கந்தானை டி. ஆர். ஓ. பாதை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடம்பர வீடொன்றின் உரிமையாளரான பிரியந்த, சமூகத்தில் நல்ல பல விடயங்களைத் தெரிந்த வியாபாரியொருவராகவே மக்களால் பார்க்கப்பட்டார். அவரது சுயரூபம் தெரியாத பொதுமக்கள் அவர் பழகக் கூடிய, மக்களோடு கதைக்கக் கூடிய ஒருவரென மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். பல ஆண்டு காலமாகவே போலி நாணயத்தாள் மூலம் மக்களை ஏமாற்றிய வியாபாரி இவரென அப்பிரதேச மக்களும் சரி, முழு நாடும் சரி, தெரிந்து கொண்டது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலானை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையொன்றின் போதே.
வலானை குற்றத்தடுப்புப் பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹேமாலுக்கு தனது தனிப்பட்ட உளவாளி ஒருவர் மூலம் கடந்த தினமொன்றில் தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றது. அத்தகவலில், கந்தானைப் பிரதேசத்தில் வசித்துவரும் பிரியந்த என்பவர் பல ஆண்டுகாலமாகவே போலி வியாபாரமொன்றை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கிணங்க தனது ஏனைய அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், இயலுமான வரையில் வெகு விரைவாக பிரியந்தவைப் பற்றிய உண்மையான தகவல்களை ஆராயுமாறும், அத்தகவலில் அவர் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டது தெரிந்தால் உடனே கைது செய்யுமாறும் உத்திரவிட்டார். அதற்கேற்ப செயற்பட்ட வலானை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் பிரியந்த பற்றிய முழு விபரத்தையும் அவன் செய்து கொண்டிருந்த பாரியளவிலான வியாபாரம் தொடர்பாகவும் சொற்பகாலத்திலேயே அறிந்து கொண்டு முழு நாட்டுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கினர்.
இவ்வாறு விரைந்து செயற்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுள் ஒருவர் நெலுவ் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரென தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, பிரியந்த பற்றி அதிகமான தகவல்களைத் திரட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், முதன் முறையாக பிரியந்தவுடன் தொலைபேசி உரையாடலையும் மேற்கொண்டிருந்தார். உரையாடல் வருமாறு;
ஹலோ பிரியந்தவா?
ஆம்..நீங்கள் யார்?
நான் சமன்.. நெலுவ் பகுதியைச் சேர்ந்தவன். எனது நண்பரொருவர் தாங்கள் மின் உபகரணப் பொருட்கள் வியாபாரம் செய்வதாக எனக்குத் தெரிவித்தார்.
நானும் சிறு வியாபார மொன்றைச் செய்கிறேன். உங்களிடம் சில பொருட்களைப் பெற்றுக் கொள்ளவே நான் உங்களைத் தொடர்பு கொண்டேன்.
முடியும்..எனது வீட்டுக்கு வாருங்கள் நேரில் சந்தித்து இது தொடர்பாக உரையாடுவோம்.
இவ்வாறாக முதன் முறையாக பிரியந்தவுடன் தொலைபேசியில் உரையாடிய பொலிஸ் அதிகாரி மேலும் இருதடவை பிரியந்தவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நெருங்கிய தொடர்பைப் பேணிக்கொண்டார். இவ்வாறு தொலைபேசியில் உரையாடுவது, தன்னை கைது செய்ய திட்டமிட்டுள்ள பொலிஸ் குழுவில் ஒருவர் என்பதை அறிந்திராத பிரியந்த, தனது வியாபாரத்தில் உங்களையும் (பொலிஸ் அதிகாரி) ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.
இன்னொரு நாள் மீண்டும் பிரியந்தவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி, பிரியந்தவிடம் காணப்படும் பொருட்கள் பற்றி வினவியுள்ளார். அதற்குப் பிரியந்த வழங்கிய பதில், என்னிடம் பல வியாபாரங்கள் காணப்படுகின்றன. ஒன்றுதான் மின் உபகரணப் பொருட்கள். இவை எல்லாமும் துறை முகத்திலிருந்து கடத்தி வரப்படுபவை. இவற்றை குறைந்த விலையில் நான் விற்பனை செய்கிறேன். இன்னொன்றுதான் சாராயம், சிகரெட் விற்பனை. இவையும் திருட்டுப் பொருட்கள் தான் . இவையில்லாமல் இன்னுமொரு வியாபாரமும் இருக்கிறது. அதை உங்களால் செய்ய முடியாது போய்விடும். அந்த வியாபாரத்துக்கு நிறையப் பணம் தேவைப்படும். நீங்கள் அப்பாவி என்று எனக்குத் தெரியும். உங்களோடு பழகியதற்காக நான் இதைச் சொல்கிறேன். நான் செய்யும் வியாபாரங்களில் சிறந்த தொழில் இதுவே. ஓரிரு ஆண்டுகள் செய்தால் நீங்கள் எங்கோ சென்று விடுவீர்கள். என்னோடு சேர்ந்து இந்த வியாபாரத்தை மேற்கொண்டு நல்ல நிலையில் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். நீங்கள் விரும்பினால் என்னோடு அணிசேரலாம் எனக் கூறினார்.
இவ்வளவு காலமாக தங்களுக்குத் தேவையான தகவல்களை எதிர்பார்த்து காத்திருந்த பொலிஸ் அதிகாரி, அது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அது என்ன வியாபாரம் என பிரியந்தவிடம் வினவினார். அதற்குப் பிரியந்த வழங்கிய பதில், என்னிடம் நிறையப் பணம் இருக்கிறது. நீங்கள் என்னிடம் ஒரு இலட்சம் தந்தால் நான் உங்களுக்கு மூன்று இலட்சம் தருவேன். அது திருட்டுப் பணம் என நீங்கள் நினைக்கக் கூடும். அதுதான் இல்லை. இவை திருட்டுப் பணம் இல்லை. அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். இப் பணம் இலங்øக்குரித்தானது. எமது நாட்டுப் பணத்தை அச்சிடும் இடத்திலேயே இந்தப் பணமும் அச்சிடப்படுகிறது. அப்படி அச்சிடும் வேளையில் நீக்கப்படும் பணமே இவை. பொதுவாக அப்படி நீக்கப்படும் பணம் வெளியே வராது. அவற்றை உள்ளுக்குள் வைத்தே எரித்து விடுவார்கள். இருப்பினும் எனது நண்பரொருவரூடாக இந்தப் பணம் எனக்கு வந்து சேர்கிறது. இந்த வியாபாரத்தை நான் எல்லோருடனும் செய்வதில்லை. 100 பேர் வந்தால் நம்பிக்கையான 10 பேருடனேயே இந்த வியாபாரத்தை நான் மேற்கொள்வேன். உங்களுக்கு முடியுமானால் ஒரு இலட்சம் ரூபாவை கொண்டு வாருங்கள். பதிலாக 3 இலட்சம் ரூபாவை நான் தருகிறேன். 5இலட்சம் ரூபா கொண்டுவந்தால் 15 இலட்சம் ரூபா தருகிறேன். இலட்சக்கணக்கிலேயே இந்த வியாபாரம் இடம்பெறும். உங்களை நம்பியே இவற்றை நான் சொல்கிறேன். நன்றாக யோசித்துப் பார்த்துச் சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.
அதன் பிறகு தனது உயர் அதிகாரிகளுக்கு இவ்விடயத்தைக் குறிப்பிட்ட அந்த பொலிஸ் அதிகாரி, பிரியந்தவைக் கைது செய்வதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து 2 1/2 இலட்சம் ரூபாவை பையலொன்றிலிட்டு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பிரியந்த வசிக்கும்
கந்தானை டி. ஆர். ஓ பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றனர். அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளிடம் 5000 ரூபா தாளொன்றைக் கொடுத்து இதில் ஏதாவது மாற்றத்தை உங்களால் காண முடியுமா என பிரியந்த வினவியுள்ளார். அவர்களும் அந்தத் தாளை நன்கு பரீட்சித்து விட்டு மீண்டும் பிரியந்தவிடம் கொடுத்து தங்களால் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை என தெரிவித்தனர். இல்லை இந்தத் தாளில் வித்தியாசமொன்றுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை உங்களுக்குக் காட்டுகிறேன். இந்த 5000 தாளானது நாம் பயன்படுத்தும் தாளை விட ஓரிரு தசம அளவு பெரியதாகும். அவ்வளவுதான் வித்தியாசம். இவை இயந்திரத்தில் போட்டுப் பார்த்தாலும் அகப்படுவதில்லை. நான் சொல்லாவிட்டால் இவ்விடயம் யாருக்கும் தெரியாது. சரி.. நீங்கள் எவ்வளவு பணம் கொண்டு வந்திருக்கிறீர்கள். 2இலட்சம் கொண்டு வந்திருக்கிறோம். சரி நாம் வியாபாரத்தை ஆரம்பிப்போம். நீங்கள் அமர்ந்திருங்கள். நான் களனிக்குச் சென்று பணத்தை எடுத்த வருகிறேன். பாரிய தொகைப் பணத்தை நான் வீட்டில் வைத்துக் கொள்வதில்லை. நீங்கள் கொண்டுவந்த பணத்தைக் தாருங்கள். 1 மணித்தியாலயத்தில் வியாபாரத்தை முடித்துக் கொள்வோம் என பிரியந்த தெரிவித்தார். பிரியந்த அவ்வாறு தெரிவித்ததும் 2இலட்சம் ரூபாவை கொண்டுவந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த வியாபாரத்துக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. பிரியந்த மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டதே அதற்கான காரணமாகும். தாம் கொண்டுவந்த பணத்தை மீளவும் அவர்கள் கொண்டு சென்று விட்டனர். மீண்டும் இன்னொரு நாள் வருவதாகக் கூறி பொலிஸ் அதிகாரிகள் சென்று விட்டனர்.
அதற்கேற்ப சில தினங்களுக்குப் பின்னர் மீண்டும் அவ்வதிகாரிகள் இருவரும் 1 1/2 இலட்சம் ரூபா பணத்துடன் பிரியந்தவை சந்தித்தனர். அன்றைய தினம் பிரியந்தவை சந்திப்பதற்கென வேறொரு சிலர் வந்திருந்தனர். அவர்கள் வலானை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள். அவர்களை வேறோரு இடத்தில் ஒன்று கூடுமாறு தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் எப்படியாவது அன்றைய தினம் பிரியந்தவைக் கைது செய்யும் நோக்கிலேயே திட்டத்தை தீட்டியிருந்தனர். பணத்தை எடுத்துக் கொண்டு பிரியந்தவின் வீட்டுக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள், மீண்டும் தமக்குப் போலி நாணயத்தாளை காட்டுமாறு பிரியந்தவிடம் வினவியுள்ளனர். அதற்கேற்ப வீட்டுக்குள் சென்று 1000 ரூபா நாணயத்தாளை கொண்டு வருவதற்கிடையில் கொஞ்சமும் பிரியந்த எதிர்பாரா நிலையில் பொலிஸாரும் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் வீட்டைச் சுற்றிவளைத்தனர்.
தான் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதை அறிந்து கொண்ட பிரியந்த, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தான் மேற்கொண்ட அனைத்து வியாபாரம் தொடர்பிலும் கொட்டித் தீர்த்தார். அந்த விசாரணைகளுக்கமைய, இவ்வியாபாரத்தை மிக நீண்டகாலமாகவே இவர் மேற்கொண்டு வந்திருந்தார். இந்த வியாபாரத்துக்கா ஏனைய சிலரின் ஒத்துழைப்பும் இவருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களுக்குப் பிரியந்த பாரிய பணத்தொகையை செலவழித்துமுள்ளார். பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் இவர்களது வியாபாரம் வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவர்களது வியாபாரத்தில்
பங்குதாரர்களாக இணைந்து கொள்ளவிருந்த வியாபாரிகள் போல வேடமிட்டு வந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தங்களிடம் இருப்பது கள்ள நோட்டு அல்லவென்றே தெரிவித்திருந்தனர்.
அக்கூற்று உண்மையே ஏனென்றால் பிரியந்தவால் மேற்கொள்ளப்பட்டது, இலங்கையில் செல்லுபடியாகும் இலங்கையில் அச்சிடப்பட்ட பணமாகும். அவ்வாறான பணத்தைப் பெற்றுக் கொள்ளும் பிரியந்த அவற்றை நீரில் அமிழ்த்தி மின்னழுத்தியின் சூட்டில் சூடு பண்ணுவன் மூலம்
நாணயத்தாளானது இருந்த அளவைவிட ஓரிரு தசம அளவு நீளமாகக் காணப்படும். இந்த வித்தியாசத்தின் மூலமே வாடிக்கையாளர்கள் இவருடன் விற்பனையில் ஈடுபடுவதை ஆர்வத்துடன் மேற்கொண்டனர். இந்த வியாபாரம் மூலம் பல பேரை ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தன்னிடம் பணத்தைக் கொண்டு வருவோர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அதற்கு மேலாகப் பணத்தைத் தருவதாகக் கூறி வெளியில் செல்லும் பிரியந்த, குறித்த நேரத்துக்கு வருகை தராமல் வீட்டில் காத்திருப்போருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு உங்களுக்குத் தர வேண்டிய முழுப் பணத்தையும் இப்போது என்னால் தர முடியாது எனவும், மறு நாள் வந்தால் முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற பதிலை வாடிக்கையாகவே சொல்லி வந்திருந்தார் பிரியந்த. அதற்கேற்ப 1இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்ட நபரிடம் அன்றைய தினத்தில் 15,000 ரூபாவையோ அல்லது அதற்கு அண்மித்த தொகையையோ கொடுத்துவிட்டு இன்னொரு தினத்தில் நாம்
சந்தித்து வியாபாரத்தை முடித்துக் கொள்வோம் எனப் பிரியந்த தெரிவித்து விடுவார். இந்தப் போலி வியாபாரத்தில் மாட்டிக் கொள்வது தூரப் பிரதேசங்களில் இருந்துவரும் அப்பாவியர்களே. இவ்வாறு இவர்களுக்குள்ளேயே பல குழுக்களாகப் பிரிந்து பல திட்டங்களை மேற்கொண்டு தம்மை நாடி வருபவர்களை ஏமாற்றி மீண்டும் பிரியந்தவின் வீட்டுக்கு வர முடியாத வகையில் செற்யபடுவர். இவர்களுக்குள்ளேயே திருடன்- பொலிஸ் விளையாட்டும் இங்கு இடம்பெறுவதுண்டு. அந்தப் பயத்திலேயே பாதிப்பேர் திரும்பி வருவதில்லை. இந்த முறையில் வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டு பிரியந்த அடங்கிய குழுவினர் மேற்கொண்டு வந்த போலிவியாபாரத்தை வலானை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தலையிட்டு முடிவுக்குக் கொண்டு வந்திருந்தனர். பொருட்களுடனேயே பிரியந்தவையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு நாட்டிலுள்ள வேறுபட்ட இடங்களில் வேறுபட்ட வழிமுறைகளைக் கையாண்டு அப்பாவி மக்களை ஏமாற்றுவதில் இன்னும் சிலர் மறைந்தே திரிகின்றனர். நீண்ட விசாரணையின் பின்னரே பிரியந்தவின் போலி வியாபாரங்கள் தொடர்பிலான மேலதிக தகவல்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டனர். அதிக பணத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்தப் போலி வியாபாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பாரிய தேடுதல் வேட்டையில் வலானை குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பாளரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த, தலைமைப் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ராஜபக்ஷ மற்றும் அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்புடன் உப பொலிஸ் பரிசோதகர் சம்பத், பொலிஸ் அதிகாரி ஜயரத்ன, பொலிஸ் அதிகாரி சம்பத், பொலிஸ் கொஸ்தாபல் ஜயலால், பொலிஸ் கொஸ்தாபல்களான விஜேரத்ன, அருண, பிரபுத்த, தேநுவர, பொலிஸ் அதிகாரி திலகரட்ண, பொலிஸ் கொஸ்தாபல் இந்திக்க, பொலிஸ் கொஸ்தாபல், அபேரத்ன மற்றும் டில்கி ஆகிய அதிகாரிகள் பங்கு கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக