மலையகப் பெருந்தோட்ட மக்களின் சுகாதார கட்டமைப்பு இன்னும் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படாமல் இருப்பதுவும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்துக்குட்பட்ட மருந்தகங்கள் பல இன்று செயலற்ற நிலையில் இருப்பதும், மலையக பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத் தேவையை பூர்த்தி செய்வதில் பின்தங்கிய நிலையை உருவாக்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்ட முன்மொழிவில், “பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பொது தனியார் கூட்டாண்மை மூலம் தோட்ட மட்டத்திலான சுகாதார சேவையை வலுப்படுத்தும் செயன்முறையை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தோட்ட வைத்தியசாலைகளுக்குத் தேவையான மனித வளங்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அரசாங்கத்தால் வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில், “தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஆகிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் 44 தோட்ட வைத்தியசாலைகளை அரசுடமையாக்குவது தொடர்பான நிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்” என சுகாதாரத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஆனால் சகல பெருந்தோட்ட சுகாதார நிறுவனங்களையும் கட்டம் கட்டமாக அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளுவதற்கு ஏற்கனவே 2018.05.15 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள 450 சுகாதார நிலையங்கள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு, அறிக்கையானது சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள போதும், அவை செயற்படுத்தவில்லை. தற்போது புதிதாக மீண்டும் ஒரு திட்டத்தை உருவாக்குவதற்குப் பதிலாக ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட விடயத்தை செயற்படுத்துவதன் மூலம் பெருந்தோட்ட சுகாதாரத்துறையை விரைவாக வலுப்படுத்த முடியும். மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் போது, இன்னும் கால தாமதத்தை ஏற்படுத்துவதுடன் திட்டங்களை தாமதப்படுத்தும் முயற்சிகளாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரப்படும் நிலையில் 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரையும் எவ்விதமான பெருந்தோட்ட வைத்தியசாலைகளும் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவில்லை.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள 450 சுகாதார நிலையங்கள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டு, அறிக்கையானது சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் குறித்த அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கும், அதன் பின்னர் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உள்ளிட்ட 450 சுகாதார நிலையங்களை பகுதி பகுதியாக சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்தவும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 19.02.2020 அன்று பாராளுமன்றத்தில் சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுவூட்டுகை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தோட்ட மருத்துவ அலகுகளை சுவீகரித்தல் பற்றிய அறிக்கையானது, குழுவின் அப்போதைய தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன், பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் கிட்டத்தட்ட 450 தோட்டபுற சிகிச்சை நிலையங்கள் உள்ளதுடன் கூறப்பட்ட சிகிச்சை நிலையங்களை தரமுயர்த்துவதன் மூலம் பெருந்தோட்ட மக்களின் சுகாதார நிலைமையை முன்னேற்றுவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஏனைய கிராமப்புற மற்றும் நகர்புற மக்களுக்கு அரசாங்கத்தினால் சேவைகள் வழங்கப்படுவதைப் போன்ற விதத்தில் சுகாதார சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்கள் வசதி வாய்ப்பாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கத்தின் சுகாதார வலையமைப்புடன் பெருந்தோட்ட சுகாதார வலையமைப்பை ஒன்றிணைக்கும் பொருட்டும் பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சகல பெருந்தோட்ட சுகாதார நிறுவனங்களையும் கட்டம் கட்டமாக அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டும் முன்னாள் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு 2018.05.15 அன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக 450 பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்கி கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இதுவரையும் எவ்வித திட்டங்களும் முழுமையடையவில்லை என்பதே உண்மையாகும்.
சுகாதார அமைச்சின் தகவல்களின் அடிப்படையில் 44 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் 1994 - 2007 வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இறுதியாக 2007 ஆம் ஆண்டு 35 வைத்தியசாலைகள் பெறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட வைத்தியசாலைகளில் கண்டி மாவட்டத்தில் வெஸ்டோல், மடுல்கெல்ல வைத்தியசாலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை, டயகம மேற்கு, புரடொப், கோணபிட்டிய, ஹய்பொரஸ்ட், வடக்கு மடக்கும்புர, முல்லோயா வைத்தியசாலைகளும் பதுளை மாவட்டத்தில் கனவரெல்ல, தம்பேதென்ன, டவுன்சைட், தெமோதர, க்ளெனோர், ஹக்கல, ஹொப்டன், மஹாடோவ, பூனாகலை, ரோபேரி, சரணியா, ஸ்பிரிங்வெளி, தெல்பேத்த, கிர்க்லீஸ், உனுகல்ல, உடவரிய, யூரி, ஊவா ஹைலண்டஸ், மீதும்பிட்டிய, கேகாலை மாவட்டத்தில் ஹல்கொல்ல, கிரிபொருவ, சபுமல்கந்த, இரத்தினபுரி மாவட்டத்தில் அலுபொல, எந்தான, ராசாகல்ல, மாதம்பே, தும்பர, கிரிபத்கல, சூரியகந்த, பலம்கோட்டை, மாரதென்ன, களுத்துறை மாவட்டத்தில் நிவ்செட்டல், கீகியானகந்த, றைகம் ஆகிய 44 பெருந்தோட்ட வைத்தியசாலைகளே அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரதி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 51 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதுடன், 23 மருத்துவமனைகள் அரசுடைமையாக்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் எவ்விதமான அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லை. இன்று பெருந்தோட்டங்களில் 179 மகப்பேற்று விடுதிகளும் 450 பெருந்தோட்ட வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன. அவற்றை அரசாங்கம் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் அறிக்கை ரீதியாக தயார்படுத்தப்பட்டுவிட்டாலும் இன்னும் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கப்படவில்லை.
சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, 44 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்குரிய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுட்டுகை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தோட்ட மருத்துவ அலகுகளை சுவீகரித்தல் பற்றிய அறிக்கையில், 2017 ஜூலை 07 ஆம் திகதி இடம்பெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பற்றிய உப குழுவின் நான்காவது கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களில் 2005 - 2010 காலகட்டத்தில் நடைபெற்ற தோட்டத்துறை சார்ந்த வைத்தியசாலைகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தோட்டத்துறை சார்ந்த 500 வைத்தியசாலைகளை 10 வருடங்களுக்குள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு வருடமும் 50 வைத்தியசாலைகளை சுவீகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு அப்பொறிமுறை இடைநிறுத்தப்பட்டதாகவும் கைப்பற்றப்பட்ட 50 வைத்தியசாலைகளுள் 35 - 40 எண்ணிக்கை மட்டுமே இயங்கு நிலையில் உள்ளதாகவும் தோட்டத்துறைசார்ந்தவர்கள் தவிர்ந்த இளைய பணியாட்தொகுதி உறுப்பினர்கள் பணியிலிருந்து நீங்கிவரும் நிலை, தோட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு மேலதிக பயிற்சிகளை பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமை போன்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2019 செப்டம்பர் 16 ஆம் திகதி சுகாதாரம் மற்றும் மனித நல நோம்புகை, சமூக வலுவுட்டுகை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முப்பத்து ஆறாவது கூட்டத்தில், 59 நிறுவனங்களை கைப்பற்றும் செயற்பாட்டினை (57 அடிப்படை சிகிச்சை அலகுகள் மற்றும் 2 பிரதேச வைத்தியசாலைகள்) 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதுடன் மொத்தம் 450 சுகாதார நிறுவனங்கள் 5 வருடங்களுக்குள் சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 அக்டோபர் 23 ஆம் திகதி கூட்டத்தில் இதுவரை அரசாங்கத்தினால் 44 (450) வைத்தியசாலைகள் சுவீகரிக்கப்பட்டுள்ள போதிலும் அவை காணி சட்டத்துக்கு அமைய சுவீகரிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் உள்ள தோட்டங்கள் மற்றும் நகர அலகுகளினால் தோட்ட மருத்துவ அலகுகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்ற போதும் ஏனைய மருத்துவ சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் 2023 ஆம் ஆண்டுக்குள் 450 பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக மாற்றியிருக்க முடியும். ஆனால் கடந்த காலங்களில் அந்த தீர்மானம் தொடர்பில் அக்கறை செலுத்தப்படவில்லை என்பதுடன் மலையகத் தலைமைகளும் அது தொடர்பில் குரல் கொடுக்கவில்லை.
பெருந்தோட்ட கம்பனிகள் இந்த வைத்தியசாலைகளை முறையாக பராமரிக்க வில்லை என்ற நிலையிலேயே அவற்றை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. தற்போது பெருந்தோட்ட கம்பனிகளுடன் கூட்டு திட்டத்தின் மூலம் அவற்றை செயற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திலேயே அதிக இறுக்கத்தை கொண்டுள்ள கம்பனிகள் தோட்ட வைத்தியசாலைகளை பராமரிக்க இணங்குமா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட அதே தவறை தற்போதைய அரசாங்கமும் செய்யாமல், ஏற்கனவே அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை முழுமையாக அரசாங்கம் பொறுப்பேற்று செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் கிராமப்புறங்களில் காணப்படும் அனைத்து வைத்தியசாலைகளும் அரசாங்கத்தின் உதவியுடனே இயங்குகின்றன. ஆனால் தோட்டப்புறங்களில் மாத்திரமே கம்பனிகளுக்கு அவை பொறுப்பளிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தோட்ட மருத்துவ உதவியாளரால் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் ஆபத்தான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசமான சுகாதார கட்டமைப்பை கொண்டுள்ள பெருந்தோட்ட சுகாதாரத்துறையை மறுமலர்ச்சிக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் நலன்கள் சார்ந்து திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின் அவற்றில் பெருந்தோட்ட சுகாதாரத்துறைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக