ஆப்கானிஸ்தானை தனது இராச்சியமென கருதி வரும் தலிபான்கள், தற்போது அவர்களின் தலைவரான முல்லா ஒமரை இழந்து புதிய தலைவரின் கூட்டணியில் செயற்படுவதை அறிய முடிகிறது. தலிபான்களின் 20 ஆண்டுகால ஆட்சி தலைவனாக இருந்தவர் முல்லா ஒமர். இவர் 2001ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தாவுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களின் போது தலைமறைவாகியிருந்தார். இதன்பின்பு பல்வேறு தேடுதல்களின் போது கிடைக்காமல் இருந்த இவரைப் பற்றியதான தகவல்களை ஆப்கான் அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் தலிபான் கூட்டணி பிளவினால் ஏற்பட்ட தாக்குதல்களின் போது முல்லா ஒமர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலில் இதனை தலிபான்கள் மறுத்திருந்தாலும் தற்போது தலிபான் கூட்டமைப்பு புதிய தலைமையின் கீழ் செயற்படுவதாக அறிய முடிகிறது. எனினும், இவை தொடர்பான விவாதங்கள் நிறைவு பெற்றதாக தெரியவில்லை. முல்லா மொஹமட் ஒமர் முஜாகித் என்பவரே முல்லா ஒமராக அறியப்பட்டு வந்தவர். இவர் ஆப்கானிஸ்தானின் 11ஆவது தலைவராக 1996 முதல் 2001ஆம் ஆண்டுவரை செயற்பட்டிருந்தார். இவர் தலிபான்களின் சுப்ரீம் கொமண்டராகவும் புனித தலைவராகவும் கடந்த 2013ஆம் ஆண்டு வரை செயற்பட்டிருந்தார். 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் தேடப்படும் கைதியாக அறிவிக்கப்பட்டதுடன் அவரை அடையாளம் காண்போருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானமும் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒமரின் இரு புகைப்படங்கள் மாத்திரமே அப்போது வெளியாகியிருந்தன. ஒமர் 1950-1962 இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் இராச்சியம் என்று அழைக்கப்படும் கந்தஹார் மாகாணத்தில் (தற்போது காபூல்) இவர் 1950 அல்லது 1953 இறுதியாக 1966 வரையான ஒரு காலப்பகுதிக்குள் பிறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவரது பிறப்பிலேயே பல்வேறு சர்ச்சைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அவருடைய இறப்பு தலிபான்கள் இயக்கத்தில் பல்வேறு பிளவுகளை தோற்றுவித்திருக்கிறது இனியும் தோற்றுவிக்கப் போகும் என்பது மட்டுமே உண்மை.
தற்போது தலிபான்களுடனான சமாதானப் பேச்சு வார்த்தையில் ஆப்கான் அரசு ஈடுபட்டுள்ளது. இதில் ஒமரின் மரணம் அதிகளவில் முட்டுக்கட்டையாக அமையாது என எதிர்பார்க்கலாம். தற்போது புதிய தலைவராக பதவியேற்றுள்ள முல்லா அக்தர் மன்சூர், ஆப்கான் அரசுடனான சமாதானப் பேச்சுக்களில் அதிகளவில் இணக்கமுடையவராக இருக்கின்றார். இதனால் சமாதானப் பேச்சுக்களில் தீர்வு எட்டப்படும் சாத்தியங்கள் தென்படுகின்றன. ஆனால், தற்போது தலிபான் இயக்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவு இதை சாத்தியப்படுத்துமா என்பதே கேள்வி. குறிப்பாக தற்போது தலிபான்களின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முல்லா அக்தர் மன்சூர் தொடர்பில் ஒமரின் மகனான முல்லா யாகூப் அதிகம் உடன்பாட்டை கொண்டிருக்கவில்லை. வெளிப்படையாக தனது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார். அத்தோடு மேலும், சில தலிபான்களும் அவரின் தலைமையை எதிர்த்து வருகின்றனர். இதனால் தலிபான் கூட்டணி பிளவுபடும் சாத்தியம் தோன்றியிருக்கிறது. தலிபான்களில் ஹக்கானி பிரிவைச் சேர்ந்தவர்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களே புதிய தலைவரையும் ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர்.
இப்பிளவானது சர்வதேச நாடுகளை பயமுறுத்தும் இஸிஸ் தீவிரவாத குழுக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது தலிபான்களிடம் ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக பலர் இஸிஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து வருகின்றனர். இது ஆப்கானிஸ்தானில் இஸிஸ் தீவிரவாதிகள் தோற்றம் பெறுவதற்கு இடமளித்திருக்கிறது. 1979இற்கு பிறபட்ட காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவின் நிழல் படிய தொடங்கியதாலேயே அமெரிக்காவால் பாகிஸ்தானின் உதவியுடன் ஆப்கானில் தீவிரவாதம் விதைக்கப்பட்டது.
இதன் விளைவாகவே 1989ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலங்களில் 50இற்கும் குறைவான மத்ரஸா மாணவர்களுடன் முல்லா ஒமர் தலைமையில் தலிபான்கள் அமைப்பு தோற்றம் பெற்றது. இன்று அதன் வளர்ச்சி அதிவேகமானது. ஒரு காலத்தில், குறிப்பாக 1996- 2001ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்களே ஆண்டு வந்தனர். “செப்டெம்பர் 11’ தாக்குதலின் பின்பு அமெரிக்கா ஆப்கானில் மேற்கொண்ட படை நடவடிக்கையின் காரணமாகவே அவை சாத்தியமில்லாமல் போயிருந்தன. அவ்வாறான காலப்பகுதியில் முல்லா ஒமரே ஆப்கான் தலைவராக செயற்பட்டார்.
அன்று முதல் இன்றுவரை நோட்டோ படைகள் மூலம் ஆப்கானில் படை நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இத்தனைக்கும் அமெரிக்காவே வளர்த்துவிட்ட அல்கொய்தா, தலிபான்களை கட்டுப்படுத்தவே இவற்றை மேற்கொள்கிறது. தற்போது தலிபான்களின் பிரிவால் இஸிஸ் இயக்கமும் ஆப்கானில் தோற்றம் பெறுமானால் ஆப்கானின் நிலை என்னவாகும்? இவற்றில் முக்கியமானது இஸிஸ் இயக்கமும் அமெரிக்காமறைமுகமாகவே தோற்றம் பெற்றதே. தற்போது ஆப்கானின் பெரும் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவுக்கு முல்லா ஒமர் இறந்த செய்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகா எட்டியிருக்கும்?
அமெரிக்காவின் நெருங்கிய தோழனான ஆப்கானும் இவ்விடயத்தில் மௌனம் காத்தது எதற்காக? தற்போது புதிய கூட்டணியில் மும்முனை தாக்கத்துக்கு இலக்காக ஆப்கான் வலிந்து தலையை கொடுத்திருக்கிறது. இதனை அமெரிக்கா வேடிக்கை மட்டுமே பார்க்கும். ஈராக், சிரியாவை எவ்வாறு அழித்தொழித்திருக்கிறதோ அதேபோலவே தலிபான்களை கொண்டு ஆப்கானை பிடித்த அமெரிக்கா, 14 வருடங்களில் சாதித்தது என்ன? இனியும் சாதிக்கப் போவது என்ன?
09.08. 2015
2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் தலிபான் கூட்டணி பிளவினால் ஏற்பட்ட தாக்குதல்களின் போது முல்லா ஒமர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலில் இதனை தலிபான்கள் மறுத்திருந்தாலும் தற்போது தலிபான் கூட்டமைப்பு புதிய தலைமையின் கீழ் செயற்படுவதாக அறிய முடிகிறது. எனினும், இவை தொடர்பான விவாதங்கள் நிறைவு பெற்றதாக தெரியவில்லை. முல்லா மொஹமட் ஒமர் முஜாகித் என்பவரே முல்லா ஒமராக அறியப்பட்டு வந்தவர். இவர் ஆப்கானிஸ்தானின் 11ஆவது தலைவராக 1996 முதல் 2001ஆம் ஆண்டுவரை செயற்பட்டிருந்தார். இவர் தலிபான்களின் சுப்ரீம் கொமண்டராகவும் புனித தலைவராகவும் கடந்த 2013ஆம் ஆண்டு வரை செயற்பட்டிருந்தார். 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் தேடப்படும் கைதியாக அறிவிக்கப்பட்டதுடன் அவரை அடையாளம் காண்போருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானமும் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒமரின் இரு புகைப்படங்கள் மாத்திரமே அப்போது வெளியாகியிருந்தன. ஒமர் 1950-1962 இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் இராச்சியம் என்று அழைக்கப்படும் கந்தஹார் மாகாணத்தில் (தற்போது காபூல்) இவர் 1950 அல்லது 1953 இறுதியாக 1966 வரையான ஒரு காலப்பகுதிக்குள் பிறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவரது பிறப்பிலேயே பல்வேறு சர்ச்சைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அவருடைய இறப்பு தலிபான்கள் இயக்கத்தில் பல்வேறு பிளவுகளை தோற்றுவித்திருக்கிறது இனியும் தோற்றுவிக்கப் போகும் என்பது மட்டுமே உண்மை.தற்போது தலிபான்களுடனான சமாதானப் பேச்சு வார்த்தையில் ஆப்கான் அரசு ஈடுபட்டுள்ளது. இதில் ஒமரின் மரணம் அதிகளவில் முட்டுக்கட்டையாக அமையாது என எதிர்பார்க்கலாம். தற்போது புதிய தலைவராக பதவியேற்றுள்ள முல்லா அக்தர் மன்சூர், ஆப்கான் அரசுடனான சமாதானப் பேச்சுக்களில் அதிகளவில் இணக்கமுடையவராக இருக்கின்றார். இதனால் சமாதானப் பேச்சுக்களில் தீர்வு எட்டப்படும் சாத்தியங்கள் தென்படுகின்றன. ஆனால், தற்போது தலிபான் இயக்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவு இதை சாத்தியப்படுத்துமா என்பதே கேள்வி. குறிப்பாக தற்போது தலிபான்களின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முல்லா அக்தர் மன்சூர் தொடர்பில் ஒமரின் மகனான முல்லா யாகூப் அதிகம் உடன்பாட்டை கொண்டிருக்கவில்லை. வெளிப்படையாக தனது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார். அத்தோடு மேலும், சில தலிபான்களும் அவரின் தலைமையை எதிர்த்து வருகின்றனர். இதனால் தலிபான் கூட்டணி பிளவுபடும் சாத்தியம் தோன்றியிருக்கிறது. தலிபான்களில் ஹக்கானி பிரிவைச் சேர்ந்தவர்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களே புதிய தலைவரையும் ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர்.
இப்பிளவானது சர்வதேச நாடுகளை பயமுறுத்தும் இஸிஸ் தீவிரவாத குழுக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது தலிபான்களிடம் ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக பலர் இஸிஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து வருகின்றனர். இது ஆப்கானிஸ்தானில் இஸிஸ் தீவிரவாதிகள் தோற்றம் பெறுவதற்கு இடமளித்திருக்கிறது. 1979இற்கு பிறபட்ட காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவின் நிழல் படிய தொடங்கியதாலேயே அமெரிக்காவால் பாகிஸ்தானின் உதவியுடன் ஆப்கானில் தீவிரவாதம் விதைக்கப்பட்டது.
இதன் விளைவாகவே 1989ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலங்களில் 50இற்கும் குறைவான மத்ரஸா மாணவர்களுடன் முல்லா ஒமர் தலைமையில் தலிபான்கள் அமைப்பு தோற்றம் பெற்றது. இன்று அதன் வளர்ச்சி அதிவேகமானது. ஒரு காலத்தில், குறிப்பாக 1996- 2001ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்களே ஆண்டு வந்தனர். “செப்டெம்பர் 11’ தாக்குதலின் பின்பு அமெரிக்கா ஆப்கானில் மேற்கொண்ட படை நடவடிக்கையின் காரணமாகவே அவை சாத்தியமில்லாமல் போயிருந்தன. அவ்வாறான காலப்பகுதியில் முல்லா ஒமரே ஆப்கான் தலைவராக செயற்பட்டார்.
அன்று முதல் இன்றுவரை நோட்டோ படைகள் மூலம் ஆப்கானில் படை நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இத்தனைக்கும் அமெரிக்காவே வளர்த்துவிட்ட அல்கொய்தா, தலிபான்களை கட்டுப்படுத்தவே இவற்றை மேற்கொள்கிறது. தற்போது தலிபான்களின் பிரிவால் இஸிஸ் இயக்கமும் ஆப்கானில் தோற்றம் பெறுமானால் ஆப்கானின் நிலை என்னவாகும்? இவற்றில் முக்கியமானது இஸிஸ் இயக்கமும் அமெரிக்காமறைமுகமாகவே தோற்றம் பெற்றதே. தற்போது ஆப்கானின் பெரும் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவுக்கு முல்லா ஒமர் இறந்த செய்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகா எட்டியிருக்கும்?
அமெரிக்காவின் நெருங்கிய தோழனான ஆப்கானும் இவ்விடயத்தில் மௌனம் காத்தது எதற்காக? தற்போது புதிய கூட்டணியில் மும்முனை தாக்கத்துக்கு இலக்காக ஆப்கான் வலிந்து தலையை கொடுத்திருக்கிறது. இதனை அமெரிக்கா வேடிக்கை மட்டுமே பார்க்கும். ஈராக், சிரியாவை எவ்வாறு அழித்தொழித்திருக்கிறதோ அதேபோலவே தலிபான்களை கொண்டு ஆப்கானை பிடித்த அமெரிக்கா, 14 வருடங்களில் சாதித்தது என்ன? இனியும் சாதிக்கப் போவது என்ன?
09.08. 2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக