ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் குறிப்பிட்ட 5 நாடுகள் மட்டுமே பெற்றுள்ள வீட்டோ அதிகாரத்தை (Veto Power) இரத்து செய்தற்கான கோரிக்கையை சர்வதேச மன்னிப்புச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது. ஒருவேளை, வீட்டோ அதிகாரம் தொடர்பில் உலகளவில் வாக்களிப்பு நடத்தப்படுமாயின், நிச்சயம் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளைத் தவிர்த்து ஏனைய நாடுகள் அதன் இரத்து செய்வதற்கே வாய்ப்பளிக்கக் கூடிய நிலை இன்று காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் என்பது, பாதுகாப்புச் சபையில் நிரந்த உறுப்பு நாடுகளாக இருக்கின்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை பெற்றுள்ள சிறப்பு இரத்துச் செய்யும் அதிகாரமாகும். இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கு இந்நாடுகளின் பங்கு சிறப்பானதாக அமைந்ததால் 1946ஆம் ஆண்டு முதல் இவை சிறப்பு இரத்து செய்யும் அதிகாரம் பெற்ற நாடுகளாக அறியப்படுகின்றன. இவை ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு பெருமையாக அமைந்திருந்தாலும், கூட தற்போது இந்நாடுகளுக்கிடையில் காணப்படும் போட்டித் தன்மையால் உலக நாடுகளில் ஆயுத கலாசாரத்தை இல்லாறொழிக்கும் செயற்பாடுகளில் பக்கச்சார்பான தீர்வுகள் அரங்கேறுகின்றமை வெளிப்படையான
உண்மையாகும். 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் இறுதி அறிக்கையில் வீட்டோ அதிகாரம் கைவிடப்படவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்துக்களும் பதியப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டு அதிக வன்முறைகள் மற்றும் இலட்சக் கணக்கான மக்கள் அவதியுறும் ஆண்டாகவும் பதிவாகியுள்ளது. மேற்படி நிலையின் வீரியத்துக்கு வீட்டோ நாடுகளே அதிகளவில் செல்வாக்கு செலுத்தியிருந்தன. குறிப்பாக பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை தமது அரசியல் இலாபங்களுக்காக இரத்து செய்து கொள்ளும் நிலையினாலேயே உலகம் ஆபத்தான நிலையினை எட்டியிருக்கிறது. இவை பொது மக்களை பாதுகாப்பதை விடவும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டே செயற்படுகின்றன.
பொதுச்சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளில் ஒரு நாடு தனது இரத்து செய்யும் அதிகாரத்தை பயன்படுத்தினாலும், அவை செயலற்று போய்விடும். அவ்வாறானதொரு நிலைமையே இஸ்ரேல் மற்றும் சிரியா போன்ற மனித அவலம் நிறைந்த நாடுகளுக்கு ஏற்பட்டது. அமெரிக்காவின் ஆதரவு நாடான இஸ்ரேல், பாலஸ்தீனம் உட்பட இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்படுத்திய நெருக்குதல்களின் போது, ஐ.நா.சபை கொண்டுவந்த 30இற்கும் மேற்பட்ட கண்டன தீர்மானங்களையும், ஐ.நா.வின் செயற்பாடுகளையும் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் அமெரிக்கா இரத்து செய்தது.
அதேபோலவே, சிரியாவில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ரஷ்யா தனது அதிகாரத்தினை பயன்படுத்தி தொடர்ச்சியாக இரத்துச் செய்து வந்திருந்தது. இவ்வாறான சம்பவங்கள் தீவிரவாதத்துக்கு வழிவகுத்ததே தவிர, சமாதானத்தை நிலைநாட்டவில்லை. இன்று சிரியாவில் நிலைகொண்டுள்ள இஸிஸ் போன்ற மோசமான அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு இவையே வழிவகுத்தன.
இவை மட்டுமல்லாது வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் ஏனைய உலக நாடுகளை விடவும் சிறப்பு சலுகைகளை அனுபவிக்கும் நாடுகளாக இருப்பதுடன், இவை ஏனைய நாடுகளை சர்வாதிகார ரீதியில் செயற்படுத்தும் ஓர் உத்தி முறையாகவே நோக்க வேண்டியுள்ளது. அதாவது, வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள், அணுஆயுதங்களை கையாள முடியும், புதிய அணுசோதனைகளை மேற்கொள்ள முடியும். ஏனைய நாடுகளால் அவ்வாறு செயற்பட முடியாது. அத்தோடு அதிகாரம் பெற்ற நாடுகள் தீர்மானங்களை கொண்டுவரலாம். பாதுகாப்புச் சபையைக கூட்டலாம். உறுப்பு நாடுகளில் பிரச்சினையென்றால் விசாரணைகளை கூட மேற்கொள்ளலாம்.
ஆனால், ஏனைய நாடுகள் பரிந்துரைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பதுடன், பாதுகாப்பு சபை அமர்வுகளில் அதிகாரம் பெற்ற நாடுகளின் சம்மதத்துடன் கலந்து கொள்ள முடியும், இந்நாடுகள் நேரடியான யுத்த நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள முடியாது. ஆனால், வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் கட்டுப்படுத்த முடியாத சூழல் அல்லது அசாதாரண நிலைமை என்பனவற்றை காரணம் காட்டி இலகுவில் பிற நாடுகள் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறான கட்டுப்படுத்த முடியாத அதிகாரங்கள் காரணமாகவே ஈராக், ஆப்கானிஸ்தான், வடகொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் யுத்த நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் மேற்கொண்டிருந்தன. இருப்பினும் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் நிலைமைகள் மோசமான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த வருடம் இருமுறை வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவும், சிரியா விவகாரத்தில் ரஷ்யாவும் சீனாவும் பயன்படுத்தியிருந்தன. ஆனால், இவ்விரு சம்பவங்களும் நாடுகளிடையே பாரிய பிளவுகளை ஏற்படுத்தியதுடன், ஆயுத கலாசாரத்தையும் ஊக்குவித்திருந்தன.
எனினும், தற்போதைய நிலைவரங்களின் படி பாதுகாப்பு சபையில் மாற்றங்களை ஏற்படுத்தி மேலும், ஆறு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரத்தை வழங்கவும் தற்காலிக உறுப்பு நாடுகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகள் பலமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. எனவே, இவையும் உறுப்புரிமை பெற்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
எனவே, உலக நாடுகளின் சமாதானத்தையும் அமைதியையும் பேண வேண்டிய நிலையிலுள்ள ஐ.நா., அதிகார நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டு விடக்கூடாது என்பதுடன், எதிர்கால உலகில் மனிதாபிமான வித்திடுகைக்கு சர்வதேச மன்னிப்பு சபையின் வேண்டுகோளை கவனத்திலெடுப்பது சிறந்தது.
க.பிரசன்னா
01.03.2015
ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் என்பது, பாதுகாப்புச் சபையில் நிரந்த உறுப்பு நாடுகளாக இருக்கின்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை பெற்றுள்ள சிறப்பு இரத்துச் செய்யும் அதிகாரமாகும். இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கு இந்நாடுகளின் பங்கு சிறப்பானதாக அமைந்ததால் 1946ஆம் ஆண்டு முதல் இவை சிறப்பு இரத்து செய்யும் அதிகாரம் பெற்ற நாடுகளாக அறியப்படுகின்றன. இவை ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு பெருமையாக அமைந்திருந்தாலும், கூட தற்போது இந்நாடுகளுக்கிடையில் காணப்படும் போட்டித் தன்மையால் உலக நாடுகளில் ஆயுத கலாசாரத்தை இல்லாறொழிக்கும் செயற்பாடுகளில் பக்கச்சார்பான தீர்வுகள் அரங்கேறுகின்றமை வெளிப்படையான
உண்மையாகும். 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் இறுதி அறிக்கையில் வீட்டோ அதிகாரம் கைவிடப்படவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்துக்களும் பதியப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டு அதிக வன்முறைகள் மற்றும் இலட்சக் கணக்கான மக்கள் அவதியுறும் ஆண்டாகவும் பதிவாகியுள்ளது. மேற்படி நிலையின் வீரியத்துக்கு வீட்டோ நாடுகளே அதிகளவில் செல்வாக்கு செலுத்தியிருந்தன. குறிப்பாக பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை தமது அரசியல் இலாபங்களுக்காக இரத்து செய்து கொள்ளும் நிலையினாலேயே உலகம் ஆபத்தான நிலையினை எட்டியிருக்கிறது. இவை பொது மக்களை பாதுகாப்பதை விடவும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டே செயற்படுகின்றன.பொதுச்சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளில் ஒரு நாடு தனது இரத்து செய்யும் அதிகாரத்தை பயன்படுத்தினாலும், அவை செயலற்று போய்விடும். அவ்வாறானதொரு நிலைமையே இஸ்ரேல் மற்றும் சிரியா போன்ற மனித அவலம் நிறைந்த நாடுகளுக்கு ஏற்பட்டது. அமெரிக்காவின் ஆதரவு நாடான இஸ்ரேல், பாலஸ்தீனம் உட்பட இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்படுத்திய நெருக்குதல்களின் போது, ஐ.நா.சபை கொண்டுவந்த 30இற்கும் மேற்பட்ட கண்டன தீர்மானங்களையும், ஐ.நா.வின் செயற்பாடுகளையும் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் அமெரிக்கா இரத்து செய்தது.
அதேபோலவே, சிரியாவில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ரஷ்யா தனது அதிகாரத்தினை பயன்படுத்தி தொடர்ச்சியாக இரத்துச் செய்து வந்திருந்தது. இவ்வாறான சம்பவங்கள் தீவிரவாதத்துக்கு வழிவகுத்ததே தவிர, சமாதானத்தை நிலைநாட்டவில்லை. இன்று சிரியாவில் நிலைகொண்டுள்ள இஸிஸ் போன்ற மோசமான அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு இவையே வழிவகுத்தன.
இவை மட்டுமல்லாது வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் ஏனைய உலக நாடுகளை விடவும் சிறப்பு சலுகைகளை அனுபவிக்கும் நாடுகளாக இருப்பதுடன், இவை ஏனைய நாடுகளை சர்வாதிகார ரீதியில் செயற்படுத்தும் ஓர் உத்தி முறையாகவே நோக்க வேண்டியுள்ளது. அதாவது, வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள், அணுஆயுதங்களை கையாள முடியும், புதிய அணுசோதனைகளை மேற்கொள்ள முடியும். ஏனைய நாடுகளால் அவ்வாறு செயற்பட முடியாது. அத்தோடு அதிகாரம் பெற்ற நாடுகள் தீர்மானங்களை கொண்டுவரலாம். பாதுகாப்புச் சபையைக கூட்டலாம். உறுப்பு நாடுகளில் பிரச்சினையென்றால் விசாரணைகளை கூட மேற்கொள்ளலாம்.
ஆனால், ஏனைய நாடுகள் பரிந்துரைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பதுடன், பாதுகாப்பு சபை அமர்வுகளில் அதிகாரம் பெற்ற நாடுகளின் சம்மதத்துடன் கலந்து கொள்ள முடியும், இந்நாடுகள் நேரடியான யுத்த நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள முடியாது. ஆனால், வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் கட்டுப்படுத்த முடியாத சூழல் அல்லது அசாதாரண நிலைமை என்பனவற்றை காரணம் காட்டி இலகுவில் பிற நாடுகள் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறான கட்டுப்படுத்த முடியாத அதிகாரங்கள் காரணமாகவே ஈராக், ஆப்கானிஸ்தான், வடகொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் யுத்த நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் மேற்கொண்டிருந்தன. இருப்பினும் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் நிலைமைகள் மோசமான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த வருடம் இருமுறை வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவும், சிரியா விவகாரத்தில் ரஷ்யாவும் சீனாவும் பயன்படுத்தியிருந்தன. ஆனால், இவ்விரு சம்பவங்களும் நாடுகளிடையே பாரிய பிளவுகளை ஏற்படுத்தியதுடன், ஆயுத கலாசாரத்தையும் ஊக்குவித்திருந்தன.
எனினும், தற்போதைய நிலைவரங்களின் படி பாதுகாப்பு சபையில் மாற்றங்களை ஏற்படுத்தி மேலும், ஆறு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரத்தை வழங்கவும் தற்காலிக உறுப்பு நாடுகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகள் பலமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. எனவே, இவையும் உறுப்புரிமை பெற்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
எனவே, உலக நாடுகளின் சமாதானத்தையும் அமைதியையும் பேண வேண்டிய நிலையிலுள்ள ஐ.நா., அதிகார நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டு விடக்கூடாது என்பதுடன், எதிர்கால உலகில் மனிதாபிமான வித்திடுகைக்கு சர்வதேச மன்னிப்பு சபையின் வேண்டுகோளை கவனத்திலெடுப்பது சிறந்தது.
க.பிரசன்னா
01.03.2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக