கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 பிப்ரவரி, 2018

மண்ணுக்காக புதையும் உயிர்கள்

அன்று 6 ஆம் திகதி நேரம் காலை 8.30 இருக்கும். கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெஹெல்பந்தர கிராமத்திலுள்ளோருக்கு பட்டாசு வெடிக்கும் சத்தம் போல கேட்டது. நிறைய பேர் யாராவது வீட்டில் கல்யாணம் நடப்பதாலேயே இவ்வாறு பட்டாசு சத்தம் கேட்பதாக எண்ணினார்கள். இருப்பினும் மறுபடி கேட்ட பாரிய சத்தத்தால் இதுவென்றால் பட்டாசு சத்தம் அல்ல யாரோ ஒருவர் இன்னொருவரை சுட்டிருக்கலாம் என கிராமத்தவர்கள் யூகித்துக் கொண்டனர். தாங்கள் செய்த கொண்டிருந்த வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு எல்லோரும் வெளியில் வந்து எட்டிப் பார்த்தனர். ஒருகணம் எல்லோரும் திடுக்கிட்டுப் போய் நின்றனர். காரணம் எல்லோரும் றிந்த, தெரிந்த நெருவில் மாமாவின் வீட்டிலேயே அந்தச் சத்தம் கேட்டது என்பதை புரிந்து கொண்டனர். அவ்வேளையிலேயே எல்லோரும் நெருவில் மாமாவின் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினர். அப்படி ஓடியவர்களின் கண்ணுக்கு நெருவில் மாமாவின் வீட்டு பின்புறத்திலிருந்து ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளொன்று விர்ரென்று சென்றதை கவனிக்க முடியாமல் போனது. காரணம் அவர்களின் பார்வை வீட்டுக்குள் செல்வதிலேயே இருந்தது.



கூச்சலிட்டு சென்றவர்களுக்கு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடத்த நெருவில் மாமாவையே பார்க்கக் கூடியதாகவிருந்தது. நெருவில் மாமாவை யாரோ சுட்டுக் கொன்றிருப்பதாகவும் ஸ்கூட்டியில் தப்பிச் சென்றவர்களை இச்சம்பவத்தை செய்திருக்க வேண்டும் என்பது நேரில் பார்த்த யாராலும் புரிந்து கொள்ள முடியும். கடுங் காயங்களுக்குள்ளாகியிருந்த நெருவில் மாமா கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதுகூட இவ்வுலகைவிட்டு பிரிந்திருந்தார். இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மூலம் கிராம மக்கள் அனைவரும் ஒரவித பீதியுடனும் அச்சத்துடனும் பொழுதைக் கழித்தனர். அவர் வீட்டுக்கு வந்து அவ்வளவு தைரியத்துடன் அவரை சுட்டு வீழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கிறது? என ஊர்மக்கள் அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.

பலகை வியாபாரியான நெவில் பெரேரா (65 வயது) இரண்டு பிள்ளைகளில் தந்தையாவார். அவருடைய இளமைக் காலத்தில் செய்த தவறொன்றுக்காக 12 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த நெவில் பெரேரா அதிலிருந்து வெளியே வந்தது, மீண்டும் ஏதாதவொரு தினத்தில் சிறைச்சாலை பக்கமே திரும்பிப்பார்க்கக்கூடாது என்ற  எண்ணத்திலேயே.
கெஹெல்பந்தர கிராமத்திலுள்ள எல்லோருக்கும் ‘நெவில் மாமா’ என அறியப்பட்ட நெவில் பெரேரா தனது இரண்டு பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்பும் கூட இளைஞனைப் போலவே தனது தொழில் வாழ்க்கையை மேற்கொண்டு வந்தார். பகைவனையும் நண்பனைப் போலவே அவர் ஆதரித்து வந்தார். எவருக்காவது உதவி தேவைப்படினும் கூட முன்னிலையில் நிற்பவர் இவரே. இந்தத் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட அதாவது கடந்த 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று நெதகமுவவில் வசிக்கும் ‘மண் சமீ’ என அறியப்பட்ட பிரசாத் நிரோஷ் எனும் 32 வயதையுடைய மண் வியாபாரியை நெதகமுவ, அரசமரச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டு வீழ்த்திவிட்டுச் சென்றிருந்தனர். அத்துப்பாக்கிச் சூட்டில் மண் சமீ இறந்துவிட்டார். இருப்பின் இச்சூட்டை மேற்கொண்ட இருவரும் தலைமைறவாகினர்.

அவ்வாறே கடந்த ஜனவரி 13 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் அதாவது பட்டபொத்த, விகாரை வீதி மண் அகழும் இடமொன்றில் மண் வியாபாரியான சுரேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரால் சுடப்பட்டதில் சுரேஷ் படுகாயமடைநதிருந்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னால் தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் மாக்கிலங்கமுவே சஞ்ஜீவ மற்றும் பொல்வத்தை கலு அஜித் ஆகிய இருவரும் தொடர்புபட்டிருப்பதாகவும் மேலும் பட்டபொத்த தேவா என்பவரின் உதவியும் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மாக்கிலங்கமுவே சஞ்ஜீவவின் உத்தரவின் பேரில் கலு அஜித் மூலம் தேவா என்பவருக்கு சுரேஷ் பற்றிய தகவல்களை திரட்டுமாறு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அதற்கிணங்க சுரேஷ் பற்றிய தகவல்களை தேவா திரட்டிக் கொண்டான். கலு அஜித் சிறை அனுபவிப்பதற்கான காரணம், கடந்த வருடத்தில் கம்பஹா வியாபாரியொருவரான ஒஸ்மன் குணசேகர என்பவரை கொலை செய்ய முற்பட்டமையேயாகும்.

ஹீனடியன அசித்தவின் கையாளாக இருந்த கலு அஜித், அசித்தவின் மரணத்தையடுத்து தூனகஹ சுஜியின் குழுவோடு இணைந்து பின்னர் சங்ஜீவவோடு இணைந்த ஒருவராவார். இவர்கள் எல்லோரும் மண்வியாபாரத்தில் ஈடுபடுபவர்களே. தாங்கள் விலைக்கு வாங்கவிருந்த மண் மேடொன்றை சுரேஷ் விலைக்கு வாங்கியதாலேயே தேவா மற்றம் கலு அஜித் என்போருக்கு சுரேஷை பளிவாங்கும் எண்ணத்தை தூண்டியது. அதற்கிணங்க கூம்பிகெலே ரைனோவிடம் சுரேஷின் மண்மேட்டிலிருந்து மண் கொண்டு செல்லும் லொறி சாரதியொருவருக்கு தொலைபேசி இலக்கமொன்றை அனப்பினர். இதன் மூலம் மண்மேடுக்கு சுரேஷ் வந்து செல்லும் நேரங்களை அறிந்து கொள்வதே இவர்களின் திட்டமாகவிருந்தது.

அதற்கிணங்க கடந்த 13 ஆம் திகதி சுரேஷ் மண்வெட்டும் இடத்துக்கு வந்த சந்தர்ப்பத்தில் சாரதியொருவரால் தேவாவுக்கு சுரேஷ் வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் விசாரணையில், சுரேஷை சுட்டு வீழ்த்திவிட்டுச் சென்றிருப்பது அத்தொலைபேசி அழைப்புக்கிணங்க தேவாவால் அனுப்பப்பட்ட இரு அடியாளட்களே எனத் தெரியவந்திருந்தது.
சுரேஷ் மூலம் விலைக்கு வாங்கப்பட்ட இந்த மண் மலையை நெவில் மாமாவின் இளைய மகனின் பெயரில் வாங்குவதற்கு தேவா திட்டமிட்டிருந்த நிலையில், இத்திட்டம் யாவுமே நெவில் மாமாவுக்கு தெரியவர, அவர் மண் மலை சொந்தக்காரரிடம் விடயத்தைக் கூறினார். அதில், தனது மகனுக்கு மண் மலை பற்றி தெரியாதெனவும் அதை விலைக்கு வாங்குவது தேவா என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறே குறித்த மண் மலை தேவாவின் கையிலிருந்து நழுவிச் சென்று மறுபடியும் சுரேஷ் கைவசமே சென்றது. இதற்குக் காரணம் நெவில் மாமா தெரிவித்த தகவலேயாகும். மினுவுõங்கொடை மண் விற்பனையில் ஒருவருடைய தலையீடே இருக்க வேண்டுமென பொதுவாகவே மண் வியாபாரிகள் எண்ணுவதுண்டு. இந்த விடயத்தில் இன்னொருவரின் தலையீடு இருப்பின் அது அவர்களுக்கு கோபத்தையே ஏற்படுத்தும். தேவாவுக்கு சுரேஷுக்கும் அதனாலேயே முரண்பாடு ஏற்பட்டது. இவ்வாற முரண்பட்டுக் கொண்டாலும் மண் வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் பொதுவான நீதியொன்று உண்டு. தாங்கள் வெட்டும் எல்லா மண் டிப்பர் ஒவ்வொன்றிலும் ‘நெதகமுவ மண் பொட்டா’ என்வருக்கு 750 ரூபாவை கப்பமாக செலுத்த வேண்டும் என்பதே நியதியாகும். அந்த நிபந்தனைக்கு அடிப்பணியாதவர்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும். அது எந்த நேரத்தில் எப்படி நடக்குமென்று அவர்களுக்கே தெரியவந்தது.

இந்நேரத்தில் மண் பொட்டாவின் உதவியாளனான மண் சமீ வியாபாரம் சம்பந்தமாக தன்னை மிரட்டிய ஒருவரை இல்லாதொழிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒருவன் உயிரோடு இருக்கும் வடர தன்னால் தலைநிமிர்ந்து செல்ல முடியாதெனவும் எனவே அவனை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் எனவும் அப்போதே தான் நிம்மதியாக வாழமுடியும் எனவும் சமீ தனது நண்பர்களுடன் கூறியிருந்தான். சமீ இவ்வாறு கூறிய விடயம் எப்படியோ சம்பந்தப்பட்ட நபரின் காதுகளுக்கு எட்டியுள்ளது. சமீயின் திட்டம் காதுகளுக்கு எட்டிய அடுத்த நொடியே குறித்த நபர் சமீயை இல்லாதொழிக்க விரைந்து செயற்படுகிறார். அதாவது சமீயின் திட்டத்துக்கு முதல் தனது திட்டம் நிறைவேற வேண்டும் என்ற நோக்கிலேயே.

அதற்கிணங்க சுதந்திர தினத்தன்று தனது வீட்டிலிருந்து அரசமரத்தடிச்சந்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்று நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மூலம் ரி -56 ரக துப்பாக்கியொன்றில் சமீ சுடப்பட்டான். சுட்டவர்கள் இருவரும் தப்பிச் சென்றிருந்தனர். கெஹெல்பந்தர துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்றது, சமீ கொல்லப்பட்டது சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து சில தினங்களுக்கு அடுத்தே. மாக்கிலங்கமுவ சஞ்ஜீவ என்பவரினால் நெவில் மாமாவின் இளைய மகனுக்கு பலதடவை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை பொலிஸார் தேடியறிந்து கொண்டனர். அவனது இலக்கு நெவில் மாமாவின் இளைய மகன் என்றாலும் யார் நெவில் மாமாவை சுட்டது? என்ன காரணத்துக்காக அவர் சுடப்பட்டார்? என்ற விடயத்தை ஆராய பொலிஸார் குழுக் குழுவாக பிரித்து தங்களது விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.

மினுவாங்கொட, திவுல்பிட்டிய, தெம்பே, கட்டான ஆகிய பிரதேசங்களில் அரசியல்வாதிகளின் தலையீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மண் வியாபாரத்தினால் 2018 ஆம் ஆண்டு ஆரம்பம் வரை பாதாளக் குழுவினர் மற்றும் சாதாரண பொதுமக்கள் என 64 பேர் பலியாகியுள்ளனர். பாதாளக் குழுவினருக்கு மனித வாழ்வின் பெறுமதி தெரியாது. அவர்களுக்குத் தேவை பணமும் பலமும் தான். மாக்கிலங்கமுவ சஞ்ஜீவவுக்குத் தேவை பாதாளக் குழுவின் தலைவானாகுவதற்கே. பாதாள கராத்தே அஜித் என்பவரின் உறவுக்கார பையனான சஞ்ஜீவ வனவாசல வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையில் ஈடுபட்ட ஒருவனாவான். தற்போது சிறையிலிருக்கும் அவன் அங்கிருந்தவாறே கம்பஹா பிரதேச வியாபாரிகளுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கப்பம் பெற்றுக் கொள்கிறான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கம்பஹா பொலிஸ் வட்டாரத்திலுள்ள சகல பொலிஸ் அதிகாரிகளும் பகல் இரவு பாராது பொலிஸ் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அதுமாத்திரமன்றி உடுகம்பொல, கெஹெல்பந்தர, பட்டபொத்த, நெதகமுவ ஆகிய பிரதேசங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு சந்தி வழிகளில் பொலிஸார் குழுக்களாக பிரிந்து கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் தெற்குப் பகுதியில் இதுபோன்றே பாதாளக் குழுக்களின் தலைமையில் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அங்கும் இவ்வாறே பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதுவரையிலும் மண் வியாபாரத்தில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பயம், அச்சம் கொள்ள வைத்தவர்களைத் தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர். இவர்களின் இந்த அடாவடித்தனங்களால் கம்பஹா மாவட்டம் சிக்காக்கோ நகரம் போல் தென்பட்டது. அதாவது பட்டப்பகலில் கொலை இடம்பெறும் மாவட்டமாக கம்பஹா மாறியிருந்தது. மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென பொலிஸ் விசேட ஆணையாளர் மற்றும் குற்றம் மற்றும் மதுபான ஒழிப்புப் பிரிவின் பிரதான பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப்பின் ஆணைக்கிணங்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இருந்தாலம் பாதாளக் குழுவால் மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூடு எங்கு, எவ்வாறு இடம்பெறுமென யாராலும் யூகிக்க முடியாமல் இருந்தது. அவர்களின் அடுத்த இலக்கு யார்? என்ன நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படுகிறது? என்பது புரியாத புதிராகவே உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக