தகவலறியும் சட்டம் சொல்வது என்ன ?
இலங்கையில் சமீப காலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் பின்னர், விபத்துக்களை குறைக்கும் ஒரு வழிமுறையாக குற்றங்களுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் சாரதிகளுக்கு சாரதிப் பயிற்சிகளை வழங்கும் சாரதிப் பாடசாலைகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெறும் வழிமுறை என்பன சட்ட ரீதியான முறையில் இயங்குகின்றனவா என்பது
சந்தேகத்துக்கிடமானதாக இருக்கிறது. அதேவேளை சாதாரண சாரதிப் பயிற்சி பெறுவதாயின் 20,000 க்கும் அதிகமான தொகையினை செலவு செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு செலவு செய்து கற்கும் சாரதி பாடசாலையானது தரமானதா என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?
இலங்கையில் இயங்குகின்ற சாரதிப் பாடசாலைகள் தொடர்பாகவும் ஒரு சாரதிப் பாடசாலையை கொண்டு நடத்த வேண்டியதற்கான தகைமைகள் தொடர்பாகவும் தகவலறியும் சட்டம் மூலம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினை வினவிய போது, DMT/H/DE/COM/01 - Volume - iv
செய்யப்பட்டுள்ளதா?, போதனாசிரியர்கள் உரிய தகைமையை கொண்டிருக்கின்றார்களா என்பது தொடர்பாக ஆராய்வது அவசியமாகும்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் 122 ஆம் பிரிவுடனும் மற்றும் VII A என்னும் பாகத்துடனும் வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்ட சாரதிப் பாடசாலைகள் மற்றும் சாரதிப் போதனாசிரியர்கள், உதவி போதனாசிரியர்கள் தொடர்பான ஒழுங்கு விதிகள் அதிவிஷேட வர்த்தமானி இலக்கம் 1939/4 மூலம் 2015/11/02 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாரதிப் பாடசாலை ஒவ்வொன்றும் மோட்டார் வாகன ஆணையாளர் தலைமையதிபதியுடன் பதிவு செய்யப்படுதல் வேண்டுமென்பதோடு எல்லாச் சாரதி பாடசாலைகளும் 9 ஆம் பந்தியின் கீழ் குறித்துரைக்கப்பட்ட நியமத்துக்கிணங்க A,B மற்றும் C என வகைப்படுத்தப்படல் வேண்டும். இதனடிப்படையில் இலங்கையில் 2018/12/31 தொடக்கம் 2019 வரையான காலப் பகுதியில் 547 சாரதிப் பாடசாலைகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் சாரதிப் பாடசாலைகளில் கட்டணங்கள் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வேறுபட்டவையாகவே காணப்படுகின்றன. அவை மிக அதிகமாகவும் காணப்படுகின்றன. தனியார் சாரதிப் பாடசாலைகளின் கட்டணம் தொடர்பில் இலங்கை மோட்டார் வாகனத் திணைக்களம் தலையீடு செய்வதில்லை. இதனால் சாரதிப் பாடசாலைகள் தாம் விரும்புவதைப் போன்று கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்கின்றன. அதேவேளை மிக முக்கியமாக சாரதிப் பாடசாலைகளில் பயிற்சிகளை வழங்குவதற்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ள போதனாசிரியர்கள் தொடர்பிலும் பயிற்சிக்கு உகந்த வாகனங்கள் காணப்படாமையும் தொடர்பாக அதிகமான முறைப்பாடுகள் மோட்டார் வாகனத் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு போதனாசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தரமான போதனாசிரியர்களை உருவாக்குவதற்கான பரீட்சைகள் 2012 - 2017 ஆம் ஆண்டு வரை நடத்த முடியாத நிலையில், 2017 ஆம் ஆண்டில் 302 புதிய போதனாசிரியர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவ்வருடமும் இப்பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இப் பரீட்சைகளுக்கான தகைமைகள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானி மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை சில சாரதிப் பாடசாலைகள் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அவ்வாறு இலஞ்சம் வழங்குவது தொடர்பான முறைபாடுகளை நாம் நேரடியாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக முன்வைக்க முடியும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொண்ட பின்பும் முறைப்பாடுகளை வழங்க முன்வருவதில்லையென மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஏ.எச்.கே. ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சாரதிப் பாடசாலைகள் பயிலுனர்களுக்கு பின்வரும் பாடத்திட்டங்களை கட்டாயம் போதிக்க வேண்டுமென வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. விரிவுரைகளையும் செயல் முறைப் பாடங்களையும் உள்ளடக்குகின்ற தொழில்நுட்ப அறிவு தொடர்பான பாடங்கள் (குறைந்தபட்சம் ஆறு மணித்தியாலக் காலப்பகுதி வழங்கப்பட வேண்டும்), வீதி விதிகளும் சைகைகளும் (குறைந்தபட்சம் இரண்டு மணித்தியால காலப்பகுதி வழங்கப்பட வேண்டும்), செயல் முறைப்பயிற்சி (குறைந்தது 20 மணித்தியாலம்) என்பன அவையாகும்.
இவ்விபரங்கள் அடங்கிய பரீட்சை வழிகாட்டிகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பரீட்சை வழிகாட்டியினை கற்று எழுத்து பரீட்சைக்கு மாத்திரம் தோற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதனை சாரதிப் பாடசாலைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது நாட்டில் இடம்பெற்று வருகின்ற விபத்துச் சம்பவங்களை கருத்தில் கொண்டு செயல்முறைப் பயிற்சிகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் வாகனத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வெரஹெர கிளையில் மாதிரிப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை நாடு முழுவதும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றை மத்திய மேற்பார்வை அறையிலிருந்து (Central monitoring room) கண்காணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதியட்டையினை பெற்றுக்கொள்ள நினைக்கும் ஒருவர் தாம் பயிற்சியினை மேற்கொள்ள நினைக்கும் சாரதி பாடசாலை தொடர்பிலும், தமக்கு பயிற்சிகளை வழங்கும் போதனாசிரியர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இலஞ்சத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதியட்டையினை பெற்றுக்கொள்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். செயன்முறை பரீட்சையின் போது கடைபிடிக்கப்படுகின்ற இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையினால் தகுதியற்றவர்கள் கூட சாரதி அனுமதியட்டையினை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. இது பிற்காலத்தில் அதிகமான விபத்துக்களை எதிர்நோக்கவும் காரணமாகின்றது.
எனவே இவ்வாறான தடைகளை களைந்து தரமான சாரதி பாடசாலையை உருவாக்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் 2017 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சாரதிப் பாடசாலைகளுக்கு போதியளவான காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள சாரதிப் பாடசாலைகளை மேற்பார்வை செய்வதற்காக 10 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை சகல குறைபாடுகளையும் கடந்த மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்பாக நிவர்த்திக்க அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
போதனாசிரியருக்கான தகைமைகள்
* 25 - 65 வயது வரையான இலங்கைப் பிரஜையாக இருத்தல் (இருப்பினும் மருத்துவச் சான்றிதழை கவனத்தில் கொண்டு 70 வயது வரையான நீடிப்பு வழங்கப்படலாம்)
* சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்று குறைந்தது 5 வருடங்கள் பூர்த்தியானவராக இருத்தல்.
* க.பொ.த. சாதாரணத் தரத்தில் சித்தியடைந்திருத்தல். (5 வருடங்கள் உதவிப் போதனாசிரியர் அனுபவம் / வாகனத்தைச் செலுத்திய 7 ஆண்டுகால அனுபவம்)
* உதவிப் போதனாசிரியர் தரம் 8 இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (சாரதி பாடசாலை ஊழியராக மூன்றாண்டு கால அனுபவம்)
* ஒவ்வொரு இரு வருடங்களுக்கு ஒரு முறை சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்.
சாரதிப் பாடசாலை
* A, B மற்றும் C வகைப்படுத்தலின் கீழ் மோட்டார் வாகன ஆணையாளர் தலைமையதிபதியுடன் பதிவு செய்திருத்தல்.
* நிரந்தர அலுவலகம், விரிவுரைகளுக்கான வசதிகள், தொழில்நுட்ப பயிற்சிக்கான வசதிகள், வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளை கொண்டிருத்தல்.
* கட்டணங்களை காட்சிப்படுத்தல் மற்றும் பயிற்சி தொடர்பான விதிகள், நிபந்தனைகள் கொண்ட அறிவிப்புகள்.
* உரிமம் பெற்ற போதனாசிரியர்கள், உதவி போதனாசிரியர்களை கொண்டிருத்தல்.
* கட்டணங்களுக்கான பற்றுச்சீட்டுக்களை வழங்குதல்.
* பயிலுனர்கள் விபரமடங்கிய பதிவேட்டை பராமரித்தல், பயிற்சியளித்தமைக்கான உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை செயல்முறை பரீட்சை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புதல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக