‘மகனே... அம்மா இன்னொரு தங்கச்சியை கொண்டுவரவே ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். மகன் தங்கச்சியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீதான் இப்போது குடும்பத்தில் மூத்தவன்...’
‘சரிப்பா... நான் தங்கச்சியையும் அப்பாவையும் குடும்பத்திலுள்ள எல்லோரையும் பார்த்துக் கொள்கிறேன்...’
எனது தங்க மகன் உனக்கு கடவுள் துணை ! இன்று இரவு அப்பா நேர காலத்துடன் வீட்டுக்கு வருகிறேன். வந்ததும் நாம் அம்மாவையும் தங்கையையும் பார்க்க வைத்தியசாலைக்குச் செல்வோம்...’
தம்மிக்க அவ்வாறு கூறியது தனது மூத்த மகனான நவீன் பண்டாரவுக்கு, தம்மிக்க புகையிரதத் திணைக்களத்தில் நிர்மாண வடிவமைப்பாளராக ரத்மலான புகையிரதப் பிரிவில் வேலை செய்கிறார். அவர் களுத்துறை வடக்கு, உக்கல்பட மல்வத்த சந்தியில் வசித்து வருகிறார். கடந்த 5 ஆம் திகதி அன்று தம்மிக்கவுக்கு விசேடமான நாள். தனது மனைவியான கீதமாலி தங்களது 3 ஆவது குழந்தையை பிரசவிப்பதற்கு அன்றைய தினமே திகதி வழங்கப்பட்டிருந்தது. தம்மிக்க இயல்பாகவே நல்ல குணமுள்ள மனிதர். ஈ, எறும்புக்குக்குக்கூட துரோகம் நினைக்காதவர். அதுமாத்திரமன்றி குடும்ப உறவினர்களினதும் நண்பர்களினதும் சமூகத்தினதும் அன்பை வென்ற ஒருவராகவும் திகழ்கிறார். அன்பாக மனைவியிடமும் இரு பிள்ளைகளிடமும் அவர் காட்டிய பாசத்துக்கு இணையே இல்லை.
குழந்தை பிரசவிப்பதற்காக நியமிக்கப்பட்ட தினத்துக்கு முதல் நாள் தம்மிக்க தனது மனைவியை களுத்துறை நாகொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தான். அதுமட்டுமின்றி அவளுக்கு தேவைப்பட்ட அனைத்தையும் குறையில்லாது பெற்றுக் கொடுத்திருந்தான். குழந்தை பிரசவிக்க நியமிக்கப்பட்ட திகதி கடந்த 5 ஆம் திகதியாகும். அன்று காலை வைத்தியசாலைக்குச் சென்று தனது அன்பு மனைவியை பார்வையிட்ட அவன், வேலைக்குச் சென்றுவிட்டு சீக்கிரம் மறுபடியும் வந்து பார்ப்பதாக வாக்குறுதியளித்துவிட்டே சென்றான். அன்று பகல் தம்மிக்கவின் மனைவி சிசேரியன் மூலம் மகளொன்றை பெற்றெடுத்தாள். அது பற்றி உறவினர்கள் தம்மிக்கவுக்கு தெரிவித்தனர் . அந்த இனிப்பான செய்தியைக் கேட்டதிலிருந்து அவனால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. எப்போது தனது அன்பு மனைவியையும் தனது குடும்பத்துக்கு புதிதாக வந்த உறவையும் பார்க்கப் போகிறோம் என ஆவலாய் இருந்தான். ரத்மலான புகையிரதப் பிரிவில் தமது நண்பர்களிடம் ‘நான் இன்று சீக்கிரம் வீடு செல்ல வேண்டும். எனது மனைவி அழகான மகளை பெற்றெடுத்துள்ளாள் . எனக்கு அவளை பார்க்கும் வரைக்கும் நிம்மதியில்லை’ என்று தெரிவித்தான். அடிக்கடி கடிகாரத்தில் அவன் நேரத்தைப் பார்த்துக் கொண்டான். அந்த நேரம் மெதுவாகவே நகர்கின்றதை அவனால் உணர முடிந்தது. அந்தளவிற்கு அவன் பொறுமையிழந்து இருந்தான். காரணம் தனது புதிய உதயத்தைப் பார்க்கச் செல்வதற்கு. ரவீன் உதேஷ திருமணமானவர். மனைவி மற்றும் பிள்ளைகளுடன் களுத்துறை தெற்கு நகரசபை வீட்டுத் தொகுதியிலேயே அவர் வசித்து வந்தார். அவரும் புகையிரதத் திணைக்களத்திலேயே சேவை புரிகின்றார். தம்மிக்கவின் நல்ல நண்பனும் கூட. ரவீனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளார்கள். மனைவி வீட்டில் இருப்பதால் அனுதினமும் தனது மனைவியிடம் அவன் சொல்வது, ‘பணத்தை நான் சம்பாதித்துத் தருகிறேன் நீ எந்த நேரத்திலும் இரு பிள்ளைகளையும் பற்றி தேடியறிந்து கொண்டு அவர்களுக்கு நல்ல கல்வியறிவைப் புகட்ட வேண்டும்’ என்றே. தனது மகனிடமும் மகளிடமும் வித்தியாசமான பாசத்தை அவன் காட்டினார். தேவையேற்படின் மட்டுமே அவர் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டு வெளியில் தங்குவார். மற்றும்படி இரவுப் பொழுதை அவர் தனியே கழித்ததேயில்லை. எந்நாளும் வேலை முடிந்து வீடு வரும்போது தனது பிள்ளைகளுக்காக ஏதாவதொன்றை வாங்கி வருவார். குடிப்பழக்கமோ, சிகரெட் பாவனையோ அவரிடம் கிடையாது. அவை இருக்கும் இடத்தில் நொடிப்பொழுதேனும் அவர் நிற்கமாட்டார். இருப்பினும் அவர் ஒரு சமூக சேவையாளர். பிரதேச விளையாட்டுக்குழு உறுப்பினரான அவர், சிவில் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினருமாவார்.
கடந்த 5 ஆம் திகதி காலை அவர் உற்சாகத்துடன் வீட்டை விட்டு வெளியேறியது வேலைக்குச் செல்வதற்காகவே. அப்படிச் செல்வதற்கு முன் அன்புக்குரிய பிள்ளைகளைப் பார்த்து ‘நான் இன்று மாலை வீட்டுக்கு வரும் போது நீங்கள் இதுவரைக்கும் சாப்பிடாத ஒன்றை வாங்கி வருவேன்’ என தெரிவித்துள்ளார். அன்று அவரின் பிள்ளைகள் இருவரும் பொறுமையிழந்தே காணப்பட்டனர். பாடசாலை விட்டு வந்த பின்னர் அப்பா என்ன கொண்டுவருவார் என்பது பற்றியே கதைத்துக் கொண்டிருந்தனர். அம்மா மற்றும் அப்பா வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது பிள்ளைகள் அவர்கள் என்ன கொண்டுவருவார்கள் என்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பர். குறைந்தது டொபி ஒன்றையாவது வாங்கி வருவார்கள் என்றே காத்துக் கொண்டிருப்பர். பெற்றோர் நாளொன்றில் பல மணித்தியாலங்கள் தங்களது தொழிலிலேயே இருக்கின்றனர். அந்நேரத்தில் பிள்ளைகளினதும் பெற்றோரினதும் உறவு விரிசலடைகிறது. இருப்பினும் வேலை முடிந்து வீடு வரும்போது தமது அன்புச் செல்வங்களுக்கு ஏதாவதொன்றை வாங்கி வந்து கொடுத்து அந்த உறவை பலப்படுத்திக் கொள்வர். அதிலேயே பெற்றோரின் சந்தோஷமும் அடங்கியுள்ளது. அதுவே அவர்களின் ஆசையும் கூட.
தங்களது வேலையை முடித்துக் கொண்ட தம்மிக்க மற்றும் ரவீன் ஆகியோர் ரத்மலான புகையிரத நிலையத்துக்கு வந்தனர். அது கூடிய விரைவில் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலிலேயே . இதில் அதிக ஆர்வம் இருந்தது தம்மிக்கவுக்கே காரணம் தனது புதிய மொட்டை பார்க்க வேண்டும் என்னும் ஆவலே. அன்று மற்றைய நாட்களைவிட அதிக மக்கள் புகையிரத நிலையத்தில் காத்து நின்றனர். கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் புகையிரதம் அந்த இடத்தை நெருக்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவ்வேளையில் காத்து நின்ற மக்கள் ரயிலில் ஏறுவதற்கு முண்டியடித்துக் கொண்டு தயாராகினர். தம்மிக்க மற்றும் ரவீனும் அந்த நெருக்கடியில் நின்றிருந்தனர். அறிவித்தல் விடுத்து 2, 3 நிமிடத்திலேயே ரயில் ரத்மலான நிலையத்தை நோக்கி வந்தது. அந்த நேரமே ரயில் மக்களால் நிரம்பிக் காணப்பட்டது. அங்கு நின்றிருந்த மக்களும் முண்டியடித்துக் கொண்டு ஒருவரையொருவர் தள்ளிவிட்டு ரயிலில் ஏறத் தொடங்கினர். தம்மிக்கவும் ரவீனும் அவ்வாறே ஏறத் திணறடித்துக் கொண்டிருந்தனர். ரயிலின் உட்புறம் சன நெரிசலில் நிரம்பி வழிந்தது. அதனால், தம்மிக்க, ரவீன் மற்றும் சிலருக்கு ரயிலினுள்ளே ஏற முடியாமல் போனது. அதனால் இவர்கள் ரயிலின் மிதிபலகையில் பயணம் செய்தனர். புகையிரதம் மிக வேகமாக களுத்துறை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தது. நேரம் மாலை 4.45 மணியிருக்கும். அதுவரை ரயில் ரத்மலானவை தாண்டி லுனாவ பிரதேசத்துக்குள் நுழைந்திருந்தது. தம்மிக்க மற்றும் ஏனையோர் மிதிபலகையில் பயணம் செய்வது ஆசைக்காக அல்ல. மாறாக வேறு வழியின்றியே அதில் பயணம் செய்தனர். 5 நிமிடம் அல்லது அதற்கு முன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாகும். அது தங்களது எல்லா சந்தோசங்களும் நிரம்பியிருப்பது வீட்டில் என்பதாலேயேயாகும். மரண ஊர்வலமொன்று அந்த நேரத்தில் லுனாவ பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அது புகையிரத பாதை அருகில் இருக்கும் குறுக்குப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தது. அந்தப் பாதையின் ஓரமாக லொறியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. லொறியின் சாரதி தூரத்திலிருந்து மரண ஊர்வலமொன்று வருவதைக் கண்டிருந்தார். அதனால் அந்த ஊர்வலத்துக்கு கொஞ்சம் இடம் ஒதுக்க வேண்டியிருந்ததால் லொறியை பின்னுக்கு. அதாவது ரயில் பாதையின் அருகில் கொண்டு சென்று ஒதுக்குவதற்காக ஆய்த்தமானார்.
தம்மிக்க வரும் அந்த ரயிலும் அதனருகிலேயே வந்து கொண்டிருந்தது. லொறிச் சாரதிக்கு ரயில் வருவது தொடர்பில் போதிய அவதானம் இருக்கவில்லை. லொறிச் சாரதியும் வாகனத்தை பின்னுக்குச் செலுத்தினான். அதைக் கண்ட ஒருவர் லொறியை பின்னுக்கு எடுக்க வேண்டாம், ரயில் வருகிறது என கூச்சலிட்டார். ஆனாலும் லொறிச் சாரதி அதை அவதானிக்கவில்லை. அடுத்த ஒரு சில நொடியில் கண் இமைக்கும் வேளையில் வேகமாக வந்த ரயில் லொறியுடன் மோதுண்டது மோதுடுண்ட உடனேயே மிதிபலகையில் பயணம் செய்த எல்லோரும் கீழே விழுத்தனர். அதிவேகமாக பயணம் செய்யும் ரயிலில் இருந்து விழுந்தால் என்னாவது என்பதை நாம் சொல்லித் தெரியத் தேவையில்லை. அப்படி விழுந்தவர்களில் 3 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததுடன் இன்னுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துவிட்டார். மேலும் 9 பேர் காயமடைந்ததுடன் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான ஜயரத்ன பெரேராவின் உடலானது சிதறி துண்டங்களாக காணப்பட்டன. அவர் ரத்மலான கொதலாவல அகடமியில் சேவை புரிபவராவார். அவர் மொரட்டுவவை வசிப்பிடமாகக் கொண்டவர்.
மிதிபலகையில் பயணம் செய்வதென்பது ஆபத்தை நாமே தேடிப் போவதற்கு சமனானதாகும். விசேடமாக ரயிலில் செல்வது . ஆனால் இப்படி பயணம் செய்வதர்கள் ஆசைக்கோ கொழுப்புக்கோ இவ்வாறு ரயில் மிதிபலகையில் தொங்கிக் கொண்டு செல்லவில்லை. போதிய போக்குவரத்து வசதிகள் இன்மையே இவ்வாறான துரதிஷ்ட சம்பவங்கள் இடம்பெறக் காரணம் என பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்படுகிறது. தங்களது அன்றாட தேவைகளுக்காகவே இவர்கள் இவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். சில நேரங்களில் பொது மக்களும் கூட பாதுகாப்பாக இருந்தாலும் கூட இவ்வாறான அநியாய மரணங்கள் தவிர்க்க முடியாதவையே.
விபத்துக்கு காரணமென கூறப்படும் லொறிச் சாரதி இலக்கம் 16/11 , சுபசாதன மாவத்தை, எகொட உயன, மொரட்டுவ என்ற முகவரியைக் கொண்ட மரக்கலாகே பத்மசிறி பெரேரா என்பவராவார். இவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி பாரின்த கொட்டுகொடவை சந்தித்து தனது வாக்குமூலத்தை வழங்கினார். வருமாறு;
நான் அங்குலானைக்குச் சென்றது மரண வீடொன்றுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டே. நான் அங்கு செல்லும் வேளையில் மரண ஊர்வலம் முன்பாக வருவதைக் கண்டு லொறியை ஓரமாக்கி ஒதுக்கினேன். ரயில் அருகில் வரும் போது லொறியை எடுக்குமாறு யாரே கூறியது எனக்குக் கேட்டது. நானும் இன்னொருவரும் லொறியில் இருந்தோம். லொறியை பின்னக்கு எடுத்தேன். உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வேளையில் லொறியின் பின்புறத்தில் ஏதோ அடிபடுவது தெரிந்தது. ரயிலில் சென்றவர்கள் விழுவதைக் கண்டேன். லொறியை ரயில் பாதை அருகில் நிறுத்திவிட்டு செய்தது தவறென்று ஒத்துக்கொண்டென் என தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இன்னொருவர் இல. 219/21 என்ற முகவரியில் வசிக்கும் எஸ்.கே. பெரேரா (46 வயது) ஆவார்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இவ்வாறு கூறுகிறார், சம்பவம் இடம்பெறும் போது மாலை 4.20 இருக்கும் நான் மரண ஊர்வலத்தில் பங்கு கொள்வதற்காகவே வந்திருந்தேன். ரயிலொன்று கொழும்பிலிருந்து வந்தது. வேகமாக வந்த ரயிலின் மிதிபலகையில் வந்த ஒருவரின் தோள் பை லொறியில் மாட்டி அவர் வீசுபட்டு பாதையில் வீழ்ந்தார். அந்த நேரத்தில் லொறி வேகமாக மறுபக்கம் சாய்ந்ததில் இன்னொருவர் வீசுபட்டு ரயில் பாதையில் வீழ்ந்தார். ஒரே நொடியில் இருத்த ஆறாக அவ்விடம் காட்சியளித்தது. நிறைய பேர் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதை என்னால் பார்க்க முடிந்தது.
மூன்று உயிர்களை காவு கொண்டு ஒன்பது பேரின் கடுங்காயங்களுக்குக் காரணமான இச்சம்பவம் இடம்பெற காரணம் என்ன? ரயில் மிதிபலகையில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததா? ரயில் பாதைக்கு அருகாமையில் லொறி நிறுத்தப்பட்டிருந்ததா? பாதுகாப்பு வேலி இன்மையா? ரயிலில் பயணிப்பவர்களுக்கு இடம் போதாமையா? இல்லாவிடில் இவை எல்லாமுந்தான் காரணமா? இவ்வாறான வித்தியாசமான காரணங்களும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் புகையிரத நிலைய செயலாளர் எஸ்.எம்.அபேவிக்ரமவை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்தப் பாதுகாப்பற்ற ரயில் பாதைக்கு பாதுகாப்பு வேலி போடுவது கட்டாயம் என்றே எனக்கும் தோன்றுகிறது. இது சம்பந்தமாக 3 உப புகையிரதத் திணைக்கள அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அமைத்தோம். இருப்பினும் ஏதாவது ஒரு வழியில் மேற்படி ரயில் தண்டவாளங்களை திருடர்கள் திருடிச் செல்கின்றனர். சீமெந்தால் இருபக்கமும் போட வேண்டுமென்றாலும் அதிக பணத்தொகை செலவாகிறது. அதனால் அந்த செயலிலும் ஈடபட முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக