உலகமானது பல்வேறு வழிமுறைகளில் மாறிக்கொண்டே செல்கிறது. ஏப்ரல் சிங்கள - தமிழ் புதுவருடத்துக்கு நாதம் எழுப்பக்கூடிய குயிலானது, இப்போது மே மாதம் வெசாக் பூக்கள் பூக்கும் ஜூலை மாதத்திலேயே நாதம் எழுப்புகிறது. அந்தளவுக்கு காலம் மாறிப்போய்விட்டது. தற்காலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஓரிரு சம்பவங்களும் அதனை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளன. அதற்கிணங்க கடந்த 3 1/2 வருடங்களுக்கு முன்னர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த அமாலி சத்துரிகாவின் தற்கொலைச் சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது எனலாம். இத்தற்கொலைச் சம்பவமானது கடந்த 3 1/2 வருடங்களுக்கு முன்னர் கவனத்திலெடுக்கப்படாத ஒன்றாகவே காணப்பட்டது. ஆனால் இச்சம்பவம் இப்போது பேசப்படுவதற்குக் காரணம், உயர்கல்வி மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவால் பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக் கடிதமென்றுக்கு அமையவேயாகும்.
அமைச்சரின் முறைப்பாட்டுக்குப் பின்னர் ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் அமாலி பற்றி வெளிவரத் தொடங்கின. பன்னிபிட்டியவில் வசிக்கும் அமாலி தனது ஆறு வயதில் தந்தையை இழந்தாள். பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த அமாலி, க.பொ.த சாதராண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொண்டாள். அதற்கேற்ப உயர்தரத்திற்காக பொரளை தேவிபாலிகா பாடசாலையில் சேர்ந்தாள். அவள் உயர்தரத்தில் கணிதப் பிரிவையே தேர்ந்தெடுத்தாள். உயர் தரத்திலும் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்ட அமாலி, வடமேற்கு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாள்.
இந்த சந்தர்ப்பத்தில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் பரீட்சைக்குத் தோற்றுமாறு அமாலிக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. பரீட்சை மத்திய நிலையமானது சப்ரகமுவ பல்கலைக்கழகமாகும். அப்பரீட்சைக்குத் தோற்றவென சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்குச் சென்ற அமாலி, பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புறச் சூழலில் வசீகரிக்கப்பட்டாள். அப்பல்கலைக்கழகம் மிகவும் பிடித்துப் போனது. அதனால் தனக்கு சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு உட்புக அனுமதியை பெற்றுத் தருமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக் கொண்டாள். அதற்கிணங்க சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயில அவளுக்கு அனுமதி கிடைத்தது.
2014 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள். ஒரு மாதம் கழித்து அதாவது ஏப்ரல் 30ஆம் திகதி மாலை வேளை அமாலியின் தாய்க்கு பல்கலைக்கழகத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அதில், அமாலிக்கு சுகமில்லையெனவும் அவளை கூட்டிச் செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்நேரம் இருட்டி விட்டதால் மறுநாள் காலை 3 மணியளவில் சப்ரகமுவ பல்கலைக்கழகம் அமைந்துள்ள பெலிஹூல் ஓயாவுக்குச் செல்லத் தயாராகினாள். அமாலியின் தாய் பல்கலைக்கழக காரியாலயத்துக்கு செல்லுமிடத்து அமாலியும் அங்கிருந்தாள். ஆனால் தாயுடனோ வேறு எவருடனோ அமாலி கதைக்கவில்லை. திடீரென்று கதைத்த அவள் நான் சாக வேண்டும் என்று மட்டுமே கூறினாள். அமாலியை வீட்டுக்கு கூட்டிச் சென்ற தாய், அவளிடம் கதைக்க முற்பட்ட போதும் அம்முயற்சி கைகூடவில்லை. மீண்டும் அமாலி சொன்ன ஒரே வார்த்தை நான் சாக வேண்டும் என்பது மட்டுமேயாகும். மறுநாள் காலை அமாலி தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள். சற்று நேரம் சென்றதும் அறையிலிருந்து புகைமூட்டம் கிளம்பியது. கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த தாய் அதிர்ச்சியில் உறைந்து போனாள். காரணம் அமாலி மெத்தையின் நடுவே அமர்ந்திருந்தபோது சுற்றித் தீவைக்கபட்டு எரிந்து கொண்டிருந்தது. அமாலியின் தாய் விரைந்து தனது மகளை ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்றாள். அங்கு வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தன்னை விட ஒரு வருடம் மேலான இரு மாணவிகள் தன்னை தொந்தரவு செய்ததாக தாயின் முன்னால் அமாலி தெரிவித்திருந்தாள். பின்னர் அமாலியின் தாய் குறித்த இரு மாணவிகளின் பெயரில் இது தொடர்பாக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தாள்.
அம்முறைப்பாட்டுக்கமைய, வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அமாலியையும் தாயையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தனது மகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் தான் அவளது அருகில் இருப்பதாகவும் இந்த நேரத்தில் தங்களால் பொலிஸ் நிலையத்துக்கு சமுகம்தர முடியாத நிலை இருப்பதாகவும் தொலைபேசி மூலம் அமாலியின் தாய் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்திருந்தாள். அமாலிக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளும் வைத்தியர், அமாலி பாரிய மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பதாக தெரிவித்திருந்தார். சிகிச்சையின் பின் மீண்டும் மே மாதம் பல்கலைக்கழகத்துக்குச் சென்றாள். அது வரை இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம், அமாலியின் தாய் தனது மகளை தொந்தரவு செய்த இரு மாணவிகளுக்கும் பாரிய தண்டனை வழங்காது எச்சரிக்கை விடுத்து அறிவுரை கூறுமாறு கூறியிருந்தார். பல்கலைக்கழகத்துக்குச் சென்று சில கிழமைகளின் பின்னர் ஒருநாள் இரவு அமாலி தனக்கு வழங்கப்பட்டிருந்த மாத்திரையில் தேவைக்கும் மேலதிகமாக சாப்பிட்டுவிட்டாள். மீண்டும் அமாலியை வீட்டுக்கு கூட்டிச் சென்ற தாய், களுபோவில வைத்தியசாலையில் அமைந்துள்ள மனநலப் பிரிவுக்கு அழைத்துச் சென்றாள். அங்கு சிறப்பு வைத்தியர் ஜயான் மெண்டிஸால் அமாலிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
வைத்திய பரிசோதனையின் பின்னர் தனக்கு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றம் வழங்குமாறு பல்கலைக்கழக ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்தப் பிரச்சினை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு நாட்கள் கழிந்து செல்ல, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதியொன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியொன்று இடம்பெற்றிருந்தது. ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த விடுதித் திறப்பு விழாவை எதிர்த்தனர். ஆனால் பல்கலைக்கழகக் குழுவினர் அமாலியை இந்த விழாவுக்கு அழைத்துக் கொண்டனர். பல்கலைக்கழகத்தின் இந்த விழாவுக்கு பங்கேற்ற ஒரே மாணவி அமாலியே.
முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவின் கையால் விடுதியின் ஓர் அறையின் சாவியை அமாலி பெற்றுக் கொண்டாள். இந்தச் செயலால் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அமாலியுடன் வைராக்கியம் கொண்டனர். இப்படியான நெருக்கடிமிக்க சூழலில் அமாலி தன்னுடைய ஆண்டுக் குழுவினருடன் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளாது அடுத்தாண்டு குழுவினருடன் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வென அனுமதி கோரியிருந்தாள். அக்கோரிக்கைக்கு பல்கலைக்கழக ஆணைக்குழுவால் அனுமதி கிடைக்கப்பெற்றது. அதற்கிணங்க அவள் மீண்டும் 2015பெப்ரவரி 26 ஆம் திகதியே பல்கலைக்கழகத்துக்குச் சென்றாள். காலங்கள் பல உருண்டோடின மீண்டும் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்த வேளை மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு யோசனையில் ஆழ்ந்தாள். இது தொடர்பில் தாய் வினவியபோது, தனக்கு தொந்தரவு செய்த இருவரும் மீண்டும் தன்னை தொந்தரவு செய்வார்களோ என்ற பீதி காணப்படுவதாகத் தெரிவித்தாள்.
2015 பெப்ரவரி மாதம் 16 ஆம்திகதி உதயமானது. வழமையோல அமாலியின் தாய் வேலைக்குச் செல்ல ஆயத்தமானாள். வழக்கம் போலவே தாயின் காலில் விழுந்து வணங்கிவிட்டு முத்தம் கொடுத்து தாயை வழியனுப்பி வைத்தாள். வேலை நிலையத்துக்குச் சென்ற அமாலியின் தாய் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்தாள். ஆனால் பதில் இல்லை. பின்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணொருவர் அமாலியின் வீட்டுக்குச் சென்று தேடிப் பார்க்கையில் அமாலி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அமாலியின் சோகக் கதை இத்தோடு முடிந்து விட்டது. ஆனால் முடிவுறாத கதையொன்று அமாலியின் குடும்பத்தோடு நெருங்கிய ஒருவரான தனுஷ்க வீரசேகரவால் எமக்குத் தெரிவிக்கப்பட்டது. அமாலி இறந்தது பல்கலைக்கழகத்தில் அவளுக்கு மேற்கொள்ளப்பட்ட தொந்தரவினாலேயேயாகும் என்பதில் சந்தேகமில்லை அமாலியை தொந்தரவு செய்த இரு மாணவிகளில் ஒரு மாணவி அமாலி உயர்தரம் கற்ற தேவிபாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த மாணவி மேலும் சில மாணவிகளின் முன்னால் அமாலிக்கு தேவையற்ற வீடியோ சிலவற்றைக் காண்பித்து தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். பழைய உணவுகளை உண்ணக் கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவங்களால் தான் அமாலி மனநலம் பாதிக்கப்பட்டாள் அவ்வாறே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த இரு மாணவர்களும் அவ்விசாரணைக்கு சமுகம் தரவில்லை. இது தொடர்பாக அமாலியின் தாய், பொலிஸ்மா அதிபர், பொலிஸ் விசாரணை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடமிருந்து கடிதமொன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அதில், 2014 மே மாதம் அமாலியின் தாயால் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாடு அவரால் (அமாலியின் தாயால்) வாபஸ் பெறப்பட்டது என்று ஆனால் அமாலியோ அவளது தாயோ பொலிஸ்மா அதிபர் கூறியவாறு முறைப்பாட்டை வாபஸ் பெற்றிருக்கவில்லை. மேலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் வேளை அமைச்சர் எஸ். பி. வருகை தந்த விழாவுக்கு அமாலியை மட்டும் வரவழைத்தது தவறான செயற்பாடாகும். இதுவும் பாரிய ஒரு சந்தேகத்தை எங்களுக்குள் ஏற்படுத்துகின்றது. இறுதியாக இதற்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்குமாறே கேட்கிறோம் என அவர் தெரிவித்தார்.
அவர் இவ்வாறு தெரிவிக்கும் நிலையில், அமாலியின் தாயான பீ.டபிள்யூ. ஜீ. எல்விட்டிகல இவ்வாறு தெரிவிக்கிறார். எனது மகள் பல்கலைக்கழகத்துக்கு செல்லுமட்டும் எந்தவித நோயாலும் பீடிக்கப்பட்டிருக்கவில்லை. சில வேளை காய்ச்சல் மற்று தடிமன் மட்டுமே ஏற்படும். அவள் மனக்கஷ்டத்துக்கு ஆளானது பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு சில சம்பவங்களினாலேயாகும். அதை ஒப்புவிக்க என்னிடம் தேவையான வைத்திய அறிக்கைகள் இருக்கின்றன. எனக்குத் தேவையானதெல்லாம் எனது மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களுக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதேயாகும். அமாலிக்கு இவ்வாறான அசம்பாவித சம்பவம் நடக்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அமைதியாக இருந்தமையும் ஒரு வகையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. அதன் காரணமாக அவ்வேளை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகக் கடமை புரிந்த பேராசிரியர் சந்தன உடவத்தவிடம் வினவிய போது, லக்பிம பத்திரிகை இது தொடர்பில் வினவும் வரை எந்தவொரு ஊடகமும் இது தொடர்பில் தன்னிடம் கேட்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார். உண்மையில் பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவன் நான். அதன் காரணமாக எனது காலத்தில் மாணவர்கள் என்னுடன் கோபத்துடனேயே இருந்தனர். நான் அமாலியின் சம்பவத்தோடு தொடர்புபட்ட விசாரணைகளை மேற்கொண்டே வந்தேன். இந்த விசாரணையை மேலும் இழுபட்டுச் செல்ல அமாலியும் அவளது தாயும் விரும்பவில்லை. அதனால் இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகள் தேவையில்லை, குறித்த மாணவர்களை கண்டித்தால் மட்டும் போதும் என்று தெரிவித்திருந்தனர். என்னிடம் அது தொடர்பான தேவையான கடிதங்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட இரு மாணவர்களையும் பாதுகாக்க எந்தவித அவசியமும் எனக்கு இல்லை. அவர்கள் என்னுடைய மாணவர்கள் மட்டுமே. இந்தச் சம்பவத்தின் மூலம் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினால் நான் மட்டுமன்றி எனது குடும்பமும் பாரிய சங்கடத்திற்காளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது என பேராசிரியர் தெரிவித்திருந்தார்.
அமைச்சரால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், இந்த மரணம் தொடர்பில் முழு விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சாட்சிகளை முன்வைக்காது மூடி மறைத்தது மட்டுமன்றி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்காத குற்றச்சாட்டின் பேரில் சம்பவம் இடம் பெற்ற வேளை உபவேந்தராக கடமை புரிந்த பேராசிரியர் சந்தன உடவத்தவுக்கு எதிராக வழக்குத் தொடரவும் அச்சந்தர்ப்பத்தில் ஹோமாகம பொலிஸ் நிலைய பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவர் இது தொடர்பில் உரிய தகவல்களைத் திரட்டி விசாரணை மேற்கொள்ளாத குற்றத்தினால் அவருக்கெதிராக விசாரணை மேற்கொண்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இனி எமது கடமையானது அமாலி போல யாரையும் பலி கொடுக்காது பார்த்தக் கொள்வது மட்டுமேயாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக