கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

ஆசியாவை அச்சுறுத்தும் துஷ்பிரயோகங்கள்
க. பிரசன்னா
உலகில் ஒவ்வொரு நாளும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகிய வண்ணமே இருக்கின்றன. இலங்கையில் வருடமொன்றுக்கு 2,500 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இவ்விடயம் தொடர்பில் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாலியல் துஷ்பிரயோகம் என்பது மனித வாழ்க்கையில் வியாபாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இந்த பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களை பொது இடங்களில் அதிகமாகவே காணமுடிகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் மேற்படி சம்பவங்கள் வாடிக்கையாக இடம்பெறுவதாக பல அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றன. உலகளாவிய பெண்கள் தொகையில் 750 மில்லியன் பெண்கள் தங்களது 18 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர். அத்தோடு பெண்களில் 120 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக சட்ட ரீதியான தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் இவை தொடர்பான தகவல்களைத் திரட்டும் போது ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே அறிக்கைகள் மற்றும் தரவுகள் கிடைக்கப்பெறுகின்றமை முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. அவ்வாறு பெறப்பட்ட மீதமான தகவல்களின் மூலமே இவ்விடயம் தொடர்பான முடிவுகளை பெறக்கூடியதாகவிருக்கின்றது.
ஆசியா
ஆசியாவிலேயே பெண்கள் மீதான அதிகளவு துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விசேடமாக ஆசியாவைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டால் ஆசியாவில் ஆண்கள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் காணக்கூடியதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நிறைய பேர் தெற்கு ஆபிரிக்காவிலேயே பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகளவில் தென்படுவதாக தெரிவித்தாலும் பசுபிக் வலயத்திலேயே ஆண்களின் பாலியல் சம்பவங்கள் அதிகமாக பதிவாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவையெல்லாம் பிரசித்தமான இடங்களிலும் அதேபோன்று ஆண்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றுக்கு முக்கியத்துவமளிப்பதால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை சிலர் மறந்து விடுகின்றனர். வீதிகளில் நடத்தப்படும் மேற்படி அநாகரிகமான செயற்பாடுகளால் பெண்களையும் யுவதிகளையும் வீட்டிலோ பாடசாலையிலோ அல்லது பொது இடங்களிலோ பாதுகாத்துக் கொள்ளக்கூடிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன்படி ஆசியாவில் பெண்கள் அல்லது யுவதிகள் எவ்வழியிலாவது பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் அல்லது உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்குள்ளாகின்றனர்.
அவர்களின் எண்ணிக்கை வருமாறு; பங்களாதேஷ் -57 வீதம், கம்போடியா -77 வீதம், இந்தியா - 79 வீதம் மற்றும் வியட்நாம் - 87 வீதம் இதன்படி ஏனைய நாடுகளை விடவும் வியட்நாமும் இந்தியாவும் மேற்படி துன்புறுத்தல் சம்பவங்களில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் புதுடில்லியில் 2012 ஆம் ஆண்டு பஸ்ஸொன்றில் இளம் வைத்திய மாணவியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது முழு உலகமும் அறிந்த விடயமே. இது தொடர்பான அஞிtடிணிண அடிஞீ என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 2016 ஆம் ஆண்டு மேற்படி துஷ்பிரயோகச் சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்களின் வீதம் 44 ஆக உயர்வடையும் என்பதாகும். ஆண் - பெண் சமம் என்ற பொது மக்களின் அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பெண்களில் 10 இல் 4 பேர் கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடான பங்களாதேஷிலும் இவ்வாறான சம்பவங்களை காணக்கூடியதாகவுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் பெண்களில் 84 வீதமானோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக அறியமுடிகின்றது. விசேடமாக பொது இடங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதாகவும் இளைஞர்கள் கூடி நிற்கும் பொது இடங்களில் நான்கில் மூன்று பெண்கள் இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு இலக்காவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன் 40 வீதமான பெண்கள் இவ்வாறான இன்னல்களை சந்திக்கின்றனர்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா
அரபு நாடுகளிலும் இவ்வாறான துஷ்பிரயோக மற்றும் பாலியல் சம்பவங்கள் ஏனைய நாடுகளை விட அதிகம் அரங்கேற்றப்பட்டாலும் அவைகளில் ஓரளவே வெளிச்சத்துக்கு வருவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியாக இருப்பதற்குப் பின்னால் நிறைய காரணங்கள் மறைந்திருக்கலாமென லெபனானிலுள்ள அரபுலக பெண்கள் சம்பந்தமான நிறுவனத்தின் அத்தியட்சகர் லீனா எபிராப் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக சில பெண்களிடம் கேட்ட போது, அவர்கள் முகத்தில் அச்ச உணர்வே பதிலாக கிடைக்கப்பெற்றது எனவும் தெரிவித்தார். இங்குள்ள பெண்களில் சிலர் பாலியல் சம்பந்தமாகவோ அல்லது தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவோ கருத்துக் கூற மறுத்து வருகின்றனர். இத்தரவுகளின் படி அரபுலக பெண்களில் 37 வீதமானோர் ஏதோவொரு வகையில் துன்புறுத்தலுக்கு முகம் கொடுக்கின்றனர். அதேபோன்று எகிப்திலுள்ள 7 மாநிலங்களிலும் 99 வீதமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர். அரபுலகின் எதிர்கால பெண்களின் தொழில் நிலைமையானது கேள்விக்குறியாகியுள்ளது. அதுமட்டுமன்றி திருமணமாகாத கன்னிப் பெண்களைக் கூட கொன்று குவித்து இச்சைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்குள்ள பெண்களில் விமான சேவைகளில் ஈடுபடும் பெண்களே அதிகளவான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர்.
2013 ஆம் ஆண்டு எகிப்து பற்றிய ஐக்கிய மக்கள் அமைப்பொன்று ஆராய்ச்சியொன்றை மேற்கொண்டது. அந்த அறிக்கை “ஹெரிஸ்மெப்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அவ்வமைப்பானது தலைநகர் கெய்ரோவிலுள்ள ஆரோக்கியமற்ற பி>ரதேசங்கள் தொடர்பாக பெண்களிடம் விளக்கமளிக்கும் அமைப்பாகும். நகரிலுள்ள 95 வீதத்துக்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சனத்தொகை மதிப்பீட்டு திணைக்களத்தின் தரவுகளின் படி சோமாலியாவிலும் யேமனிலும் சிறுவயது திருமணங்கள் பொதுவான விடயமாக பார்க்கப்படுகிறது. இதுவரையிலும் ஜோர்தானில் மேற்படி துஷ்பிரயோகச் சம்பவங்களுக்கு ஆளான பெண்களை திருமணம் செய்து கொள்வததென்பது நீதிமன்றத்தில் கிடைக்கப் பெறும் தண்டனையை பொறுத்தே காணப்பட்டது. அதாவது ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவன் சட்டத்தின் படி தண்டிக்கப்பட்டால், அவனது தண்டனையானது அவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகும்.
மேற்கு ஆபிரிக்கா மற்றும் சஹாரா வலயம்
ஆபிரிக்கா முழுவதும் மில்லியன் கணக்கான பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகினாலும் கூட, இக்கண்டத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது அதிகளவிலேயே காணப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் படி தன்சானியாவில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணவன் மூலமோ ஏனையவர்கள் மூலமோ துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர். இவை எதியோப்பியாவில் 71 வீதமாக காணப்படுகின்றது. நைஜீரியாவிலுள்ள பெண்கள் 18 வயதை கடக்கும் முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். அவ்வாறு திருமணம் செய்து கொண்ட சிறுவர்களில் 10 இல் 6 பேர் உடல், மன ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பர். தென்னாபிரிக்காவில் பெண்கள் துஷ்பிரயோகம் மிகையாகும். ஏனைய பிரதேசங்களை விட பெண் துஷ்பிரயோக சம்பவங்களும் மிரட்டல் போக்கும் இங்கு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் 2014 மற்றும் 2015 இன் பொலிஸ் தரவுகளின்படி 53,000 க்கும் மேற்பட்ட பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு 150 பேர் வரை இவ்வாறான சம்பவங்களுக்கு ஆளாவதாக பொலிஸாரின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டமான செய்தியாகும்.
சிம்பாப்வேயில் 2017 ஆம் ஆண்டு தரவுகளின்படி அங்கு வசிக்கும் பெண்களில் 5 இல் ஒருவர் முதன்முறையாக பாலியல் பலாத்காரம் அல்லது சுயவிருப்பின் பேரில் பாதிக்கப்படுகின்றார். அவ்வாறே 2016 ஆம் ஆண்டு சிம்பாப்வேயில் 3 இல் ஒரு பெண் ஏதோவொரு வழியில் தனது உறவினர் மூலமோ ஏனையோர் மூலமோ துஷ்பிரயோகச் சம்பவங்களுக்கு ஆளாகின்றார். தங்களது வறுமையினாலும் பணத்தை திரட்டிக் கொள்வதற்காகவும் பெண்கள் விபசார தொழிலிலும் தமது விருப்பின் பேரில் ஈடுபடுகின்றனர். இவ்வாறானவர்களின் பிரதான தொழிலாக விபசாரமே காணப்படுகின்றது. அதேபோன்று மேற்படி நாடுகளில் அநாதைக் குழந்தைகள் விடயமும் முக்கிய பிரச்சினையாகவிருக்கின்றது. அதிகமானோர் நிரந்தரத் தொழிலின்றியும் பிள்ளைகளை பராமரிக்க முடியாமலும் இருக்கின்றனர். சிம்பாப்வேயிலுள்ள பெண்கள் அல்லது யுவதிகளுக்கு பாலியல் சம்பவம் என்பது வாடிக்கையாகிவிட்டது. அங்கு சிறுவர் திருமணம் மற்றும் விபசார தொழில் என்பன இலேசான காரியமாகிப்போயின சில வேளைகளில் இவ்வாறான துஷ்பிரயோகச் சம்பவங்கள் மூலம் எதேச்சையாக கருவுற்றால் கூட, அக்கருவை கலைப்பதற்கு அப்பெண் துன்புறுத்தப்படுகிறார்.
அமெரிக்கா மற்றும் கனடா
அமெரிக்காவில் 65 வீதமான பெண்கள் துன்புறுத்தலுக்கு இலக்காக்கப்படுவதாக 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 23 வீதமான பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுகிறார்கள். அவ்வாறே இரவு வேளைகளில் வீதியோரங்களில் இடம்பெறும் அவலங்களிலிருந்து 37 வீதமான பெண்களே எந்த இடையூறுகளுமின்றி தங்களது வீடுகளுக்குச் செல்கின்றனர்.
Sex Assault Canada என்ற இணையத்தளத்தின் தரவுகளுக்கமைய 80 வீதமான பாலியல் சம்பவங்கள் அவர்களது வீடுகளிலேயே இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் 1 அல்லது 2 வீத சம்பவங்களே பொலிஸில் தெரிவிக்கப்படுகின்றன. இருப்பினும் உலகிலுள்ள ஏனைய நாடுகளை விட வட அமெரிக்காவில் துன்புறுத்தல் சம்பவங்கள் குறைந்தளவிலேயே மேற்கொள்ளப்படுகின்றதென ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐரோப்பா கண்டம்
25 ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பெண்கள் முகம் கொடுக்கும் துன்பங்கள் பற்றிய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி டென்மார்க் - 52 வீதம், பின்லாந்து - 47 வீதம், சுவீடன் - 46 வீதம், நெதர்லாந்து - 45 வீதம், பிரான்ஸ் - 44 வீதம் மற்றும் ஐக்கிய இராச்சியம் - 44 வீதம், லத்வியா -39 வீதம், லக்ஸம்பேர்க் -28 வீதம், பெல்ஜியம் - 36 வீதம், ஜேர்மனி - 35 வீதம் என தரவுகளில் தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி பெண்கள் துன்பியல் சம்பவங்கள் அதிகம் இடம்பெறும் நாடாக டென்மார்க் பதிவாகியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தரவுகளின்படி பெண்களில் 64 வீதமானோர் அநாவசியமான முறையில் பொது இடங்களில் பாலியல் தாக்குதல் சம்பவங்களுக்கு ஆளாகின்றனர்.
லத்தீன் அமெரிக்கா
பிரேஸிலில் 86 வீதமான பெண்கள் பொது இடங்களில் அல்லது பிரசித்தி பெற்ற இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அஞிtடிணிண அடிஞீ மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 84 வீதமான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அசாதாரண நிலைமைகள் பற்றி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 38 வீதமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டாலும் 60.2 வீதமான பெண்கள் மேற்படி சம்பவங்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் பசுபிக்
அவுஸ்திரேலியா, பிஜி மற்றும் பப்புவா நியூகினியாவிலுள்ள எல்லா பெண்களும் அதிகளவான துன்புறுத்தலுக்கு இலக்காவதாக அனுமானிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் வீதிகளில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களால் அல்லது துன்புறுத்தல்களால் 87 வீதமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இரவு வேளைகளில் தங்களது உறவினர்களாலேயே அல்லது அயலவர்களினாலேயே 40 வீதமான பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். பஸ்களில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களால் 77 வீதமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். ஐக்கிய மக்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தரவுகளுக்கமைய 64 வீதமான பெண்கள் தங்கள் பாதுகாவலர்களாலேயே துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். பப்புவா நியூகினியாவில் பொதுப் போக்குவரத்தின் போது 90 வீதமான பெண்கள் துன்புறுத்தலுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உலக நாடுகளில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மிக அதிகமாகவே பதிவாகின்றன. எனவே இதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளானது முழு சமூகத்துக்கும் சொந்தமாகவுள்ளது. சர்வதேச ரீதியிலும் உள்நாடுகளிலும் பெண்களின் பாதுகாப்புக்கு குரல் கொடுக்க பல்வேறு அமைப்புகள் தோன்றியிருந்தாலும் கூட, அவை பயனற்றவையாகவே இருக்கின்றன. எனவே முழு உலகமும் அதனைச் சார்ந்த அமைப்புகளும் மேற்படி சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென பொது அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக