பலுக்குவே கங்கானம்கே சாமர இந்ரஜித் ஜயசுந்தர (27 வயது) அல்லது மாளிகாதென்ன சாமர, தர்மகீர்த்தி தாரக பெரேரா விஜேயசேகர அல்லது கொஸ்கொட தாரக (வயது 26)வுடன் இணைந்து கடந்த வாரத்தில் மாத்தறை தங்காபரண கடையில் கொள்ளையிட திட்டமிட்டிருந்த நேரத்தில், தென் மாகாண பாதாளக் குழு ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த கொள்கைச் சம்பவத்தை முறியடிக்க விசேட வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். பல கொள்ளைச் சம்பவங்களுக்கும், கொலைகளுக்கும் சொந்தக்காரனான மாளிகாதென்ன சாமரவை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கே இந்த திட்டமிட்ட செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. சாமர நீர்கொழும்பு, பள்ளிய வீதியில், குபுடியாவ பிரதேசத்தில் வீடொன்றை வாங்கி தனது பாதுகாப்புக் கருதி அவ்வீட்டில் தங்கியிருப்பதாக பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் கிடைக்கப் பெற்ற நிலையில், அந்தத் தகவலை வழங்கியவர் சாமரவின் நெருங்கிய சகா எனவும் புலனாய்வுப் பிரிவினரால் பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டமைக்கமைய, பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள்
நீர்கொழும்பு, குபுடியாவ பிரதேசத்தை சுற்றிவளைக்க திட்டமிட்டது சாமரவை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே.
சாமர கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இந்த பாதுகாப்பு வீட்டுக்கு தெற்கு பாதாளக் குழு உறுப்பினர்களுடன் வருகைதர இருப்பதாக பாதுகாப்புப் பிரிவு மூலம் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்திலேயே மாத்தறை நகைக் கடை கொள்ளைச் சம்பவமும் சாமர இந்ரஜித் மாத்தறை, கிரலதென்ன பிரதேசத்தில் கொலை செய்யப்படும் சம்பவமும் இடம்பெற்றிருந்தன. தங்காபரண கொள்ளை சம்பந்தமாக 8க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் வந்திருந்ததாகவும் அவர்களில் மூவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 6கிலோவுக்கும் மேற்பட்ட தங்கத்துடன் தலைமறைவாகியிருக்கும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புப் பிரிவும், பாதாள ஒழிப்புப் பிரிவும் மேற்கொண்டுள்ளன. இந்நடவடிக்கையால் ஏற்பட்ட பிரதிபலன் என்னவெனில், பாதாளக் குழு உறுப்பினரான ஹேவா சுதுஅக்குருகே மானெல் ரோஹண திலக் (வயது 33) பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தமையாகும். நிலேகா கொள்ளை சம்பவத்துக்காக கொஸ்கொட தாரகவின் பாதாளக் குழுவின் துப்பாக்கிச் சூட்டில் மிகவும் பிரபலமான ஹபரகட வசந்த வந்திருந்ததாகவும் கொள்ளைச் சம்பவத்துக்காக இரு மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டமைக்கும் மேலாக வெள்ளை நிற காரொன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக்காரைச் செலுத்திச் சென்றவர் ஹபரகட வசந்த எனவும் பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டனர். கொஸ்கொட தாரக மற்றும் அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு கொள்ளையர்களிடம் சுமார் 8 ஆயிரத்துக்கு குறைவான பணமே காணப்பட்டிருந்தது. அதனால் தனியார் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற போதுமான பணம் இல்லாததால் கராபிட்டிய பிக்கு வைத்தியசாலைக்கருகில் அவர்களைப் போட்டுவிட்டுச் சென்றிருக்கலாமென பாதுகாப்புப் பிரிவு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையின் போது களவாடப்பட்ட தங்கமானது தெற்கு பாதாளக் குழுவின் பிரபல உறுப்பினரொருவரிடம் கைமாற்றப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்படுகிறது. தர்மகீர்த்தி தாரக பெரேரா விஜேசேகர மற்றும் அவனது சகோதரரான தர்மகீர்த்தி மதுக நிர்மால் பேரேரா, அநுராதபுரம் துடுவெவ அனுர கித்சிறி ஆகிய கைது செய்யப்பட்ட மூன்று கொள்ளையர்களும் இதுவரையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சரியான தகவலைத் தெரிவிக்காது சுற்றியுள்ளவர்கள் தங்களை சந்தேக நபர்களாகக் கருத வேண்டுமென எண்ணி தெற்கு பாதாளக் குழுவின் தலைவனாக மாகந்துர மதுஷ் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சாமர இந்ரஜித் ஜயசுந்தர பாதாளக் குழு உறுப்பினராக அறிமுகமானது, உதம்மிட்ட சமரே ( சமரே மாமா) எனும் பாதாள உறுப்பினரை கொலை செய்ததன் மூலமே. அதன்பிறகு ஏப்ரல் 21ஆம் திகதி நீர்கொழும்பு, அத்தனகல்ல பகுதியில் வைத்து மீகம ஆரச்சிகே ரத்னதேவப்பிரிய என்ற மண் வியாபாரியை கொலை செய்தது மாளிகாதென்ன சாமர என்றே சந்தேகிக்கின்றனர். உதம்மிட்ட சமரவின் கொலைக்குப் பிறகு மாகந்துர மதுஷின் கட்டளையின்படி சாமர, மாகந்துர மதுஷýக்கு சொந்தமான மண் வியாபாரியான தேவப்பிரியவுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததுடன், தேவப்பிரிய மூலம் சாமரவுக்கு ஒரு மில்லியன் ரூபா பணமும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்ததோடு, வேயன்கொட வியாபார நிலையமொன்றை ஆக்கிரமித்து வட்டிக்குப் பணம் கொடுக்கும் வேலையும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு கோணகல்தெனிய, கொட்டகஹன்திய பிரதேசத்தில் பாரிய மண்மேடொன்றை வெட்டி அகற்றும் பணியையும் தேவப்பிரியவுக்காக சாமர பொறுப்பேற்றுக் கொண்டான். சாமரவுக்கும் தேவப்பிரியவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது, தேவப்பிரியவின் பெயரைப் பயன்படுத்தி ஏனைய மண் வியாபாரிகளிடம் சாமர கப்பம் பெற்றுக் கொண்டமையாலேயாகும். இந்த முறுகலை மாகந்துர மதுஷ் தலையிட்டு தீர்த்து வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வேளை மதுஷ், சாமரவிடம் தம்பி நீ உள்ளிருக்கும் போது நாங்கள் விளையாடிய சுண்டாட்டத்தின் (கரம்) பலகையை பிடித்துக் கொண்டவன். ஏன் எனது பேச்சை கேட்க மாட்டேன் என்கிறாய். தேவப்பிரியாவை ஏன் தொந்தரவு செய்கிறாய் எனக் கேட்டுள்ளான். அதற்கு சாமர, எந்தவிதத்திலும் நான் அவருக்கு தொந்தரவு கொடுக்கவில்லை என்றே மதுஜூக்கு கூறியிருந்தான்.
எப்படியிருப்பினும் மாகந்துர மதுஷி எதிராளியும் பாதாளக் குழுவின் தலைவனுமாகிய கஜமுனி சுஜித்த சொய்சாவின் (கொஸ்கொட சுஜி) தலைமையில் இதுவரை சிறையிலடைக்கப்பட்டிருக்கும் கனேமுல்ல மாகிலங்கமுவே சஞ்ஜீவ ஊடாக பொடி லெசியின் கட்டளைப்படி மாளிகாதென்னவை தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவந்து மதுஷýக்கு
நெருக்கமான ரத்ன தேவப்பிரியவைக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கொலையின் பின்னர் மாளிகாதென்ன சாமர தனது பாதுகாப்புக் கருதி தெற்கு பிரதேசத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு பேருவளை பகுதியில் வீடொன்றில் மறைந்திருக்கும் வேளையில் தென் மாகாண பாதாளக்குழு உறுப்பினர்கள் சிலர் சாமரவுக்கு பாதுகாப்பு வழங்குவதை அனுமதிக்கவில்லை. காரணம் மாகந்துர மதுஷýக்கு ஏதாவது ஆபத்து நேரலாம் என்பதனாலேயே.
<ஆனால் கொஸ்கொட தாரக மாளிகாதென்ன சாமரவை பாதுகாத்தது தெற்க மாகாண பிரதான பாதாளக் குழு உறுப்பினர்களில் இருவரான அங்கொட லொக்கா மற்றும் லெடியாவின் தலையீட்டின் மூலம் மாகந்துர மதுஷýக்கு சாமரவை அறிமுகப்படுத்தி வைக்கும் நோக்கிலேயே. கொஸ்கொட தாரக, மதுஜூக்கு தெரிவித்ததாவது, சாமரவை தங்களது பாதாளக் குழு செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தங்களது அரவணைப்பின் கீழ் சாமரவை வைத்துக் கொள்ளுமாறும் தெரிவித்தான். அதன்பிறகே மாத்தறை நகைக் கடை கொள்ளைச் சம்பவம் திட்டமிடப்பட்டது. கொஸ்கொட தாரக மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் இருவரும் தென் மாகாண ஏனைய பாதாளக் குழு உறுப்பினர்களால் தரப்படும் தொந்தரவினால் அவர்களை (தென் மாகாண பாதாளக்குழு உறுப்பினர்களை) அங்குணுகொல பெலெஸ்ஸ சிறையில் அடைக்கும் வரை மாகந்துர மதுஷ் பின்புலமாக இருந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மாளிகாதென்ன சாமர மூலம் கடந்த சில நாட்களாகவே வேயன்கொடவுக்கு அண்மித்த சில பகுதிகளில் பாதுகாப்பு வீடுகள் நடத்தப்பட்டு வந்திருந்தன. இதன் மூலம் தெற்கு பாதாளக் குழு பிரபலங்கள் சிலருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொஸ்கொட தாரக மற்றும் அவனது குழுவினர் மீரிகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் 18 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றதன் பின்னணியில் சாமர இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கொஸ்கொட தாரக, கொஸ்கொட லொகு கொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கும் முகமாகவே லேலிஹேத்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலைகளின் பின்னர் மாளிகாதென்ன சாமரவின் பாதுகாப்பின் கீழ் சந்தேக நபர்கள் மறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு மறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் மாகிலங்கமுவ சஞ்ஜீவ, கொஸ்கொட சுஜியின் வேண்டுகோளுக்கமைய சாமரவிடம், தென் மாகாணத்துக்குள் தாரகவின் பாதுகாப்பையும் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகளையும் உடனடியாகவே நிறுத்துமாறு கூறியிருந்தான். அந்த சந்தர்ப்பத்தில் மாகிலங்கமுவ சஞ்ஜீவவின் பேச்சைக் கேட்கவில்லை. காரணம் தாரகவுடன் இருந்த நல்ல நெருக்கமான பழக்கமே. கொஸ்கொட தாரக மற்றும் கொஸ்கொட சுஜியின் பாதாளக் குழுவுக்கு அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதனால் அதிகார பலமும் அதிகமாகவே காணப்பட்டிருந்தது. இந்த இரண்டு பேரதும் குடும்ப உறுப்பினர்களான கொஸ்கொட சுஜியின் சகோதரி மற்றும் கொஸ்கொட தாரகவின் தாய் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பலபிட்டிய பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தனர். இருப்பினும் பிரதேச சபைக்குள் தங்களை உள்ளீர்த்துக் கொள்ளுமாறு கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல அரசியல் வாதிகள் இருவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைச்சர்கள் நீண்ட நாட்களாகவே கொஸ்கொட நதுன் தர்மகீர்த்தி மூலம் மேற்கொள்ளப்பட்ட தாரக மற்றும் சுஜியின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அரும்பாடு பட்டிருந்தனர் எனவும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாளிகாதென்ன சாமர தனது உதவி. ஒத்தாசைகளுக்காக கிழக்கு மாகாண பாதாளக் குழுவினரை இணைத்துக் கொண்டமையானது தனக்கு நல்லதல்ல என மாகிலங்கமுவ சஞ்ஜீவ நினைத்துக் கொண்டான். இந்த சந்தர்ப்பத்திலேயே மாகிலங்கமுவ சஞ்ஜீவ தனது குழுவிலுள்ள சிலரை சாமரவின் குழுவில் இணையுமாறு பணித்திருந்தான். தனக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் சாமரவை கொலை செய்யவே அவ்வாறு திட்டமிட்டிருந்தான்.
மாகிலங்கமுவ சஞ்ஜீவ, கொஸ்கொட சுஜியின் கட்டளையின் பேரில் கொஸ்கொட தாரகவின் மாமாவை கொலை செய்வதற்குத் தேவையான துப்பாக்கிதாரர்களை மாளிகாதென்ன சாமர ஊடாக பெற்றுக் கொண்டதாகவே தெரிவிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் பாதுகாப்புப் பிரிவினரும், பாதாளக் குழு உறுப்பினர்களும் பாரிய குழப்பத்துக்கு ஆளானது, எப்படி மாளிகாதென்ன சாமரவுக்கும் கொஸ்கொட தாரகவுக்கும் இடையே இவ்வாறான சம்பந்தமொன்று ஏற்பட்டிருக்கிறது என்ற விடயமாகும். இது பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பாதுகாப்புப் பிரிவின் பார்வை கொழும்பு பிரதேசத்தை தலைமை தாங்கும் இளைய அரசியல் வாதி மீதே பட்டுள்ளது. தங்காபரண கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கு வருகை தந்திருந்த கொள்ளையர்களின் கையில் காணப்பட்ட மினியூசி என்ற வகையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தும் 9மில்லிமீற்றர் நீளமுடைய 18 ரவைகள் கொண்ட துப்பாக்கி இவர்களின் கைக்கு வந்தது குறித்த அரசியல்வாதி மூலமா? என்ற தோரணையில் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொடிலெசி, மீட்டியாகொட ராஜு மற்றும் கரன்தெனிய சுத்தாவின் தலைமையின் கீழ் தென் மாகாண பாதாளக் குழுத் தலைவன் கொஸ்கொட சுஜி தனது பலத்தை காலி மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளில் உள்ள சந்தேக நபர்கள் மீது செலுத்தியதன் காரணமாக தாரகவின் பாதுகாப்பின் கீழிருக்கும் சந்தேகநபர்கள் அங்குணு கொலபொலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டனர். சிறைச்சாலை தகவல்களில், மாகந்துர மதுஷ் இதுவரையிலும் சிறையிலுள்ள தனது பாதாள உறுப்பினர்களிடம், கொஸ்கொட தாரக மற்றும் ஏனைய இரு சந்தேக நபர்களுக்கும் சிறைச்சாலைக்குள் பூரண பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறைவாசல் அனுபவிக்கும் தாரக, மதுக மற்றும் இல. 135, துடுவெவ, அநுராதபுரம் எனும் முகவரியைக் கொண்ட இரன்தெணி அதுல கித்சிறி குமார என்ற சந்தேகநபர்களை வரவேற்பதற்காக வேண்டி சிறையிலுள்ள பாதாளக் குழு உறுப்பினர்களால் மாகந்துர மதுஷின் வேண்டுகோளுக்கிணங்க அங்குணுகொல பெலெஸ்ஸ சிறையில் விழாவொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மாத்தறை நகைக் கொள்ளை சம்பவத்திற்கு வருகை தந்திருந்த கொள்ளைக் குழு ஒன்றினால் செலுத்திவரப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றின் உரிமையாளராக, இல - 403அ , நானதொட்ட, கொஸ்கொட என்ற முகவரியில் இருக்கும் அகம்பொடி ஜானகி பிரியந்தித சொய்னூ என்பவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் கொஸ்கொட தாரகவில் தாயாராவர். கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர். பலபிட்டிய நீதவான் இசட். டீ. எம். லியாகத் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். விசாரணையை மேற்கொண்ட நீதிவான் கடந்த 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தெற்கு மாகாண பிரபல அரசியல்வாதிகள் சிலருடன் நெருங்கிய தொடர்பை கைது செய்யப்பட்ட பெண் பேணி வந்துள்ளதுடன் 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
கொஸ்கொட தாரக கொலை மற்றும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த ஒருவனாவான். மேலும் இவனது எதிராளியான கொஸ்கொட சுஜி, தென் மாகாணத்துக்குள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. கொஸ்கொட தாரக 2011. 07. 18 ஆம் திகதி இன்னொருவருடன் இணைந்து கொஸ்கொட மக்கள் வங்கிக்குள் ஆயுதங்களுடன் உட்புகுந்து சுமார் 23 இலட்சம் ரூபா பெறுமதியான தங்காபரணங்கள் மற்றும் பாதுகாப்பு துப்பாக்கிகளை கொள்ளையடித்துவிட்டு பாதுகாப்புக் கருதி அங்கொட லொக்காவிடம் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவத்திற்குப் பின்னர் 2013. 05. 05 ஆம் திகதி மிரிஹான விசேட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தாரக, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபரான திசாநாயக்க முதியன்சலாகே மஞ்சுள திசாநாயக்க என்றவருடன் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தான். தாரக திறமையான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என்பதோடு, மஞ்சுள பாதாளக் குழுவில் திறமையான துப்பாக்கிதாரியாகக் கருதப்பட்டார்.
திசாநாயக்க முதியன்சலாகே மஞ்சுள திசாநாயக்க கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் புதையல் திருட்டில் ஈடுபட்டிருந்த வேளை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டார். தாரகவும், மஞ்சுளவும் இலங்கை இராணுவத்தின் எஸ். எப். படைப்பிரிவின் உறுப்பினர்களாவர். அங்கொட லொக்காவின் அரவணைப்பின் கீழ் மொரட்டுவ தலைமை நிறுவனமொன்றில் 150 இலட்சம் ரூபா தங்கப் பொருட்களையும், மீரிகம தனியார் வங்கியொன்றில் 18 இலட்சம் ரூபா பணத்தையும், அத்திடிய பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் 35இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்தது தாரக பெரேரா என்றே கூறப்படுகிறது. இனிமேலும் தலைமறைவாகியிருக்க முடியாது என்ற காரணத்தினால் நீதிமன்றில் முன்னிலையாகி வழக்கை எதிர்கொள்ளும் நோக்கிலேயே கொஸ்கொட தாரகவும், மாளிகாதென்ன சாமரவும் இணைந்து மாத்தறை தங்காபரண நிலையத்தில் கொள்ளையிட திட்டமிட்டிருந்ததாகவும் பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சாமர இந்ரஜித் ஜயசுந்தரவின் இறுதிக் கிரியைகள் கடந்த 28ஆம் திகதி வேயன்கொட மாளிகாதென்ன பொது மயானத்தில் இடம்பெற்றதோடு, பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். சாமரவின் மனைவியும் சகோதரனும் பல்வேறான கொலைச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாகத் தெரிவித்து சிறைவாசம் அனுபவிக்கின்ற நிலையில், சிறையதிகாரிகளின் பூரண பாதுகாப்போடு சாமரவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக