கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

27 பிப்ரவரி, 2018

ஆபாச விடுதிகளாகும் ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள்



க.பிரசன்னா
  • 1961 ஆம் இலக்கம் 31 இன் 10 ஆம் விதிப்படி ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்று பதிவு செய்யப்பட வேண்டிய முறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு சுகாதார நிலையம், ஆயுர்வேத ஔடத நிலையம், ஆயுர்வேத ஔடத தயாரிப்பு நிலையம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் களஞ்சிய அறையொன்று இருப்பதும் கட்டாயமானதாகும்.
  • மேலும் 64 ஆம் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியரொருவரின்றி வைத்தியர் என்ற போர்வையில் எவராவது இருப்பாராயின் அதுவும் குற்றமாகும்.
  • 69 ஆம் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத ஔடத தயாரிப்பாளர் மற்றும் ஆயுர்வேத உதவி சேவையாளரல்லாத ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தையை பிரயோகிப்பதும் குற்றமாகக் கருதப்படுகிறது.
  • 79 ஆம் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலையமொன்று அதன்கீழ் நடைபெறும் தவறுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும். 89 ஆம் பரப்புரையில் இத்தவறுகளுக்கான தண்டப்பணம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 1889 இலக்கம் 5 என்ற பரப்புரை விபசார விடுதி பற்றி குறிப்பிடுகிறது. அதாவது விபசார விடுதியொன்றை நடத்திச் செல்லல், அதற்கு ஒத்துழைப்பு வழங்குதல், குறித்த கட்டிடத்தை குத்தகைக்கு கொடுத்தல் என்பன பாரிய குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இவ்வாறான குற்றங்களை காணுமிடத்தோ கேட்குமிடத்தோ குற்ற விசாரணைப் பிரிவின் இலக்கமான 0112451397 என்ற இலக்கத்திற்கோ அல்லது 0382234314 என்ற இலக்கத்துக்கோ உரிய நகர பொலிஸாருக்கு தகவல் கொடுக்க முடியும்.
பூக்கள் நிறைந்த நீர் தொட்டியில் இறங்கியிருக்கும் அழகான பெண்ணொருவரின் உருவத்துக்கு கீழ் ஆயுர்வதே சிகிச்சையின் மூலம் அழகுபடுத்த முடியுமென்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பதமானது அழகுற நினைக்கும் சகலரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து தெற்கு வரையிலான இலங்கையின் சகல பிரதான நகரங்களிலும் இவ்வாறான காட்சிப் பலகைகளை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. ஆயுர்வேத சிகிச்சை நிலையம் அல்லது ஸ்பா என்ற போர்வையில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி நிறுவனங்களில் எண்ணெய், மருந்து மற்றும் இயற்கைப் பொருட்களில் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக பார்ப்போரின் கண்ணுக்குத் தோன்றலாம். இதற்குக் காரணம் இப்பெயர்களால் ஒன்றிணைந்த இதிகாசப் புராணங்களாகும். அப்படியானால் ஆயுர்வேதத்தின் போது பூமொட்டுகள், வாசனைத் திரவியங்கள், எண்ணெய் வகை, பழச்சாறு, தேன், தங்கம், வெள்ளி என முலாம் பூசப்பட்ட தெப்பம் போன்ற தண்ணீர் தொட்டியில் பெண்களை இறக்கி மேனி அழகுற சிகிச்சை செய்வதே உண்மையான ஆயுர்வேத சிகிச்சையாகும்.

அது சம்பந்தமாக தேடிப்பார்க்கும்போது எமக்குக் கிடைப்பது பேரழகி கிளியோப்பட்ராவின் சுயசரிதையாகும். அப்படியானால் இப்பேரழகி தனது மேனியை அழகுறச் செய்வதற்கு தங்கம் மற்றும் பால் கலந்த தண்ணீரில் இறங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டமையே காரணமென புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே மகாராணிகள் ராஜாக்களிடம் செல்வதற்கு முன்னர் மேற்படி ஸ்பா தோணியில் வாசனைத் திரவியங்கள் மற்றும் எண்ணெய் வகைகளைப் போட்டு குளித்துவிட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆரம்பகாலம் முதல் தொட்டே ராஜாக்களும் ராணிகளும் தேசிய ஔடதங்களின் மூலம் தங்களது மேனியை அழகுபடுத்திக் கொண்டனர் என்பது வரலாறு.

ஆயுர்வேத சிகிச்சை முறை இவ்வாறிருக்க, இன்று எல்லோரிடத்திலும் பிரசித்திபெற்ற ஸ்பா முறையிலும் ருசியான இதிகாசக் கதைகள் உண்டு. பெல்ஜியம் நாட்டில் ஸ்பா என்ற நகரமொன்றுள்ளது. அதன்படியே ஸ்பா என்ற சொல்லும் வெளிச்சத்துக்கு வந்தது. அப்படியாயின் ஸ்பா என்பது ஔடதம் என்பதை குறித்து நிற்கிறது. அதற்கிணங்க தண்ணீரில் கிடைக்கும் சுகாதாரம் என அர்த்தப்படும். அவ்வாறே குச்டூதண் கஞுணூ அணுதச்ண என்ற மூன்று சொற்களின் முதல் எழுத்தைக் கொண்ட குகஅ (ஸ்பா) என்ற பதம் உருவானது.

இவ்வாறான முறையில் அறியப்பட்ட ஸ்பாவானது, தேசிய ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி முறைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளுடன் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின் அன்று இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்த மற்றும் மேனியை அழகாக வைத்திருக்க மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையானது மாறி இன்று அப்பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவது பாலியல் ரீதியான சிகிச்சையே. நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கடற்கரையோரங்கள் என்பன சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாப் பிரதேசங்களாக விசேடமாகக் காணப்படுகின்றன. இவ்விடங்கள் சுற்றுலாப் பயணிகளால் பரவிக் காணப்படுகின்றன. இவ்வாறான இடங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்செயலுக்கு நிறைய அரச நிறுவனங்களும் ஊடகங்களும் துணைபோவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்கு குறைந்த பெண்கள், இளைஞர்களே மேற்படி நிறுவனங்களில் சேவை புரிகின்றனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தெரபிஸ்டுகளாக சேவை செய்யும் இவர்களின் சேவைக்கு 1,000 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை பெற்றுக் கொள்கின்றனர். இந் நிலையங்கள் அரச வைத்தியர்களின் கீழ் அனுமதி பெற்றவைகளாகும். அங்கு உதவி வைத்தியரொருவரும் காணப்படுகின்றார்.

அங்கு காணப்படும் ஒவ்வொரு அறைகளிலும் எண்ணெய் மற்றும் மருந்துப் பொருட்கள் காணப்படுகின்றன. இங்கு வேலை செய்யும் தெரபிஸ்டுகள் எல்லோரும் ஒரே மாதிரியான உடைகளையே அணிந்திருப்பர். வெளியில் இருந்து பார்க்கும் ஒவ்வொருவருக்கும், இந்நிலையத்தில் சுகாதாரமான முறையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவே தெரியும்.

2017 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனற போர்வையில் விபசார விடுதியொன்றை நடத்திச் சென்ற பெண்ணுக்கு மீகமுவ நீதிமன்றம் 12,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டது. 2017 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி அநுராதபுரம் நகரத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மசாஜ் கிளினிக் ஒன்று நடத்திச் செல்லப்பட்டது. அதுமாத்திரமன்றி தகுதியில்லாத 15 தெரபிஸ்டுகளைக் கொண்டு அந்நிலையம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பின் 15 பேரும் கைது செய்யப்பட்டனர். அவ்வாறே பொசன் போயாவுக்கு அண்மித்த ஒரு தினத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக நடத்திச் செல்லப்பட்ட 14 நிலையங்கள் அநுராதபுரம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளன. அத்துடன் அங்கு கடமையிலிருந்த 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஜூன் 7 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத வைத்தியரின்றி நிலையத்தை நடத்திச் சென்ற குற்றத்துக்காக மீகமுவ நீதவான் நீதிமன்ற நீதவானால் தலா 13,000 ரூபா வீதம் 14 பெண்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறே கடந்த ஜூலை 12 ஆம் திகதி தலவத்துகொட பிரதேசத்தில் இவ்வாறு நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டு நிலைய உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இங்கு பாதுக்க, தம்புள்ள, பண்டாரகம, பசறை, கலேவல, வத்தேகம, அப்புத்தளை, ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேசங்களில் உள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத 20 -36 வயதுடையோரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் செப்டெம்பர் 11 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வதே மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், ஆயுர்வேத வைத்தியரொருவர் உட்பட 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர். இவற்றை விட பன்னிப்பிட்டிய, பம்பலப்பிட்டிய ஆகிய இடங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத விபசார விடுதியை முற்றுகையிட்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

2017 ஆம் ஆண்டின் இறுதி சில தினங்களுக்கு முன்னர் நாவல வோல்டர் குணசேகர மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பு பகுதி வீடொன்றில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபசார வீடொன்றை மிரிஹான குற்றத்தடுப்புப் பொலிஸார் சுற்றிவளைத்து சம்பந்தப்பட்ட 18 பெண்களை கைது செய்தனர். இக்கைதுகளானவை 2017 ஆம் ஆண்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சில சுற்றிவளைப்புகளாகும். இத்தகவல்களின் பிரகாரம் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் அதிக நிலையங்கள் விபசார விடுதிகளாகவே செயற்படுகின்றன என்பது புலனாகின்றது. இது தொடர்பாக மேலும் பல தகவல்களை பெற்றுக்கொள்ளவென குறித்த ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களில் வேலைசெய்த யுவதிகள் சிலரிடம் வினவிய போது அவர்கள் வழங்கிய தகவல்கள் பின்வருமாறு;

அவள் 24 வயதுடைய திருமணமாகாத யுவதி. நான் அவளிடம் முதலாவதாக கேட்ட கேள்வியே, உண்மையாகவே இந்த மசாஜ் நிலையங்களில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றதா என்றே. அதற்கு அவள் வழங்கிய பதில் வருமாறு, ஒரு சில நிலையங்களில் இவ்வாறு நடைபெற வாய்ப்புண்டு. இருப்பினும் எனக்கு தெரிந்தவகையில் பெரும்பாலும் அவ்வாறு நடப்பதில்லை. ஆனாலும் அவ்வாறான இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியரொருவரும் இருப்பார். அவருக்கு உப உதவியாளரொருவரும் இருப்பார்.

வைத்தியர் அவருக்கான தனி அறையிலேயே இருப்பார். அவரது உதவியாளரே சகலவிதமான வேலைகளையும் செய்வார். நிலையத்தின் சொந்தக்காரரை எமக்குத் தெரியாது. ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான போதிய பயிற்சி எங்களிடம் இல்லை. ஆனாலும் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என காட்டிக் கொள்வதற்கான தேவையான சான்றிதழ்கள் எம்மிடம் இருக்கின்றன. எண்ணெய், மருந்து வகைகள் எம்மிடம் உள்ளன. நாங்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை. அவற்றை எங்களுக்கு பயன்படுத்தத் தெரியாது. இவ்விடத்துக்கு இளைஞர்கள், வயது போனவர்கள், வேலைக்குச் செல்பவர்களே அதிகமாக வருவர். காலை வேளையில் பாடசாலைக்குச் செல்லும் இளைய ஆண் மாணவர்களே அதிகம் வருவர். வேலைக்குப் போகிறவர்கள் மாலை வேளைகளிலேயே அதிகம் வருவர்.

நாங்கள் இந்த இடத்தில் பாலியல் ரீதியாக செயற்படுவதில்லை. மசாஜ் மூலம் சிகிச்சையொன்றையே பெற்றுக் கொடுப்போம். இங்கு வரும் சிலரை வெளியிலும் சந்திக்க நேரிடுகிறது. தொடர்ந்து இங்கு வந்து பழக்கப்பட்டவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்களை விலை பேசுவார்கள். புதிதாக யாரும் வந்தால் எங்களை வரிசையாக நிறுத்தி விருப்பமானவரை தேர்ந்தெடுக்கச் சொல்வார்கள். நானென்றால் இங்கு மட்டும் சேவை செய்கிறேன். காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இருக்க முடியும். எங்களோடு வேலை செய்யும் சில அக்காமார் திருமணம் முடித்து பிள்ளைகளும் உள்ளவர்கள். சிலர் திருமணம் முடிக்கப் போகிறவர்கள். இவர்களில் சிலர் வேறு வேலைகள் செய்பவர்கள். மேலதிக வேலைக்காகவே சிலர் இத்தொழிலை செய்கின்றனர். அவள் மேற்படி தெரிவித்துக் கொண்டு செல்லும் போது, கிடைக்கும் பணத்தைப் பற்றிக் கேட்டேன். குறிப்பிட்ட சேவை நிலையத்துக்கு 1,500 ரூபாவும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 1,000 ரூபாவும் கிடைப்பதாக அவள் தெரிவித்தாள். அவ்வாறு பணத்தை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு ஒருமணிநேரமே சேவை கிடைக்கும்.

இங்கு சிங்களம், தமிழ் மற்றும் தாய்லாந்து பெண்களே அதிகமாக சேவை செய்கின்றனர். இவர்களுக்கான செலவு அனைத்தையும் அந்நிலையமே மேற்கொள்கின்றது. நிலையத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நிலையத்தால் ஒரு தொகை பணம் அறவிடப்படும் அதேவேளை நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அவர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படும். மேலும் ஒரு யுவதி கூறுகையில் ; வரும் வாடிக்கையாளர் வரவேற்பறையில் 10,000 ரூபாவை செலுத்தி தனக்கு விருப்பமான பெண்ணை தேர்வு செய்ய முடியும். குறித்த வாடிக்கையாளர் அறைக்குச் சென்றதும் முதலில் கால், நகங்கள், கைகள் மற்றும் பல் என்பவற்றை சுத்தம் செய்வோம். அதன்பிறகு வாசனைத் திரவியங்கள் கொண்ட தெப்பத்தில் இறக்கி உடம்பை சுத்தம் செய்வோம். அதன்பிறகு உடம்பை துடைத்துவிட்டு முழுவதும் எண்ணெய் தேய்ப்போம். அதன்பிறகு தலைமுடியை வாரிவிட்டு எல்லா ஆயத்தங்களையும் மேற்கொள்வோம். இவை எல்லாம் இவர் முதலில் செலுத்திய 10,000 ரூபாவுக்கே. அதற்கப்பால் வேறு எந்த செயலும் செயற்படுத்தப்படாது. இந்த முறையில் சேவையை பெற்றுக்கொள்ளும் சிலர் அச் செயற்பாடுகளுடன் நிறுத்திக் கொள்வர். சிலர் வேறு செயல்களுக்கான யோசனைகளையும் கொண்டிருப்பர். எங்களிடம் பெண் தெரபிஸ்டுகளைப் போல் ஆண் தெரபிஸ்டுகளும் உள்ளனர். வசதியான இடத்திலுள்ள வயது போன பெண்கள், வெளிநாட்டுப் பெண்கள் என்போர் அதிகமாக விரும்புவது இளைய ஆண் தெரபிஸ்டுகளையே.

யுவதிகளிடம் பெரும்பாலும் சிகிச்சை பெற்றுக்கொள்வது இளவயது ஆண்களும் (மாணவர்கள்) இளைஞர்களுமே. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான தெரபிஸ்டுகளை தொடர்புகளை ஏற்படுத்தி முற்பதிவு செய்யும் விதிமுறையும் உண்டு. 2015 ஆம் ஆண்டு வரை ஆயுர்வேத திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை 135 க்கும் குறைவாகும். அவ்வாறே பயிற்சி பெற்ற தெரபிஸ்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,000 ஆகும். இருப்பினும் இன்றுவரை இலங்கை பூராகவும் விஸ்தரிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களும் அங்கு சேவை செய்வோரின் தொகையும் பாரியளவிலானவை.

எனவே இவ்வாறான நிலையங்களுக்குச் செல்லும் மாணவரின் எண்ணிக்கையானது மிகப்பெரிய தொகையாகும். ஏன் அவர்கள் அங்கு செல்கிறார்கள்? திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருமணம் முடித்து பிள்ளைகள் கொண்ட தாய்மார் ஏன் இவ்வாறான இடங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர்? இளைய ஆண் பிள்ளைகள் ஏன் இவ்வாறான இடங்களுக்குச் செல்கிறார்கள்? இவற்றுக்கெல்லாம் காரணம் வேலையில்லாப் பிரச்சினையும் அதிக தொகை பணம் கிடைப்பதுமேயாகும். இவையெல்லாம் விவாகரத்து, குடும்பத்தில் சண்டை, தொற்றுநோய்கள் மற்றும் இன்ன பிற பிரச்சினைகளிலேயே கொண்டு சென்றுவிடுகின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவு காண வேண்டுமாயின் சட்டரீதியாக தண்டனை பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக