“வீட்டுக்கும் நிலமில்லை, சுடுகாட்டுக்கும் நிலமில்லை” என்ற கதையாக மலையக மக்களின் நிலைமை மாறிப்போயுள்ளதை சமீப காலங்களில் அறியமுடிகின்றது. 200 வருடங்களை கடந்தும் இந்நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிப்பு செலுத்திய ஒரு சமூகம், இன்று தங்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரியது.ஆரம்பம் முதல் சொந்த நிலத்தில் சொந்த வீட்டுக்காக போராடியவர்கள் இன்று தாங்கள் இறந்த பின்னர் புதைப்பதற்கான இடத்தைப் பெற்றுக் கொள்ளவும் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் எங்களுக்கான காணி உரிமையை வழங்க மறுப்பது அரசாங்கமா? அல்லது கம்பனிகளா? அல்லது மலையக மக்கள் பிரதிநிதிகளா? என்ற கேள்வியை எமக்குள் எழுப்புகிறது.
வட்டவளை பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான (தற்போது ஹட்டன் பெருந்தோட்ட கம்பனி) பின்னோயா கீழ் பிரிவு மக்களின் மயானத்தை அபகரிக்கும் செயற்பாட்டை மலையகத்தின் பிரதான கட்சியின் உறுப்பினரொருவர் மேற்கொண்டுள்ளதாக அங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மயானம் மட்டுமல்லாது, 150 வருடங்கள் பழமையான தோட்ட கள அதிகாரியின் குடியிருப்பு மற்றும் அங்குள்ள ஐந்து குடும்பங்கள் வசித்து வரும் குடியிருப்புகள் உள்ளிட்ட பாரிய நிலப்பரப்பை தன்னுடையதென கூறி அங்குள்ளவர்களை வெளியேற நிர்பந்திப்பதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் மயானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக அத்தோட்ட மக்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணியை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தோட்ட நிர்வாகமும் அரசாங்கமும் இவ்வாறு அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் பல ஏக்கர் காணிகளை சொந்தம் கொண்டாட அனுமதித்திருப்பது எவ்வாறு? என்ற கேள்வியுடன் இந்த விடயத்தை நாம் ஆராயலாம்.
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட ரொசல்ல தொகுதிக்குட்பட்ட பின்னோயா கீழ் பிரிவு மக்களே மயான காணி அபகரிக்கப்பட்டமையால், இறந்தவர்களின் சடலத்தை புதைப்பதற்கு மாற்று காணியை பெற்றுக்கொள்வதற்கு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இங்கு 350 குடும்பங்களைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இத்தோட்டம் வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் செயற்படும் போது, இத்தோட்ட மக்களின் பொது மயானமாக பயன்படுத்துவதற்கு ஒரு பகுதி நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒதுக்கப்பட்ட நிலத்திலேயே இறந்தவர்களின் சடலத்தை புதைக்கும் செயற்பாடுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்டது.
எனினும் இத்தோட்டத்திலுள்ள அரசியல்வாதியொருவர் இவ்விடத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து 2017 ஆம் ஆண்டு முதல் சொந்தமாக்கி கொள்ளும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ளதால், தற்போது அங்கு இறந்தவர்களின் சடலத்தை புதைப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே புதைக்கப்பட்ட சடலங்களுக்கு என்ன நடந்தது என்பதுவும் புதைக்கப்பட்டவர்களுக்கான மத சடங்குகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இத்தோட்ட மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் அபகரிக்கப்பட்டமை தொடர்பில் இப்பகுதி மக்கள் மேலும் கருத்து வெளியிடுகையில், தற்போது நீதிமன்ற உத்தரவுக்கமைய அப்பகுதிக்குள் யாரும் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் மீறிச் சென்றால் பொலிஸாரால் கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனால் அருகிலுள்ள தனியார் தோட்டமான பின்னோயா ஏ பிரிவிலேயே இறந்தவர்களை புதைப்பதற்கு சிறியளவான இடம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது சடலங்கள் புதைக்கப்படும் இடம் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளமையால் அங்கு புதைக்க முடியாத நிலையில் மாற்று இடத்தை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மயானத்தை ஆக்கிரமித்துள்ள குறித்த அரசியல்வாதி சமீபகாலமாக 150 வருடகால பழைமையான தோட்ட கள அதிகாரியின் குடியிருப்பையும் அதனை அண்மித்துள்ள மக்கள் வசிக்கும் ஐந்து குடியிருப்பையும் தன்னுடையதென சொந்தம் கூறி வருவதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த அரசியல்வாதி லயன் அறையொன்றிலேயே வசித்து வருவதாகவும் பின்னர் அந்த லயன் அறையை விற்று, மக்களின் மயானம் அமைந்துள்ள பகுதியில் சிறு குடிலை அமைத்து தங்கியுள்ளார். இதனால் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கூறி தோட்ட நிர்வாகம் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தது. 2015 ஆம் ஆண்டு வரை இந்த வழக்கு இடம்பெற்ற போதும், தோட்ட நிர்வாக அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் பெற்றுச் செல்வதால் வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் இடையூறுகள் ஏற்பட்டதால், அந்த இடத்திலிருந்து குறித்த அரசியல்வாதியை வெளியேற்றும் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் இத்தோட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
1983 ஆம் ஆண்டு நன்னீர் மீன்பிடியை முன்னெடுப்பதற்காக இந்நிலம் அப்பகுதி மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் நன்னீர் மீன்பிடி கைவிடப்பட்டு நிலம் பாவனையற்றிருந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் அங்கு சடலங்களை புதைக்கும் மயானமாக பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு முதல் குறித்த பகுதி தனக்கு சொந்தமானதென அரசியல்வாதி கூறினாலும் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் 2017 ஆம் ஆண்டு அங்கு நால்வரின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த இடத்தை அவர் உரிமை கோருவது சட்டவிரோதமானதெனவும் தோட்ட மக்கள் தங்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் தம்வசம் வைத்துள்ளனர்.
தற்போது அப்பகுதியிலுள்ள பெரும்பாலான தேயிலை அழிக்கப்பட்டுள்ளதாகவும் பெறுமதியான மரங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளதுடன், அப்பகுதியில் சட்டவிரோதமாக கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு அதன் கழிவுகள் அப்பகுதியிலுள்ள மகாவலி கங்கையில் கொட்டப்படுவதாகவும் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்ப்பு தெரிவித்து பின்னோயா கீழ் பிரிவு தோட்ட மக்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், கடந்த ஜூன் 27 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலிலும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த விடயத்தில் வட்டவளை பொலிஸாரும் அரசியல்வாதியின் சார்பாக நடந்துகொள்வதாகவும் குடியிருப்பாளர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்துவதாகவும் மக்கள் இதன்போது கருத்து தெரிவித்திருந்தனர்.
எந்தவொரு தொழிலும் இன்றிய நிலையில் வறுமையில் இருந்த ஒருவர் இன்று மகாவலி கங்கை பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வு மற்றும் மணல் அகழ்வு என்பவற்றுக்கான அனுமதியை பெற்று பெரும் செல்வந்தராக மாறிய பின்னர், தற்போது அதிகாரிகளுக்கு பணம் வழங்கி தனது சட்டவிரோத செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
தற்போது மலையகத்தில் சுடுகாடு இல்லாத ஒரு சமூகமாக அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னோயா மக்கள் தெரிவித்தனர்.
தற்போது சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சட்டரீதியான காணி உரித்து இருப்பதாக சம்பந்தப்பட்ட நபர் அறிவிப்பாராயின் அதற்கு கிராம சேவை அதிகாரி, பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் தொடர்பு பட்டிருக்க வேண்டும். தற்போது சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் அம்பகமுவ பிரதேச சபைக்கு பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு அரசியல் தொடர்புகளுக்கு ஊடாகவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
• இந்த பிரச்சினையை சாதாரணமாக கடந்து விட்டு போக முடியாது. காரணம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலம் தோட்ட நிர்வாகத்தின் பராமரிப்பிலுள்ள, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமானதாகும். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிக்கு உறுதி வழங்கியது யார்?
• தோட்ட நிர்வாகத்தின் பராமரிப்பில் இருக்கும் குறித்த காணியை ஆக்கிரமிக்கும் வரையில் ஏன் தோட்ட நிர்வாகம் எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை?
• 2017 ஆம் ஆண்டு முதல் தோட்ட மக்கள் தொடர் போராட்டம் செய்யும் நிலையிலும், பல அரசியல்வாதிகளுக்கு அறிவித்துள்ள போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமைக்கான காரணம் என்ன?
• மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணியை வழங்குவதற்கு கம்பனிகளும் அரசாங்கமும் மறுத்து வரும் நிலையில் தனியொரு நபர் பல ஏக்கர் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தும், 20 பேர்ச் நிலத்துக்கு காணி உரித்தும் பெற்றுக் கொண்டது எவ்வாறு?
என பல்வேறு சந்தேகங்களை எமக்கு ஏற்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், இவ்வாறு ஏதேச்சதிகாரமாக செயற்படுவதற்கு பின்னால் பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
வாக்குகளுக்கு மாத்திரம் தோட்ட மக்களை தேடி சென்ற அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையில் எந்த தலையீடும் மேற்கொள்ளாமை தொடர்பிலும் தோட்ட நிர்வாகமும் இந்த சட்டவிரோத செயற்பாட்டுக்கு துணை நிற்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஒன்றிணைந்துள்ள நிலையில், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் எந்தளவுக்கு விசாரிக்கப்பட்டு தோட்ட மக்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகம் நிலவுகின்றது.
எனினும் பின்னோயா கீழ் பிரிவில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத நில ஆக்கிரமிப்புக்குப் பின்னால் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் உரிய விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.jpeg)

.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக