கொட்டஞ்சேனை- ஜம்பட்டா வீதி மக்களுக்கு இரவு வேளையானது மிகவும் தாமதமாகவே உதயமாகும். குறிப்பாக ஜம்பட்டா வீதியானது எந்நேரத்திலும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும் பிரதேசமொன்றாகும். இந்த வீதியானது தென்னிந்திய மக்களின் வீதியாகவே தற்போது மாறிப்போயிருக்கிறது. அவ்வீதியானது இவ்வாறிருப்பதற்குக் காரணம். அங்கு வசிக்கும் பொது மக்களும் அவ்வாறே அங்கு வியாபாரம் மேற்கொள்ளும் அநேகர் தமிழர்களாவர். கடந்த ஜுன் மாதம் 27ஆம் திகதி நள்ளிரவு வர இன்னும் ஒரு சில மணித்தியாலங்களே காணப்பட்டன. இருப்பினும் அவ்வேளையிலும் ஜம்பட்டா வீதியானது சனநடமாட்டம் நிறைந்தே காணப்பட்டது. அந்த நேரத்தில் அவ்வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களுக்கிடையில் மோட்டார் சைக்கிளொன்று ஜம்பட்டா வீதியின் கடை யொன்றுக்கருகில் நிறுத்தப்பட்டது.
தலைக்கவசம் அணிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் எந்தவித பயமுமின்றியும், களேபரமின்றியும் சுற்றும் முற்றும் பார்த்தான். ஜம்பட்டா வீதியில் 131ஆம் இலக்க தோட்டத்தில் வசிக்கும் கணேஷ் என்பவர் அந்தக் கடையருகே யாரோ ஒருவரின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது இடுப்பில் செருகி வைத்திருந்த 9ட்ட் வகையைச் சேர்ந்த துப்பாக்கியொன்றை எடுப்பதை அங்கிருந்த யாரும் கவனிக்கவில்லை. விரைந்து செயற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கணேஷை சரமாரியாக சுடத் தொடங்கினான். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கணேஷ் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்குடன் தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதி நோக்கி ஓடத் தொடங்கினான். இருப்பினும் பல குண்டுகள் அவனது உடம்பைப் பதம் பார்த்திருந்தன. எந்தவித பதற்றமுமின்றி துப்பாக்கிதாரர் துப்பாக்கிச் சூடை மேற்கொண்டுவிட்டு குடியிருப்புத் தொகுதியூடாக தப்பிச் சென்றுவிட்டான். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கணேஷûக்கு இன்னும் உயிர்வாழ பாக்கியம் இருந்தது என்றே கூறவேண்டும். கணேஷை சுடும் வேளையில் அவனது பக்கத்தில் இருந்தது கீதாவும் அவளது கணவனான ராஜாவுமே. தோட்டத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் கணேஷை வைத்தியசாலையில் ஒப்படைக்க இந்த ஜோடியே முன்னின்றது.
கொட்டாஞ்சேனை- ஜம்பட்டா வீதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போதை வியாபாரமானது இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்துடன் மீண்டும் செயற்படத் தொடங்கியது. இந்த பிரயோகத்தின் பின்னர் போதைப்பொருள் விற்பனையை முன்னிலைப்படுத்தி ஜம்பட்டா வீதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்டிருந்த சிறிய பிளவானது பாரிய யுத்தமாக மாற்றமடைந்தது. ஜம்பட்டா வீதியின் குடு ராணியாக செல்வியே காணப்பட்டார். இவ்வீதியின் இன்னுமொரு எதிர்க்குழுவால் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் செல்வி துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் கொலை செய்யப்பட்டார். கடந்த 27ஆம் திகதி இரவு வேளையில் ஜம்பட்டா வீதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் ஒன்றில் கடுங்காயங்களுக்குள்ளான கணேஷின் மனைவியே செல்வியாவார். கணேஷ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானது, செல்விக்கும் இன்னுமொரு குழுவுக்குமிடையே மிக நீண்டகாலமாகவே இருந்துவந்த பிரச்சினையேயாகுமெனக் கூறப்படுகிறது. குழு ராணியான செல்வி ஜம்பட்டா வீதியிலுள்ள 131ஆம் இலக்க தோட்டத்திலியே வசித்து வந்தாள். ஜம்பட்டா வீதி மட்டுமல்லாது முழு கொட்டாஞ்சேனைப் பகுதிக்கும் செல்வி ஒரு அநியாயக்காரியாகவே தென்பட்டாள். அவள் வசித்து வந்த 131ஆம் இலக்க தோட்டம் செல்வியின் தோட்டமாகவே கருதப்பட்டது. அந்தளவுக்கு அவளின் பெயர் ஓங்கிக் காணப்பட்டது.
ஹெரோயின் வியாபாரத்தை தனது பிரதான தொழிலாகக் கொண்டு செயற்பட்ட செல்வி, பாதாள சண்டித்தனத்தின் மூலம் முழு ஜம்பட்டா வீதியையும் பயப்பீதிக்கு ஆளாக்கியிருந்தாள். செல்வியின் ஹெரோயின் வியாபாரத்திற்கு பிரதான எதிர்த்தரப்புகளாக புபுடிகண்ணா, ரெக்ஸ் ரீகன் ஆகியோரின் குழுக்கள் காணப்பட்டன. இந்த இரண்டு குழுக்களுக்குமிடையில் மிக நீண்டகாலமாகவே பிரச்சினைகள் இருந்து வந்தன. இந்தப் பிரச்சினையில் தலையிட்ட நிறைய பேர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. இந்தக் குடு வியாபாரத்தின் எதிரொலியாக செல்வியின் சகோதரரும் அவ்வாறே நெருங்கிய சகாக்கள் சிலரை ரெக்ஸ் ரீகன் பரலோகம் அனுப்பியதுமுண்டு. ஒரு தடவை ரெக்ஸ் ரீகன் அடங்கிய குழுவொன்று செல்வியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து செல்வியின் மூத்த மகனை சரமாரியாக தாக்கி விட்டு அவனது கை, கால்களை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது. இதன் எதிரொலியாக அநியாயமாக ரெக்ஸ் ரீகன் பரலோகம் செல்ல நேரிட்டது. செல்வியின் மூன்று புதல்வர்களும் கணவனும் சேர்ந்து ரெக்ஸ் ரீகனை வாளால் வெட்டி கொலை செய்தனர்.கடந்த 2015ஆம் ஆண்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. ரீகனை கொலை செய்த காரணத்தால் செல்வியின் மகன்மார்கள் சிறைவாசம் அனுபவித்தனர் ரெக்ஸ் ரீகனின் கொலையால் அதிகம் பாதிக்கப்பட்டவன் அவனது நெருங்கிய
நண்பனான புபுடிகண்ணாவாவான். இதனால் அதிகம் கோபமடைந்த அவன் செல்வியை பழிவாங்க திட்டம் தீட்டினான். செல்வியை கொலை
செய்வதற்கான திட்டத்துக்காக கெனடியை புபடிகண்ணா பயன்படுத்திக் கொண்டான். கொட்டஞ்சேனையில் பிறந்து, வளர்ந்த புபுடிகண்ணா மற்றும் கெனடி ஆகியோர் எல். ரீ. ரீ. ஈ அமைப்புடன் சேர்ந்து குடு வியாபாரம்
செய்தவர்களாவர். இந்த அமைப்பில் சேர்ந்த மேற்படி இரு குடு விற்பனையாளர்களும் அங்கு ஆயுதப் பயிற்சியிலும் ஈடுபட்டனர். பின்னர் பொலிஸாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறந்த துப்பாக்கிதாரியான கெனடி, ஜம்பட்டா வீதியின் குடு ராணியான செல்வியை 2015 ஆம் ஆண்டே கொலை செய்தான். செல்வி தனது வீட்டில் இருக்கும் வேளையில் அடாவடியாக உட்புகுந்த கெனடி மற்றும் பாதாளக் குழுவினர் செல்வியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் முழு கொட்டாஞ்சேனை குடு வியாபாரிகளையும் கதிகலங்க வைத்தது. செல்வி கொலை செய்யப்பட்ட நேரம் 3 மகன்மாரும் இளைய பராய வயதினராவர். கெனடி மற்றும் ஏனைய பாதாளக் குழு உறுப்பினர்களால் தனது தாய் கொலை செய்யப்பட்ட காரணத்தினால் அவர்கள் மீது கடும் வைராக்கியத்துடனேயே இவர்கள் மூவரும் காணப்பட்டனர். செல்வி கொலை செய்யப்பட்ட நேரம் பிள்ளைகளும் கணவனும் சிறையிலேயே இருந்தனர். செல்வியை கொலை
செய்த சந்தேகத்தின் பேரில் கெனடி கைது செய்யப்பட்டான். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த கெனடி, கடந்த 3மாதங்களுக்கு முன்னரே பிணையில் வெளியே வந்தான். அந்த நேரத்தில் செல்வியின் மகன்மாரும். கணவனும் பிணையில் வெளியில் வந்து ஜம்பட்டா வீதியில் தங்கியிருந்தனர்.
தனது தாயைக் கொன்ற கெனடியை எவ்வழியிலாவது கொன்றுவிட வேண்டுமென்ற பழிவாங்கல் எண்ணத்திலேயே செல்வியின் புதல்வர்கள்
நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். வெலிக்கடை சிறையில் இருக்கும்
சந்தர்ப்பத்தில் செல்வியின் புதல்வர்களுக்கு பாதாள உலகக் குழுவில் பிரசித்தமான சிலர் அறிமுகமாகியிருந்தனர். இந்த வேளையில் பெயர் போன பாதாளக் குழுத் தலைவர்களான மாகந்துர மதுஷவினதும், அங்கொட லொக்காவினதும் நெருங்கிய நட்பு இவர்களுக்குக் கிடைக்கப்பெற்றது. இந்த அந்நியோன்யத்தின் மூலம் மேற்படி இருவரினதும் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக்கொண்ட செல்வியின் மகன்மார்கள், தொலைபேசியினூடாகவே அவர்களைத் தொடர்பு கொண்டு தங்களது பல காரியங்களை நிறைவேற்றிக் கொண்டனர். இவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதால் பிற்காலத்தில் தமக்கு பாரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர்கள் எண்ணிக்கொண்டனர். அவ்வாறே மாகந்துர மதுஷவும் தனது பாதாள செயற்பாடுகளை விஸ்தரித்துச் செல்வதற்காக வேண்டி உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தான். இதன் காரணமாகவே செல்வியின் புதல்வர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டான். செல்வியின் புதல்வர்கள் தனது தாயைக் கொன்ற கெனடியை பரலோகம் அனுப்ப தங்களுக்கு உதவ வேண்டுமென மாகந்துர மதுஷவுக்கு தெரிவித்திருந்தனர். கெனடி என்பவன் தங்களுக்கு பரமவிரோதி என்பதை மதுஷவும், லொக்காவும் அறிந்து வைத்திருந்தனர். தெற்கு பாதாள பிரபலமான கொஸ்கொட சுஜியின் நெருங்கிய நண்பனே கெனடி. கொஸ்கொட சுஜி அரங்கேற்றிய பல குற்றங்களுக்குப் பின்னால் கெனடியே காணப்பட்டான். கொஸ்கொட சுஜிக்கும், மதுஷவுக்கும் இடையில் பாரிய வைராக்கியம் காணப்பட்டது. இவர்களின் குழுக்கள் இரண்டும் சில காலங்களுக்கு முன்பிருந்தே பல தாக்குதல் சம்பவங்களிலும், கொலைச் சம்பங்களிலும் ஈடுபட்டிருந்தன. இதனால் கொஸ்கொட சுஜியை பழிவாங்கும் நோக்கில் கெனடியை பேட்டுத்தள்ள மதுஷ் திட்டமிட்டான். அதன் காரணமாகவே கெனடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த செல்வியின் புதல்வர்களுக்கு உதவ மதுஷ் திட்டமிட்டான். கெனடியை போட்டுத்தள்ள செல்வியின் புதல்வர்கள் திட்டம் தீட்டினர். இத்தகவல் கெனடியின் காதுகளையும் எட்டியது. கெனடி சிறையிலிருந்து பிணை மூலம் வெளியே வந்த அன்றே போட்டுத்தள்ள இவர்கள் திட்டம் போட்டதும் எவ்வாறோ கெனடிக்குத் தெரியவந்தது.
இந்த இரு தரப்பினர்களுக்குமிடையே காணப்பட்டது குடு யுத்தத்துக்கும் மேலான ஒருவரையொருவர் கொலை செய்யும் வைராக்கியமே. இதில் வெற்றி பெறுபவர் பாதாளக் குழுத் தலைவன் என்றொரு சட்டமும் இங்கிருக்கிறது. இந்த வேளையில், செல்வியின் குடும்ப உறுப்பினர்களை போட்டுத்தள்ளிவிட்டு தனது பாரிய தலைவலியை இல்லாதொழிக்கவும் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் கெனடி திட்டமிட்டான். அவ்வேளையில் கெனடியினதும் புபுடிகண்ணாவினதும் நட்பு பிளவடைந்திருந்தது. இவர்கள் இருவரிடத்திலும் தற்போது வைராக்கியமே காணப்படுகிறது. தனது எதிராளிகளை பழிவாங்க கெனடி தனியாக போராடிக் கொண்டிருந்தான். செல்வியின் புதல்வர்களையும் கணவனையும் கெனடி கொலை செய்ய திட்டமிட்ட விடயம் பொலிஸ் நிலையம் வரை தெரிய வந்திருந்தது. பொலிஸாரும் செல்வியின் குடும்ப உறுப்பினர்களுக்கு இது பற்றி எத்தனையோ தடவை எச்சரித்திருந்தனர்.
கெனடி மற்றும் குழுவினர் எவ்வேளையிலும் தங்களை கொலை செய்யக்கூடும் என்ற பயப்பீதியில் செல்வியின் புதல்வர்கள் தாங்கள் வசித்த ஜம்பட்டா வீதியை விட்டு பாதுகாப்பு இடம் தேடி சென்றுவிட்டனர். இருப்பினும் செல்வியின் கணவனான கணேஷ் அங்கிருந்து செல்லவில்லை. கெனடி அடங்கிய குழுவினர் செல்வியின் புதல்வர்களை எங்கு தேடியும் அவர்கள் அகப்படவில்லை. செல்வியின் கணவன் மாத்திரம் ஜம்பட்டா வீதியில் இருப்பதாக அறிந்து கொண்ட கெனடி, அவனைக் கொன்று தனது பழியைத் தீர்த்துக் கொள்ள எண்ணினான். இதில் அவன் மட்டும் தனியாகச் செயற்பட்டிருந்தான். கணேஷ் ஜம்பட்டா வீதியில் இருப்பதாக தனது சகா ஒருவர் மூலம் கெனடிக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது. அதன்படி செயற்பட்ட கெனடி கணேஷைப் போட்டுத் தள்ளும் நோக்கில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டான். இருப்பினும் கணேஷ் கடுங்காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டான். கெனடி தனது தந்தையை சுட்டுவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் செல்வியின் புதல்வர்கள் கொந்தளித்துப் போயினர்.
இந்தத் தாக்குதலுக்கு உடனடித் தாக்குதலை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் திட்டமிட்டனர். இருப்பினும் கெனடி இருக்கும் இடத்தை அவர்களால் தேடிக்கொள்ள முடியாமல் போனது. தனது தந்தையைக் கொன்ற கெனடியின் குழுவிலிருந்து ஒருவரையேனும் போட்டுத்தள்ள இவர்கள் திட்டமிட்டனர். கணேஷை கொலை செய்த கெனடிக்கு, ஜம்பட்டா வீதியிலுள்ள கணவன், மனைவியே கணேஷ் பற்றிய தகவலை வழங்கியதாக செல்வியின் புதல்வர்களுக்கு தகவல் கிடைத்தது. கணேஷை சுடும் வேளையில் கீதாவும் ராஜாவுமே அவ்விடத்தில் இருந்தனர். ஆனால் உறுதியான தகவல்கள் இது பற்றி கிடைக்கப் பெறவில்லை. இவர்கள் கணேஷை சுட்ட நபரை அடையாளம் கண்டாலும் அதுபற்றிய சரியான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கவில்லை.
ராஜா மீன் வியாபாரியாவார். கீதா கடைகளுக்கு இடியப்பம் போடுபவிராவார். இவர்கள் பாதாளக் குழுக்களுடனோ, ஹெரோயின் வியாபாரத்துடனோ எவ்விதத் தொடர்புமற்றவர்கள். ஆனால், செல்வியின் புதல்வர்கள் இந்த ஜோடிதான் தனது தந்தையைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாக எண்ணினர். இதன் பிறகே கீதாவுக்கும் ராஜாவுக்கும் மரண திகதி நிர்ணயிக்கப்படுகிறது. மாகந்துர மதுஷவின் கட்டளைக்கிணங்க அங்கொட லொக்காவின் குழுவின் கூலிப் படைகள் இருவர் இந்தக் கொலைக்காக தயாராகினர். பிரயோகம் மேற்கொள்ள தேவையான ரி- 56 ரக துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன அங்கொட லொக்காவின் குழுவினர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. ஜுலை 9 ஆம் திகதி இரவு வேளை ஆரம்பமாகியது. கீதாவும் ராஜாவும் ஜம்பட்டா வீதியில் கடையொன்றுக் கருகில் நின்றிருந்தனர். இவர்களிருவரும் ஜம்பட்டா வீதியின் கடையொன்றுக்கருகில் நின்று கொண்டிருப்பதாக அங்கொட லொக்காவின் கூலிப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. குடியிருப்புத் தொகுதி வீதியூடாக வந்த மோட்டார் சைக்கிளொன்று அவர்களுக்கருகில் நிறுத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில் அமர்ந்திருந்த துப்பாக்கிதாரர் தனது பைக்குள் இருந்த ரி-56 ரக துப்பாக்கியை எடுத்து ராஜா மீதும் கீதா மீதும் குறிவைத்தான். இதில் திகைத்துப்போன அவர்களுக்கு பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. விரைந்து செயற்பட்ட கூலிப்படையினர் இருவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். தலையில் பட்ட துப்பாக்கிச் சூட்டால் கீதா தரையில் விழுந்தாள். ராஜாவின் வாய்க்குள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அவனும் அவ்விடத்திலேயே தனது இறுதி மூச்சை விட்டான். சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் ஹோட்டலொன்றில் உணவு வாங்கிக் கொண்டிருந்த இருவர் கடுங்காயங்களுக்குள்ளாகினர். துப்பாக்கிதாரர்கள் இருவரும் தங்களது வேலையை சிறப்பாகச் செய்துவிட்டு ஜம்பட்டா வீதியூடாக தப்பிச் சென்றனர்.
கொழும்பு வடக்கு மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி லயனல் குணதிலக மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவு அத்தியட்சகர் நிஷாந்த சொய்சா ஆகியோரின் மேற்பார்வையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கணவன், மனைவியைக் கொன்றவர்களையும் இவர்களை யார் அனுப்பினார்கள் என்பதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். இருப்பினும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதால் அவர்களைக் கைது செய்வது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. குற்றமொன்றை இழைத்துவிட்டு எந்நாளும் தலைமறைவாக இருக்க முடியாது. பொலிஸார் தற்போதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகள் மூலம் எப்படியும் சந்தேகநபர்கள் சிக்குவார்கள் என்பது திண்ணமே. ஜம்பட்டா வீதியில் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று சூடு தணிவதற்கிடையில் ஹெட்டி வீதி தீப்பிடித்தது. ஹெட்டி வீதி, கதிரேசன் வீதி சந்தி கடையொன்றுக்குள் ஜூலை 10 ஆம் திகதி காலை வேளையில் நுழைந்த பாதாளக் குழு உறுப்பினரொருவர் கடை உரிமையாளரான கிருஷ்ணாவை சுட்டுத்தள்ளிவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டான். கொழும்பை மையமாக வைத்து நாளுக்கு நாள் மேலோங்கிச் சென்ற மனிதக் கொலை தொடர்பில் பொலிஸாரோ அசமந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். நாட்டுப் பாதுகாப்பை ஓரங்கட்டிவிட்டு எப்படியாவது பாதாளக் குழுச் செயற்பாடுகளை பொலிஸார் நிறுத்தியே ஆகவேண்டும். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணா கொழும்பு நகர சபைத் தலைவராவார் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுயேச்சைக் குழுவில் போட்டியிட்ட கிருஷ்ணா அதில் அமோக வெற்றியைப் பெற்றார். கேரளக் கஞ்சா வியாபாரத்தில் பெயர்போன கிருஷ்ணா கொலை
செய்யப்பட்டது போதைப்பொருள் குழுவொன்றினாலேயே கிருஷ்ணா தமிழர். புறக்கோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட கிருஷ்ணா இந்துமதத்தைத் தழுவியவர். இவருக்கு இரண்டு திருமணங்கள். முஸ்லிம் மற்றும் சிங்களப் பெண்களைத் திருமணம் முடித்த இவர் இருவருடனும் சுகபோக வாழ்க்கையொன்றை வாழ்ந்து வந்தார். சிங்கள மனைவியுடன் விகாரைக்குச் சென்ற இவர், முஸ்லிம் மனைவியுடன் பள்ளிவாசலுக்குச் செல்லவும் நேரம் ஒதுக்கியிருந்தார். இந்த அனைத்துக் கடமைகளையும் செம்மையாக நிறைவேற்றிய கிருஷ்ணா, தனது மதமான இந்து மதத்தையும் மறக்காது கோயிலுக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். புறக்கோட்டையில் பழ வியாபாரம் மற்றும் சில்லறைக் கடையொன்றை நடத்தி வந்த இவரின் பிரதான வருமான மார்க்கமாக கேரளக் கஞ்சா விற்பனையே காணப்பட்டது. கேரளக் கஞ்சா வியாபாரத்தை பாரியளவில் நடத்திச் சென்ற இவர் அதன் மூலம் பாரிய தொகைப் பணத்தை தேடிக் கொண்டிருந்தார். அவர் வருமானமாக ஈட்டிக்கொண்ட பணத்தில் ஒரு தொகையை ஏழை மக்களுக்கு செலவிட தீர்மானித்தார். இத்திட்டமானது. அரசியலில் தனது பெயர் ஓங்க வேண்டுமென்ற நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்காக வேண்டி உணவு, பானங்கள், தேவையான பொருட்கள் மற்றும் பணத்தை கொடுத்த கிருஷ்ணா அங்குள்ள மக்களால் வீரராக கருதப்பட்டார். இவரின் ஆரம்ப மூலதன வருமானமாகக் காணப்பட்டது கேரளக் கஞ்சா விற்பனையே. கடந்த அரசில் பிரபல அமைச்சரொருவருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இவர், அரசியல் பலத்தை தனது வியாபார நோக்கங்களுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்திக் கொண்டார். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் ஒரு தொகை கஞ்சாவுடன் வவுனியாவில் வைத்து கைது செய்யபட்ட இவர், 6மாதங்களுக்கும் மேலான காலப்பகுதி சிறைவாசம் அனுபவித்தார்.
சட்டவிரோத வியாபாரிகள், குடு வியாபாரிகள், பாதாளக் குழுத்தலைவர்கள் தமது பாதுகாப்பு கருதி அரசியலுக்குள் நுழைவது தற்போது சாதாரண விடயமாக மாறிவிட்டது. இந்தச் செயலை அதிகம் காணக்கூடிய இடங்களாக மாகாண மற்றும் பிரதேச சபைகள் காணப்படுகின்றன. கிருஷ்ணாவும் தனது பாதுகாப்புக் கருதியே அரசியலுக்குள் நுழைந்தார். கொழும்பு நகர சபைக்கு கிருஷ்ணாவுடன் சேர்ந்து சுயேச்சைக் குழுவில் குடு லாலின் மகனும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தற்போது இவர்களின் பெயர்களுக்கு முன்னால் கொலைகாரர், அநியாயக்காரர் என்ற அடைமொழிகள் இல்லாமல் போய் நற்குணம் கொண்ட தலைவர்கள் என்ற பெயர் பிரசித்தமாகியிருக்கிறது. கிருஷ்ணாவும் இந்த முறையிலேயே தனது பெயரை பிரசித்தப்படுத்திக் கொண்டார். இருந்தும் அவர் செய்த பாவத்திலிருந்து அவரால் மீள முடியால் போய்விட்டது. துப்பாக்கிப் பிரயோகம் பாதாளக் குழுவினரால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை எவ்வழியிலாவது தடுத்து நிறுத்த வேண்டும். இவர்களின் செயலால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே. தினந்தினம் பயப்பீதியுடன் தங்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்த நேரத்தில், எந்த இடத்தில் பாதாளக் குழுவினரின் அட்டூழியம் இடம்பெறக்கூடுமென்பதை சொல்ல முடியாது. துப்பாக்கியை கையிலெடுக்கின்றவனால் பொதுமக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். துப்பாக்கியை எடுத்தவனுக்கு துப்பாக்கியால் தான் சாவு என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் ஒருநாளும் பாதாளக் குழுவினரின் அநியாயங்களைத் தடுக்க முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக