ஆசிய நாடுகளின் அரசியல் நிலைவரங்களில் மாலைதீவு விவகாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மொஹமட் நஷிட்டின் கைதானது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியொருவரின் நிலை கவலைக்கிடமாவது ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை புதிய விடயமல்ல. இதற்கு முன்பும் கூட பல தடவைகள் நஷிட் கைது செய்யப்பட்டிருந்தாலும், தற்போதைய கைது நாடளாவிய ரீதியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பதவியேற்று 15 மாதங்கள் நிறைவடைகின்ற போதும், மாலைதீவு அரசியலில் ஸ்திரத்தன்மையை காணமுடியாதுள்ளது. மாலைதீவின் முன்னாள் இராணுவ அதிகாரியான பாதுகாப்பு அமைச்சரை பதவி விலக்கிய நஷிட், இராணுவ சதிப்புரட்சியொன்றிற்கு திட்டமிட்டதாக கூறியே அவரைக் கைது செய்துள்ளனர் என்பதுடன், தலைநகரில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இவரின் கைதும் இடம்பெற்றுள்ளது. கடந்த 30 வருடகாலமாக ஆட்சியில் இருந்த அப்துல் கையூமின் பதவியிறக்கத்தோடு கடந்த 2008ஆம் ஆண்டு மொஹமட் நஷித் ஜனநாயக ரீதியில் பதவியேற்ற முதலாவது ஜனாதிபதியானார்.
ஜனாதிபதியாக பதவியேற்றிருந்த நஷிட், கையூமின் 30 வருட கால ஆட்சியில் இடம்பெற்றதாக கருதப்படும் துஷ்பிரயோகங்கள், மோசடிகளை விசாரணை செய்ய பல குழுக்களை நியமித்ததோடு, குழுக்களின் வேண்டுகோளுக்கமைய சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குமாறு பிரதம நீதியரசரைப் பணித்திருந்தார். ஆனால், நஷிட்டின் பணிப்புரையை ஏற்க மறுத்த பிரதம நீதியரசரை அப்துல்லா மொஹமட்டை, இராணுவ துணையுடன் கைது செய்ததுடன் நீதிபதியை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றம் விடுத்தத் தீர்ப்பினையும் நிராகரித்திருந்தார்.
இதனால் மாலைதீவு மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியிருந்த நஷிட் தனது பதவிக்காலத்தில் ஒருவருடம் எஞ்சியிருக்க பதவி கவிழ்க்கப்பட்டார். எனினும், பொலிஸ் தலைமையகத்தில் 18 பேர் கொண்ட குழு துப்பாக்கியுடன், தம்மைச்சுற்றி இருந்து பதவி விலகுமாறு பணித்ததாலேயே பதவி விலக நேரிட்டதாகவும் இராணுவ சதிப்புரட்சி மூலமே அப்போது அவர் பதவி விலக்கப்பட்டதாகவும், நஷிட்டின் ஆதரவுக் குரல்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தன. இவ்வார்ப்பாட்டங்களில் சுமார் 18 பொலிஸ் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. 2003ஆம் ஆண்டு சிறைச்சாலையில் கைதியொருவர் இறந்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் பின்பு மாலைதீவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இது பதிவானது.
ஆசிய நாட்டு அரசியல் கலாசாரங்களில் அரசியல் பழிவாங்கல்கள் என்பது ஆட்சிமாறும் போது ஏற்படும் முக்கிய நிகழ்வாக மாறிப்போய்விட்டது. அவ்வாறானதொரு நிலையே மாலைதீவு அரசியலிலும் இடம்பெற்றுள்ளது. கடும் போக்கு சுன்னி முஸ்லிம்களைக் கொண்ட மாலைதீவிலிருந்து இதுவரையும் 200 பிரஜைகள் இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுடன் இணைவதற்காக அண்மைக்காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், ஆயுதப் போராட்டத்தையே அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும், நஷிட் தலைமையிலான எதிரணியினர் குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே தற்போது நஷிட்டின் கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு பதவியேற்ற நஷிட் ஆரம்ப காலங்களில் புதுமையான விடயங்களை செய்து மாலைதீவு மக்களை தனது ஆட்சியால் கவர்ந்திருந்தாலும், காலப்போக்கில் அவரது ஆட்சியில் சர்வாதிகாரப் போக்கு தென்பட்டமையும் அவரின் இந்நிலைக்கு காரணமெனக் கூறலாம். இவருடைய ஆட்சிக்காலத்தில் மலே சர்வதேச விமான நிலையத்தினை முகாமைத்துவம் செய்வதற்காக 25 வருடகால ஒப்பந்த அடிப்படையில் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு டில்லியிலுள்ள நிறுவனமொன்றுக்கு ஒப்படைத்த விடயமானது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருந்தது.
அத்தோடு அவ்வொப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறு கோரிய எதிரணியினரின் கோரிக்கையினையும் அப்போது அவர் நிராகரித்திருந்ததுடன், 2008ஆம் ஆண்டு சர்வதேச வெளிப்படைத் தன்மை நிறுவனத்தின் ஊழல் அளவுகோளின் படி மாலைதீவு 115 ஆவது இடத்தில் இருந்திருந்தாலும் 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் அது 134 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டமையும் நஷிட்டின் ஆட்சிக்காலத்தில் ஊழல் நிலைமை மோசமாக காணப்பட்டமைக்கு சான்றாகவும் அமைந்திருந்தது. மேற்படி விடயங்களே இவரின் பதவிக் கவிழ்ப்புக்கு காரணமாக கூறப்பட்டாலும், இவர் 2013ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மாலைதீவு மக்களே இவரை வெளியேற்றியிருப்பர் என்ற கருத்துமுண்டு.
சுமார் 100 தீவுகளைக் கொண்ட மாலைதீவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியிலான முறுகலானது சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது உலகம் மோசமான ஆயுத கலாசாரங்களை சந்தித்துள்ள வேளையில் மாலைதீவும் அக்கலாசாரத்தை ஊக்குவிக்கிறதென்பதே எதிர்க்கட்சியினரின் வாதம். இவ்வாறான நிலைமைகள் எதிர்வரும் காலங்களில் இன்னும் மோசமடையக் கூடும்.
நஷிட்டின் கைது இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும், அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்ட வேளையிலும், ஒரு சந்தேக நபர் அல்லது முன்னாள் ஜனாதிபதியென்ற வகையில், பாதுகாப்புத் துறையினர் நடந்து கொள்ளவில்லை. அமெரிக்க இராணுவம், கடாபியை பொது மக்கள் முன்னிலையில் எவ்வாறு இழுத்து செயற்பட்டதோ அவ்வாறானதொரு சூழலையே இங்கும் காணமுடிந்தது. அப்படியாயின் நஷிட் ஒரு சர்வாதிகாரியா? எவ்வாறெனினும் மாலைதீவில் மட்டுமல்லாது ஆசிய நாடுகளிலேயே புரையோடிப் போயுள்ள அரசியல் பழிவாங்கல்கள் மாலைதீவையும் ஆட்கொண்டிருப்பது சாபக்கேடு.
க.பிரசன்னா
01.03.2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக