பெருந்தோட்ட மக்களின் சுகாதார சேவை தொடர்பாக இன்றும் திருப்தியான மனநிலைக்கு செல்ல முடியாத சூழலே காணப்படுகின்றது. இன்னும் தோட்டங்களில் காணப்படும் மருந்தகங்களை நம்பியே இருக்கவேண்டிய சூழல் பெரும்பாலான மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இருக்கின்றது. பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசுடமையாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் மிக நீண்டகாலமாக இழுபறியிலேயே இருக்கின்றது. இவ்வாறான நிலையில் அவசர சிகிச்சைகளுக்கு நகர்புறங்களில் இயங்கிவருகின்ற அரச வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலைமையில் அதற்கும் பெருந்தொகை பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.
அவசர சிகிச்சைக்கு நோயாளி ஒருவரை கொண்டு செல்ல வேண்டுமாயின் வாடகைக்கு ஆட்டோக்களையே பெறவேண்டும். அல்லது தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் வாகன வசதிகளுக்காக (தேயிலை ஏற்றும் லொறி) காத்திருக்க வேண்டும். இவ்வாறான சூழலில் மிகநீண்ட காலமாக பயணித்துவரும் மலையக பெருந்தோட்ட மக்களை ’ 1990 சுவசெரிய’ சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால் இச்சேவை இன்று நகர்புறங்களை மட்டுப்படுத்தியதாக இயங்கி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் 7.5 மில்லியன் அ.டொலர் செலவில் ’அவசர அம்புலன்ஸ் சேவை’ மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது 88 அம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன் ஒரு வருடத்துக்கான சேவை செலவு, அவசர நிலைமைக்கான தொடர்பு நிலையம் என்பனவும் வழங்கப்பட்டது. தற்போது இந்த சேவை ஒன்பது மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு 15.02 மில்லியன் அ.டொலர் செலவில் 209 அம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அரசாங்கத்தின் 22 மில்லியன் அ.டொலர் நிதியொதுக்கீட்டில் 143 அம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் 56 மேல் மாகாணத்திலும் 32 தென் மாகாணத்திலும் சேவையில் ஈடுபடுகின்றன. 1990 என்ற இலவச இணைப்பு இலக்கத்தை பயன்படுத்தி எந்தவொரு வலையமைப்பினூடாகவும் மக்கள் தொடர்பு கொண்டு சேவையை பெற முடியும். இந்நிலையில் நாடு முழுவதையும் இந்த அம்புலன்ஸ் சேவைக்குள் உள்வாங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஊவா மாகாணத்திற்கு 26 அம்புலன்ஸ்களும் வெளிநாட்டு பயிற்சி பெற்ற பணியாளர்களும் வழங்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட 26 பொலிஸ் நிலையங்களுக்கு இந்த அம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹாலி எல, பதுளை, பண்டாரவளை, மொனராகலை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கும் இச்சேவை வழங்கப்பட்டுள்ளன. இச்சேவையானது வைத்திய சாலைகளிலிருந்து இயங்கவில்லை மாறாக அவசர நோக்கம் கருதி பொலிஸ் நிலையங்கள் மூலமாகவே இயக்கப்படுகின்றன. பொலிஸ் நிலையம் பிரதிநித்துவப்படுத்துகின்ற வலயங்களில் சேவையை வழங்கும் வகையில் இந்த அம்புலன்ஸ் சேவை பணியிலிருக்கின்றது.
ஆனால் மிகவும் அவசரத்தேவையை கொண்டுள்ள மற்றும் சுகாதாரத்துறையில் பின்தங்கியுள்ள மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்ற நுவரெலியா மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களில் இச்சேவையானது இன்னும் ஆரம்பிக்கப்படாமை வருத்தத்துக்குரியதாகும். இந்த அவசர அம்புலன்ஸ் சேவையில் 300 அம்புலன்ஸ்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி. ஹர்ஷ டிசில்வா தெரிவித்திருக்கின்றார். பெருந்தோட்டப் பகுதிகளில் இருக்கின்ற அரச வைத்தியசாலைகளில் கூட முறையான அம்புலன்ஸ் வசதிகள் கிடையாது.
இந்திய அரசின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கூட இன்னும் முழுமையான வசதிகள் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் அண்மையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் அனைவரும் கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதேவேளை இங்கும் வைத்தியசாலைக்கு தேவையான அம்புலன்ஸ் வசதிகள் கிடையாது. கண்டி கலஹாவில் ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவத்தில் மேலதிக அவசர சிகிச்சைக்காக குழந்தையை பேராதனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு அம்புலன்ஸ் வசதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதனைவிடவும் குளவித்தாக்குதலுக்கு இலக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கொழுந்து ஏற்றிச் செல்லும் லொறிகளில் கொழுந்தோடு கொழுந்தாக ஏற்றிச் சென்ற சம்பவமும் அரங்கேறியுள்ளன. எனவே இவ்வாறான அவலங்களை தவிர்ப்பதற்காக தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் மாவட்டங்களையும் உள்ளடக்கி இவ் வேலைத்திட்டத்தை துரிதமாக முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையக மக்களுக்கான தனிவீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேபோலவே ஏற்கனவே பல்வேறு அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே மலையகத்திலும் இந்த இலவச அவசர அம்புலன்ஸ் சேவையை விஸ்தரிப்பதற்கு இந்திய அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும். ’நாட்டிலுள்ள சகல குடிமக்களுக்கும் 15 நிமிடங்களுக்குள் இலவச அம்புலன்ஸ் சேவையை பெற்றுக்கொடுப்பதே எங்களுடைய நோக்கமென’ இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியிருக்கும் நிலையில், தன் வாழ்நாளில் அவசர சிகிச்சைகளுக்கு கூட அம்புலன்ஸ் சேவையை பெற முடியாதவர்களும் வாடகை வாகனங்களில் செல்லும் போதே மரணித்தவர்களும் குழந்தை பெற்றவர்களும் மலையகத்தி நிலவும் வெற்றிடங்களுக்கு உதாரணங்களாக இருக்கின்றனர்.
1908 ஆம் ஆண்டு 36இலக்க மருத்துவ பதிவு (திருத்தச்) சட்டத்தின் கீழ் பிரித்தானிய ஆட்சிக் காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறை சுகாதாரம் மற்றும் மருத்துவம் கவனிக்கப்பட்டது. ஆனால் இன்று பெருந்தோட்டங்கள் தனியார் துறையின் கீழ் இயங்குவதால் தோட்டநிர்வாகமே சுகாதார துறையை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது. பிரதி சுகாதார அமைச்சராக வடிவேல் சுரேஷ் இருந்த காலப்பகுதியல் 51 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டதுடன் 23 மருத்துவமனைகள் அரசுடமையாக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது பெருந்தோட்ட சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து செல்லும் அபாய நிலை தோன்றியுள்ளதால் மலையக மக்கள் இலகுவாக தரமான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ’1990 - சுவசெரிய’ இலவச அவசர அம்புலன்ஸ் சேவையானது உடனடியாக மனிதாபிமான நோக்கம் கருதி விஸ்தரிக்கப்பட வேண்டும்.
இன்று போக்குவரத்து, தொடர்பாடல் விருத்தியடைந்து செல்லும் காலகட்டத்திலும் கூட மலையக பெருந்தோட்ட மக்கள் கொழுந்து லொறிகளில் அவசர சிகிச்சைக்காக ஏற்றிச் செல்லப்படும் நிலை காணப்படுகின்றது. இந்த அவலநிலை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அரசாங்க சுகாதார பெறுபேற்று அறிக்கைகளின் படி, பெருந்தோட்டப் பகுதிகளில் தாய்மார் பாதுகாப்பு, சிசு ஆரோக்கியம், மந்தபோசனம், போஷாக்குக் குறைபாடு, தொற்றுநோய்கள், சுவாச நோய்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு, சீறுநீரக நோய்கள், புற்றுநோய், மதுபாவனை, புகைப்பிடித்தல் போன்றவற்றால் பாதிப்புகள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தரமில்லாத உட்கட்டமைப்பு வசதிகளின் காரணமாக பாரியளவான பின்னடைவை மக்கள் சந்திக்க நேரிடுகின்றது. ஒருவேளை சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை மலையக பகுதிகளுக்கு வழங்கப்பட்டாலும் கூட அதனால் சகல மக்களும் பயனடைவர் என்று கூறமுடியாது. காரணம், மலையக பெருந்தோட்டங்களில் போக்குவரத்து பாதைகள் பெரும்பாலும் அபிவிருத்திச் செய்யப்படாத நிலையில் அங்கு அம்புலன்ஸ் வண்டிகள் சென்று வருவது சாத்தியமில்லை. எனவே தோட்டப்புற பாதைகளை சீரமைத்துக் கொடுப்பதற்கு தோட்ட நிர்வாகமும் அரசியல் தலைமைகளும் முன்வர வேண்டும்.
இந்திய அரசின் பாரிய நிதியுதவியின் கீழ் இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள அவசர அம்புலன்ஸ் சேவையை இலங்கை அரசாங்கம் திறம்பட கையாண்டு வரும் சூழலில் அதனை மலையக மக்களுக்கும் முன்னுரிமை என்ற அடிப்படையில் விஸ்தரிக்க வேண்டும். மருத்துவ தேவைகளையும் பொருளாதார தட்டுப்பாடுகளையும் இச் சேவையின் மூலம் நிவர்த்தித்துக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பாக அமையும். எனவே இவை தொடர்பாக மலையகத் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக