கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 செப்டம்பர், 2015

ஜப்பான் அதிர வைத்த அணுகுண்டு

சின்னப்பையனும் குண்டு மனிதனும் ஜப்பானை நிலைகுலைய வைத்து 70 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. இந்த 70 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகியின் வளர்ச்சி உலகை மிரட்ட வைத்தாலும், அதன் இழப்புகளை எப்போதும் நினைத்தாலும் அமெரிக்காவின் செயல் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. 2ஆம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்காவின் அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் அழிவு இம்மாத நிறைவோடு 70 ஆண்டுகளை கண்டுவிட்டது. ஆனாலும், உலகம் இன்றும் அணு ஆயுதங்களின் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்ற தறுவாயிலேயே இருக்கின்றது.
இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்பு ஜப்பான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில்லை, பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்தை இன்றுவரையும் கடைபிடிக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகியின் மேயர்கள் உலகில் எந்தவொரு பகுதியில் அணு செயற்பாடுகள் இடம்பெற்றாலும் உடனடியாக தமது கடிதங்கள் மூலம் அணுவின் விளைவுகள் தொடர்பில் எச்சரிக்கை செய்கின்றனர். அந்தளவுக்கு அணுவின் கோரமுகத்தை இவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆனால், உலகம் அறிய இன்னுமொரு அணுயுத்தம் நடந்தாலே அது சாத்தியப்படும் போலிருக்கிறது.

ஈரானில் மேற்கொள்ளப்படும் அணு உடன்படிக்கை, வடகொரியாவால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் அணுஆயுத சோதனைகள் என்பன தற்போதைய உலக அணுபிரச்சனைகளாக இருக்கின்றன. எனவே, உலகநாடுகள் ஜப்பானிடமிருந்து அணு தொடர்பில் அதிக பாடம் கற்க வேண்டியிருக்கிறது. இதுவரை உலகில் இரண்டு அணு ஆயுதங்களே போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மீண்டும் ஒரு சர்வதேச போர் ஏற்படுமாயின் அது அணுகுண்டுகளின் சாம்ராஜ்யமாகவே இருக்கும். அமெரிக்காவால் மாத்திரமே இதுவரை அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இல்லை, பரிசோதிக்கப்பட்டன என்றே கூறலாம்.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் 1945ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது ஆகஸ்ட் 06ஆம் திகதி “சின்னப் பையன்’ (ஃடிttடூஞு ஆணிதூ) என்ற யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டும், ஆகஸ்ட் 9ஆம் திகதி “குண்டு மனிதன்’ (ஊச்t Mச்ண) என்ற புளூட்டோனியம் கருப்பிளவு அணுகுண்டும் அமெரிக்காவால் வீசப்பட்டிருந்தன. இதனால் இவ்விரு நகரங்கள் மயானங்களாக காட்சி தந்தன. சகல கட்டிடங்களும் தரைமட்டமாகின. அவற்றில் எஞ்சியவை இன்றும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. ஹிரோசிமா தாக்குதலில் உடனடியாக 90,000 மக்களும் மொத்தமாக 1.45 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். நாகசாகியில் உடனடியாக 40,000 மக்களும் மொத்தமாக 75,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

இருப்பினும், இத்தகைய கொடூர தாக்குதல்களால் உடனடியாகவும் காலப்போக்கிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350,000இற்கும் அதிகமாகும். இவை வெறும் செய்திகளாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை. உலகில் மனிதனுக்கு எதிராக மனிதனே உருவாக்கிய மிக மோசமான கண்டுபிடிப்புக்கு இதுவே உதாரணம். இன்று வல்லரசு நாடுகளும், இராணுவ வல்லரசுகஹாக நினைக்கு நாடுகளும் அணுஆயுதங்களை கொண்டிருப்பதன் மூலம் வல்லரசு என்பதை தெளிவுபடுத்த விரும்பியிருக்கின்றன. ஆனால், அந்த அணு ஆயுதங்களின் பின்னால் எத்தனை மக்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் வல்லரசுகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹிரோசிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்குப் பின் பரிசோதனை நோக்கங்களுக்காகவும் செய்முறை விளக்கங்களுக்காகவும் 2000 தடவைகளுக்கு மேல் அணுகுண்டுகள் பூமியில் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரையும் ஒரு சில நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாடுகளே தொடர்ந்தும் அணுப் பரிசோதனைகளை நிகழ்த்தி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான், வடகொரியா என்பன அணு ஆயுதங்களை கையாளும் நாடுகளாக இருக்கின்றன.

ஆரம்பத்தில் இஸ்ரேல் அணுஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டது என குறிப்பிடப்பட்டாலும் அவை பற்றிய தகவல்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை. நிறவெறி அரசாங்கம் ஆட்சிசெய்த போது தென்னாபிரிக்கா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்திருந்த போதும் பின்னர் ஆட்சி மாற்றத்தின் பின் அது கைவிடப்பட்டிருந்து. ஆனால், வல்லரசுகள் இவை தொடர்பில் எந்தவொரு தீர்வினையும் எடுக்கவில்லை. அன்று ஜப்பானில் அணு பரிசோதனைக்காக வீசப்பட்ட அணுகுண்டுகள் அமெரிக்காவுக்கு வெற்றியை தேடித் தந்திருந்தாலும் இன்றுவரையும் அது ஜப்பானுக்கு சோதனையாகவே இருக்கிறது. அதன் இழப்புகளை தாங்கிக் கொள்ளும் மனநிலை இன்னும் ஜப்பானியர்களுக்கு வரவில்லை. ஆனால், அணு விபரீதம் தொடர்பிலான பக்குவத்தை அடைந்துவிட்டார்கள்.

அண்மைய நினைவு நிகழ்வுகளில் ஜப்பானிய மன்னர், பிரதமர் உள்ளிட்ட மக்கள் இன்றும் 70 ஆண்டுக்கு முன்னரான நிகழ்வுகளை அசைபோட்டு கண்ணீர் விடுகின்றனர். ஆனால், ஜப்பான் மக்கள் தைரியமானவர்கள். அணுவின் தாக்கத்தில் இருந்து இருமடங்கு வேகத்தில் அபிவிருத்தியை நோக்கி வளர்ந்துவிட்டார்கள். ஆனால், ஆசிரி, ஆபிரிக்க நாடுகளில் இவ்வாறான நிலை தோன்றியிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்?

அன்று அணுவின் வலியை உணர்ந்த, ஜப்பான் 1967இல் “அணு ஆயுத விலக்கு’ தொடர்பில் வெளியிட்ட கொள்கையையே இன்றும் கடைபிடித்து வருகிறது. இதனடிப்படையில் தான் ஒரு போதும் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்யப் போவதில்லையென்றும், அணு ஆயுதங்களை தன் வசம் கொண்டிருப்பதில்லையெனவும், தமது நாட்டுக்குள் அணு ஆயுதங்களை அனுமதிப்பதில்லையெனவும் கொள்கைப் பற்றோடு செயற்பட்டு வருகிறது. அணு விஞ்ஞானிகளின் கட்டமைப்பின் படி உலகம் முழுவதும் 17,000இற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் காணப்படுவதோடு அவற்றில் 4300இற்கும் அதிகமானவை செயற்பாட்டில் உள்ளன.

இவை எப்போது எவருக்கெதிராக சீறிப்பாயுமென்பது தெரியவில்லை. ஆனால், அணுகுண்டால் உலக அழிவுக்கான சாத்தியம் மட்டும் தெரிகிறது. ஜப்பானின் “அணு ஆயுத விலக்கு’ கொள்கை சகல நாடுகளுக்கும் விலங்கு இடுமானால் “அணு’ என்பது அரிதாய் போய்விடும்.

09.08. 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக