பெல்மதுளையில் அமைந்துள்ள ”மிதுரு மிதுரோ” புனருத்தாபன மத்திய நிலையமானது , போதையில் அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு சுகப்படுத்தும் ஒரு ஆயுர்வேத விகாரையொன்றாகும். அந்த விகாரையை நடத்திச் செல்பவர் குப்பியாவத்தே போதானந்த தேரராவார். இவர் , போதைக்கு அடிமையானவர்களை தேடிக் கண்டுபிடித்து , மருந்து உருண்டைகள் , கசாயம் போன்ற ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து சுகப்படுத்தும் புண்ணிய தொழிலை செய்து வந்தார். மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் , புதிய புதிய போதைகளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுத்தல், சுகதேகிகளைக் கொண்ட நாட்டை கட்டியெழுப்புதல் , போதைக்கு அடிமையானவர்களுக்கு எதிராக எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பல் என்பனவே இந்த நிலையத்தின் மிக முக்கிய குறிக்கோளாகும். இதுவரை இந்த விகாரையிலிருந்து சுமார் 3,400 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி சென்றுள்ளனர். அண்மைய நாட்களில் கூட 100 க்கும் அதிகமான இளைஞர்கள் அங்கு சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் 30 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் நாட்டு முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானவர்களாகவும் காணப்பட்டனர். ஆனால் இப்போதைப்பொருட்கள் அவர்களை தன்னிலை மறக்கச் செய்துள்ளன. பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கதைகள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்பட்டாலும் அனைவரையும் ஒருசேர பார்க்கும் போது மனதுக்கு அவ்வளவு கவலையாக இருக்கின்றது. போதைப்பொருளுக்கு அடிமையான பல கதைகளை கேட்டிருக்கின்றோம். அவற்றுள் ஒரு சில கதைகளை நாம் இப்போது பார்க்கப்போகிறோம். அவற்றை வாசித்தறிந்து அதிலிருந்து மீள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு கதைகளை வாசித்து ரசிக்கக்கூடாது.
தென் மாகாணத்தின் பிரதான நகரமொன்றில் பிறந்த குறித்த இளைஞன் , சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றவனாவான். அவ்வாறே விளையாட்டுத் துறையிலும் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவன். 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை , சாதாரண தரம், உயர் தரம் ஆகியவற்றில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொண்ட இவன், தொழிலாக இராணுவத்தை தெரிவு செய்து கொண்டான். சில நாட்களுக்குள்ளேயே தொழிலில் சிறந்த விருத்தியை அடைந்து கொண்டு முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தான். இறுதியில் அரச புலனாய்வுப் பிரிவில் சேர்ந்த அவன் தீய செயல்களுக்கு துணைபோகலானான். இறுதியில் தொழிலும் அவனை விட்டுச் சென்றது. வாழ்க்கையும் நாசமாகிப் போனது. அதனால் தனது வாழ்வை சீராக அமைத்துக்கொள்ளும் நோக்கில் ”மிதுரு மிதுரோ” குடும்பத்தோடு இணைந்துகொண்டான். அவனை புத்தி என்று நாம் அழைப்போம். புத்தி பின்வருமாறு கூறுகிறான் ;
எனது தந்தை தென்மாகாணத்தில் பெயர்போன வியாபாரி ஒருவராவார். அதனால் எனது அம்மாவுக்கு தொழில் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. எமது குடும்பத்துக்கு எந்தவொரு குறையும் இருக்கவில்லை. ஏராளமான வாகனங்கள், தோட்டங்கள் , வியாபாரம் என எல்லாவிதத்திலும் நாம் வசதியானவர்களாக இருந்தோம். எனக்கு தங்கை ஒருவர் மாத்திரமே. அவள் என்னைவிட பத்து வயது குறைந்தவள். நான் மட்டுமே குடும்பத்துக்கு ஆண்பிள்ளை என்பதால் அம்மாவும் அப்பாவும் என் மீது அலாதிப் பிரியம் கொண்டிருந்தனர். நான் கேட்ட எல்லாவற்றையும் வாங்கித் தந்தார்கள். 5,6 ஆம் தரங்களில் எனது பேர்சில் பணம் தவறுவதில்லை. பாடசாலை செல்லும் போது கையில் எவ்வளவு பணம் கிடைக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டியதுதான். அன்றைய தினமே நண்பர்களோடு சேர்ந்து அந்தப் பணத்தை முடித்துவிடுவேன். பாடசாலைக்கு நீள் காற்சட்டை அணிந்த பின்னர் நாம் இப்போது வளர்ந்தவர்கள் என்ற நினைப்பு வந்துவிட்டது. எம்மை விட பெரியவர்கள் செய்வதைப் பார்த்து நாமும் செய்யத் தொடங்கினோம். வகுப்பிலுள்ள ஒரு சிலர் சேர்ந்து மறைந்திருந்து பீடி, சிகரெட் குடிக்கத் தொடங்கினோம். சில காலம் சென்றபின்னர் விடுமுறை நாட்களில் கடற்கரைக்குச் சென்று சாராயம் குடிக்க ஆரம்பித்தோம். இப்படி செய்கையில் எம்மைப் போன்று கடற்கரைகளில் சுற்றித் திரியும் சிலரும் எம்முடன் இணைந்து கொண்டனர். எமக்கு அவர்கள் கஞ்சா , சுருட்டு தந்தார்கள். சாராயம் , கஞ்சா , சிகரெட் என எல்லாவற்றையும் ஒன்றாக குடித்துவிட்டு நன்கு வெறியானவுடன் அங்கேயே உறங்கிவிட்டு மாலை நேரத்திலேயே வீடுகளுக்குச் செல்வோம்.
நான் உயர்தரத்தில் வணிகப் பிரிவிலேயே கல்வி கற்றேன். என்ன ஆட்டம் போட்டாலும் 2 இ, கு சித்தி பெற்று சித்தியடைந்துவிட்டேன். பெறுபேறு வரும் முன்னரே நான் எஸ்.ரி.எப். இல் இணைந்துகொண்டேன். இதன் பயிற்சி நேரத்திலேயே பெறுபேறு வந்தது. பெறுபேறு வந்த பின்னர் எஸ்.ரி.எப். இல் இணைந்திருந்தால் நேரடியாக எஸ்.ஐ. தான் ஆனால் நான் பீ.சி.க்கே சென்றேன். ஆனால் எமது பயிற்சி முடியும் முன்னரே வலயங்களுக்கு அனுப்பிவிட்டார்கள். மனவள பரீட்சையை பூர்த்தி செய்தோம். அது 2008 ஆண்டு பயிற்சி வலயம் தீப்பற்றியது. யுத்தம் இடம்பெற்று மூன்று வருடங்கள் கழிந்தும் பயிற்சி வலயங்களிலேயே இருந்தோம். அந்த சந்தர்ப்பத்தில் கஞ்சா , சிகரெட் நன்றாக குடித்தோம். விடுமுறை நாட்களில் சாராய திருவிழா தான். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்தவுடனேயே இரவு களியாட்ட நிகழ்ச்சிகளை தேடியே சென்றோம். வீட்டுக்குச் செல்லாமல் ஓரிரு நாட்கள் ஹோட்டல் அறைகளில் தங்கி பெண்களுடன் உல்லாசமாக இருப்போம். ஒரு சதமேனும் இன்றியே வீட்டுக்குச் சென்றேன். போதைக்கு அந்த அளவுக்கு அடிமையாகியிருந்தேன். 5 வருடத்துக்குப் பின்னரே கொழும்புக்கு இடமாற்றம் கிடைத்தது. நான் நல்ல உடல்வாகு கொண்டிருந்ததால் குத்துச்சண்டை பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டேன். பாடசாலை செல்லும் நாட்களிலேயே கராத்தே பயிற்சி சென்று கறுப்புப் பட்டியும் வாங்கியுள்ளமையால் குத்துச் சண்டை பிரிவுக்கு இலகுவாக தெரிவு செய்யப்பட்டேன்.
குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டவாறே வேலையையும் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் , புலனாய்வுப் பிரிவுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர். தகுதி இருந்தமையால் நானும் விண்ணப்பித்தேன். முதலாம் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டேன். புலனாய்வுப் பிரிவில் இணைந்துகொண்டேன். சீருடை இல்லை . சிவில் உடைதான். சுதந்திரமான வேலை நான் கொழும்பிலேயே வேலை செய்தேன். எமது பிரதான தொழிலாக காணப்பட்டது குடு வியாபாரத்தைப் பற்றி தகவல் சேகரிப்பதும் குடு வியாபாரிகளைத் தேடிக் கைது செய்வதுமாகும். கொழும்பு தோட்டப்புறங்களுக்குச் சென்று இளைஞர்களோடு இணைந்து கஞ்சா , சுருட்டு புகைத்துக்கொண்டும் சராயம் குடித்துக் கொண்டும் எங்களது தொழிலை மேற்கொண்டோம். அந்த சந்தர்ப்பத்தில் காலை எழுந்தவுடன் தேநீருக்கு பதிலாக கஞ்சாவையே குடித்தோம். முழு நாளும் கஞ்சா புகைத்துக்கொண்டவாறே வேலையையும் சரியாகச் செய்தோம்.
குறுகிய காலத்துக்குள் பெருந்தொகையான குடு வியாபாரிகளை எம்மால் கைது செய்ய முடியுமாகவிருந்தது. ஒரு தொகையான குடுவையும் மீட்டிருந்தோம். எந்நேரமும் குடுக்காரர்களுடனேயே இருந்தோம். பேசுவதும் குடு பற்றியதாகவே இருந்தது. கண்ணுக்குத் தெரிந்ததும் குடுவே. மீட்கப்பட்ட ஒரு தொகை குடு காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் குடு அருந்த நான் பயப்பட்டேன். ஒரு நாள் காலை நேரத்தில் எழுந்து பார்க்கும் போது என்னிடம் கஞ்சா இருக்கவில்லை. எங்களுடன் இருந்த ஒரு சிலரை அழைத்து கஞ்சா இருக்கின்றதா என்று கேட்டோம். ஆனால் யாரிடமும் இருக்கவில்லை. மனதோ கஞ்சாவை கேட்கிறது. செய்ய ஒன்றும் இல்லாததால் சிறிதளவு குடுவை எடுத்து ஈயம் தாளில் சுற்றி சூடாக்கி மூக்கில் வைத்து இழுத்தேன். வாந்தி வந்துவிட்டது. தலையோ பெரிய பாறாங்கல்லை சுமந்த நிலையில் காணப்பட்டது. வாழ்க்கையில் அன்று தான் முதன்முதலாக குடு அருந்தினேன். அந்த வேளையில் குடு அருந்துவோர் சிலர் எம்மத்தியில் இருந்தனர். ஆனால் அடிமையாகியிருக்கவில்லை. நான் தினந்தோறும் சிறிதளவு குடு அருந்தத் தொடங்கினேன். ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு கிழமை சென்றவுடன் பாரிய வித்தியாசமொன்று தெரிய ஆரம்பித்தது. வேண்டியளவு குடுவும் காணப்பட்டது. பணமும் செலவாகவில்லை. தினந்தோறும் அருந்தத் தொடங்கினேன். விடுமுறையில் வீட்டுக்குச் சென்ற இருநாட்களும் உடம்பெல்லாம் வலியெடுத்து காய்ச்சல் வரத் தொடங்கியது. சாப்பிட முடியாமல் போனது. அம்மா கசாயம் அவித்து தந்தார். ஒன்றும் சரிவரவில்லை. பின்னர் முகாமிலுள்ள எனது நண்பனிடம் இது பற்றி தெரிவித்தேன். அவனோ நீ நன்றாக குடுவுக்கு அடிமையாகிவிட்டாய் அதனால் சிறிதளவு குடுவை அருந்திப்பார் எனத் தெரிவித்தான். அந்த நொடியே ஊரிலுள்ள நண்பனொருவன் மூலம் சிறிதளவு குடுவை பெற்றுக்கொண்டு குளியலறைக்குச் சென்று அருந்தினேன். வலி எல்லாம் பறந்து விட்டது. நிறுத்த வேண்டுமென்று மனம் எவ்வளவு கெஞ்சினாலும் காரியாலயத்தில் குடு இருப்பதைக் கண்டால் குடிக்கவே தோன்றுகிறது. தொடர்ந்து குடு அருந்தினேன். ஸ்பா சென்றோம். ஒரு நாளில் இரண்டு , மூன்று பெண்களுடன் உல்லாசமாக இருந்தோம். இரவு வேளையில் களியாட்ட ஹோட்டல்களுக்குச் செல்வோம். பெண்கள் சூழ ஆடிப்பாடி , போதைப்பொருட்கள் பாவித்து , குடித்து பைத்தியக்காரர்களைப் போல் நடந்துகொண்டோம். ஒரு நேரத்துக்கு 6,7 ஆயிரங்கள் செலவழிப்போம். வித்தியாசமான மனிதர்களோடு பழகத் தொடங்கினோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவைகளுக்காக சம்பளப் பணத்தில் கை வைப்பதில்லை. காசு இல்லாத சந்தர்ப்பத்தில் குடு வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்வோம். ஒரு தடவை இரண்டு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளோம். அந்த எல்லாப்பணத்தையும் இரவு களியாட்டங்களுக்கே செலவு செய்தோம். ஒரு நாளைக்கு குறைந்தது 40,000 ரூபாவாவது களியாட்டங்களுக்குச் செல்ல எம்மிடம் இருக்க வேண்டும். அந்தப் பணத்தை எவ்வழியிலாவது பெற்றுக்கொள்வோம்.
குடு இலவசமாக கிடைக்கும். ஸ்பாவில் இலவசமாக பெண்கள் கிடைத்தனர். எமது வாழ்க்கை குதூகலமாக கழிந்தது. இந்த நேரத்தில் எம்மைப் பற்றி உயரதிகாரிக்கு தகவல் சென்றுள்ளது. சோதனையின் போது நாங்கள் ஆறு பேர் மாட்டிக்கொண்டோம். 5 பேரை வேலையிலிருந்து நீக்கிவிட்டனர். என்னை கஷ்டப்பிரதேசமொன்றுக்கு மாற்றிவிட்டனர். குத்துச் சண்டையில் தங்கப்பதக்கம் பெற்றிருந்தமையாலேயே என்னை இந்தளவு சரி மன்னித்து விட்டார்கள். எனது குழுவினரால் பெருந்தொகையான குடு வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருந்தமையும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனாலும் அங்கு நான் செல்லவில்லை. ஊருக்கே சென்றுவிட்டேன். மூன்று தடவை மேலிடத்திலிருந்து கடிதம் வந்தது. நான் செல்லவில்லை. நானாகவே விலகிவிட்டதாக கடிதம் அனுப்பினேன். வீட்டில் வேலையில்லாமல் இருந்ததால் போதைப்பொருளுக்கு மிகவும் அடிமையானேன். தவறான வழியில் செல்வதை அறிந்துகொண்ட அப்பா உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைத்தார். 2015.03.28 ஆம் திகதியே எமது கல்யாணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர் அவரது வியாபார நடவடிக்கைகளில் என்னை இணைத்துக்கொண்டார். நினைத்துப் பார்க்க முடியாதளவிற்கு கைகளில் பணம் சேர்ந்தது. வேலை செய்யும் நாட்களில் காலையிலிருந்து மாலை வரை குடு அருந்தினேன். நான் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது மனைவிக்கு தெரியவந்தது. என்னிடம் கேட்டாள். நான் உண்மையைச் சொன்னேன். பின்னர் எனக்கு மருந்து கொண்டு வந்து கொடுத்தாள். இருப்பினும் குடு அருந்துவதை நிறுத்த முடியாமல் போனது. அந்தாண்டே மே மாதம் மனைவி என்னை விட்டுச் சென்று விவாகரத்து கேட்டு வழக்குத் தொடுத்திருந்தாள். இதனால் நான் இன்னும் குழம்பிப் போனேன். அப்பாவின் வியாபார
நடவடிக்கைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டேன். அப்பா என்னை டுபாய்க்கு அனுப்பி வைத்தார். அங்கு இரவு களியாட்ட விடுதியொன்றில் பாதுகாப்பு காவலாளியாக கடமைபுரிந்தேன். குடுவிலிருந்து விலகி சிகரெட் , சாராயம் மட்டும் அருந்திக்கொண்டு 2 வருடங்கள் , 2 மாதங்கள் எந்த பிரச்சினையுமின்றி வேலையை செய்து கொண்டு சென்றேன். இருப்பினும் சின்ன பிரச்சினையொன்றின் காரணமாக வேலையை விட்டு விட்டு இலங்கைக்கு வந்தேன். வந்தும் குடு அருந்தவில்லை. அனைத்து போதைப்பொருட்களிலுமிருந்து விலகி அப்பாவின் தொழிலுக்கு உதவி செய்வதாக எண்ணிக்கொண்டேன்.
அப்படியிருக்கையில் , நண்பரொருவரை சந்திப்பதற்காக தெஹிவளையிலுள்ள சலூன் ஒன்றுக்குச் சென்றேன். அங்கு வேலை செய்யும் யுவதியொருவரை எனக்குப் பிடித்துப்போனது. தொலைபேசி இலக்கங்களை மாற்றிக் கொண்டோம். 2,3 கிழமைகள் செல்ல எங்களுக்குள் காதல் மலர்ந்தது. எனக்கும் மாறுபட்ட எனது வாழ்க்கையை திருத்திக்கொள்ள துணையொன்று தேவைப்பட்டது. வீட்டாருக்குச் சொன்னேன். அவளும் வீட்டிற்குச் சொல்லியிருந்தாள். இரு வீட்டாரினதும் சம்மதம் கிடைத்தது. வீட்டிலேயே சின்னதாக விழாவொன்றை ஏற்பாடு செய்து திருமணத்தை முடித்துக்கொண்டோம். எப்போதாவது ஒரு நாளைக்கே பியரொன்றை அருந்துவேன். அப்பாவின் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு வாழ்க்கை அழகாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் புலனாய்வுப் பிரிவு நண்பனொருவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , எங்களிடம் பாரியளவில் குடு உள்ளது. உனக்கு வேண்டுமா? எனக் கேட்டு , அழகான குருவிக் கூட்டை , அழகான வாழ்க்கையை சிதைத்துவிட்டான். அவனும் தனது வாழ்க்கையை மறந்து விட்டு கொண்டு வா எனக் கூறினான். அம்பலாங்கொடைக்க வர தயாராகிவிட்டே என்னைத் தொடர்பு கொண்டான். 2 மணித்தியாலங்கள் கழித்து எனது கைக்கு குடுப் பொதியொன்று கிடைத்தது. மாறுதலொன்றுக்காக கிடைத்ததை அருந்துவோம் என்றே நினைத்தேன். ஆனால் மீண்டும் நான் அடிமையாக நேரிட்டது. கொஞ்ச நாள் சென்றதும் மனைவிக்கு புரிந்து போனது. உங்களால் இதை நிறுத்த முடியும் , நாங்கள் வைத்தியரை பார்த்து மருந்தெடுப்போம் என என்னைத் தேற்றினாள். 20,30 தடவைக்கு மேல் வைத்தியரிடம் சென்று பரிசோதனை செய்து மருந்தைப் பெற்றுக்கொண்டோம். ஆனால் என்னால் இதிலிருந்து மீள முடியாமல் போய்விட்டது. மனைவிக்கும் அல்கஹோல் போதைப்பொருள் பயன்படத்த முயற்சி செய்தேன். ஆனால் அவள் அதற்கு உடன்படவில்லை. அதனால் இருவரிடமும் பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து பிரச்சினை ஏற்படவே இவளும் என்னை விட்டுச் சென்றாள். விவாகரத்து கோரவில்லை. எனது வீட்டிலும் எனது போக்கில் விட்டுவிட்டனர்.”அண்ணன் குடுகாரன்” என்று தங்கையிடம் கிண்டலடித்துள்ளனர். அதனால் தங்கையும் என்னுடன் கதைக்காமலே போய்விட்டாள். சாப்பாட்டைத் தவிர ஒரு சதமேனும் வீட்டிலிருந்து அவனுக்கு கிடைக்கவில்லை. எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது போன்று தென்பட்டது. தனிமை வாழ்வு என்னைக் கொன்றது. குடு அருந்த கையில் பணம் இல்லாததால் வீட்டில் திருட ஆரம்பித்தேன். அப்பாவுக்கென்று கூறி செக் புத்தகங்களில் பணத்தை பெற்றுக் கொண்டேன். அப்போது தான் எனது அப்பா மேற்படி நிலையம் தொடர்பில் விசாரித்து எனக்குக் கூறினார். இந்தப் பழக்கத்தால் வேலை போனது. வாழ்க்கை இல்லாமல் போனது. எதிர்காலம் பாழாய்ப் போனது. அதனால் அப்பாவின் யோசனைக்கு இணங்கினேன். 14 நாட்கள் என்றே ஆரம்பத்தில் எனக்கு சொன்னார். அதனால் நானும் விருப்பத்துடனேயே இங்கு வந்தேன். அப்பா கூறியது உண்மையே. மனதை சாந்தப்படுத்த ஏற்ற இடம் இதுவே . இப்போ நான் வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை மனது ஒருநிலைப்படுத்தப்பட்டுள்ளது. மருந்து மாத்திரை எதுவுமில்லை. மனதிலிருக்கும் தீய எண்ணங்கள் அடியோடு அகற்றப்பட்டு தூய்மையான சிந்தனை ஏற்படுத்தப்படுகிறது.
காலை , மாலை கடவுளை வணங்கிவிட்டு சத்தான உணவை சாப்பிட்டு விட்டு மனதை ஒருநிலைப்படுத்தி இருக்க இப்புண்ணிய பூமி கிடைத்தது எனது வரமே. அவ்வாறே போதைப்பொருள் பற்றிய எண்ணமே இல்லை. இருப்பினும் தொலைந்து போன எனது வாழ்வை மீட்டிப்பார்க்கும் போது மனதை தைரியப்படுத்த சில காலம் செல்லும். அதனால் இங்கிருப்பதே சரியென எனக்குத் தோன்றுகிறது.
அவனது உடல்வாகு , அவன் புலனாய்வுப் பிரிவுக்கே சரிப்பட்டு வருவான் என்பதைப்போல் தோற்றமளிக்கிறது. ஆனாலும் சுகதேகியாக வந்த பின்னரும் நாட்டில் இருப்பதற்கு புத்திக்கு யோசனையில்லை. அவனது யோசனையெல்லாம் சகலதையும் மறந்துவிட்டு கண்காணாத நாடொன்றுக்குச் சென்று தனது வாழ்வை புதிதாகத் தொடங்க வேண்டும் என்பதாகவே அமைந்திருந்தது. 29 வயதேயான புத்திக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கின்றது என்றே கூறலாம். அவனது வாழ்வு செழிப்புற இறைவனிடம் நாமும் பிரார்த்திப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக