சமூக சீரழிவை தூண்டும் விபசாரம்
எந்தவொரு சமூகத்திலும் தவறு நடப்பதென்பது இயல்பானதே. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சம்பவங்களும் உண்டு. அதில் மன்னிக்கக்கூடிய தவறுகளும் உண்டு. அதிலும் தாயொருவர் தனது சிறிய மகளை காமுகர்களுக்கு விற்பனை செய்த கொடூர சம்பவமானது எந்தவொரு சமூகத்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும். அவ்வாறானதொரு கொடுக்கல் வாங்கல் சம்பவமானது அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்தின் முன்னாலுள்ள மின்கம்பம் அருகே இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் நகரத்தில் இக்கொடுக்கல் வாங்கலானது எல்லோருக்கும் அறிந்தவிடயமாகவே தென்படுகிறது. அநுராதபுரத்தில் நடைபெறும் மேற்படி கொடூர செயல் அரங்கேறுவது பற்றி பஸ் தரிப்பிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியிருக்கும். இருப்பினும் பொலிஸார் இது விடயமாக கண்டுகொள்ளாமல் இருப்பது கேள்விக்குரியதாகும். நீதிக்கும் புறம்பான கண்டும் காணாமல் போகின்றவர்கள் இருக்கும் அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்தில் மாலை வேளைகளில் நடைபெறும் இச்சம்பவங்களானது பிரசித்தி பெற்று காணப்பட்டது. சிரிமாபோதி வஹன்சே வாழ்ந்த உத்தம பூமியில் இப்படியான துர்அவல, கேடுகெட்ட சம்பவங்கள் நடப்பதற்கு இடமளிப்பது பௌத்த தர்மத்துக்கு செய்யும் அகௌரவமாகும். இதில் எங்களது பங்கு , மேற்படி விபசார வேலைகளில் ஈடுபடுவோரை சட்டத்திற்கு முன்கொண்டு வருவதாகும்.
தனது மகளை காமுகனுக்கு விற்கின்ற மேற்படி தாய் அநுராதபுரத்தைச் சேர்ந்தவரல்ல. அவர் தம்புள்ளையிலிருந்து அநுராதபுரத்துக்கு வந்தது தனது உடம்பை விற்று பிழைப்பு நடத்துவதற்காகும். இவர் ஒரு பிள்ளையின் தாயாவார். அவளது கணவன் நிரந்தரத் தொழிலின்றிய கூலித் தொழிலாளியாவார். விபசார தொழிலில் ஈடுபட்ட பின்னர் தனது கணவரையும் மகளையும் அநுராதபுரத்திற்கு கூட்டிவந்து நுவரவெவ் கண்டிய அருகில் வீடொன்றை அமைத்து வசிக்கத் தொடங்கினாள். காலம் கடந்து கொண்டிருந்தது. இவ்வேளை விபத்துக்குள்ளான அவளது கணவன் அங்கவீனமாகினான். இதன்பிறகு அவளது வாழ்க்கைக்குள் நுழைந்த இன்னொரு காடையன் மூலம் அவள் மீண்டும் இரு குழந்தைகளுக்கு தாயானாள். அக்குழந்தைகள் இருவரும் ஆண் பிள்ளைகள். காலத்தோடு சேர்ந்து அவளும் கரையலானாள். அவளது வேண்டுகோளும் நனவானது. அதாவது தனது ஒரே ஒரு மகளை இத்தொழிலுக்கு ருசிபார்க்க அனுப்பும் தனது கனவும் நனவானது. மகளை காமுகர் கூட்டத்துக்கு இரையாக்கினாள். இன்னும் வளர்ச்சியடையாத இளம் பராயத்தைக் கொண்ட மகளை காமுகர் கூட்டத்துக்கு இரையாக்கியது அவள் அறியாத விடயமாகவே இருந்தது. மகள் மூலம் காமுகர் கூட்டத்தை வீட்டுக்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டாள் அந்த படுபாதகி. இந்த கொடூர கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வீட்டினுள் இருந்து வெளியே செல்வது தங்களது உள்ளாடைகளுடனேயே. ஏனைய உடுதுணிகள், தங்க நகைகள், கடிகாரம் என்பவற்றை அந்த கும்பல் அபகரித்துக் கொள்ளும். அந்த பிரதேச மக்களுக்கு இந்த கேவலமான செயல் பெரிய விடயமல்ல. பழக்கப்பட்ட விடயமாகவே பார்க்கப்பட்டது. 3 பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பாமலேயே இத்தொழிலை மேற்கொண்டு வந்துள்ளனர்.
ஒரு எழுத்துக்கூட அவர்களுக்கு தெரியாது. இறுதியாக அக்குடும்பம் அநநுராதபுரம் நகரத்துக்கு பெரிய தொந்தவராகிப் போனது. அதுமட்டுமல்ல பாரிய பிரச்சினையுடனேயே முடிவடைந்தது. இக்கதை முடியும் தறுவாயில் அநுராதபுர நகரம் இருண்டு போனது. துளி மழையைக்கூட காணாத அநுராதபுர நகரில் மாலை வேளைகளில் குடைகளைப் பிடித்துக்கொண்டு அழகிகள் (விபசாரிகள்) அந்நகரத்தை வலம் வருவது வாடிக்கையாகிவிட்டது. இரவு நேரத்தில் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தங்கிச் செல்வதற்கான சகல வசதிகளும் கொண்ட விடுதி அறைகள் இங்கு காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி இங்கு வருபவர்கள் தங்கள் துக்கங்களை மறந்து, ஆடிப்பாடி மகிழ்ந்து உல்லாசமாக சொர்க்கலோகம் காணக்கூடிய சகல வசதிகளும் கொண்ட விபசார ஹோட்டலொன்றே காணப்படுகிறது.
அநுராதபுர நகரம் விபசாரிகளின் கூடாரமாக மாறியது விடுதலைப் புலிகளுடனான யுத்தகால கட்டத்திலேயோகும். வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு யுத்த காலங்களில் தனது கடமைகளுக்காக செல்லும் பொலிஸார், இராணுவத்தினர் என்போர் விமானம் மற்றும் கப்பல்கள் மூலமே தங்களது பயணங்களை மேற்கொண்டனர். அக்கால கட்டத்தில் அநுராதபுரத்திலிருந்தே அதிகளவான விமானங்கள் தங்கள் பயணத்தை வடக்கு, கிழக்கு நோக்கி ஆரம்பித்திருந்தன. வேலைக்குப் போகும் மற்றும் விடுமுறையில் வரும் இராணுவ வீரர்கள் இறுதியாக தரித்துச் செல்வது அநுராதபுரத்தின் இடையே அமைந்துள்ள மலைக்குன்றொன்றிலாகும். வேலைக்குச் செல்லும் இராணுவ உறுப்பினர்கள் விமானப் பயணம் தாமதமாகினால் ஓரிரு தினங்கள் அநுராதபுரத்திலேயே தங்கிச் செல்வதற்கான சாத்தியங்கள் காணப்பட்டன. விடுமுறையில் வரும் இராணுவத்தினர் மாதக் கணக்காக காடுகளில் வாசம் செய்துவிட்டே அநுராதபுரத்துக்கு வருவர். விடுமுறையில் வீடுகளுக்குச் செல்வோர் அநுராதபுரத்துக்கு வந்து தமது ஆசாபாசங்களை நிறைவேற்றிவிட்டே செல்வர். விடுமுறை முடிந்து வேலைக்குச் செல்வோர் கூட இங்கு வந்து தங்கிவிட்டே செல்வர். இவர்கள் இச்செயலை வாடிக்கையாகவே கொண்டிருந்தனர். இவ்வாறான இராணுவத்தினருக்கு வயிறு நிரம்ப சாப்பாடு போடும் கடைகள், மன நிம்மதிக்காக மதுக்கடைகள் மற்றும் தங்களது அந்தரங்கத் தேவைகளுக்கான பெண்கள் ஏலவே அநுராதபுரத்தில் காணப்பட்டனர். இப்படி இருக்கும் காலகட்டத்தில் விபசாரத்தின் முதன்மையிடமாக அநுராதபுரம் கணிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அநுராதபுரம் தவிர்ந்த ஏனைய இடங்களில் வசிக்கும் அதாவது காலி, மாத்தறை, கண்டி, கொழும்பு மற்றும் வேறு வேறு ஜாதி, மதத்தினரும் மேற்படி நகரத்தில் இரவு வேளைகளில் அழகிகளைப் போல திரியத் தொடங்கிவிட்டனர்.
தற்போது எங்கள் அருகிலுள்ள வயோதிபப் பெண், 30 வருடத்திற்கும் மேலான காலத்திலிருந்து அநுராதபுரத்திலுள்ள பழைய அழகியாவார். அவரை சீதா என்றே நாங்கள் அழைப்போம். வதிவிடம் கண்டி, அநுராதபுரத்தில் தெரிந்த ஆட்டோ ஓட்டுனர் மூலமே சீதா எமக்கு அறிமுகமானார். முதன்முதலாக இவ்வாழ்க்கையைப் பற்றி சொல்ல முன்வந்தார்.
இருப்பினும் எங்களின் கட்டாயத்தின் பேரிலேயே ஒருவாறு சொல்ல ஆரம்பித்தார். நான் 16 வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். 20 வயது வரும் போது எனக்கு குழந்தையொன்றும் இருந்தது. கணவனும் விட்டுச் சென்றுவிட்டான். நான் கல்வி கற்றிருக்கவுமில்லை. வாழ்க்கையை நடத்திச் செல்ல வழியில்லாது போனது. பிறகு மகளை எனது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு கண்டியிலுள்ள தேநீர் கடையொன்றுக்கு வேலைக்குச் சென்றேன். அதில் கிடைக்கும் சம்பளமும் போதுமானதாக இருக்கவில்லை. பிறகு தெரிந்த ஒருவர் மூலம் அநுராதபுரம் தேநீர் கடையொன்றுக்கு வேலைக்குச் சென்றேன். அந்தக் கடை இரவிலும் திறந்திருக்கும். இரவு நேரத்தில் அலைந்து திரியும் பெண்கள் நிறையபேர் சாப்பிடவருவது எங்களது கடைக்கே. இவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டு எனக்கும் இத்தொழிலை செய்ய ஆர்வம் வந்தது. நான் பாதுகாக்க எதுவுமே இல்லை. அதேபோன்று என்னை பாதுகாக்கவும் யாரும் இல்லை. நான் விருப்பத்துடன் இத்தொழிலுக்கு இறங்கினேன். தோல் சிவப்பாக இல்லாவிடினும் கட்டுக்கோப்பாகவே இருந்தேன். வீதிக்கு இறங்கிய பொழுதில் நல்ல வியாபாரம் இருந்தது. அந்த காலத்தில் அநுராதபுரம் நகரம் இராணுவ அரண் போலவே காணப்பட்டது. 10 கதை கதைத்தால் 8 கதை இராணுவ அரணுக்குச் சென்றுவிடும். விடுமுறையில் இருந்துவரும் இளைஞர்கள் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் வங்கிக்கே ஓடிச் செல்வர். பணத்தை எடுத்தவுடன் ஆட்டோக்காரர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பெண் ஒருவரிடம் செல்வர். சில பெண்கள் கஷ்டப்பட்டு வரும் இளைஞர்களிடம் ஒரு சதமேனும் மிஞ்சாதே வீட்டுக்கு அனுப்புவர். இவ்வாறு கீழ்த்தரமாக செயற்படும் பெண்களுக்கு பிரதிபலனாக ஏதாவதொரு கஷ்டத்தை அனுபவித்தனர். இராணுவ வீரர்களிடம் கொடுக்கல் - வாங்கல் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். காட்டிலிருந்து வரும் இளைஞர்கள் காட்டு மிருகங்கள் போன்றவர்கள். நானென்றால் மேலதிகமாக யாரிடமும் ஒரு சதமேனும் பெறவில்லை. என்னிடம் வரும் இராணுவ வீரர்களை முழுமையாக சந்தோஷத்துக்கு உட்படுத்தினாலேயன்றி அவர்களிடமிருந்து மேலதிகமாக ஒரு சதமேனும் பெறவில்லை. இருந்தாலும் நாங்கள் நிர்ணயித்த விலையிலும் பார்க்க அதிகமாகவே அவர்கள் எங்களுக்கு தந்து செல்வார்கள். சில இராணுவ வீரர்கள் பல கிழமைகளாக என்னுடன் இருந்தார்கள். தேநீர் கடையில் முழுவதும் வேலை செய்து கிடைத்த சம்பளத்திலும் பார்க்க இத்தொழில் மூலம் இரண்டு நாட்கள் மேற்படி சம்பளத் தொகையை பெற்ற சந்தர்ப்பமும் உண்டு. நாங்கள் வாழ்ந்த சின்ன மண் வீட்டை கல்வீடாகக் கட்டிக்கொண்டோம். மகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். படிப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவள் படிக்கவில்லை. தற்போது அவளும் திருமணமாகிச் சென்றுவிட்டாள்.
அம்மாவும் இறந்துவிட்டார். ‘நான் வீட்டில் தனிமையாகிவிட்டேன். எனது வாழ்வை கொண்டு செல்வதற்காக நான் தொடர்ந்தும் இத்தொழிலை செய்து வந்தேன். இளமை காலங்களில் இரவு நேரங்களில் செல்வது போல் தற்போது கிடையாது. காலையில் கண்டியிலிருந்து அநுராதபுரத்திற்கு செல்லும் பஸ்ஸிலேறி மாலை கடைசி பஸ்ஸில் வீட்டுக்கு வருவேன். முன்பு போல் தற்போது வியாபாரமில்லை. நாங்கள் பழைமையாகிவிட்டோம். சிறிது நாட்கள் கழித்து மீண்டும் தேநீர் கடைக்கு வேலைக்குச் செல்ல உத்தேசித்திருந்தேன். இல்லாவிட்டால் நகரத்தின் ஒரு மூலையில் வெற்றிலைக் கூறு விற்பேன். நிறையபேர் இத்தொழிலையே செய்கின்றனர். முன்னர் போன்றில்லாது வடக்கு, கிழக்குக்குச் செல்லும் இராணுவ வீரர்கள் சில சந்தர்ப்பங்களிலேயே அநுராதபுரத்தில் இறங்கிச் செல்கின்றனர். சிலர் 100 ரூபா, 200 ரூபாவுக்குக்கூட இத்தொழிலை செய்பவர்களாக இருக்கின்றனர். நிறையப்பேர் நினைக்கிறார்கள் நாங்கள் இத்தொழிலை விருப்பத்தோடு செய்கிறோமென்று. இல்லை, இத்தொழிலில் எந்த திருப்தியுமில்லை. நான் சொல்வது பொய்யென்றால் இத்தொழிலை செய்யும் இன்னும் சிலரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள். செய்வதற்கு ஒன்றுமில்லை என செய்கிறோம் என்பார்கள். வறுமைக்கு மத்தியில் இத்தொழிலை செய்த சீதாவால் தற்போது இத்தொழிலிருந்து மீளெழ முடியாதுள்ளது. அநுராதபுரம் பொதுச் சந்தையில் தொழில் செய்யும் சீதாவை போல் நிறையபேர் அங்கு காணப்படுகின்றனர்.
பொதுச் சந்தை செல்லும் ஆண்களை இவர்கள் விசிலடித்தே கூப்பிடுவார்கள். அந்தளவிற்கு பொதுச் சந்தை இவர்களின் ஆக்கிரமிப்பிற்கு கீழ் இருக்கின்றது. அதுபோல் அநுராதபுரம் புதிய நகரம், பழைய பஸ்தரிப்பிடம் என்பன விபசாரிகளின் இராச்சியமாக இருந்தன. கண்டி - வேவெவேகந்த, மைத்திரிபால சேனாநாயக்க மாவத்தை என்பவற்றின் அனைத்து குறுக்குப் பாதைகளும் இரவு நேரத்தில் இவர்களின் நாடக மேடைகளாக இருந்தன. இந்த விபசார நாடகங்களுக்கு அநுராதபுரத்திலுள்ள முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள், வியாபாரிகள் இதனை எதிர்த்தனர். சம்பந்தப்பட்டவர்கள் இவர்களை கைது செய்யாதிருப்பது பிரதேசவாசிகளுக்கு பெரும் சந்தேகமாகவே இருந்தது. அதேபோல் இரவுநேர ரோந்துப் பணியிலிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் இவர்களுடன் உல்லாசமாகவிருப்பது அநுராதபுரத்தில் வாடிக்கையாகிவிட்டது. அப்படியே இவர்களை கைது செய்தாலும் பிணையில் எடுக்க நிறையபேர் உள்ளனர். இவ்வாறு செய்வது அவர்களின் வறுமையை போக்கவோ இரக்கத்தினாலோ அல்ல. தங்களது தொழிலை விருத்தி செய்து மூலதனம் திரட்டிக் கொள்வதற்கு மாத்திரமே. எவ்வாறிருப்பினும் இத்தொழிலை செய்பவர்கள் மன திருப்தியின்றியே செய்கின்றனர். மற்றும் விருப்பமில்லாமல் தங்களது வருமானத்திற்காக மட்டுமே செய்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக