200 வருடகால வாழ்க்கைப் போராட்டத்தின் பின்பு தோட்டத் தொழிலாளர்களின் கனவு நனவாகி வருவதாக நினைத்துக் கொண்டிருப்பது தவறு என்பது போல தனிவீட்டுத் திட்டம் என்ற பெயரில் அவர்கள் ஏமாற்றத்தைச் சந்தித்து வருகின்றனர். இலங்கை அரசின் 25,000 வீட்டுத்திட்டம் மற்றும் இந்திய அரசின் 4000 வீட்டுத்திட்டம் என்பவற்றுடன் மேலதிகமாக 10000 வீட்டுத்திட்டத்துக்கான உறுதிமொழியும் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 7 பேர்சஸ் காணியுடன் காணி உரித்தோடு 12 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கப்படுவதாக உறுதியளித்தாலும் கூட நிஜத்தில் மலையக மக்கள் தரமான வீடுகளை பெற்றுக்கொள்கின்றார்களா என்பதைப்பற்றி யாரும் ஆராய்வதாகத் தெரியவில்லை.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தனிவீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வீடுகள் கையளிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்திலுள்ள ஆறாம் இலக்க லயன் அறையானது (16 காம்பிராக்கள்) முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. இந்த 16 லயன் வீடுகளில் மொத்தமாக 25 குடும்பங்கள் வசித்து வந்திருந்தன.
இவ்வாறு குடியிருப்புக்கள் தீக்கிரையானதினால் பாதிக்கப்பட்ட மக்கள் தகரங்களால் மறைக்கப்பட்ட கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு மின்சாரம், குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சுக்கு கீழாக பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கும் பணி பிரவுன்ஸ்விக் பிரஜாசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும் அண்மையில் உள்ள நிலப்பகுதியில் அமைக்கப்பட்டு ஒன்றரை வருடம் கடந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மேமாதம் 28 ஆம் திகதி பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்தது.
இவ்வீட்டுத்திட்டம் ஆரம்பித்தது முதல் தற்போது கையளிக்கப்பட்டு 10 மாதங்கள் கடக்கின்ற நிலையிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பயனாளிகள் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்பட்டிருந்தது. ஆனால் வழங்கப்பட்டுள்ள வீடுகள் தரமற்றவையாகவும் ஒதுக்கப்பட்ட தொகைக்கு பெறுமதியானதாகவும் இல்லை. முழுமையாக வேலைகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை. அதை விடவும் முக்கியமாக மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் இதுவரை காலமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் இங்கு குழந்தைகளுடன் வசிப்போரும் முதியோரும் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இவர்களுக்கான குடிநீர் தற்காலிக பவுசர்கள் மூலமே வழங்கப்பட்டு வருகின்றன. அதுவும் 10 நாட்களுக்கு ஒருமுறையே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 18,000 ரூபா செலுத்தினால் மாத்திரமே மின்சாரம் வழங்கப்படுமென கூறப்பட்டிருக்கிறது. மின்சாரம் இல்லாததன் காரணமாக காலையில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் சீருடைகளை தயார்படுத்தவும் இரவு வேளைகளில் பிள்ளைகள் படிக்கவும் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் இல்லாத நிலையில் இருளில் மூழ்கிக் கிடக்கும் தனிவீட்டுத் திட்டமானது எப்போது வெளிச்சம் காணுமென்பது தெரியாத நிலையில் இருக்கின்றது. இதை விடவும் மோசமான மற்றும் ஆபத்தான நிலையினை இங்கு வசிப்பவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட தனிவீடுகளின் சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் தரைப்பகுதியும் பாரிய வெடிப்புக்களினால் தாழிறங்குவதை அவதானிக்க முடிந்தது. அத்தோடு இத்தனி வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சமையலறை மற்றும் தனியறை என்பன முழுமையான பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை. அறைகளுக்கான கதவுகள், சீலிங் (Celing) என்பன பொருத்தப்படவில்லை.
இவ்வாறானதொரு சூழலில் தனிவீட்டுத் திட்டம் காணப்படும் நிலையில் இவற்றை தரமான மற்றும் பாதுகாப்பான வீடமைப்பு என்று எவ்வாறு கருதமுடியும். இவ்வீடுகளை அமைக்க 5 லட்சம் ரூபா கூட செலவாகாது என பயனாளிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறெனில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகைக்கும் என்னவானது. இவ்வாறு தரமற்ற வீடுகளை அங்கீகரித்தது யார்?கட்டுமாணப் பணிகளை மேற்கொண்டது யார்? என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வீட்டுத்திட்ட திறப்புவிழாவுக்கு வருகை தந்திருந்த அமைச்சர் திகாம்பரம் நாடாவை வெட்டி விட்டு சென்று விட்டதாகவும் வீடுகளுக்குள் சென்று அதன் நிலைமைகளை அவதானிக்கவில்லையெனவும் இங்குள்ள மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.
இவ்வீட்டுத் திட்டங்களுக்கு இடைத் தரகர்களாக செயற்படுபவர்களே இவ்வாறான தரமற்ற வீடுகள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றார்கள். இவ்வீட்டுத் திட்டத்துக்கு அரசாங்கங்கத்தால் ஒதுக்கப்பட்ட முழுத் தொகையும் செலவளிக்கப்படவில்லை. ஆனால் மேலதிகமாக பயனாளிகளிடமிருந்து பெருந்தொகையான பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவை தொடர்பான விடயங்களை வெளியிடும் பட்சத்தில் நாம் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவோம் என்ற அச்சத்தில் இங்குள்ள மக்கள் இருக்கின்றனர்.
இவ்வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா முதல் திறப்பு விழா வரை. பணம் வசூலிக்கப்பட்டிருப்பதோடு உடல் உழைப்பும் சுரண்டப்பட்டிருந்தது. அடிக்கல் நாட்டு விழாவின் போது ஒவ்வொரு குடும்பத்தினரிடமிருந்தும் 1000 ரூபா பெறப்பட்டதுடன் வீட்டு நிர்மாணத்தின் போது தளம் வெட்டுவதற்காக 8000 ரூபாவும் மலசலகூட குழி வெட்டுவதற்காக 7000 ரூபாவும் வீடுகளுக்கு கல் நாட்டுவதற்காக 2200 ரூபாவும் நிலை நாட்டுவதற்காக 2000 ரூபாவும் பயனாளிகளினால் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவு செலவுகளையும் இழப்புகளையும் சந்தித்து முழுமையான தரமான வீட்டை பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையினை பயனாளிகள் சந்தித்துள்ளனர்.
இதுவொரு ஆரம்பமாகவே இருக்கின்றது. இன்னும் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் மற்றும் கட்டப்படவிருக்கின்ற வீட்டுத்திட்டங்கள் எந்தத் தரத்தில் இருக்கின்றன, இருக்கப் போகின்றன என்பது தொடர்பான ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ’பசுமை பூமி’ என்ற வகையில் கையளிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 7 பேர்சஸ் என்றளவில் த லா ஒவ்வொரு வீடுகளுக்குமான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால்
அந்த ஏழு பேர்சஸ் காணி ஒவ்வொரு வீடுகளுக்கும் அளந்து கொடுக்கப்படவில்லை என்பதுடன் அதற்கான எல்லைகளும் அமைக்கப்படவில்லை.
இதனால் பயனாளிகள் தங்களது காணிகளை அடையாளம் கண்டுகொள்வதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர். எனவே மலையக மக்களுக்காக வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தினை கண்காணிப்பதற்கு மத்திய அரசினால் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். அப்போதே
நடுநிலைமையாக வீட்டுத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும். இல்லையெனில் ஊழல் மோசடிகள் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. அல்லது வீடமைப்பு உட்பட மேற்கொள்ளப்படவுள்ள சகல அபிவிருத்திகளையும் மேற்கொள்ள உருவாக்கப்படவுள்ள மலையக அபிவிருத்தி அதிகாரசபையானது மத்திய அரசின் பிரதிநிதிகளை அல்லது கண்காணிப்பினை கொண்டிருக்க வேண்டும். இல்லையாயின் தான்தோன்றித் தனமாக செயற்படக் கூடிய நிலை உருவாகும்.
தற்போது மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது அவர்களது பிரதிநிதிகளோ கண்காணிக்காத நிலை காணப்படுவதாலேயே இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழுகின்றன. தற்போது மலைநாட்டு புதியகிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் 2016 ஆம் ஆண்டு 2835 வீடுகளும் 2017 ஆம் ஆண்டு 2535 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மலையக மக்கள் வாழ்கின்ற நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை, குருநாகல் போன்ற பகுதிகளிலும் இவ்வாறான வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெருந்தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக 6000 குடியிருப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களுக்கு முன்னுரிமை அடிப்டையில் வீடமைப்புத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டுக்குப் பின் வழங்கப்பட்ட இந்திய அரசின் 4000 வீடமைப்புத்திட்டமானது நுவரெலியா - 1316, கண்டி - 400, மாத்தளை - 30, பதுளை - 700, மொனராகலை - 150 என்றடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை இந்திய அரசின் 10, 000 வீட்டுத் திட்டமானது நுவரெலியா - 4850, பதுளை - 1150, கண்டி - 1100, மாத்தளை - 450, மொனராகலை - 200, கேகாலை - 700, இரத்தினபுரி - 750, காலி - 100, மாத்தறை - 100, களுத்துறை - 250, குருநாகல் - 200, கொழும்பு - 150 என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே இவ்வாறு மலையக மக்களுக்காக உருவாக்கப்படுகின்ற வீட்டுத்திட்டங்கள் அவர்களுக்கு தரமானதாக கிடைக்கப்பெற வேண்டுமென்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு. ஆனால் தரமற்ற வகையிலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் வழங்கப்படாமலும் வீடமைப்புத் திட்டங்கள் காணப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவை தொடர்பாக உடனடியாக ஆராயப்பட வேண்டும். இவ்வீட்டுத்திட்டங்கள் மலையக மக்களுக்கான உரிமை. அந்த உரிமையை எவரும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது. எனவே இவை தொடர்பில் கவனம் செலுத்தப்படாவிட்டால் தனிவீட்டுத் திட்டம் ஏமாற்று வேலையாகவே அமையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக