இரத்தினபுரி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தில் மிக நீண்ட இடைவெளியொன்று நிரப்பப்படாமல் இருந்து வருகின்றது. அதற்காக பல ஆண்டுகளாக பல கட்சிகள் முனைந்தும் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. ஆனாலும் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது, தமிழர்கள் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்ற நிலை இருந்தாலும் அதை நோக்கிய பயணம் மிகவும் கடினமாகும். இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதுவும் பெரும்பான்மையினரின் அபிலாஷைகளை தேர்தல் வாக்குகளில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இருப்பதுவும் தமிழ் பிரதிநிதிகள் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு பாரிய தடையை ஏற்படுத்துகின்றன என கொள்ளலாம்.
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழர்கள்
இரத்தினபுரி தேர்தல் மாவட்டமானது எட்டு தேர்தல் தொகுதிகளை கொண்டமைந்துள்ளது. எஹலியாகொடை, பலாங்கொடை, நிவித்திகலை, கொலன, கலவானை, இரத்தினபுரி, பெல்மதுளை, இறக்குவானை என்பவையே அவையாகும். 2012 ஆம் ஆண்டு இலங்கை சனத்தொகை கணிப்பீட்டின்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 947,811 சிங்களவர்களும் 116,561 தமிழர்களும் 22,346 இலங்கை முஸ்லிம்களும் 1289 ஏனைய இனத்தவரும் வாழ்கின்றனர். இங்கு ஓப்பநாயக்க, எலபத்த, வெலிகேபொல, எம்பிலிபிட்டிய போன்ற பகுதிகளில் மிக குறைந்தளவிலான தமிழர்களே வசித்து வருகின்றனர். இங்கு 575 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காணப்படுகின்ற நிலையிலும் ஒரு தமிழ் கிராம உத்தியோகத்தர் கூட காணப்படாமை மிகப்பெரும் குறைபாடாகும்.
கடந்தகால தமிழர் பிரதிநிதித்துவங்கள்
முதலாகவும் இறுதியாகவும் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ராஜன் என்பவர் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் எந்தவொரு தமிழ் வேட்பாளரும் இதுவரை தெரிவாகவில்லை. 1989 ஆம் ஆண்டு எம்.எல்.எம்.அபூசாலி என்பவர் 32,133 வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழ் பேசும் மக்களிலிருந்து இதுவரை காலமும் எவரும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லையென்பதுடன், பெரும்பான்மையின பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பியே வாழவேண்டிய நிலைக்கு இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக ஒரு தமிழர் போட்டியிட்டு 5000 வரையான வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக ஒரு தமிழர் போட்டியிட்டு 30 ஆயிரம் வரையான வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் இருவரும் வெற்றி பெற்றிருக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஒரு முஸ்லிம் வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தியினூடாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஒருவருமாக இரு தமிழ் பேசும் வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். ஏனைய தேசிய கட்சிகள் சார்பாக எந்தவொரு தமிழ் வேட்பாளரும் இம்முறை இரத்தினபுரி மாவட்டத்தில் களமிறக்கப்படவில்லை.
1989 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து ஆறு ஆசனங்களையும் இலங்கை சுதந்திரக் கட்சி மூன்று ஆசனங்களையும் ஐக்கிய சோசலிசக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. ஆனால் தமிழ் பிரதிநிதிகள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. 1994 இல் மக்கள் கூட்டணி ஆறு ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து நான்கு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. அப்போதும் எந்தவொரு தமிழ் வேட்பாளரும் உருவாகவில்லை. 2000 ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி ஆறு ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி நான்கு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. 2001 இல் ஐக்கிய தேசிய முன்னணி 5 ஆசனங்களையும் மக்கள் கூட்டணி 4 ஆசனங்களையும் ஜே.வி.பி. ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின. 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆறு ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி நான்கு ஆசனங்களையும் பெற்றன. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி மூன்று ஆசனங்களையும் பெற்றிருந்தன.
இறுதியாக 2015 ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி நல்லாட்சி அரசு ஐந்து ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆறு ஆசனங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி இருமுறையும் மக்கள் கூட்டணி இரு முறையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன.
வாக்குச் சிதறல்
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக காணப்படுவதுடன், வாக்குகளின் தொகையும் குறைவாகவே காணப்படுகின்றன. குறைந்த வாக்குகளுக்காக அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் நிலை இங்கு காணப்படுகின்றது. இங்கு காணப்படும் சகல தமிழர் வாக்குகளும் ஒரு தமிழருக்கே சென்றடையும் நிலை இல்லை. இதனால் ஒரு தமிழ் பேசும் உறுப்பினர் உருவாவதற்கு பெரும்பான்மையினரின் வாக்குகளும் தேவைப்படுகின்றன. தற்போதைய நிலையில் 80 ஆயிரத்துக்கும் குறைவான தமிழ் வாக்குகளே இரத்தினபுரி மாவட்டத்தில் காணப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளன. இதில் பல வாக்குகள் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கும் செல்லும் நிலை இருக்கின்றது. பெரும்பான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாழும் தமிழர்கள் தங்களுடைய பாதுகாப்பினையும் இருப்பினையும் கருத்தில் கொண்டு இத்தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதேவேளை தமிழ் உறுப்பினர்கள் இப்பகுதியில் பல வருடங்களாக தெரிவாகாமையும் சிங்களத் தலைவர்களின் அபிவிருத்திகளிலேயே தமிழர்களும் தங்கியிருப்பதால், காலங்காலமாக சிங்கள வேட்பாளர்களுக்கே வாக்களித்து வருகின்றனர். சிலர் பெரும்பான்மைத் தலைவர்களிடம் கிடைகின்ற சலுகைகளுக்காகவும் செல்வதாகவும் கூறப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் காணப்படும் தமிழ் வாக்குகளைக் கொண்டு ஒரு தமிழ் பிரதிநிதியையே வெற்றிபெறச் செய்ய முடியும். அவ்வாறான நிலையில் தேர்தல் காலங்களில் மாத்திரம் இரத்தினபுரி மாவட்டங்களுக்குள் நுழையும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளும் வாக்குச் சிதறலை ஏற்படுத்தி வருகின்றன.
தேர்தல்கால வன்முறைகள்
இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் மற்றும் மிரட்டல்கள் காரணமாக வாக்களிக்கும் தமிழர்களின் வாக்குகள் குறைவடைவதோடு, விரும்பியோ விரும்பாமலோ பெரும்பான்மைத் தலைவரை தெரிவு செய்யும் நிலையில் மக்கள் காணப்படுகின்றனர். நிவித்திகலையில் 2015 ஜூன் 29 இல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கி படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதேவேளை தேர்தல் காலங்களில் பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகளில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களின் வாக்குகள் கணக்கிடப்பட்டு அவர்கள் யாருக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்ற கண்காணிப்பு பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
இதனால் இம்மக்கள் பயந்து பெரும்பான்மைத் தலைவர்களுக்கே வாக்களிக்கத் தூண்டப்படுகின்றனர். நிவித்திகலை, வட்டாபத்த, கிரிபத்கல தோட்டங்களில் இந்நிலைமை அதிகம் காணப்படுகின்றது.
கலவான தேர்தல் தொகுதியானது, அதிகம் சிறுதோட்ட தேயிலை உற்பத்தி நிகழும் பகுதியாகும். இங்கு தமிழ் மக்கள் மிக குறைந்தளவில் சிதறி வாழ்கின்றனர்;. அந்த மக்கள் தோட்டங்களில் இருந்து வெளிவருவதென்பதே மிகப்பெரும் போராட்டமாகும். அங்கு யாரும் உள்ளே செல்லவும் முடியாது. யாரும் வெளியே வரவும் முடியாது. இதனால் அவர்கள் வாக்களிக்க வருவதே மிகப்பெரும் சவாலாக தொடர்ந்தும் இருந்து வருகின்றது. எனவே மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கின்ற அமைப்புகள் மற்றும் வேட்பாளர்கள் இவ்வாறு தோட்டப்புறங்களில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.
நிராகரிக்கப்படும் வாக்குகள்
இரத்தினபுரி மாவட்டத்தில் காணப்படும் மிக குறைந்த தமிழ் வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் தொகையும் பிரதிநிதிகளின் வெற்றிக்கு தடையாக அமைகின்றன. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் 734,651 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காணப்பட்ட நிலையிலும் 480,395 (65.39 வீதம்) வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 37,022 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகமாக பலாங்கொடை, இறக்குவானை, இரத்தினபுரி, பெல்மதுளை, நிவித்திகலை தேர்தல் தொகுதிகளில் அதிக நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன.
2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் 810,082 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காணப்பட்ட நிலையில் 655,222 வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இறக்குவானை, கொலன்ன, பலாங்கொடை, இரத்தினபுரி தேர்தல் தொகுதிகளில் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கவில்லை. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளிலும் 23,026 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக இருக்கின்றன. இதில் கொலன்ன, நிவித்திகலை, இறக்குவானை, பலாங்கொட தேர்தல் தொகுதிகளில் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகமான வாக்குகள் பதியப்படாமைக்கு மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை தொடர்பாக போதிய விளக்கமின்மையும் வாக்களிப்பில் கலந்து கொள்வதற்கான உரிய பாதுகாப்பு இன்மையும் முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. அதேவேளை அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்படாத தேர்தல் தொகுதிகளிலேயே அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டும் காணப்படுகின்றன. இது ஒரு வேட்பாளர் அதிக விருப்பு வாக்குகளை பெறுவதையும் வேட்பாளரின் வெற்றி வாய்ப்பினையும் பறிக்கும் செயலாக அமைந்திருக்கின்றது.
எனவே இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த மேற்கூறிய விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்குள் காணப்படுகின்ற அறியாமையினையும் தமிழ் பிரதிநிதித்துவத்தின் தேவையையும் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பெரும்பாலும் பெரும்பான்மையின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தங்களுடைய இருப்பை தக்கவைப்பதற்காக தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குரிமையயை விருப்பமில்லாமலும் பயன்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. இவற்றுக்கான மாற்றுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். மேலும் சிறுபான்மை மக்களின் விகிதாசாரத்துக்கேற்ப ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் வகையில் தேர்தல் முறைமையிலேயே மாற்றம் செய்ய வேண்டியத் தேவை இருக்கின்றது. எனவே தமிழ் தலைமைகள் இத்தடைகளை நீக்குவதற்கு முதலில் முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு தேர்தலின் போதும் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள தடுமாற்றத்தையே சந்திக்க வேண்டியேற்படும்.
https://www.virakesari.lk/ article/86018

https://www.virakesari.lk/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக