பழைமை போற்றும் பண்புகளுக்கு பெயர்போன பிரித்தானியா இன்றும் தமது மரபுகளுக்கு முக்கியத்துவமளித்து வருகிறது. குறிப்பாக மகாராணி பதவியினை குறிப்பிடலாம். பெரும்பாலான நாடுகளில் இப்பதவி நிலைகள் காணப்பட்டாலும் தற்போது அவர்களுடைய அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு நாட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரித்தானிய மகாராணியின் நிலை அவ்வாறானதல்ல. உலகில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர். இன்றும் பிரித்தானியாவை தாண்டி பல நாடுகளுக்கு மகாராணியாக செயற்படுகிறார். தற்போது அந்த மகுடமும் உலக சாதனைக்காக காத்திருக்கிறது.
பிரித்தானியாவின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் தனது தந்தை இறந்தபின்பு 1952 ஆம் ஆண்டு முதல் அதாவது தனது 25 ஆவது வயதிலிருந்து மகாராணி பதவியை அலங்கரித்து வருகிறார். தற்போது 89 வயதான மகாராணி எலிசபெத் 63 ஆண்டுகளாக பதவியிலுள்ளார். இவருடைய மூன்று தலைமுறைக்கும் முந்திய முப்பாட்டி விக்டோரியா மகாராணியே இதற்கு முன்பு 63 வருடங்களாக இப்பதவியில் இருந்தவர். செப்டெம்பர் 9 ஆம் திகதி விக்டோரிய மகாராணியின் பிறந்ததின நிறைவோடு உலகிலேயே மிக நீண்டகாலம் மகாராணியாக பதவி வகித்த பெருமையை எலிசபெத் அலக்சாந்திரா மேரி என்கிற தற்போதைய பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1926 ஆம் ஆண்டு பிறந்த எலிசபெத் மகாராணி 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான மகாராணியாகவுள்ளார். இந்நாடுகள் அனைத்தும் வெவ்வேறு ஆட்சிப்பெயர்களைக் கொண்டிருக்கின்றன. மகாராணி பிரித்தானியாவின் பாக்கிங் ஹேம் அரண்மையில் வசித்து வருகிறார்.

54 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவராகவும் இங்கிலாந்து திருச்சபையின் உயரிய ஆளுநராகவும் இவர் விளங்குகின்றார். இறைமையுள்ள நாடுகளில் இவருடைய அதிகாரம் பரந்துபட்டதாகவிருந்தாலும் பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை. தற்போது அரச வம்சத்தில் 3 தலைமுறையினரைக் கண்டுள்ள மகாராணி, தனது முடிக்குரிய பதவியினை தனது மகனான சார்லஸிடம் சமர்ப்பிக்கும் அதிகாரங்கள் தென்படுகின்றன.
இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் கூட மகாராணியின் தடங்கள் அதிமாகவேயுள்ளன. இலங்கை போன்ற நாடுகளிலும் மன்னர் ஆட்சி காணப்பட்டிருந்தாலும் தற்போது அவர்களுடைய வம்சத்தினர் இருந்திருந்தாலும், அவர்கள் போற்றுதலுக்குரியவர்களாக இருக்கவில்லை. இலங்கை போன்ற நாடுகளில் பழைமை போற்றும் பண்புகள் மிகவும் அரிதானதே. இன்று இந்நாடுகளில் அரசியல் பிறழ்வு, ஆட்சி போட்டி என்பன வரலாறுகளை மழுங்கடித்துவிட்டன. ஆதலாலேயே பிரித்தானியா போன்ற மரபுவழி அரசினையும், அரசாட்சியையும் வளர்ச்சியையும், அரசியல் கலாசாரத்தையும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணமுடிவதில்லை.
இளவரசர் அல்பெர்டிட்கும் அவரது மனைவி எலிசபத்திற்கும் முதல் குழந்தையாக பிறந்தவரே 2 ஆம் எலிசபெத். தனது கொள்ளுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா,பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களை இணைத்தே எலிசபெத் அலக்ஸாண்டரா மேரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு பிலிப்பை மணந்த இவர் 4 குழந்தைகளுக்குத் தாயாவார். சார்ளஸ், ஆன், அண்ட்ரூ, எட்வர்ட் இவர்களின் பிள்ளைகளாவர். 1952 ஆம் ஆண்டு எலிசபெத்தின் தந்தை இறந்த பின்பு பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஏழு நாடுகளின் அரசியாக தனது 25 ஆவது வயதில் முடிசூடிக் கொண்டார். உலக வரலாற்றில் முடிசூடும் நிகழ்வொன்று நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு சம்பவமாக அமைந்தது இதுவோயாகும். இந்நாடுகளைத் தவிர்ந்து ஏனைய 15 நாடுகளுக்கும் அரசியாக இவரே உள்ளார். ஆனால் தற்காலத்தில் இவை சுதந்திரம் பெற்ற இறைமையுள்ள நாடுகளாக இருக்கின்ற போதிலும் ஒரு சில நாடுகளில் இன்னும் அரசியின் நிலை சிறப்பு பெற்றே வருகின்றது.
மகாராணியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட உலகமே விமர்சிக்கும் சில சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. 1992-1996 ஆம் ஆண்டுகளில் மகாராணியின் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் விவாகரத்துக்கள், 1997 இல் இளவரசி டயானாவின் விவாகரத்து மற்றும் கொலை என்பன சகலராலும் விமர்சிக்கப்பட்ட விடயங்களாகும். பிரித்தானிய அரசகுடும்பம் தொடர்பாக அண்மைய கருத்துக் கணிப்புகளில் கூட குறைந்த தொகையினர் அரச குடும்பத்தினர் மக்கள் வரிப்பணத்தை வீணாக செலவு செய்கின்றனர் என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தாலும் பிரித்தானியாவில் சகல அரச நிகழ்வுகளிலும் முதன்மை தெரிவாக மகாராணியாரே இருக்கின்றார். எனவே பிரித்தானியாவில் பழைமை போற்றப்படும் வரை மகாராணி முதன்மையாகவே இருப்பார்.
அநகன்
30.08. 2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக