கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

13 ஆகஸ்ட், 2018

துப்பாக்கியை எடுத்தவனுக்கு துப்பாக்கியாலேயே சாவு

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பகல் பொழுது நேரம். ஹோமாகம நகரம் மக்களால் நிரம்பிக் காணப்பட்டது. ஹோமாகம நீதிமன்ற வளாக அருகில் இரண்டு இளைஞர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் இங்கம்மாரு ஜனக ஆவார். பாதாள உலகத்தில் அனைவரும் ஜனா என்றே இவரை அழைப்பர். ஜனாவின் பிரதான வருமான மார்க்கமாக கஞ்சா விற்பனையே காணப்பட்டது. இவன் ஹோமாகம, அத்துருகிரிய, கொடகம ஆகிய பிரதேசங்களிலேயே இவ்விற்பனையை மேற்கொண்டு
வந்தான். ஜனா ஹோமாகம நீதிமன்றத்துக்கு கஞ்சா வழக்கொன்றுக்காகவே
சமூகமளித்திருந்தான். வழக்கு முடிந்ததும் ஜனா தனது நெருங்கிய
நண்பரொருவருடன் பிரதான பாதையூடாக பயணம் செய்து கொண்டிருந்தான்.


பிரதான பாதையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று ஜனா பயணித்துக் கொண்டிருந்த பாதைக்குத் திரும்பியது. மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவன் அருண ஆவான். ஹோமாகம பாதாளக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அருண, பல்வேறு விதமான குற்றத்தை புரிந்தவன் என நாமம் சூட்டப்பட்டவன். மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில் இருந்தது கொடகம இரேஷ் அல்லது பைலா என்ற பாதாளக் குழு அங்கத்தவன் ஒருவன். இங்கம்மாரு ஜனா மற்றும் பைலாவின் குழுவினரின் நெருங்கிய உறுப்பினரான லால் இடையே சில காலமாக முரண்பாடு காணப்பட்டு வந்தது.
இந்த முரண்பாடு நீண்டகாலம் தொடரவில்லை. ஜனாவுக்கு மரண நாள் நிச்சயிக்கப்பட்டது. பைலா தனது குழுவிலுள்ள ஒருவருடன் ஹோமாகம நகருக்கு வந்தது ஜனாவை போட்டுத் தள்ளும் நோக்கிலேயே. பொதுமக்களுடன் சென்று கொண்டிருந்த ஜனாவின் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த பைலா, அவனது முதுகுப் புறத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு முழு பிரதேசத்தையும் பயப்பீதிக்குள்ளாக்கிவிட்டு பொலிஸாருக்கு தண்ணி காட்டிவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டான். மனித வாழ்க்கையின் பெறுமதி தெரியாது பட்டப்பகலில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து தப்பிச் செல்லா வண்ணம் அது வரையிலும் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

ஜனா கொலைச் சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஹோமாகம பொலிஸார், பைலா என்ற பாதாளக் குழு உறுப்பினரையும் இன்னும் சிலரையும் கைது செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹோமாகம, கொடகம, அத்துருகிரிய, மீகொட, ரணால ஆகிய பிரதேசங்களை இலக்குவைத்து தனது பாதாள செயல்களை மேற்கொண்டுவரும் இரேஷ் மதுசங்க நவகுமுவ என்ற பாதாள கொள்ளையன், கொடகம இரேஷ் என்ற பெயரில் அறிமுகமாகி இருந்தான். இருப்பினும் பாதாளக் குழு முழுதும் இவன் பைலா என்றே அழைக்கப்பட்டிருந்தான்.

ஹோமாகம, கொடகம, அத்துருகிரிய ஆகிய பிரதேசங்களில் தலைமை நிறுவனங்கள், வங்கி மற்றும் வியாபார நிலையங்களில் பட்டப்பகலில் கொள்ளையடித்தல், துப்பாக்கி வியாபாரம் செய்தல், கப்பம் பெறல், கூலிக்கு கொலை செய்தல், ஹெரோயின் விற்பனை ஆகிய பாரிய குற்றங்களை புரிந்து வந்த இவன் மாகந்துர மதுஷின் நெருங்கியவனாவான். பைலா முதன் முதலில் அங்கொட லொக்கா என்ற பாதாளக்குழு உறுப்பினரையே அறிந்து வைத்திருத்தான். அதன் மூலமே மாகந்துர மதுஷûடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் பைலா அவனின் கூட்டத்தில் நெருங்கிய உறுப்பினரானான். அங்கொட லொக்காவுடனும் மாகந்துர மதுஷûடனும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டமை பைலாவுக்கு பாரிய சக்தியாக இருந்தது. மாகந்துர மதுஷûன் ஹெரோயின் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்ட பைலா, அதன் மூலம் பாரிய தொகை வருமானத்தையும் ஈட்டிக் கொண்டான்.

புதியரக கார்களை பயன்படுத்துவது மற்றும் ஆடம்பர வீடுகளில் வசிப்பதென்பது பைலாவின் வாழ்க்கையில் வாடிக்கையாகிப் போன விடயங்களாகும். அதுமட்டுமன்றி தனது நண்பர்களுக்கு செலவு செய்வதிலும் வள்ளலாகக் காணப்பட்டான். அவர்களின் தேவைகள் தொடர்பிலும் எந்த
நேரத்திலும் விசாரித்துக் கொண்டே இருந்தான். கடல் மார்க்கமாக கொண்டுவரப்படும் மதுஷûக்கு உரித்தான ஹெரோயினை தொகையாக வெளியிடங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் வேலையை பைலாவே பொறுப்பெடுத்திருந்தான்.ஹோமாகம, அத்துருகிரிய,  கொடகம மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு பைலாவே ஹெரோயின் பிரித்துக் கொடுக்கும் பிரதான வேலையை மேற்கொண்டிருந்தான்.

ஹோமாகம நீதிமன்றத்துக்கருகே ஜனா துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டது, அங்கொட லொக்காவுக்கு மட்டுமன்றி மாகந்துர மதுஷûக்கும் பாரிய இழப்பாகக் காணப்பட்டது. தங்களது ஹெரோயின் விற்பனையை சீராக முன்னெடுத்துச் செல்ல யாரும் இல்லையே என்ற கவலை  அவர்கள் இருவரையும் தொற்றிக் கொண்டது. மதுஷ் அடிக்கடி பைலாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
சிறைச்சாலைக்குள் தொலைபேசி வசதி மற்றும் இதர வசதிகள் பைலாவுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. மதுஷ் அண்ணா இப்போதென்றால்
சிறையில் இருந்து எனக்குப் போதுமாகிவிட்டது. எப்படியாவது கூடிய விரைவில் என்னை வெளியே எடுங்கள் என்னால் உங்களது வியாபாரத்தை
சிறப்பாக செய்துதர முடியும் எனப் பைலா கேட்டுக் கொண்டான். நீ எதற்கும் பயப்பட வேண்டாம். நியமிக்கும் தொகையை செலுத்திவிட்டு உன்னை வெளியில் எடுக்கிறேன் எனவும் உன்னைப் போன்றவர்கள் சிறையிலிருப்பது பாரிய அநீதி என்றும் மதுஷ் தெரிவித்தான்.

மாகந்துர மதுஷ் எந்நேரத்திலும் இவ்வாறு ஏதாவது கூறி பைலாவை சமாதானப்படுத்தினான். அவ்வாறே ஒரு வருட காலம் பைலா சிறையில் இருந்தான். சிறையில் 4சுவர்களுக்கு மத்தியில் பைலா இருந்தாலும் வெளியில் நடக்கும் பாரிய குற்றச் செயல்களுக்கு பைலாவே ஆலோசனையாளனாக இருந்தான். மதுஷின் ஹெரோயின் வியாபாரத்தில் எந்தவித சிக்கலும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொண்டது சிறையிலிருக்கும் பைலாவே. மதுஷ் செட்டலைட் தொலைபேசி மூலம் சிறையிலுள்ள பைலாவை தொடர்பு கொண்டு, உன்னை வெளியில் கொண்டுவர தேவையான சகல ஏற்பாடுகளையும் நான் பூர்த்தி செய்து விட்டேன். பிணைக்குத் தேவையான பணத்தை வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டு உன்னைக் கூட்டிச் செல்வது மாத்திரமே மிச்சம் எனத் தெரிவித்திருந்தான்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனா கொலை வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் பல சட்டத்தரணிகளும் பல பிணையாளிகளும் பைலாவை வெளியில் எடுப்பதற்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். பிணைக்குத் தேவையான சகல பணத்துடனும் நீதிமன்ற வளாகத்தில் மதுஷவின் பல அடியாட்கள் ஒன்று சேர்ந்து வந்திருந்தனர். 50 லட்சம் ரூபாவை நீதிமன்றத்துக்கு செலுத்தி பைலாவை பிணையில் கொண்டுவர மதுஷின் சகாக்களுக்கு முடியுமாகவிருந்தது. சுமார் ஒரு வருட காலம் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்த பைலா மீண்டும் சுதந்திரமாக ஹெரோயின் வியாபாரத்தை மேற்கொள்ள முடியுமென்ற எண்ணத்துடனேயே வந்திருந்தான்.

மதுஷ் அண்ணா நீங்கள் செய்தது பாரிய உதவியாகும். என் வாழ்நாளில் நான் அதை மறக்க மாட்டேன். நீங்கள் இல்லாவிட்டால் நான் இன்னும் உள்ளேதான் இருந்திருப்பேன். என்னை வெளியில் கொண்டுவரச் செலவான பணத்தை ஒரு கிழமைக்குள் திருப்பித் தந்து விடுவேன் என மதுஷûடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தான் பைலா. சிறையிலிருந்து வந்த அன்றே ஹோமாகம பிரதேசத்தைச் சுற்றியுள்ள வியாபாரிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கப்பம் கேட்கத் தொடங்கினான். கப்பம் கேட்டது மாத்திரமன்றி அவர்களை மிரட்டவும் செய்தான். பாதுக்க பிரதேசத்திலுள்ள பெரிய வெற்றிலை வியாபாரியொருவரை தொலைபேசியில் மிரட்டி, கப்பம் தருமாறு பைலா கேட்டிருந்தான்.

முதலாளி நான் சிறைக்குச் சென்றது ஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்னால் ஒருவனை போட்டுத்தள்ளிவிட்டே. பைலா என்பவன் எந்தவித பாவ புண்ணியங்களையும் அறியாதவன். என்னை பிணையில் எடுக்க பாரிய தொகை நிதி செலவிடப்பட்டுள்ளது. அந்தத் தொகை கடனடிப்படையிலேயே பெற்றுக் கொள்ளப்பட்டது. அந்தக் கடனை மீளச் செலுத்த வேண்டும்.
நாளைக்கு 15இலட்சம் எனக்கு வேண்டும். பணம் கிடைக்காவிடில் என்ன
நடக்குமென்று உனக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை எனப் பைலா தொடர்ந்தும் வெற்றிலை முதலாளியை மிரட்டத் தொடங்கினான்.

பைலா என்பவன் ஒரு காட்டுமிராண்டி என முதலாளி நன்கு அறிந்திருந்தார். அவன் கேட்ட பணத்தை கொடுப்பதன்றி முதலாளிக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் அடுத்த நாளே பைலா கேட்ட 15 இலட்சம் ரூபாவைக் கொடுத்து விட்டான். அது தான் இன்னும் உயிர்வாழ ஆசை இருந்தமையினாலேயே ஆகும். மீகொட பிரதேசத்தில் பிரதான இடத்தில் திருமண மண்டபமொன்றை நடத்திவந்த இன்னுமொரு வியாபாரியையும் தொலைபேசி மூலம் பைலா தொடர்பு கொண்டான். அத்தொடர்பாடலில் எத்தனையோ வருடங்கள் நான் உன்னை தொடர்பு கொள்ளவில்லை. நாங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது பார்க்க யாருமில்லை, எனது பிணைக்குப் பாரிய தொகை செலவாகிவிட்டது. அந்தப் பணத்தை மீளச் செலுத்த நீங்கள் எனக்கு உதவ வேண்டும். இன்னும் 2 நாட்களில் எனது சகா ஒருவர் உன்னைச் சந்திக்க வருவார். 15 இலட்சம் ரூபாவை தயார் பண்ணிவை.. என மிரட்டினான். இவன் கேட்பதை கொடுப்பதைத் தவிர இந்த வியாபாரிக்கும் வேறு வழியில்லை. இவ்வாறு பல வியாபாரிகளிடம் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தி 1கோடிக்கும் மேற்பட்ட தொகையைச் சேர்த்துக் கொண்டான். மதுஷிடம் வாக்கு கொடுத்த மாதிரி 50 இலட்சம் ரூபாவை கொடுக்க முடிவெடுத்தான். மேலும் ஹோமாகம மற்றும் அத்துருகிரிய பிரதேசங்களை மையமாக வைத்து ஹெரோயின் விற்பனையை மேலும் மெருகூட்ட பைலா முடிவு செய்தான்.

விசேட பொலிஸ் அதிரடி படையினால் மாகந்துர மதுஷின் நண்பர்கள் பலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் ஒருபக்கம் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. மதுஷின் பாதாளக் குழு உறுப்பினர்களில் 100 க்கும் மேற்பட்டோர் இதுவரையில் நாடு பூராகவும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வண்ணமுள்ளனர். இதற்கும் மேலாக பாரியளவில் ஹெரோயின் வியாபாரத்திலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிகழ்காலத்தில் ஹெரோயினின் தந்தையாகக் கருதப்படுபவர் மாகந்துர மதுஷ் எனும் குற்றவாளியே. டுபாயைத் தனது வசிப்பிடமாகக் கொண்ட இந்த அநியாயக் காரன், நம் நாட்டில் பாதாளக் குழுவினரை ஆட்சி செய்து கொண்டு மேற்கொண்டு வரும் சட்டவிரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன.

விசேட பொலிஸ் அதிரடி படையின் கட்டளை அதிகாரி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லதீப், பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரின் முழுமையான மேற்பார்வையின் கீழ் விசேட அதிரடிப்படையினரின் புலன் விசாரணைப் பிரிவுகள் பல ஒன்றிணைந்து மதுஷின் பாதாளக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன. மதுஷின் பாதாளக் குழுக்கள் சில வடக்கில்  செயற்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் விசேட அதிரடிப்படைப் பிரிவிடம் மாட்டிக் கொண்டன. புலனாய்வுப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து செல்வதை பைலா உணர்ந்திருந்தான். யாரிடம் தப்பினாலும் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து தப்பிக்க முடியாதென்பதை பைலா மற்றும் மதுஷின் பாதாளக் குழு உறுப்பினர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

நாம் அத்துருகிரிய பிரதேசத்தில் இருந்தால் எந்த நேரத்திலும் எஸ். டி. எப். இனரால் கைது செய்யப்படலாம் என அறிந்திருந்த பைலா மற்றும் ஏனையோர் அங்கிருந்து எப்படியாவது வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டுமெனவும் திட்டமிட்டனர். பைலாவின் நெருங்கிய நண்பன் சானா. இவனும் பல்வேறுபட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவன். அங்கொட பிரதேசத்தில் பிறந்து, வளர்ந்த சானா பின்னர் அங்கொட லொக்காவின் பாதாளக் குழுவில் உறுப்பினரொருவராக சேர்ந்து கொண்டான். அங்கொட, முல்லேரியாவ, அத்துருகிரிய ஆகிய இடங்களுக்கு ஹெரோயின் கொண்டு செல்லும் பொறுப்பு சானாவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

விசேட பொலிஸ் அதிரடிப்படையினரிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் கொழும்பிலிருந்து வெளிப் பிரதேசத்துக்கு சென்றுவிட வேண்டும் என பைலா திட்டமிட்டான். எனது சகோதரர் ஒருவரின் வீடு கண்டி, வத்தேகமவில் உள்ளது. அவன் இத்தாலியில் இருக்கின்றான். அவனது வீடு பூட்டியே காணப்படுகிறது. கொஞ்ச நாட்களுக்கு வத்தேகம வீட்டில் சென்று தங்கியிருப்போம் என பைலா தனது சகாக்கள் சிலருக்குக் கூறினான். அதுவரையிலும் கண்டியிலுள்ள பிரபல பாதாளக்குழு உறுப்பினர்கள் சிலருக்கு ஹெரோயின் பங்கிடும் வேலையில் மும்முரமாகக் காணப்பட்டான். கடந்த ஒரு மாதகாலத்துக்கு முன்னர் பைலாவுடன் அங்கொட சானா, ரொஹான் சம்பத், அனுர தேசப்பிரிய, ஹர்ஷ பிரதீப் குமார ஆகிய பாதாளக் குழு உறுப்பினர்கள் சிலர் கண்டி, வத்தேகமையிலுள்ள வீட்டில் பாதுகாப்புக் கருதி தங்கியிருந்தனர். அங்கிருந்துகொண்டு தங்களது செயற்பாடுகளை மேற்கொண்டனர். மாகந்துர மதுஷின் சகாக்கள் சிலர் கண்டியில் நடமாடுவதாக விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது. கண்டி நகரைச் சுற்றி இரகசிய சுற்றிவளைப்பொன்றை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் லதீப் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கினார்.

இந்தக் குழு எவ்வேளையிலும் ஆயுதங்களுடனேயே திரியும். அதனால் எந்த நேரத்திலும் நாங்கள் தயாராகவே இருக்க வேண்டும். அவர்களை கைது
செய்யச் செல்கையில் எங்களை அவர்கள் தாக்கக் கூடும் என பொலிஸ் மா அதிபர் அறிவுரை கூறினார். அதற்கேற்ப அதிகாரிகள் திட்டமிட்டனர். கண்டி, வத்தேகம, மெனிக்ஹின்ன, மடவல ஆகிய பிரதேசங்களை சுற்றிவளைத்த விசேட அதிரடிப் படையினர், பைலா அடங்கிய குழுவினர் தங்கியிருந்த வீட்டையும் கண்டுபிடித்தனர். பாதாள உறுப்பினர்கள் மறைந்திருக்கும் வீட்டைச் சுற்றி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு தகவல்களைத் திரட்டத் திட்டமிட்டனர்.

பைலா மற்றும் சானா ஆகியோர் மோட்டார் காரொன்றில் கண்டி நோக்கி செல்ல ஆயத்தமாகின்றனர் என புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கப் பட்டது. விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர், மடவள பிரதேசத்துக்கு விரைவாக செல்லும் பாதையொன்றில் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொலிஸ் அதிரடிப்படையினர் மறைந்திருப்பதை அறியாத பைலா மற்றும் சானா ஆகியோர் மடவளை பிரதேசத்தை நோக்கிச் சென்றனர். செல்லும் வழியில் வசமாக மாட்டிக் கொண்ட இருவரும் என்ன செய்வதென்று தெரியாது திகைத்தனர். எப்படியும் இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பிலேயே இருவரும் காணப்பட்டனர். இருப்பினும் மோட்டார் கார் எவ்வழியிலும் செல்ல முடியாதவாறு வீதித் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. காரை நிறுத்திய பைலாவும் சானாவும் அதிலிருந்து வெளியே வந்தது துப்பாக்கிகளுடனேயே. பைலா கலக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான். அதுவரையிலும் விசேட அதிரடி படை அதிகாரிகள் அவர்களை சுற்றிவளைத்துவிட்டனர். துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்வதை விட வேறு வழியில்லை. பைலாவும் சானாவும் நாலா புறங்களிலும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்ல முனைந்தனர். இருப்பினும் விசேட அதிரடிப்படையினரிடமிருந்து இவர்களால் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. அதிரடியாக செயற்பட்ட அதிகாரிகள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். துப்பாக்கிப் பிரயோகத்தில் கடுங்காயங்களுக்குள்ளான பாதாளக்குழு உறுப்பினர்கள் இருவரும் உடனடியாக அதிகாரிகளால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதிகாரிகள் தாமதமடைந்துவிட்டனர். அவ்வேளையில் பாதாளக்குழு உறுப்பினர்கள் இருவரும் இவ்வுலகை விட்டுச் சென்றிருந்தனர். கூலிக்கு ஆட்களைக் கொன்று, ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேற்படி பாதாளக்குழு உறுப்பினர்கள் எத்தனையோ பொதுமக்களின் பழிச் சொல்லுக்கும் சாபக்கேடுக்கும் ஆளாகி இறுதியில் விசேட அதிரடிப்படையினரின் கடுமையான பிரயத்தனங்களுக்கு மத்தியில் மாண்டனர்.

இந்தச் சம்பவமானது ஏனைய பாதாளக்குழு உறுப்பினர்களுக்கும் கடுமையான ஒரு பாடமாகும். பாதாளக் குழுவினருக்கு எந்த மன்னிப்பும் விசேட அதிரடிப்படையினரிடம் கிடையாது என்பதை இவ்வதிகாரிகள் நிரூபித்துள்ளனர். துப்பாக்கியை கையிலெடுத்தவனுக்கு துப்பாக்கியால் தான் சாவு என்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிச் செய்யாவிடில் பாதாளக் குழுவினரின் கொட்டத்தை அடக்க முடியாமல் போய்விடும் என்பதை அதிரப்படையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக