கிரேக்கத்தின் நிதிநெருக்கடி நிலைமை ஓரளவுக்கு சீரடைந்திருக்கும் நிலையில், மீண்டும் கிரேக்க வங்கிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதுடன், வங்கிகளில் பணம் பெறுவது தொடர்பிலான கட்டுப்பாடுகள் ஒரளவு தளர்த்தப்பட்டுள்ளன. கிரேக்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்திற்கு செலுத்தவேண்டிய சகல நிலுவைகளையும் திருப்பிச் செலுத்தியுள்ளதுடன், கடன் மீட்பு திட்டத்துக்கு கிரேக்க பாராளுமன்றமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் கிரேக்கம் “தற்காலிக’ நிதி நெருக்கடி நிலைமையையே ஈடுசெய்துள்ளது. கடந்த வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்தவேண்டிய தொகையை கிரேக்கம் செலுத்த தவறியிருந்ததால் கிரேக்க வங்கிகள் அனைத்தும் செயல்பாட்டை இழந்திருந்தன.
மக்கள் பணம் பெறும் தொகை 60 யூரோவாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. எனினும், ஒரு சில நாட்களில் வங்கியின் நிலைமை மோசமடையவே கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. தற்போது வங்கிகளில் காசோலை வைப்பிடல், கட்டணங்களைச் செலுத்தும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வந்தாலும் பணம் மீளப் பெறுவதற்கும், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்குமான கட்டுப்பாடுகள் தொடருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் வாரமொன்றுக்கு ஒருவர் 420 யூரோக்களையே மீளப்பெறும் சூழல் உருவாகியுள்ளது. நிதி நெருக்கடியிலுள்ள கிரேக்கத்தை மீட்பதற்கான கடன் மீட்பு திட்டத்துக்கான, செலவீனங்களை குறைப்பது தொடர்பான விடயங்களுக்கு கிரேக்க பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் உணவு பண்டங்கள் போக்குவரத்து உட்பட பல சேவைகளுக்கான வரியும், பொருட்கள் மீதான விற்பனை வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது கிரேக்க மக்களின் நெருக்கடியை இன்னும் துரிதப்படுத்தியுள்ளது.
தற்போது கிரேக்கம் அமுல்படுத்தியிருக்கும் கடன் மீட்புத் திட்டத்தின் பயனாக யூரோ வலய நாடுகளால் கிரேக்கத்திற்கு 8600 கோடி யூரோக்கள் வழங்கப்படும். இது கிரேக்கத்தின் நிதி நிலைமையை சீர்செய்ய பயன்படும். ஆனால், யூரோ நாடுகளில் முக்கியமான நாடான ஜெர்மனியானது, கடந்த 5 வருடங்களில் மூன்றுமுறை கிரேக்க கடன் மீட்புத் திட்டத்துக்கு உதவியிருக்கிறது. இது ஜெர்மனியின் சான்சிலர் அஞ்சலோ மேர்கலை கடும் நெருக்கடிக்குள் தள்ளியிருப்பதுடன், ஜெர்மன் பாராளுமன்றத்திலும் பாரிய சர்ச்சையாக வெடித்திருந்தது. கிரேக்கத்தின் பொருளாதார நிலைமை தற்காலிகமாக தீர்க்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையக் கூடிய சூழல் தோன்றியுள்ளது. தற்போது கிரேக்கத்தில் குழந்தை பிறப்பு வீழ்ச்சி மற்றும் வேலையற்றோர் வீதம் அதிகரிப்பு, கல்லூரிகளில் உணவுக்கான மானியம் நிறுத்தம் என பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் அமுலில் உள்ளதால் வறுமைக் கோட்டுக்கு கீழான மக்கள் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கிரேக்கத்தில் உள்ள 48 இலட்சம் தொழிலாளர்களில் 11 இலட்சம் தொழிலாளர்கள் ஆண்டுக்கு 6000 யூரோக்களுக்கு குறைவான ஊதியத்தையே பெறும் நிலையில் இருக்கின்றனர். வேலையற்றோர் தொகை 28வீதமாக உயர்ந்துள்ளது. இவற்றில் இளைஞர்களின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் வறுமைக்கோட்டிற்கு கீழேயே உள்ளனர். கடன்தாரர்களின் நிபந்தனை காரணமாக சுகாதாரத் துறைக்கு ஒதுக்கிய 500 கோடி யூரோக்களை 200 கோடி யூரோக்களாக கிரேக்கம் குறைத்துள்ளது. இதனால் பொது மருத்துவத்திற்கான மானியங்கள் நிறுத்தப்பட்டதுடன் பிரசவ காலத்தின் போதான உதவி தொகைகளும் முற்றாக நிறுத்தப்பட்டன. இவை அந்நாட்டின் சுகாதாரத் துறையை மிகவும் பாதிக்கும் விடயங்களாக அமைந்திருக்கின்றன. இதனால் குழந்தைபெறும் வறிய தாய்மார்கள் தங்களது கட்டணங்களை செலுத்தமுடியாமையால் இரவில் களவாக வெளியேறிவிடுவதால் பதியப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையும் கிரேக்கத்தில் அதிகரிப்பதாக தெரிகிறது.
மேலும் கிரேக்க பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு உணவுக்கு வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டதால், விடுதிகளிலுள்ளவர்கள் அதிகவிலைகளில் உணவை பெறவேண்டிய சூழல் தோன்றியுள்ளது. கிரேக்க மக்கள் தொகையில் 28 இலட்சம் பேர் வாழ்வதற்கே பணமில்லாத நிலையிலும் 4 இலட்சம் பேர் தமது குடும்பத்தில் எவருக்குமே வேலையில்லாததால் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 6 இலட்சம் பேர் தங்களுக்கான ஓய்வூதிய தொகையை அரசு நிறுத்தியுள்ளதாலும், தவணை முறையில் வழங்கி வருவதாலும் தங்களது வாழ்க்கையினை கொண்டு நடத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, கிரேக்கத்தில் நிதி நெருக்கடி என்பது ஆட்சியை மட்டும் பாதிக்கவில்லை. உலகிற்கே தெரியாத பல விடயங்களையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். கிரேக்கம் ஒரு வளர்ந்த நாடு என சொல்லப்பட்டாலும் வறுமையின் கீழ் அதிகமானோரை கொண்டிருக்கிறது. கிரேக்க கடன் அவர்களை இந்நிலைக்குள் தள்ளியிருக்கிறது. இது ஒரு அரசாங்கத்தின் பிரச்சினையல்ல. மக்களின் பிரச்சினையே.
அநகன்
26.07. 2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக