இன்று ஆசிய நாடுகளில் அதிக அழுத்தங்களை சந்தித்தும் தம்முடைய இலக்குகளில் மிக நெருங்கி செயற்படும் நாடாக சீனா காணப்படுகிறது. சீனா பல்வேறு விடயங்களில் சர்வதேசத்தை எதிர்த்து செயற்பட்டு வந்தாலும், அதன் தற்போதைய நிலை, தென் சீனக் கடல் (South China Sea) விவகாரமாக மாறியிருக்கிறது. பல நாடுகள் இவ்விவகாரத்தை உரிமையோடு போராடி பெற விரும்புகின்றன. இவற்றில் அரசியல் மற்றும் ஆயுத பலங்களும் மறைமுகமாக போராடுகின்றன. இப்பகுதியானது உலகின் புவிசார் அரசியலில் மிக முக்கியமான நீர் பகுதியாகும்.
இக்கடலில் 200இற்கும் மேற்பட்ட #தீவுக்கூட்டங்கள் காணப்படுவதுடன் பல நாடுகள் இத்தீவுகளுக்கும் கடலுக்கும் உரிமை கோரி வருவதே தென் சீனக்கடலுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை. சீனா தென் சீனக்கடலில் 90 வீதமான பகுதியை சொந்தம் கொண்டாட நினைக்கின்றது. ஆனால், இக்கடலைச் சுற்றியுள்ள சீன மக்கள் குடியரசு, தாய்வான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம், புரூணே ஆகிய நாடுகளும் இப்பகுதிகளிலுள்ள தீவுப்பகுதிகளை பல்வேறு காரணங்களுடன் உரிமை கோருகின்றன.
இதனால் தென்சீனக்கடலில் சீனா மேற்கொள்ளும் ஒவ்வொரு விடயங்களுக்கும் மேற்படி நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. தென்சீனக் கடல் விவகாரத்தில் மறைமுகமாக செயற்பட்டு வரும் அமெரிக்கா இக்கடற்பரப்பில் தமது செயற்பாடுகளை துரிதப்படுத்தியிருப்பதாலும், தொடர் கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருவதாலும் இப்பகுதி மிகுந்த அபாயகரமான பிரதேசமாகவே நோக்கப்படுகிறது. இக்கடற்பரப்பில் பல நாடுகளின் வலிமை, ஆதிக்கம் தங்கியுள்ளதே முக்கிய காரணம்.
தென்சீனக்கடல் சீன ஆக்கிரமிப்புக்குள் வருவதற்கு பாதுகாப்பு மட்டும் காரணமாக இருக்க முடியாது. இப்பகுதி போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இடமென்பதுடன், அதிக வளங்களை கொண்டதென்பது மேலதிக தகவல். பசுபிக் கடலில் ஒரு பகுதியான தென்சீனக் கடல், சிங்கப்பூருக்கும் தாய்வான் நீரிணைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். 3500,000 சதுர கிலோமீற்றர் பரப்புள்ள இக்கடல் உலகிலுள்ள 5 பெரிய கடல்களுக்கு அடுத்த பெரிய கடலாகும். உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதி இவ்வழியாகவே நடைபெறுகிறது. இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி தற்போது சர்ச்சையில் இருக்கிறது.
தென்சீனக்கடலையும் அதிலுள்ள 200இற்கும் மேற்பட்ட தீவுகளையும் தற்போது 9 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதன்படி, நதுனா தீவுகளின் வட-கிழக்கு கடற்பகுதி குறித்து இந்தோனேஷியா, சீனா மற்றும் தாய்வான், மலம்பாயா மற்றும் கமாகோ எரிவளிகளம் குறித்து பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் தாய்வான், ஸ்பிரெட்லி தீவுகளின் மேற்கு கடற்பகுதி குறித்து வியட்நாம், சீனா, தாய்வான் மற்றும் அனைத்து தீவுகள் குறித்து 9 நாடுகளுக்கிடையில் உரிமை கொண்டாடுகின்ற போக்கு காணப்படுகிறது. பிரசல்ஸ் தீவுகள் குறித்து சீனா, தாய்வான், வியட்நாமிடையேயும் தாய்லாந்து வளைகுடா பகுதிகள் குறித்து மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகள் உரிமை கோரி வருகின்றன.
ஆனால், இப்பகுதிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் சொந்தமானதென்பதற்கு சர்வதேசத்திடம் பதிலில்லை. குறிப்பிட்ட நாடுகள் தங்களிடமுள்ள ஆதாரங்களைக் கொண்டு போராடி வருகின்றன. இந்த விடயம் குறித்து கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பிரச்சினைகள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் சீனா முறைமுகமாக இப்பகுதிகளில் செயற்கை தீவுகளை உருவாக்கி வருகின்றது. இத்தீவானது விமான இயங்குத்தளம், பாதுகாப்பு தலைமைப்பீடம் என்பவற்றை கொண்டதாக காணப்படுகிறது. தற்போது இவ்வாறான செயற்கை தீவுகளை சீனா உருவாக்குவதில் அதன் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன், கடல் எல்லையும் விஸ்தரிக்கப்படுவதோடு தென் சீனக் கடலை முழுமையாக தமது ஆக்கிரமிப்புக்குள் வீழ்த்துவதும் இதனுடைய நோக்கமாக இருக்கின்றது. இப்பகுதி கப்பல் போக்குவரத்து பாதை என்பதுடன் வாழ்வாதார மீன்பிடி இடம்பெறும் பகுதியாகும். இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சீனா மிகப்பெரிய இலாபத்தை அடைய முயற்சிக்கிறது.
அதுமட்டுமல்லாது இக்கடல் பரப்பில் இருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ள இயற்கை வளங்களையும் மொத்தமாக சொந்தமாக்கிக் கொள்ள சீனா விரும்புகிறது. வருடாந்தம் 50 வீதமான சரக்கு கப்பல்கள் இவ்வழியாகவே பயணத்தை மேற்கொண்டுள்ளன. இப்பகுதியில் 28பில்லியன் பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் வளமும் 226 டிரில்லியன் கன அடி அளவிலான இயற்கை எரிவாயுவும் காணப்படுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பிலிப்பைன்ஸ் நாட்டின் சுற்று சூழல், இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுகளின் படி, உலகில் காணப்படும் கடல்சார் உயிரின வகைகளில் மூன்றில் ஒரு பங்கு இக்கடல் பகுதியிலேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மிக மதிப்புடைய இப்பகுதியினை ஆக்கிரமிக்க மேற்படி நாடுகள் முனைப்பு காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தென்சீனக் கடலில் தான் வைத்த ஒன்பது புள்ளிகளை இணைத்து தன்னுடைய கடலாதிக்கத்தை சீனா நிறுவ முயற்சிக்கிறது. சீனா கடலோடு மட்டும் தமது ஆக்கிரமிப்பை நிறுத்தாமல் வான் மற்றும் தரை எல்லை ஆக்கிரமிப்பையும் ஏற்கனவே மேற்கொண்டிருக்கிறது.
வியட்நாமிடமிருந்து பிரசெல்ஸ் தீவுகளை இராணுவ பலம் கொண்டு கைப்பற்றியது. இதில் வியட்நாம் பல உயிர்களை பலிகொடுத்தது. தற்போது பிலிப்பைன்ஸ், புரூணே, மலேசியா, தாய்வான், வியட்நாம் ஆகிய நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி ஸ்பிரட்லி தீவுகளை தமக்கே உரியதென கோருகிறது. அத்தோடு ஹைனான் தீவிலிருந்து 590 கிலோ மீற்றர் தூரத்திலும் பிலிப்பைன்சில் இருந்து 51 கிலோ மீற்றர் தூரத்திலுமுள்ள குறும்பு பாறையைக் கூட இவ்வாறு இராணுவ பலம் மூலமே ஆக்கிரமித்து கொண்டது. கடல் பரப்பு, தீவுகள் தொடர்பான ஐ.நா.வின் எந்தவொரு சட்டத்தையும் சீனா பின்பற்றுவதில்லை.
ஐ.நா. ஒப்பந்தங்களின் படி இறைமையுள்ள நாட்டுக்கு தமது நாட்டு எல்லையிலிருந்து 200 கடல் மைல் வரையான பகுதியில் உரிமையுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஸ்ப்ரெட்லி தீவுகள் பிலிப்பைன்சிலிருந்து 100 கடல் மைல் தூரத்திலும் சீனாவிலிருந்து 500 கடல் மைல் தூரத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சீனாவிலிருந்து தற்போது தம்மை பாதுகாத்து கொள்ளவே மேற்படி நாடுகள் இராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட போதும் கஸகஸ்தான் நாட்டுடன் தரைவழி ஆக்கிரமிப்பை கூட சீனா மேற்கொண்டிருந்தது. இருப்பினும், சீனாவின் இராணுவ பலத்துக்கு அஞ்சி சீனா கோரிய மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் 60 வீதமான எண்ணெய் வளங்களையும், ஒப்பந்தம் செய்து அத்துமீறி பெற்றுக்கொண்டது. இவ்வாறு சீனாவின் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆசியாவில் தமது வலுவான ஆதிக்கத்தை வலுப்பெற செய்வதற்கேயாகும். எனவே, தற்போது #சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவுகள் கூட அதன் ஒரு முயற்சியே. #தென்சீனக்கடல் பகுதியில் நிலவும் சலசலப்பு காரணமாகவே அமெரிக்கா தனது நவீன உளவு விமானங்களை ஜப்பான் சார்பாக அப்பகுதிகளில் பறக்கவிட்டுள்ளது. இது சீனாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையவே அமெரிக்கா மீது கடிந்து கொண்டுள்ளது. எனவே, சீனாவின் தென் சீனக்கடல் ஆதிக்கமும், #செயற்கை தீவு உருவாக்கமும் எதிர்கால இராணுவ பலத்தில் சீனாவுக்கு முக்கிய பங்கை அளிக்கும். இது சீனாவை அண்மித்த நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கூட அமையும். எனவே, எதிர்வரும் காலங்களில் இப்பிரச்சினையும் பூதாகரமாக அமையலாம்.
க.பிரசன்னா
14.06. 2015
இக்கடலில் 200இற்கும் மேற்பட்ட #தீவுக்கூட்டங்கள் காணப்படுவதுடன் பல நாடுகள் இத்தீவுகளுக்கும் கடலுக்கும் உரிமை கோரி வருவதே தென் சீனக்கடலுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை. சீனா தென் சீனக்கடலில் 90 வீதமான பகுதியை சொந்தம் கொண்டாட நினைக்கின்றது. ஆனால், இக்கடலைச் சுற்றியுள்ள சீன மக்கள் குடியரசு, தாய்வான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம், புரூணே ஆகிய நாடுகளும் இப்பகுதிகளிலுள்ள தீவுப்பகுதிகளை பல்வேறு காரணங்களுடன் உரிமை கோருகின்றன.இதனால் தென்சீனக்கடலில் சீனா மேற்கொள்ளும் ஒவ்வொரு விடயங்களுக்கும் மேற்படி நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. தென்சீனக் கடல் விவகாரத்தில் மறைமுகமாக செயற்பட்டு வரும் அமெரிக்கா இக்கடற்பரப்பில் தமது செயற்பாடுகளை துரிதப்படுத்தியிருப்பதாலும், தொடர் கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருவதாலும் இப்பகுதி மிகுந்த அபாயகரமான பிரதேசமாகவே நோக்கப்படுகிறது. இக்கடற்பரப்பில் பல நாடுகளின் வலிமை, ஆதிக்கம் தங்கியுள்ளதே முக்கிய காரணம்.
தென்சீனக்கடல் சீன ஆக்கிரமிப்புக்குள் வருவதற்கு பாதுகாப்பு மட்டும் காரணமாக இருக்க முடியாது. இப்பகுதி போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இடமென்பதுடன், அதிக வளங்களை கொண்டதென்பது மேலதிக தகவல். பசுபிக் கடலில் ஒரு பகுதியான தென்சீனக் கடல், சிங்கப்பூருக்கும் தாய்வான் நீரிணைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். 3500,000 சதுர கிலோமீற்றர் பரப்புள்ள இக்கடல் உலகிலுள்ள 5 பெரிய கடல்களுக்கு அடுத்த பெரிய கடலாகும். உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதி இவ்வழியாகவே நடைபெறுகிறது. இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதி தற்போது சர்ச்சையில் இருக்கிறது.
தென்சீனக்கடலையும் அதிலுள்ள 200இற்கும் மேற்பட்ட தீவுகளையும் தற்போது 9 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதன்படி, நதுனா தீவுகளின் வட-கிழக்கு கடற்பகுதி குறித்து இந்தோனேஷியா, சீனா மற்றும் தாய்வான், மலம்பாயா மற்றும் கமாகோ எரிவளிகளம் குறித்து பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் தாய்வான், ஸ்பிரெட்லி தீவுகளின் மேற்கு கடற்பகுதி குறித்து வியட்நாம், சீனா, தாய்வான் மற்றும் அனைத்து தீவுகள் குறித்து 9 நாடுகளுக்கிடையில் உரிமை கொண்டாடுகின்ற போக்கு காணப்படுகிறது. பிரசல்ஸ் தீவுகள் குறித்து சீனா, தாய்வான், வியட்நாமிடையேயும் தாய்லாந்து வளைகுடா பகுதிகள் குறித்து மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகள் உரிமை கோரி வருகின்றன.
ஆனால், இப்பகுதிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் சொந்தமானதென்பதற்கு சர்வதேசத்திடம் பதிலில்லை. குறிப்பிட்ட நாடுகள் தங்களிடமுள்ள ஆதாரங்களைக் கொண்டு போராடி வருகின்றன. இந்த விடயம் குறித்து கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பிரச்சினைகள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் சீனா முறைமுகமாக இப்பகுதிகளில் செயற்கை தீவுகளை உருவாக்கி வருகின்றது. இத்தீவானது விமான இயங்குத்தளம், பாதுகாப்பு தலைமைப்பீடம் என்பவற்றை கொண்டதாக காணப்படுகிறது. தற்போது இவ்வாறான செயற்கை தீவுகளை சீனா உருவாக்குவதில் அதன் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன், கடல் எல்லையும் விஸ்தரிக்கப்படுவதோடு தென் சீனக் கடலை முழுமையாக தமது ஆக்கிரமிப்புக்குள் வீழ்த்துவதும் இதனுடைய நோக்கமாக இருக்கின்றது. இப்பகுதி கப்பல் போக்குவரத்து பாதை என்பதுடன் வாழ்வாதார மீன்பிடி இடம்பெறும் பகுதியாகும். இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சீனா மிகப்பெரிய இலாபத்தை அடைய முயற்சிக்கிறது.
அதுமட்டுமல்லாது இக்கடல் பரப்பில் இருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ள இயற்கை வளங்களையும் மொத்தமாக சொந்தமாக்கிக் கொள்ள சீனா விரும்புகிறது. வருடாந்தம் 50 வீதமான சரக்கு கப்பல்கள் இவ்வழியாகவே பயணத்தை மேற்கொண்டுள்ளன. இப்பகுதியில் 28பில்லியன் பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் வளமும் 226 டிரில்லியன் கன அடி அளவிலான இயற்கை எரிவாயுவும் காணப்படுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பிலிப்பைன்ஸ் நாட்டின் சுற்று சூழல், இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுகளின் படி, உலகில் காணப்படும் கடல்சார் உயிரின வகைகளில் மூன்றில் ஒரு பங்கு இக்கடல் பகுதியிலேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மிக மதிப்புடைய இப்பகுதியினை ஆக்கிரமிக்க மேற்படி நாடுகள் முனைப்பு காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். தென்சீனக் கடலில் தான் வைத்த ஒன்பது புள்ளிகளை இணைத்து தன்னுடைய கடலாதிக்கத்தை சீனா நிறுவ முயற்சிக்கிறது. சீனா கடலோடு மட்டும் தமது ஆக்கிரமிப்பை நிறுத்தாமல் வான் மற்றும் தரை எல்லை ஆக்கிரமிப்பையும் ஏற்கனவே மேற்கொண்டிருக்கிறது.
வியட்நாமிடமிருந்து பிரசெல்ஸ் தீவுகளை இராணுவ பலம் கொண்டு கைப்பற்றியது. இதில் வியட்நாம் பல உயிர்களை பலிகொடுத்தது. தற்போது பிலிப்பைன்ஸ், புரூணே, மலேசியா, தாய்வான், வியட்நாம் ஆகிய நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி ஸ்பிரட்லி தீவுகளை தமக்கே உரியதென கோருகிறது. அத்தோடு ஹைனான் தீவிலிருந்து 590 கிலோ மீற்றர் தூரத்திலும் பிலிப்பைன்சில் இருந்து 51 கிலோ மீற்றர் தூரத்திலுமுள்ள குறும்பு பாறையைக் கூட இவ்வாறு இராணுவ பலம் மூலமே ஆக்கிரமித்து கொண்டது. கடல் பரப்பு, தீவுகள் தொடர்பான ஐ.நா.வின் எந்தவொரு சட்டத்தையும் சீனா பின்பற்றுவதில்லை.
ஐ.நா. ஒப்பந்தங்களின் படி இறைமையுள்ள நாட்டுக்கு தமது நாட்டு எல்லையிலிருந்து 200 கடல் மைல் வரையான பகுதியில் உரிமையுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஸ்ப்ரெட்லி தீவுகள் பிலிப்பைன்சிலிருந்து 100 கடல் மைல் தூரத்திலும் சீனாவிலிருந்து 500 கடல் மைல் தூரத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சீனாவிலிருந்து தற்போது தம்மை பாதுகாத்து கொள்ளவே மேற்படி நாடுகள் இராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட போதும் கஸகஸ்தான் நாட்டுடன் தரைவழி ஆக்கிரமிப்பை கூட சீனா மேற்கொண்டிருந்தது. இருப்பினும், சீனாவின் இராணுவ பலத்துக்கு அஞ்சி சீனா கோரிய மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் 60 வீதமான எண்ணெய் வளங்களையும், ஒப்பந்தம் செய்து அத்துமீறி பெற்றுக்கொண்டது. இவ்வாறு சீனாவின் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆசியாவில் தமது வலுவான ஆதிக்கத்தை வலுப்பெற செய்வதற்கேயாகும். எனவே, தற்போது #சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவுகள் கூட அதன் ஒரு முயற்சியே. #தென்சீனக்கடல் பகுதியில் நிலவும் சலசலப்பு காரணமாகவே அமெரிக்கா தனது நவீன உளவு விமானங்களை ஜப்பான் சார்பாக அப்பகுதிகளில் பறக்கவிட்டுள்ளது. இது சீனாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையவே அமெரிக்கா மீது கடிந்து கொண்டுள்ளது. எனவே, சீனாவின் தென் சீனக்கடல் ஆதிக்கமும், #செயற்கை தீவு உருவாக்கமும் எதிர்கால இராணுவ பலத்தில் சீனாவுக்கு முக்கிய பங்கை அளிக்கும். இது சீனாவை அண்மித்த நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கூட அமையும். எனவே, எதிர்வரும் காலங்களில் இப்பிரச்சினையும் பூதாகரமாக அமையலாம்.
க.பிரசன்னா
14.06. 2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக