துப்பாக்கி வேட்டில் தொலைந்த உயிர்
- துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் நீளம் மில்லிமீற்றர் 9 வகையைச் சேர்ந்த 13 ரவைகளைக் கொண்டதாகும்.
- பண்டா சுட்டுக்கொல்லப்பட்டது 17 ஆம் திகதி மாலை 6.05 மணியளவிலேயே. அன்றைய தினம் மஞ்சுளாவுக்கும் சமயங்குக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் மாலை 2.30 - 6.02 வரை 10 தடவை இடம்பெற்றுள்ளது. இவ்வுரையாடல்களை சமயங் இருவேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் மாறி மாறி மேற்கொண்டுள்ளான்.
- மஞ்சுளா சமயங்கோடு இணைந்து போதைப்பொருள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாவ, ருக்மலே பாலிகா வீட்டுத்திட்ட பாதையோரத்தில் வசிக்கும் மக்கள் கடந்த 30 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் அவரவர் செய்து கொண்டிருந்த வேலைகளை நிறுத்திவிட்டு இந்த நேரத்தில் இவ்வளவு சத்தத்துடன் யார் பட்டாசுக்களை கொளுத்திக் கொண்டிருப்பது எனத் தேடத் தொடங்கினர். அது பட்டாசுச் சத்தம் அல்ல வெடிச்சத்தம் என யாரோ சொன்னது அவர்களுக்கு கேட்டது. பட்டாசாயினும் சரி துப்பாக்கிச்சூட்டு சத்தமாயினும் சரி அச்சத்தம் எங்கிருந்து வந்தது. வெடிச்சத்தம் ஆயின் அது யார் மூலம் வெடிக்கப்பட்டது? என்பன பிரதேச வாசிகளால் யூகிக்க முடியாமல் போனது. இருப்பினும் மஞ்சுளா சந்துனி அபேரத்னவின் கணவன் வீட்டிலேயே இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்பதை அந்த வீட்டுக்கு அருகிலுள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. மஞ்சுளாவின் வீட்டில் கேட்ட வெடிச்சத்தத்துடனேயே வேகமாக மோட்டார் சைக்கிளொன்றும் அவ்விடத்திலிருந்து பறந்து சென்றதை காணக்கூடியதாகவுள்ளது. மஞ்சுளாவைச் சுட்டுவிட்டார்கள் இந்த செய்தி நாலாபுறமும் தீபோல பரவியது. மஞ்சுளாவின் மாமியாரோ செய்வதறியாது பயத்துடனும் அச்சத்துடனும் கத்தத் தொடங்கினார். அதன் பிறகு கேட்ட சூட்டுச்சத்தத்தில் வீட்டிலுள்ள அனைவரும் ஒரு மூலையில் முடங்கிப் போய் அமைதியானார்கள். அவர்கள் சென்ற பிறகே அவ்வீட்டில் கேட்ட அழுகை சத்தத்தால் பிரதேசமே சோகத்தில் மூழ்கிப் போனது.
’சூது விளையாட்டானாலும் சரி, அவ்விடத்தில் இருந்தாலும் சரி இரண்டுமே ஒன்றுதான்.’ என்ற பழமொழி ஒன்று எமது சமுதாயத்தில் உண்டு. அதன்படி ஆயுதம் எடுப்பவர்கள் மட்டுமல்ல அம்மாதிரியானவர்கள் அருகில் இருப்பது கூட அவர்களுக்கு நீதியான முறையிலும் சரி அநீதியான முறையிலும் சரி எவ்வழியிலாவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமென்ற கூற்றும் உண்டு. மஞ்சுளா சந்துனி அபேரத்னவுக்கு இவ்வாறே நடந்திருக்கக்கூடுமென அதிகம் பேர் பேசிக்கொண்டனர். 47 வயதைக் கொண்ட மஞ்சுளா ஒரு பெண் பிள்ளையினதும், ஆண்பிள்ளையினதும் அன்புக்குரிய தாயாவாள்.
சிகையலங்காரத் தொழிலை தனது ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்ட மஞ்சுளா, அத்துருகிரிய நகரத்தில் சயோனாரா என்ற சிகையலங்காரக் கடையொன்றை நடத்தி வந்துள்ளார். அவரது கணவரும் சிகையலங்காரத் துறையைச் சேர்ந்தவராவார். கடந்த 3 வருடங்களாக மஞ்சுளா தனியாகவே வசித்து வந்துள்ளார். ஜா-எல பகுதியொன்றிலுள்ள வீட்டிலேயே வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரின் பிள்ளைகள் தந்தை மற்றும் பாட்டியுடன் கொட்டாவ ருக்மலே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வருட ஆரம்பத்திலேயே மஞ்சுளாவின் பெயர் வெளிச்சத்துக்கு வந்தது. அப்படியாயின் 17-01-2017 அன்று அத்துருகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னரே மஞ்சுளா பொதுவாக எல்லோருக்கும் அறிமுகமாகியிருந்தார். அந்த சிகையலங்கார நிலையத்துக்குச் சொந்தக்காரி மஞ்சுளாவே. ஆனால் அன்று அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மஞ்சுளாவால் மேற்கொள்ளப்படவில்லை.
அச்சம்பவமானது பாதாளக்குழுவின் தலைவனொருவனான அங்கொட லொக்காவின் நெருங்கிய நண்பனான லடியாவின் நம்பிக்கைக்குரிய சகாவான முனில் பண்டார தர்ம ஸ்ரீ அல்லது அத்துருகிரிய பண்டா என அழைக்கப்படுபவராலேயே மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பது, பாதாளக் குழுவில் ஒரு பெயரை எடுத்துக் கொள்ளவும் அதன் தலைவராகவும் முண்டியடித்துக் கொண்டிருக்கும் சமயங் என்பவரின் பணிப்புரைக்கமையவே என பொலிஸார் தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளதோடு, அச்சம்பவத்திற்கு மஞ்சுளாவும் துணை போயுள்ளார். எனவும் பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர். சமயங்கின் குழுவோடு மஞ்சுளா சிலகாலம் தொடர்புகளை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு பண்டா என்பவர் சிகையலங்காரம் ஒன்றிற்காக தன்னிடம் நாளொன்றை ஒதுக்கியுள்ளதாக சமயங்கிடம் மஞ்சுளா கூறியிருப்பது அவரின் தொலைபேசி உரையாடல்களை பரிசோதித்தபிறகு தெரியவந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மஞ்சுளாவின் கூற்றிற்கிணங்க சமயங் மற்றும் அவரின் குழுவினர் பண்டாவை கொலை செய்ய திட்டம் தீட்டினர். சம்பவம் இடம்பெற்ற அன்று அந்நிலையத்துக்கு வருகை தந்த பண்டாவின் முக அலங்காரத்தை ஆரம்பிக்கவென பண்டாவின் இரு கண்களிலும் வெள்ளரிக்காய்த்துண்டுகள் இரண்டை வைத்துவிட்டு சற்று நேரம் பொறுத்திருங்கள் எனக் கூறியுள்ளதாகவும் பின்னர் சமயங் என்பவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ’நமது திட்டம் சரி’ எனக்கூறியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதன்படி செயற்பட்ட சமயங்கின் கும்பல் மஞ்சுளாவின் சிகையலங்கார நிலையத்துக்கு வந்து பண்டா அமர்ந்த கதிரையிலேயே அவனை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. பண்டா அமர்ந்திருந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்துடன் கிடந்தான். பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி பண்டாவின் சூட்டுச் சம்பத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் மஞ்சுளாவையும் மேலும் மூவரையும் கைது செய்திருந்தனர். ஏழு, எட்டு மாதங்களாக சிறையிலிருந்த மஞ்சுளா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே முன் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டாள். அங்கொட லொக்காவின் சகாக்கள் தங்கள் குழுவிலுள்ள ஒருவர் தாக்குதலுக்குள்ளானதன் பின்னணியில் உள்ள மஞ்சுளாவை பழிதீர்ப்பதற்காக அன்றிலிருந்து மஞ்சுளாவை இலக்குவைத்து திட்டம் தீட்டினர். அதன்படி அவர்கள் மஞ்சுளாவை பின்தொடரத் தொடங்கினர். மஞ்சுளாவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். மஞ்சுளாவும் இதைப்பற்றி அறியாமலில்லை. அதனால் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் கொஞ்ச நாட்களாக ஜா-எல வீட்டிலும் ஏனைய பல இடங்களிலும் தங்கி வசிக்கலானாள். இப்படி இருந்துகொண்டு கடந்த 26 ஆம் திகதி மீண்டும் தனது கணவன் வீட்டுக்கு வந்தாள். அங்கேயே வசித்து வந்த அவள், அங்கிருந்து கடந்த 30 ஆம் திகதி கடுவலை மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இரண்டு வழக்குகளுக்காக அங்கு சென்றிருந்தாள். அதில் ஒரு வழக்கிலிருந்து அவள் விடுதலையானாள்.
அங்கு அனைத்து விடயங்களையும் முடித்துக் கொண்ட அவள், ருக்மலே வீட்டுக்குச் செல்லும் முன்னர் கொட்டாவவிலுள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றுக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்தாள். அவளது இவ்வாறான பயணங்களைப் பின்தொடர்வதற்காக அந்த சுற்றுவட்டாரத்தில் ஒருவன் காணப்பட்டான். மஞ்சுளாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க நாட்டில் பெயர்போன மூன்று பாதாளக் குழுக்களின் விடயத்தில் தலையிட்டமையே காரணமாகும். இம்மூன்று பாதாளக்குழுக்களாவன கும்புறுப்பிட்டியே மதுஷ், அங்கொட லொக்கா மற்றும் கடுவலை சமயங் என்பவைகளாகும். அங்கொட லொக்காவின் நெருங்கிய நண்பனான லடியாவின் நெருங்கிய சகாவான முனில் பண்டார தர்ம ஸ்ரீ அல்லது அத்துருகிரிய பண்டா என அழைக்கப்படும் தாக்குதலுக்கு இலக்கான நபர் 2017-01-17 ஆம் திகதி அத்துருகிரியவில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையமொன்றில் வைத்து சமயங் என்பரின் சகாக்களால் தூப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை அங்கொட லொக்காவின் வைராக்கியத்தை இரண்டு, மூன்று மடங்காக்கியது. ’உனக்கு வாழ இன்னும் காலம் தேவையில்லை. உடன் தயாராகு இறப்பதற்கு’ என சமயங் அங்கொட லொக்காவை தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளார். இந்தச் சம்பத்தினால் மேலும் கோபத்துக்குள்ளான மதுஷûம் மரண பீதியில் கலக்கமடைந்துள்ள அங்கொட லொக்காவும் சேர்ந்து சமயங்கை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
அந்தத் திட்டம் களுத்துறை எத்தனமடல பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ்ஸில் சமயங், கடுவலை மேல்நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வேளையிலேயே அரங்கேற்றப்பட்டது. கடுவலை மேல் நீதிமன்றத்தில் வைத்து சமயங்கை சுட்டு வீழ்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் பொலிஸார் சமயங்குக்கு பாதுகாப்பு வழங்கினர். சமயங்கை விசாரணைக்காக அழைத்து வரும் ஒவ்வொரு வேளையிலும் பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒரு தடவை தவறிய குறியானது மறுபடியும் மேலெழாது என்றே பொலிஸார் நம்பியிருந்தனர். சமயங்கின் தாக்குதலுக்கு, பாதுகாப்புக்கு மத்தியிலும் ஒருசில மறைவான இடங்கள் இருப்பதை கண்டுகொள்ள முடிவதற்கு அவ்வளவு நேரம் போகவில்லை. அதுபோல இவர்கள் மேற்படி திட்டங்களை தீட்டுவர் என்பதை பொலிஸார் மறந்து போயினர். பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியிலும் சமயங்கை போட்டுத்தள்ள மதுஷின் ஆலோசனைப்படி அங்கொட லொக்கா திட்டமிட்டான். அது கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதியாகும். சிக்காகோ முறைப்படி மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு காரணமான லடியா உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட 10 பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சமயங் கொல்லப்பட்ட இரண்டு தினங்களுக்குப் பின்னர் அங்கொட லொக்கா மற்றும் லடிகா ஆகியோர் ’இந்தியாவுக்கு தப்பிச் சென்றனர். அவர்களின் திட்டமானது டுபாயிலிருக்கும் மதுஷிடம் செல்வதேயாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இன்னுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பிலியந்தலையில் இடம்பெற்றுள்ளது.
அச்சம்பவம் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் ஒருவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் மதுவரித் திணைக்கள பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகரொருவரான ரங்கஜீவ மற்றும் பொலிஸ் குழுவொன்றை இலக்குவைத்தாகவே அமைந்தது. டுபாயிலிருந்து ஹெரோயின் வியாபாரத்தை மேற்கொண்ட மதுஷிக்கு பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவவின் தலையீடு பெரிய இடைஞ்சலாக இருந்தமையே இத்தாக்குதலுக்கான காரணமாகும். இத்துப்பாக்கிச் சூட்டின் மூலம் பலத்த காயங்களுக்குள்ளான ரங்கஜீவ என்ற பொலிஸ் அதிகாரி மரணத்தோடு போராடி இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். இருப்பினும் முன்னரைப்போல அவரால் நடமாட முடியாத நிலை காணப்படுவதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. மதுஷ் குழுவினருக்கு பழிவாங்கத் தேவையான ரங்கஜீவ என்ற அதிகாரி உயிர்தப்பினாலும் அத்தாக்குதலால் அவருடன் இருந்த பொலிஸார் ஒருவர் அத்தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தார். ஹெரோயின் பொதிகளோடு ஒருவரைக் கைது செய்ய ரங்கஜீவ பொலிஸ் அதிகாரி திட்டமிட்டு கைது செய்யப்பட்ட ஹெரோயின் வியாபாரம் செய்பவரை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டு ஹெரோயின் விற்பனை செய்பவனை தூதாகப் பயன்படுத்தவே. அதாவது அவன் மூலம் ஏனையவர்களை கைது செய்ய திட்டமிட்டிருந்தார். அவ்வாறே ஹெரொயின் விற்பவனும் ரங்கஜீவ அதிகாரிக்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தான். அவ்வாறே மதுஷவுக்கும் இவன் தகவல்களை வழங்கி வந்துள்ளமை அவ்வாறே அம்பலமானது. மேற்படி தாக்குதலுக்கு இந்தியாவிலிருந்து வந்த அசித என்ற இராணுவ வீரரோடு இந்த தூது போனவன் தப்பிச் சென்றான். அங்கொட லொக்காவும் லெடியாவும் தங்களது சுயரூபத்தை மறைத்துக் கொள்வதற்காக போலி விசாவை தயாரித்து டுபாய் செல்ல ஆயத்தமாகிய போது இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு அங்கு சிறையிலடைக்கப்பட்டனர். சிகையலங்கார நிலைய உரிமையாளரான மஞ்சுளாவின் தாக்குதலுக்கு அங்கொட லொக்காவின் குழுவினர் திட்டங்களை தீட்டியிருப்பது அங்கொட லொக்கா இந்தியாவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்ட வேளையிலேயே என்பது விசேட கவனத்துக்குரியது. மஞ்சுளா அங்கொட லொக்காவுக்கு எதிராக சமயங் என்பருக்கு தகவல்களை வழங்கியுள்ளமை மஞ்சுளா கைதான பின்பே வெளிச்சத்துக்கு வந்தது. மஞ்சுளா சமயங்கின் தொல்லை தாங்க முடியாமல் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதற்குண்டான தகவல்கள் எவையும் இதுவரை தேடிக்கண்டுபிடிக்கப்படவில்லை. எப்படியிருப்பினும் இறுதியாக அங்கொட லொக்காவின் குண்டுக்கு மஞ்சுளா இரையாக நேரிட்டது. சிறைக்குச் செல்லும் பாதாள குழுவினருக்கு ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பையும் ஏனைய இவ்வாறான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கான திட்டங்களையும் தீட்ட ஏதுவான இடமாக சிறைச்சாலை இருக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சிறையிலிருப்போரை பார்க்க வருவோரிடம் காணப்படும் பொருட்கள் மற்றும் சாப்பாட்டுப் பார்சல் என்பவற்றை அவிழ்த்து நோட்டமிடும் சிறைக்காவலர்களுக்கு ஏனோ சிறையினுள் இருப்பவர்களிடம் இருக்கும் தொலைபேசிகளை கண்டுபிடிக்க முடியாமற் போனது? இவர்களின் துணை இல்லாதவிடத்து இவ்வாறான சம்பவங்கள் சிறையில் இடம்பெறுமா என்பதும் சந்தேகமே. ஒரு கைதிக்கு சிறைக்காவலரின் கண்ணை கட்டிவிட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள முடியுமா? இல்லாவிட்டால் சிறையிலுள்ள அதிகாரிகள் கண்டும் காணாதது போல் உள்ளனரா? இல்லாவிட்டால் அவர்கள் பணத்துக்கும் பதவிக்கும் அடிமையாகி விட்டார்களா? பாதாளக் குழுவினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிக்கொள்ளும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் இவர்கள் மூலமாக தங்களது இரகசியங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். அவ்வாறே பாதாளக்குழுவினரும் சிறைகளில் இருந்தவாறே தங்களது தேவைகளை இவர்கள் மூலமாக (சூட்டுத்தாக்குதல், ஹெரோயின் விற்பனை) நிறைவேற்றிக் கொள்கின்றனர். இச்சம்பவங்களைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் பாதாளக் குழுவினர் இவ்வுலகைவிட்டு முற்றாக அழிந்து போவரோ என்பதும் சந்தேகமே. அதனால் சமயங் மற்றும் அவன் போன்றவர்களுக்காக உதவி, ஒத்தாசை வழங்கும் மஞ்சுளா போன்றவர்களும் தங்களது எதிர்காலத்தை இவ்வாறே தொலைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக