ஈராக்கில் வலுத்துவரும் உள்நாட்டு போர் சூழ்நிலையால் ஈராக் இரண்டாக பிளவுபடும் என்ற கருத்து அண்மைக்காலமாக உலாவிவந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் ஈராக், சிரியா ஆகிய நாடுகளிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளைக் கொண்டு தனிநாட்டு பிரகடனம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை உலக நாடுகளின் இராணுவ பலத்தினையும், அசமந்த போக்கினையும், மீண்டுமொரு முறை தூசுதட்ட வைத்துள்ளது. கடந்த காலங்களாகவே ஈராக்கில் ஷியா- ஸ{ன்னி முஸ்லிம்களுக்கிடையிலான உள்நாட்டு யுத்தம் வலுபெற்று வந்த நிலையிலேயே இவ்வறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏலவே சிரியாவில் அதிகளவான பகுதிகளை விட்டுக்கொடுத்திருந்த சிரிய படைகளோடு, ஈராக்கிய படைகளும் ஈராக்கில் சில பகுதிகளை விட்டுக் கொடுத்திருந்தது. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் அடுத்த இலக்காக ஈராக்கின் தலைநகர் பக்தாத் அமைந்த நிலையில் தற்போது அவை தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஸ{ன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்கள் என்பதுடன் அதிகமானோர் ஸ{ன்னி முஸ்லிம்களே. நீண்டகாலமாகவே தனி இஸ்லாமிய நாட்டை கோரியிருந்த தீவிரவாத அமைப்பானது அதை மையப்படுத்தியே தமது தாக்குதல்களை மேற்கொண்டு இருந்தநிலையில் அதிகளவான இடங்களை கைப்பற்றி தற்போது தனிநாட்டு பிரகடனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஸ{ன்னி தீவிரவாதிகள் தாங்கள் ஏற்கனவே சிரிய நாட்டில் கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம் கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ~இஸ்லாமிய நாடு| என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் தலைவராக தீவிரவாத
குழுவின் தலைவராக பணியாற்றும் அபுபக்கர் அல் பகாதி செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தனிநாடு அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதுடன் ஏனைய நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடு மௌனமாகவே இருந்து வருகின்றது.
குழுவின் தலைவராக பணியாற்றும் அபுபக்கர் அல் பகாதி செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தனிநாடு அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதுடன் ஏனைய நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடு மௌனமாகவே இருந்து வருகின்றது.
இருப்பினும், 7இற்கும் மேற்பட்ட யுத்தக்கப்பல்களை அரேபிய கடல் பகுதிக்கு அனுப்பியுள்ள அமெரிக்க அரசு, ஏற்கனவே 300 இராணுவ ஆலோசகர்களையும் அந்நாட்டுக்கு அனுப்பியிருந்தது. அத்தோடு யுத்த செலவுகளுக்காக அந்நாட்டு ஜனாதிபதி ஒபாமா செனற் சபையிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அங்கீகாரம் பெறவிருந்த நிலையிலேயே அதிரடியான தீவிரவாதிகளின் இம்மாற்றம் அமெரிக்காவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்பில் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி எங்கள் பிடியில் சிக்கியுள்ள பிராந்தியம் சுதந்திர இஸ்லாமிய நாடாக செயற்படும். அதன் தலைவராக அபுபக்கர் அல் பகாதி இருப்பார். இங்கு இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை இந்த ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்க வேண்டும். இங்கு முழுமையாக இஸ்லாமிய சட்டங்களே நடைமுறையில் இருக்கும். ஜனநாயக ஆட்சி முறைகளோ, மேற்கத்தேய ஆட்சி முறைகளோ அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, இப்பகுதி மக்கள் அபு பக்கர் அல் பகாதிக்கு அடிப்பணிந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்நாட்டின் பகுதிகளுக்கு அவர் வரும்போது ஏற்கனவே செயற்படும் அமைப்புகள், குழுக்கள், அரசுகள் ஆகியவற்றின் அதிகாரங்கள் செல்லுபடியற்றதாகும் எனவும் அத்தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த மாதங்களாக இடம்பெற்றுவரும் உக்கிரமோதல்களில் அதிகளவான அரச படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவை தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்தன. அப்போதிலிருந்தே அரச படைகள் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து பின்வாங்கிய நிலையில், தீவிரவாதிகள் மொசூல், திக்ரித், கர்பாலா ஆகிய நகரங்களை ஏற்கனவே கைப்பற்றியிருந்த நிலையில் தலைநகர் பக்தாத்தை நோக்கி நெருங்கியிருந்தனர். ஷியா முஸ்லிம்களுக்கு ஆதரவான நாடு என அழைக்கப்படும் ஈராக், தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு,தீவிரவாதிகள் கைப்பற்றிய நகரங்கள் கைப்பற்றப்படும் என அறிவித்துள்ள நிலையில் தனிநாடு பிரகடனம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிரியாவின் அலப்போவில் இருந்து ஈராக்கில் உள்ள தியாலா வரை தற்போது இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்க ஈராக் இராணுவம் முழுவீச்சில் செயற்பட ஈராக் ஜனாதிபதி அல் நூரி உத்தரவிட்டுள்ளார். ஆரம்பக் கட்டமாக திக்ரிக் நகரை கைப்பற்றுவதற்கு ஈராக் படைகள் அனுப்பப்பட்டுள்ளதோடு அங்கு விமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈராக் இராணுவம் திக்ரிக் நகரம் கைப்பற்றப்பட்டு விட்டதாக அறிவித்திருந்தாலும் அவை உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும் அல்பசார் என்ற இடத்தை மீட்டுள்ளதாக ஈராக் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ள நிலையில் 142 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யாவும் ஈரானும் ஈராக்கிற்கு உதவ முன்வந்துள்ளன. ரஷ்யா 6 சுகாய் விமானங்களை வழங்கியுள்ளது. ஆனாலும், ரஷ்யாவிற்கு எதிராக போராடிவரும் செசென்ஸ் தீவிரவாதிகள், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்தவே ரஷ்யா, ஈராக்குக்கு உதவிகளை வழங்கி வருகிறது. அமெரிக்கா மேலதிகமாக 1000 படை வீரர்களுடன் கப்பலை அப்பகுதிக்கு அனுப்பியிருந்தாலும் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளாமல் மௌனம் காத்து வருகின்றது நேரடியான தாக்குதல்கள் எதனையும் தாம் மேற்கொள்ளப் போவதில்லையென அமெரிக்க ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார். இவ்வாறான ஈராக்கில் கடும் மோசமான ஆயுத தாக்குல்கள் இடம்பெற்று வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் தமது நாட்டு பாதுகாப்பினை மேலும், தீவிரப்படுத்தியுள்ளன. சவ+தி அரேபியா தனது எல்லைப்பகுதியில் 30,000 படைகளை குவித்துள்ள நிலையில் முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் ஆயுத தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையும் எந்தவொரு இஸ்லாமிய அரசும் கருத்துக்களை வெளியிடவில்லை. எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சவ+தி அரசாங்கமே உதவிகளை வழங்கி வருவதான குற்றச்சாட்டுக்களும் எழாமலில்லை.
தற்போது தீவிரவாதிகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனிநாட்டு கோரிக்கையினை வரவேற்றுள்ள சில முஸ்லிம்கள் அதனை கோலாகலமாக கொண்டாடியும் வருகின்றனர். சிரியாவில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ராக்கா மாகாண மக்களே மேற்படி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறத்தில் ஈராக்கிய அரச படைகள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுவரும் வேளையில் புதிதாக தோற்றம் பெற்ற ~இஸ்லாமிய அரசு| நிலைத்து நிற்குமா என்பதை காலமே கணிக்கும்.
06.07. 2014
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக