ஈராக் மற்றும் சிரியாவை நிலைகுலையச் செய்த மற்றும் உலக நாடுகளை நிலைகுலையச் செய்து வருகின்ற இஸ்லாமிய அரசு எனப்படும் இஸிஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்களை உலகிற்கு கொடூரமானவர்கள் என்ற தோரணையில் அடையாளப்படுத்த முனைகின்றார்கள். அதற்கு அவர்கள் கொண்டுள்ள உத்தியே கைதிகளுக்கு வழங்கப்படும் #கொடூர தண்டனைகள். நாம் வாழ்க்கையில் அறிந்திராத பல தண்டனைகளை இவர்கள் இதுவரையும் கைதிகளுக்கு வழங்கி எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இந்தத் தண்டனைகள் எம்மை முகம் சுளிக்கச் செய்தாலும் அவர்கள் மீதான வெறுப்பை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கின்றன.
தற்போதைய நிலையில் மிகவும் அபாயகரமான மற்றும் கொடூரமான தீவிரவாதிகள் இவர்களாகவே இருக்கின்றனர். ஆனாலும் உலக நாடுகளிலிருந்து வலிந்து செல்லும் மக்களினால் இவர்களின் பலத்தை சற்றேனும் குறைத்துக் கொள்ள முடியாமலுள்ளது. அண்மைய நாட்களில் #இஸிஸ் தீவிரவாதிகள் கைதிகளுக்கு வழங்கிய தண்டனைகள் இவர்கள் பக்கம் மீண்டும் மக்களை திருப்பிவிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு இவர்களின் தண்டனைகள் வெளிப்படுத்தப்பட்டாலும் தற்போது அதன் உக்கிரம் அதிகரித்துள்ளது.
2012ஆம் ஆண்டு காணாமல் போயிருந்த அமெரிக்க ஊடகவியலாளரான ஜேம்ஸ் போலே சிரச்சேதம் செய்யப்பட்டதான வீடியோ காட்சி அமெரிக்காவுக்கொரு செய்தி என்று முதன் முதலாக உலகை உலுக்கும் சம்பவம் இடம்பெற்றது. பின்பு அதே பாணியில் இரண்டாவது செய்தியும் வீடியோவாக இணையத்தளங்களில் வெளியானது. அன்று முதல் இன்றுவரை இப்பட்டியலில் பலர் உயிருடன் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் அவர்களின் எல்லை சர்வதேச ரீதியில் அதிகரித்துள்ளதே தவிர கட்டுப்பாடு இறுக்கமானதாக உலக நாடுகளால் இடப்படவில்லை.
ஆரம்பத்தில் கைதிகளை சிரச்சேதம் மட்டுமே செய்து வந்த இவர்கள் நாளடைவில் உயரமான அடுக்கு மாடியிலிருந்து கைதிகளை தள்ளி விடுதல், பொது இடங்களில் வைத்து கல்லால் எறிந்து கொல்லுதல், சிலுவையில் அறைந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லுதல் என்பவற்றோடு சிறுவர்களை கொண்டு துப்பாக்கியால் சுடவைத்து தண்டனை நிறைவேற்றுதல் என பல மனித உரிமை மீறல்களை அத்துமீறி செய்திருக்கின்றனர். இதற்கு முன்னரும் பாலைவனம் ஒன்றில் கைதிகளாக பிடிபட்ட #சிரிய அரச படைகளை ஒரே நேரத்தில் சுட்டுக்கொன்றிருந்தனர். தற்போது கைதி ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தூரத்திலிருந்து ரொக்கட் லோஞ்சர்களை ஏவி கொடூரமாக கொலை செய்யும் வீடியோக்கள், புகைப்படங்களை இஸிஸ் தீவிரவாதிகள் இணையத்தளங்களில் வெளியிட்டு பிறரை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடைய கொடூர தண்டனைகளில் முக்கியமாக கைதிக்குரிய சவக்குழியை அவரையே தோண்ட வைத்து கொலை செய்தமையாகும். கொல்லப்படும் ஒவ்வொரு கைதியும் இளம் மஞ்சள் நிற உடையோடு அடையாளப்படுத்தப்படுவது இவர்களின் வழமை.
பாலைவனத்திற்கு கொண்டு செல்லப்படும் கைதி தனக்குரிய இடத்தை தேர்வு செய்து சவக்குழியை தோண்டியவுடன் குழிக்கருகில் வைத்து அவரை சிரச்சேதம் செய்து புதைத்து விடுவர். அத்தோடு கைதியொருவரை கூண்டுக்குள் அடைத்துவிட்டு அவர் மீது பெற்றோல் ஊற்றி உயிரோடு எரித்து பின்பு அவ்விடத்தை மண்கொண்டு நிரப்பி விடும் கொடூர தண்டனைகளையும் வழமையாக கொண்டிருக்கின்றனர். இதுவரையும் எண்ணிலடங்கா தண்டனைகளை இவர்கள் கைதிகளுடன் பரிமாறியிருப்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு பல தண்டனைகளை நிறைவேற்றி அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் வெளியிட்டுள்ள இவர்கள் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் மிக அதிர்ச்சிகரமானதாக அமைந்திருந்தன. அதாவது உயிருடன் நீரில் அமிழ்த்தி கொல்லுதல் மற்றும் ரொக்கட் லோஞ்சர்களை வெடிக்க வைத்து கொல்லுதல் என்பனவாகும். ஈராக்கின் மொசூல் நகரை உளவு பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான 5 பேரை கூண்டில் அடைத்து நீரில் மூழ்க வைத்து கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 7 நிமிடத்திற்குள்ளான இந்த வீடியோவில் கைதிகளை நீரில் அமிழ்த்தி கொலை செய்து உடல்களை வெளியில் எடுப்பது வரையான, புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
அத்தோடு 7 கைதிகளை ஒரே வரிசையாக வைத்து கழுத்தில் கயிற்றை கட்டி நெரித்து கொல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். மற்றும் கார் ஒன்றில் சில கைதிகளை ஏற்றி வாகனத்தை செலுத்தவிட்டு தூரத்திலிருந்து ரொக்கட் லோஞ்சர்களை காரின் மீது ஏவி வெடிக்க வைத்தும் கைதிகளை கொலை செய்திருப்பதுடன் அவை புகைப்படங்களையும் இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு வரம்பில்லாத கொடூர தண்டனைகளை வழங்கி வரும் இஸிஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த எவ்வித துரித நடவடிக்கைகளையும் மேற்கு நாடுகள் கொண்டிருக்கவில்லை. மாறாக ஈராக், சிரியா போன்ற நாடுகள் மீள இயல்பு நிலைக்கு திரும்ப முடியாதளவிலான நிலையினையே தோற்றுவித்துள்ளன.
தற்போது அமெரிக்க அரசு வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கும், ஈராக் படையினருக்கு பயிற்சி வழங்குவதற்கும் தினமும் 9 மில்லியன் டொலர்களை செலவிட்டு வருவதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஆனால், இஸிஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றங்களை காண முடியாதுள்ளது. இஸிஸ் தீவிரவாதிகள் அதி நவீன கவச மற்றும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவின் ஹம்வீ கவச வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இவற்றை இலகு ஆயுதங்களால் தகர்க்க முடியாது. சில்லுகளை சுட்டாலும் கூட காற்று போன நிலையிலும் 80 கிலோ மீற்றர் தூரத்தை வெற்றிகரமாக கடக்கும் திறனை உடையது.
இவ்வாறு அதி நவீன ஆயுதங்களை வைத்து போராடும் அளவுக்கு இவர்கள் வசதி படைத்தவர்களா? இல்லை வேறு நாடுகள் இவர்களுக்கு உதவி செய்கின்றனவா? என்பனவெல்லாம் மர்மமாகவே இருக்கிறது. ஆனால், இவர்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் இன்னும் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.
28.06.2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக