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மிகவும் திறமையான மாணவன் எனவும் தனது மகன் பல மொழிகளைப் பேசக்கூடியவர் எனவும் ஜிகித் அலியின் தந்தை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இந்த இருவரும் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது எங்கிருந்தார்கள் என்ற தகவல் தெரியவரவில்லை.
2014 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வந்து வசித்துவந்த அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இரட்டை பிரஜாவுரிமை கொண்ட மெனிக் சூரியஆரச்சி மற்றும் 10 வயதுடைய அவருடைய மகளான எலெக்சென்ரியா ஆகியோர் கட்டான தேவாலயத்தில் ஆராதனை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இலக்காகியுள்ளனர். உயிரிழந்த வெளிநாட்டவர்களுள் பங்களாதேஷ் அரசியல்வாதியான ஷேக் பஸ்லுல் கரீம் செலீமின் பேரனும் உள்ளடங்குகின்றார். அந்நாட்டு அவாமி லீக் அரசியல் கட்சியில் பிரசித்தி பெற்ற உறுப்பினரான இவர் குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்ட ஹோட்டலொன்றில் தனது குடும்ப அங்கத்தவர்களுடன் இருக்கையில் உயிரிழந்ததாக அறிக்கை வெளியிடப்பட்ட போதும் எந்த ஹோட்டல் என்பது தொடர்பில் தெளிவில்லை. அவரின் தந்தையும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பங்களாதேஷின் டக்காட்ரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களுள் 32 வயதுடைய போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த ரெய் லுகாஸும் உள்ளடங்குகிறார். அண்மையில் திருமணமான இவர் தனது இறுதி விதிக்கு அகப்பட்டுக் கொண்டது தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாடும் சந்தர்ப்பத்திலேயாகும். இதன் போது மனைவி உயிர்தப்பியுள்ளார். மொனிக் எலன் தனது 3 மகன்களுடனும் தனது கணவரான லுவியுடனும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சினமன் கிரான்ட் ஹோட்டலில் தங்களது விடுமுறை நாட்களை கழித்துக் கொண்டிருந்தார். அன்று காலை தனது ஒரு மகனுடன் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தெப்ரோபேன் உணவு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஏனைய இரு புதல்வர்களும் கணவரும் அதுவரை அறையில் இருந்திருந்ததாக தகவல்களில் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தில் மொனிக் உயிரிழந்துவிட்டார்.
அமெரிக்காவின் கொலராடோ பிராந்தியத்தில் வசித்துவரும் 40 வயதுடைய டய்டர் கொவால்ஸ்கி இலங்கைக்கு வந்தது வேலை நிமித்தமே இவர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமான நிலையத்திலிருந்து சினமன் கிரான்ட் ஹோட்டலுக்கு வந்து வெகு நேரமாகவில்லை. உயிரிழந்த அமெரிக்கர்களிடையே வாஷிங்டனைச் சேர்ந்த 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியும் உள்ளடங்குகிறார். கியரன் ஷாபிரிஸ் டி சொய்சா என்றழைக்கப்படும் அப்பாடசாலை மாணவி தனது விடுமுறை நாட்களை கழிக்கவே இலங்கைக்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. நெதர்லாந்தைச் சேர்ந்த மூவரும் சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த இருவரும் ஸ்பெயினைச் சேர்ந்த காதல் ஜோடிகளான இருவரும் சவூதியைச் சேர்ந்த இருவரும் சீனாவைச் சேர்ந்த ஒருவரும் ஜப்பானைச் சேர்ந்த ஒருவரும் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்துவிட்டனர். 39 வயதுடைய ஜப்பானைச் சேர்ந்த பெண் சமையல் நிபுணரான தனது கணவர் மற்றும் இரு சிறிய குழந்தைகளுடன் இலங்கையில் வசித்து வந்தவர்களாவர். உயிரிழந்த சவூதியைச் சேர்ந்த இருவரும் சவூதி தேசிய விமான சேவையின் சேவகர்கள் என தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்வாறு கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 41 வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர உயிரிழப்புச் சம்பவம் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் துறையானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத் துறையானது அதீத பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை
இந்தியா - 11
பிரித்தானியா - 06
டென்மார்க் - 03
நெதர்லாந்து - 03
அவுஸ்திரேலியா - 02
சவூதி அரேபியா - 02
ஸ்பெயின் - 02
சுவிற்சர்லாந்து - 02
துருக்கி - 02
பிரித்தானிய/ அமெரிக்கர்கள் - 02
அமெரிக்கா - 02
பங்களாதேஷ் - 01
சீனா - 01
ஜப்பான் - 01
போர்த்துக்கல் - 01
மொத்தம் - 41

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக