இஸிஸ் தீவிரவாதத்தை நாளுக்கு நாள் வளரவிடும் அமெரிக்க கூட்டுப் படைகளின் கவனயீனம் அது நாடு கடந்த ஆளணியினை தோற்றுவிக்க காரணமாகின்றது. அண்மையில் இலங்கையர் ஒருவர் சிரியாவில் இஸிஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்ததுடன் உறுதிப்படுத்தப்பட்டும் இருந்தது. இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் எத்தனை பேர் அவ்வியக்கத்தில் இணைந்து செயற்படுகின்றனர் என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஈராக்- சிரியாவில் மிக அழுத்தமான செயற்பாடுகளை இஸிஸ் தீவிரவாதிகள் கொண்டுள்ளனர்.
ஆனால், அங்கு அசாதாரண நிலைமை காணப்படுவதால் இலங்கை மற்றும் எந்தவொரு அரசாலும் அங்கு செல்வதற்கான எவ்வித பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அவ்வாறு விதிப்பது தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறு என்றாலும் தேசிய பாதுகாப்பு கருதி அவற்றை செயற்படுத்த முடியும். ஆனால், தற்போது இஸிஸ் இயக்கத்தில் இருந்து கொல்லப்பட்டுள்ள முதலாவது இலங்கையரான முகமட் நிலாம் என்ற அபூ சுரேன் சிலானியின் செயற்பாடுகள் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆழமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டுகின்றன.
கண்டி, குருந்து கொல்லவை வசிப்பிடமாக கொண்டுள்ள 37 வயதான முகமட் நிலாம், 6 பிள்ளைகளின் தந்தையாவார். இவர் நிவாரண உதவிப் பணிகளுக்காகவே சிரியாவுக்கு செல்வதாக தமது குடும்பத்தை நம்ப வைத்திருக்கிறார். ஆனால், இஸிஸ் தீவிரவாதிளுடன் இணைத்து போராட்டத்தையே மேற்கொண்டிருக்கிறார். இவர் இலங்கையில் க.பொ.த. சாதாரண தரம் வரையான கல்வியை கற்று, பாகிஸ்தானில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரியா சட்டம் தொடர்பான சட்டமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இவருடைய தந்தை மற்றும் பாட்டன் கூட இலங்கையில் சட்டத்தரணிகளாக கடமையாற்றியுள்ளனர். இவர் இலங்கையின் சட்டக்கல்லூரியில் சட்டத்தரணியாக 2013இல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அத்துடன் 2010- 2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு டிசம்பர் வரை கலேவலையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையொன்றின் அதிபராகவும் கடமையாற்றியிருக்கிறார். எனவே, 2015ஆம் ஆண்டிலேயே அவருடைய இஸிஸ் தீவிரவாதிகளுடனான தொடர்பு ஆரம்பமாகியிருக்கலாம்.
ஈராக்- சிரியா போன்ற நாடுகளில் ஷரியா சட்டங்களை நடைமுறைப்படுத்திய இஸ்லாமிய அரசு உருவாக வேண்டுமென்பதே இஸிஸ் தீவிரவாதிகளின் இலக்கு. அதேபோலவே கொல்லப்பட்டுள்ள இலங்கையரான முகமட் நிலாம் பாகிஸ்தானில் ஷரியா சட்டம் பயின்றவர். சிலவேளை இவருக்கு பாகிஸ்தானில் இஸிஸ் தீவிரவாதிகளை சந்தித்து பழக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். அங்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகளின் கூடமாக பாகிஸ்தான் செயற்படுவது உலகம் அறிந்திராத உண்மையல்ல. அது இஸிஸ் தீவிரவாதிகள் வந்து செல்வதற்கான கட்டுப்பாடுகளை கொண்ட ஒரு நாடுமல்ல.
எனவே, அவருடைய இஸிஸ் தீவிரவாதிகளுடனான இணையும் எண்ணம் அங்கிருந்து தோன்றிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். சுமார் 7 மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமை படைத்த இவர், கடந்த வருடம் இஸிஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இவை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன், இதன் முதற்கட்டமாகவே அவருடைய தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
இவர் ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டிருந்த சுனாமி அனர்த்தங்களின் போது நிவாரண உதவியாளராக செயற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்நிலைமையினை பயன்படுத்தி தன் குடும்பத்திடமிருந்து விடைபெற்று இஸிஸ் தீவிரவாதத்தோடு இணைந்துள்ளார். இவ்விடயம் தொடர்பான ஊடகத் தகவல்களினால், இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர் தொடர்பில் விசாரணையொன்றை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
முதற்கட்ட விசாரணையில் இவர் கண்டியைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவல். இவர் தொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் அவர் வெளியிட்டிருக்கவில்லை. இஸிஸ் தீவிரவாதிகளுடன் இவர் இணைந்திருந்த நிலையிலேயே விமானத் தாக்குதலில் இறந்தார் என்பது தொடர்பான ஒலி நாடா அவர்களின் குடும்பத்திற்கு கிடைக்கப் பெற்றிருப்பதும், இவை தொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இஸிஸ் அமைப்போடு இணையும் எவரும், அவருடைய குடும்பத்தின் தகவல் அனைத்தையும் ஒப்புவிக்க வேண்டுமா?
அல்லது இவருடைய இலங்கை நண்பர்கள் வேறு யாராவது தீவிரவாதிகளுடன் இணைந்திருக்கிறார்களா? அப்படியெனில் எங்கோவொரு மூலையில் தீவிரவாதத்துக்கான ஆட்சேர்ப்பு வலையமைப்பு காணப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் ஆட்சேர்ப்பு பணிகள் இடம்பெறுகின்றன. சர்வதேச ரீதியில் பரந்துவிரியும் இவர்களின் தொடர்புகளால் இவர்களுடைய தீவிரவாதம் சர்வதேச ரீதியாகவும் தொடர அதிகமாகவே வாய்ப்பிருக்கிறது. இவர்களுடைய இஸ்லாமிய அரசு சிரியா- ஈராக்கை தாண்டி விரியும் சூழ்நிலையை தற்போது எம்மால் அறிய முடிகிறது.
தற்போது இஸிஸ் தீவிரவாத அமைப்பில் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர். இதில் முகமட் நிலாம் இலங்கையின் முதலாவது நபர். எனவே, தீவிரவாதிகளின் சாதகமான சூழ்நிலையை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கும் தற்போது பாதுகாப்பை மீல்பரிசீலனை செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. கொல்லப்பட்டவர் இலங்கையர் எனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
க.பிரசன்னா
26.07. 2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக