கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

7 செப்டம்பர், 2015

MH 370: நீடிக்கும் மர்மம்

காணாமல் போன மலேஷிய விமானமான எம்.எச்.370 இன் விமான பாகங்கள் அண்மையில் ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்காக பிரான்ஸ் அனுப்பப்பட்ட நிலையில் காணாமல் போன விமானமான எம்.எச்.370 விமானத்தின் பாகங்களே அவையென மலேஷிய பிரதமர் செய்தியினை உறுதிப்படுத்தியிருந்தார். இருப்பினும் உலகதொழில்நுட்ப வல்லுநர்களுக்கே சவாலாக இருந்த இதன் கண்டுபிடிப்பில் இன்றும்கூட மர்மங்கள் விலகவில்லை. ஆரம்பம் முதலே இது விமானியின் தற்கொலை விபத்தாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று அவ்வறிருக்க வாய்ப்பு மிகக் குறைவென விமானியின் உறவினர்கள் தெரிவித்திருப்பதால் விமான விபத்தின் மர்மம் தொடர்ந்தே செல்கின்றது.

எவ்வாறெனினும் விமானத்தினுடைய பாகங்கள் முதலில் பிரான்ஸுக்குச் சொந்தமான ரீயூனியன் தீவிலும் பிறகு மாலைத்தீவிலும் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு விமானப்பாகங்கள் சிதறியிருக்கும் என்பதை பெரிதாக யூகிக்கத் தேவையில்லை. கடலின் செயற்பாடுகள் காரணமாக அவை இடம்மாறியிருக்கலாம் என்று எடுத்துக் கொண்டாலும் விமானத்தின் கறுப்புப் பெட்டியை எவ்வாறு மீட்கப் போகிறார்கள். அதற்கான சாத்தியங்கள் இல்லையென்றே தெரிகிறது.


தற்போது மாலைத்தீவிலுள்ள விமான சிதைவுகளை இனங்காண்பதற்காக மலேஷிய குழுவொன்று மாலை தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரையொதுங்கியுள்ள விமான பாகங்கள் குறித்து எந்தவொரு பரிசோதனைகளையும் மேற்கொள்ளவில்லையென மலேஷிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இவை தொடர்பில் மலேஷியப் பத்திரிகைகள் வெளியிட்ட புகைப்படங்களின் அடிப்படையில் நோக்கும்போது, கரையோரங்களில் காணப்பட்ட சாம்பல் நிற பொருட்களே தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், அதில் ஒன்று உள்ளூர் கட்டுமானப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட சீமெந்து சட்டகத்தின் ஒரு பகுதியாக தோன்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலேஷிய அரசும் காணாமல் போன விமானத்தில் இருந்த உறவினர்களின் அழுத்தத்தை குறைப்பதற்காக அதிகளவில் செயற்படுகிறது. ஆனாலும், தீர்க்கமான முடிவுகளை வெளியிடுவதிலிருந்து மலேஷிய விமான நிறுவனமும் மலேஷிய அரசும் தவறியிருக்கின்றன. விமானம் காணாமல் போய் ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் அதிகளவான அழுத்தங்களை இவர்களும், இவர்களை நம்பியிருக்கும் மக்களும் சந்தித்திருக்கின்றனர். ஆனால், இன்றும் நீக்கம் பெறாத மர்மமாகவே இருக்கிறது.









கடந்த ஒரு வருட காலப்பகுதியில் வாய் திறந்திருக்காத விமானியின் உறவினர்கள் தற்போது விமானி மிகவும் உத்தமர் என்ற ரீதியில் விளக்கமகொடுத்திருக்கின்றனர். மலேஷிய விமானம் எம்.எச்.370 விமானியான ஜஹாரி அகமது ஷாவின் சகோதரி, ‘பயணிகளின் பாதுகாப்புக்கு அவர் எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பார். ஒருவேளை பிரச்சினை ஏற்பட்டிருந்தால் தன்னைத்தானே மாய்த்து கொண்டிருப்பாரே தவிர மொத்தமாக அத்தனை பேரையும் கொன்றிருக்க மாட்டார்’ என தெரிவித்துள்ளார். ஆனால், சர்ச்சைக்குள்ளாகியிருந்த விமானி அகமது ஷா, 1981ஆம் ஆண்டு மலேஷியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த இவர், 18,000 மணிக்கும் அதிகமான நேரம் விமானத்தில் பறந்த அனுபவமுடையவர்.

அதேவேளை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விமான நிபுணர் ஹேன்ஸ் போர்ட் விமானி விமானத்தை வேண்டுமென்றே கடலில் விழவைத்திருப்பது போன்றே தென்படுவதாக தெரிவித்திருந்தாலும், அதேசமயம் விமானத்தில் கோளாறு ஏற்பட்டு தீவிலோ, அல்லது கடலிலோ விமானத்தை இறக்கி பயணிகளை காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், ரேடார் பதவிலிருந்து விமானம் தப்பித்திருப்பதே விமானி மீதான சந்தேகத்தை வலுக்கச் செய்திருந்தது.

இன்றைய நாளிலும் கூட விமானத்தின் மர்மம் வெளியிப்படவில்லை. ஆனால், விமானம் கடத்தப்பட்டு ரீயூனியன் பகுதியில் விபத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு குழு. ஆனால், இந்து சமுத்திர பகுதியிலே விமானம் இருக்குமென்பது ஆரம்ப அனுமானமாக இருந்தது. விமான தெற்கு நோக்கி திரும்பி தன்னியக்க முறையில் இயங்கியிருப்பது செய்மதிகளின் கணிப்பு. ஆனால், மர்மம் என்னவோ? நிச்சயமாக அவர்களில் யாரும் உயிருடன் இருக்க முடியாது. விமானமும் இருப்பது சாத்தியமில்லை. எஞ்சியிருக்கும் ஆதாரம் கறுப்பு பெட்டி மாத்திரமே. அது கிடைக்க வேண்டுமாயின் ஆழ்கடல் தேடல் அவசியம். விபத்துக்கான காரணத்தை தேடிய மலேஷிய உளவுத்துறை முற்றுப்பெறாத பிங்  தகவலை காரணம் காட்டியிருந்தது.

ஆனால், இன்னொரு விடயத்தில் விமானம் தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. உலகில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதியில் நடுகடல் பகுதிகளில் புவியீர்ப்பு விசை அதிகமாகும். அங்கு 60,000 அடிவரை புவியீர்ப்பு விசை காணப்படும். அதன்மேல் எந்தப் பொருள் சென்றாலும் உள்ளீர்த்து விடும். முக்கியமாக இந்தோனேஷிய கடல் பகுதி, வங்காள விரிகுடா, அந்தமான் பகுதிகளில் இவை இருக்கிறது. விமான விபத்து பகுதியும் அதனை அண்மித்துள்ளதால் அவை தொடர்பான சந்தேகங்களும் வலுத்துள்ளன. மலேஷிய விமான விபத்துக்கு மனித காரணங்களாக பயங்கரவாதத்தையும் தற்கொலையையுமே கூறமுடியும். ஆனால், அதையும் தாண்டி வான்வெளியில் பல்வேறு இயற்கை காரணங்கள் இருக்கின்றன. அவற்றை கடந்தே விமான போக்குவரத்துக்கள் வெற்றிகரமாக செயற்படுகின்றன. ஆனால், எம்.எச்.370 இன் மர்மம் அவிழ்க்க முடியாததாக இருப்பது விமானப் போக்குவரத்து துறைக்கே சவால். அவற்றை முறியடிக்க கறுப்புப் பெட்டியால் மட்டுமே முடியும். அடுத்தது என்ன?

க.பிரசன்னா
16.08. 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக