இலங்கைத் தேயிலை 150 வருடங்களை நிறைவு செய்துள்ளது. ஆனால், அண்மைய காலத்தில் இலங்கைத் தேயிலைக்கான ரஷ்யாவின் தடை 150 வருடங்களை புரட்டிப் போடுவதாக அமைந்திருந்தது. ஆனால், தேயிலைக்கான தடையை ரஷ்யா வாபஸ் பெற்றிருந்தாலும் அது இடைக்கால தீர்வாகவே அமைந்திருக்கிறது. தற்காலிகமாக தடையானது நீக்கப்பட்டிருந்தாலும் இலங்கை தேயிலையின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது ? இத் தடையால் தேயிலை ஏற்றுமதியில் ஏற்படப் போகும் சரிவுகள் எவ்வாறானது? அது பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேயிலை உற்பத்திக்கு தேவையான சிறந்த கால நிலையினை (ஈரப்பதம், குளிர் வெப்ப நிலையில், சூரியஒளி மற்றும் மழைவீழ்ச்சி ) இலங்கையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகள் கொண்டிருக்கின்றன. இதனால் இலங்கையில் தரமான தேயிலை உற்பத்தி நடைபெற்றுவருகின்றது. நீருக்கு அடுத்தபடியாக அதிகமானோரால் அருந்தப்படும் பானமாக தேநீர் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கைத் தேயிலை புதிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே, தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, தேயிலை மலைகள் முறையாக பராமரிக்கப்படாமை, தேயிலை காணிகள் வெளியாருக்கு விற்கப்படுதல், தேயிலை அகற்றப்பட்டு பாம் ஒயில் பயிரிடப்படுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை பெருந்தோட்டத் துறை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கைத் தேயிலையின் முக்கிய மற்றும் பிரபல்யமான சந்தையாக ரஷ்யா காணப்படுகின்றது. இந் நிலையில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இலங்கைத் தேயிலையில் ‘ கப்ரா பீட்டில் ’ எனப்படும் வண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டமையால் உடனடி அமுலுக்கு வரும் வகையில் டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கைத் தேயிலைக்கு தடைவிதிக்கப்பட்டது. எனினும் அதன்பின்னரான பேச்சுவார்த்தைகள் மற்றும் விட்டுக் கெ õடுப்புகளுக்குப் பிறகு கடந்த 30 ஆம் திகதியுடன் தடை அகற்றப்பட்டதுடன், தொடர்ந்தும் கடுமையான கண்காணிப்புடனேயே இலங்கைத் தேயிலை இறக்குமதி செய்யப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால், இது முழுமையான நிவாரணம் அல்ல. கடந்த 150 வருடங்கள் பெயர்பெற்ற இலங்கை தேயிலைக்கு கவனயீனம் காரணமாக சர்வதேச ரீதியில் தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்கின்ற ஏனைய நாடுகளிலும் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி குறைவடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத் தடையினை நீக்குவதற்காக இலங்கையில் 2025 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருந்த அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளுக்கான தடை நீக்கப்பட்டிருக்கின்றது. இக் கூரைத் தகடுகளின் உற்பத்திக்கு தேவையான முக்கியமான மூலப் பொருளை ரஷ்யாவிடமிருந்து இலங்கை இறக்குமதி செய்வதே இதற்கு பிரதான காரணமாகும்.
எனவே, தேயிலைக்கான தடை நீக்கம் முழுமையான நிவாரணம் என்று கருதிவிட முடியாது. இலங்கைத் தேயிலையினை முன்னாள் சோவியத் நாடுகள், ஐக்கிய அரபு இராச்சியம், ரஷ்யா, சிரியா, துருக்கி, ஈரான், ஐக்கிய இராச்சியம், எகிப்து, லிபியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. இதில் சில நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைகளால் அவை இலங்கைத் தேயிலையை நேரடியாகவே பாதித்துள்ளன. 2017 ஆம் ஆண்டில் மாதமொன்றுக்கு 30 மில்லியன் கிலோ கிராம் அளவில் 10 மாதங்களில் 2915 மில்லியன் ( 23 மில்லியன் டொலர் பெறுமதியான ) கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது. இது இலங்கையின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் 12 வீதமாகும். இவ்வாறு இலங்கை பெற்றுக்கொள்கின்ற பாரிய வருமானம் வண்டின் தலையீட்டினால் இல்லாமல் செய்யப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளும் ரஷ்யாவும் ஈரானும் முதலிரு இடங்களில் இருக்கின்றன. ரஷ்யா வருடத்துக்கு 34 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும் ஈரான் 33 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும் ஈராக் 32 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும் துருக்கி 27 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும் டுபாய் 18 மில்லியன் கிலோ கிராம் , லிபியா, சிரியா போன்ற நாடுகள் 12 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும் இறக்குமதி செய்கின்றன.
டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக கென்யாவின் தேயிலைச் சந்தை பெறுமதி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் ரஷ்யா கென்யாவின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கும் தீர்மானம் மேற்கொண்டிருந்தது. ஆனால், தடை நீக்கத்தால் அவை இல்லாமல் செய்யப்பட்டு விட்டது. இல்லையெனில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாரிய சரிவை கண்டிருக்கும். அவ்வாறு சரிவு ஏற்பட்டிருக்குமாயின் அது பெருந்தோட்ட மக்களை அதிகமாக பாதிப்பதாகவே அமைந்திருக்கும். தேயிலையில் வண்டு சென்றது திட்டமிட்ட செயலா ? அல்லது கவனயீனமா என்பது தொடர்பிலான விசாரணைகள் அவசியம் தேவை. இலங்கை தேயிலை 300,000 மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. இவற்றை இப்படியே விட்டுவிடவும் முடியாது. உலகளவில் தேயிலைக்கு அதிக கிராக்கி இருக்கின்றது. அமெரிக்காவில் ஒரு நாளைககு 1.42 மில்லியன் பவுண்ட்ஸ் தேயிலை நுகரப்படுகிறது. அதேவேளை அண்ணளவாக 3 மில்லியன் கப் தேநீர் தினந்தோறும் உலகளவில் நுகரப்படுகிறது. மேலும் நான்கு பவுண்ட்ஸ் தூய தேயிலை தளிர்கள் மூலம் ஒரு பவுண்ட்ஸ் காய்ந்த தேயிலையை உற்பத்தி செய்ய முடிகின்றது. இவ்வாறு மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதியை இலங்கை மேற்கொள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு முகம்கொடுத்திருப்பார்கள். ஆனால், ஒரு வண்டுப் பிரச்சினை அவர்களின் உழைப்பையே வீண் விரயம் செய்யப்பார்க்கின்றது.
2016 ஆம் ஆண்டு ரஷ்யா இரண்டாவது அதிகூடிய தேயிலையை ( 143 மில்லியன் அ.டொலர்) இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. ஈரான் முதலிடத்திலிருந்து. ( 154.10 மில்லியன் அ. டொலர்). இருப்பினும் 2015 இல் ரஷ்யா முதலிடத்திலும் ( 156.65 மில்லியன் அ.டொலர் ) இரண்டாவது இடத்தில் துருக்கியும் இருந்திருக்கிறது. 2016 இல் 76 வீதமான இலங்கையின் ஏற்றுமதி ரஷ்யாவுக்கே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவற்றில் இலங்கை தேயிலையின் பெறுமதி 143 மில்லியன் அ.டொலர்கள் எனவும் வணிக திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இலங்கையில் தேயிலை 187,309 ஹெக்டேயரில் பயிரிடப்பட்டுள்ளது. இதற்கமைய நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, காலி, மாத்தறை, மொனராகலை, பதுளை, கேகாலை, குருநாகல், அம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய பகுதிகளில் தேயிலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 1867 ஆம் ஆண்டு பிரித்தானிய நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் கண்டி பிரதேசத்தில் தேயிலைத் துறையை ஆரம்பித்து வைத்தார். தேநீரானது இலங்கையில் பிரதான 3 உணவுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. கப்ரா பூச்சியினமானது பிரதானமாக தானிய வகைகளையே பாதிக்கும். இருப்பினும் இது தேயிலையினுள் இருந்திருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமே. இது தேயிலையை பாதித்த வரலாறு இல்லை. இதேவேளை, பொதுவாக பொருட்கள் களஞ்சியப்படுத்தும் இடங்களில் இவ்வாறான வண்டுகள் இருப்பது இயல்பு என்ற போதிலும் குறித்த தேயிலையை ஏற்றிச் சென்ற கப்பல் இலங்கைக்கு சொந்தமானதில்லை என்றும் குறித்த கப்பலானது வேறு எந்த துறைமுகத்திலாவது நங்கூரமிடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த வண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தேயிலை பொதிக்குள் இப் பூச்சி காணப்படவில்லை. மாறாக இதர பொருட்களைக் கொண்டு செல்லும் காட்போர்ட் பெட்டியொன்றிலேயே இப் பூச்சி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேயிலை மட்டுமன்றி மிளகு, மாங்காய், அன்னாசி, பப்பாளி, இளநீர், ஸ்டோபரி ஆகிய பழங்களையும் ரஷ்யாவுக்கு, இலங்கை ஏற்றுமதி செய்கிறது. மரவள்ளி கிழக்கு ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம் இருப்பினும் அதுபற்றி பெரிதாக பேசப்படவில்லை. ஏற்றுமதியின் போதான பரிசோதனைக்கென்றே கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவுக்கு ரொஹான் விஜேகோன் என்பவர் தலைமை தாங்குகிறார். இக் குழுவானது நாட்டிலிருந்து ஏனைய நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்கள் மீது விசேட கவனத்தை செலுத்தும். உணவு, பான வகைகள் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் N.க.க.O. சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயமானதாகும். இச் சான்றிதழ் இல்லாது எந்தவொரு உணவும் பானமும் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் 23 வீதம் ரஷ்யாவுக்கு அனுப்பப்படுவதால் இந்த தற்காலிக தடையானது இலங்கையை வெகுவாக பாதித்திருந்தது. இருப்பினும் தடையானது தற்காலிகமாகவே நீக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த பூச்சியால் தடை விதிக்கப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத காரணமாக காணப்பட்டது. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெஸ்டர்ஸ் கூரைத் தகடுகளை 2020 இலிருந்து இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதியால் தடை விதிக்கப்பட்டுள்ளமையே தேயிலை தடைக்கு பிரதான காரணமாக தெரிவிக்கப்படுகிறது என்ற கூற்றும் ஒருபுறம் காணப்பட்டது. ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இராணுவ வீரர்களின் செயற்பாடு குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது அதில் தலையிட்ட முதல் நாடாக ரஷ்யா காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் அஸ்பெஸ்டர்ஸ் தகரத்துக்கான தடையை நீக்குவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டது. ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்கின்றன. 2014 ஆம் ஆண்டு ‘ பழப்பூச்சு ’ என அறியப்பட்ட பூச்சியால் எமது நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்ததாக விவசாயத் திணைக்களத்தின் தலைவர் ரொஹான் விஜேகோன் தெரிவித்துள்ளார்.
இக் காலப்பகுதியில் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகிய மா, வாழை, பப்பாளி, கொய்யா, பாகற்காய், புடலங்காய், வெண்டிக்காய் போன்றவற்றை பரிசீலனை செய்து அனுப்பும் படி இலங்கைக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. நாங்களும் அந்த 3 மாத காலத்திற்குள் 30 க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள், மரக்கறிகள் என்பவற்றை தீவிரமாக பரிசோதித்து அதன்படி செயற்பட்டோம். அதற்கிணங்க ஐரோப்பா எங்களுக்கு நற்சான்றிதழை வழங்கியது. அவ்வாறு செயற்பட்ட எங்களுக்கு இச் செய்தியானது அதிர்ச்சியளிப்பதாகவே இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் .இருப்பினும் இரு நாட்டு ஜனாதிபதிகளினது அந்நியோன்யம் காரணமாக இத் தடையானது தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறது. எமது நாட்டில் 70 வீதமான தேயிலை சிறு தோட்டங்களிலேயே பயிரிடப்படுகின்றது. இத்தடையானது நீடிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது சிறுபான்மையினராகவே இருப்பர். இதனால் எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்யப்படுகின்ற தேயிலை மீதான கண்காணிப்புகள் தீவிரமாக்கப்பட வேண்டும். மீண்டுமொரு முறை அவ்வாறு நிகழும் பட்சத்தில் இலங்கைக்கு எதிரான தடையானது நிரந்தரமாக்கப்படலாம் என்பதோடு இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச கேள்வியை நீர்மூலமாக்கும். அத்தோடு விற்பனையும் வீழ்ச்சியடையும். இதனால் இத்தேயிலை ஏற்றுமதியை வருமானமாக எதிர்பார்த்துள்ள இலங்கை பெரும் பாதிப்பினை எதிர்கொள்வதோடு இத்தேயிலையையே நம்பியிருக்கின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெருமளவு வீழ்ச்சியடையும் வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே, தேயிலையின் ஏற்றுமதியில் உலக நாடுகளின் கவனத்தை பெறவேண்டுமாயின் தரம் மிகவும் அவசியமானதாகும்.
பொதுப் பாவனையின் போது கப்ரா பூச்சியெனவும் ( டுடச்ணீணூச் ஆஞுஞுtடூஞு) விஞ்ஞான பூர்வமாக tணூணிஞ்ணிஞீஞுணூட்ச் எணூச்ணச்ணூடிதட் எனவும் அறியப்பட்ட இப் பூச்சி விசேடமாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்ற இனமாக கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் அதிகமாக சேதங்களை ஏற்படுத்துகின்ற 100 விலங்குகளின் பட்டியலில் இப் பூச்சி விசேட இடத்தைப் பிடிக்கின்றது. 1953 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் முதன் முதலாக அறிமுகமாகிய சந்தர்ப்பத்திலேயே இப் பூச்சியினத்தை முழுமையாக அகற்றிவிடுவதற்காக அமெரிக்க அரசு 15 மில்லியன் டொலரை செலவிட்டிருந்தது. உணவின்றி நீண்ட காலத்திற்கு வாழும் விசேட ஆற்றலைக் கொண்ட இப் பூச்சி இனத்தை முற்றாக இல்லாமல் ஆக்குவதென்பது அவ்வளவு எளிதான காரியமாக அமையவில்லை. கப்ரா பூச்சியானது மியன்மாரிலிருந்து வட ஆபிரிக்காவரை பரந்து
காணப்படுகிறது. ஏனைய சில நாடுகளில் 35% ஆக காணப்படுகிறது. இதுபோன்ற பூச்சி இனங்களில் இப் பூச்சியானது அசிங்கமான தோற்றமொன்றைக் கொண்ட பூச்சியாக காணப்படுகிறது. இப் பூச்சியானது சுமார் 1.6 மி.மீ. நீளத்தையும் 0.9 - 1.7 வரை அகலத்தையும் கொண்டமைந்துள்ளது. இப் பூச்சியில் பெண் பூச்சியானது ஆண் பூச்சியை விட விசாலமான பருமனைக் கொண்டது. இது கொஞ்சம் சிவப்பு நிறத்திலும் கபில நிறத்திலும் தோற்றத்தைக் கொண்டது. இப் பூச்சிக்கு நீண்ட தூரம் பறந்து செல்லக் கூடிய ஆற்றல் குறைவு. இருப்பினும் ஒழுங்கற்ற களஞ்சிய பொருட்களிலேயே அதிகம் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இப் பூச்சியினமானது இதுவரை இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டங்களிலோ பயிர்ச் சேனைகளிலோ கண்டறியப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையென இலங்கை தேயிலை அத்தியட்சர் வைத்தியர் எம்.எம். ஜே.பீ. கவரம்மான தெரிவித்தார். 1894 இல் கப்ரா பூச்சி இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதன் பெருக்கம் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா குறிப்பாக ஈக்குவடோர் உட்பட 40 நாடுகளில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக