மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் பெருந்தோட்டப் பயிர்களை நம்பியே அதிகம் இருக்கின்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் பெருந்தோட்டத்துறை பற்றிய பிரதான தரவுகள் (தேயிலை சிறுபற்று நிலங்கள் தவிர) எனும் பகுதியில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தோட்டங்களின் எண்ணிக்கை 453 ஆக காணப்படுவதுடன், மொத்த நிலப்பரப்பு 280,034 ஹெக்டெயார்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் தேயிலை 80,637 ஹெக்டெயர்களும் இறப்பர் 45,811 ஹெக்டெயர்களும் தென்னை 9,482 ஹெக்டெயர்களும் பயிரிடப்படாத நிலப்பரப்புக்களாக 117,275 ஹெக்டெயர்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இப்பயிர் நிலங்களை நம்பியே பெருந்தோட்டங்களில் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். ஆனால் சமீப காலங்களில் முறையான பராமரிப்புக்கள் இன்மையாலும், தொழிலாளர் பற்றாக்குறையாலும் பெரும்பாலான காணிகள் காடுகளாக மாற்றம் பெற்று வருகின்றன.
அதைவிடவும் பெருந்தோட்டக் காணிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திகளினாலும் காணி சுவீகரிப்புகளினாலும் பயிர்நிலங்களில் இழப்பு ஏற்படுவதுடன் அதனை நம்பியிருக்கின்ற தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பினை எதிர் நோக்குகின்றனர். அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது சுவீகரிக்கப்படுகின்ற காணிகள் அல்லது பயிர்களுக்குப் பதிலாக, கைவிடப்பட்டுள்ள காணிகளில் மீள் பயிர் வளர்பினையாவது மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது தொடர்ச்சியாக பெருந்தோட்டக்காணிகள் சூறையாடப்பட்டு வருகின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதுளை வேவெஸ்ஸ பெருந்தோட்டப் பிரிவில் 44 ஹெக்டெயர் காணியினை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்காக சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பினை தெரிவித்திருந்ததுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் ஆகியோரும் எதிர்ப்பினை வெளியிட்டனர். பிரதேச மக்களுடைய வாழ்வாதாரங்களை பறிக்கும் வகையிலேயே இக்காணி சுவீகரிப்பு இடம்பெற்றிருந்தது. பல்கலைக்கழகத்தினை அபிவிருத்தி செய்வது எதிர்கால சந்ததிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் நிலை காணப்பட்டாலும் தேயிலையை நம்பியுள்ள மக்களுக்கு என்ன தீர்வு வழங்கப்படுகின்றது. ஏற்கனவே இருக்கும் காணிகளில் தேயிலை விளைச்சல் இன்மையால், தொழிலாளர்களுக்கு வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், வருமானமும் குறைவடைந்துள்ளது. தற்போது விளைச்சல் நிலமும் சுவீகரிக்கப்பட்டால் தொழிலாளர்களுடைய நிலைமை என்னவாகும்.
1964 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க காணி கையகப்படுத்தல் (திருத்தியமைக்கப்பட்ட) சட்டத்தின் திருத்தங்களுக்கமைய காணி கையகப்படுத்தல் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் முதலாவது உப பிரிவின் கீழ் காணி அமைச்சரின் ஆணையின் பிரகாரம் கீழே விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள காணியானது ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக அவசியமாகவுள்ளது என்பதனை அப்பிரிவின் 2 ஆம் உபபிரிவின் பிரகாரம் பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். பதுளை மாவட்டத்தில் பதுளை பிரதேச செயலாளர் பிரிவில், 80து வேவெஸ்ஸ கிராம உத்தியோகத்தர் பிரிவில் இறுதி கிராம வரைபடம் 37 இல் துண்டு இலக்கம் 104 வரைபடத்தின் துண்டு இலக்கம் 104 என குறிப்பிடப்பட்டுள்ள 44 ஹெக்டெயர் அளவு கொண்ட வேவெஸ்ஸ தோட்டத்திலேயே இக்காணியை பயன்படுத்திக்கொள்ள பதுளை பிரதேச செயலகத்தின் கையகப்படுத்தும் உத்தியோகத்தரினால் கையொப்பமிடப்பட்டு (BD/BD/LND/03/05/27) அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
வேவெஸ்ஸ தோட்டத்தில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்காக காணி சுவீகரிப்பது தொடர்பாக பதுளை பிரதேச செயலகம், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வினவிய போது முரண்பட்ட தகவல்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
பதுளை பிரதேச செயலகம் வழங்கிய தகவல்களின் படி, (BD/BD/RTI/24) குறித்த காணியானது, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காகவே பதுளை வேவெஸ்ஸ பெருந்தோட்டப் பிரிவில் 44 ஹெக்டெயர் காணி சுவீகரிக்கப்படுவதுடன், அக்காணியில் கல்வி அபிவிருத்திகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி கையகப்படுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த காணியின் உரிமையினை தீர்மானித்த பின்னர் இழப்புகள் மற்றும் இழப்பீடுகள் தொடர்பில் மதிப்பீடு கணிப்பிடப்படும். 07 பிரிவின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குறித்த தினத்தில் செய்யப்படுகின்ற மதிப்பீட்டினை தற்போது பெற்றுக்கொடுக்க முடியாதிருப்பதாகவும். தேவைப்படின் நீங்கள் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்தால் அண்ணளவான மதிப்பீட்டினை பெற்றுத்தரமுடியுமென தெரிக்கப்பட்டுள்ளது. அதைவிடவும் இப்பல்கலைகழகத்துக்காக ஏற்கனவே இங்குறுகமூவ பெருந்தோட்டத்தில் 34 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, 100 ஏக்கர் காணியினை பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக கையகப்படுத்திக்கொள்ள எண்ணியிருந்த போதிலும் மண்சரிவு அவதானம் காரணமாக தற்போது கையகப்படுத்தும் செயற்பாடுகள் 23 ஏக்கருக்கு மாத்திரம் செயற்படுத்தப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக ப்ரிலியன்ட் காமன்ட் இன் காணி பகுதியினை தற்போது கையகப்படுத்தும் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த கையகப்படுத்தும் செயற்பாடுகள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் வழங்கிய தகவல்கலின் படி, பதுளை வேவெஸ்ஸ பெருந்தோட்டப் பிரிவில் 44 ஹெக்டெயர் காணியானது, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக கையகப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக் காணியில் விரிவுரை மண்டபம், மாநாட்டு மண்டபம், ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய வகையிலான மாணவர் விடுதி, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு தூர இடங்களிலிலிருந்து சேவைக்கு வரும் ஊழியர்களின் தங்குமிடம் மற்றும் முன்மொழியப்பட்ட மருத்துவ பீடத்தின் கட்டுமானம் என்பன உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காணி கையகப்படுத்தல்களின் போதான இழப்பீடுகள் வழங்குவதற்கு அதிகாரிகளின் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் ஏற்கனவே இங்குறுகமூவ பெருந்தோட்டத்தில் 34 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காகவே குறித்த காணி சுவீகரிக்கப்பட்டதாகவும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே மேலும் 30 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டமை தொடர்பில் கேட்கப்பட்டபோது, அங்கு 25 ஏக்கர் மட்டுமே சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் மேலும் கையகப்படுத்தும் செயல்முறை இன்னும் முடிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றம் புத்தாக்க அமைச்சு வழங்கிய (HE/AD/08/17/RTI/80) தகவலின் அடிப்படையில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கற்கை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக பதுளை வேவெஸ்ஸ பெருந்தோட்டப் பிரிவில் 44 ஹெக்டெயர் காணியானது சுவீகரித்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இக்காணியில் பீடங்களுக்கான கட்டிங்கள் மற்றும் விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் பெற்றுக்கொள்ளப்படும் மதிப்பீட்டிற்கமைய இழப்பீடு செலுத்தப்படுமெனவும் சுவீகரிக்கப்படவுள்ள காணிக்கான அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதி 5,000,000 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்குறுகமூவ பெருந்தோட்டத்தில் 34 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, இங்குறுகமூவ எனும் பெயரைக் கொண்ட 34 ஏக்கர் காணி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்காக சுவீகரித்துக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் இங்குறுகமூவ வத்த எனும் பெயரில் 25 ஏக்கர் காணி பல்கலைக்கழகத்தின் கற்கை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு சுவீகரித்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில் பல்கலைக்கழகத்துக்காக பெருந்தோட்ட காணி சுவீகரிக்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் அதற்கான இழப்பீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இக்காணிகளிலுள்ள தேயிலையினை நம்பி வாழும் மக்களுக்கு என்ன பதில் வழங்கப்படப்போகின்றன. அவர்கள் இனிமேல் தங்களுடைய வாழ்வாதாரத்தை எவ்வாறு கொண்டு நடத்துவார்கள். இதற்கான தகுந்த பதிலை அரசாங்கமும் பல்கலைக்கழக நிர்வாகமும் பெருந்தோட்ட கம்பனிகளும் வழங்க வேண்டும். ஆனால் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு தேவைக்கு அதிகமாகவே காணியுள்ளதாகவும் அதற்கென இங்குறுகமூவ பெருந்தோட்டத்திலிருந்து 64 ஏக்கர் தேயிலை காணி ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது 44 ஹெக்டேயர் தேயிலை காணி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பெயரில் வேறு தேவைகளுக்கு தனிப்பிட்ட விருப்பின் பேரில் சுவீகரிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்திருந்தார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகமானது, 59 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இவற்றினை விடவும் பல்கலைக்கழகமானது, கைத்தொழில் அமைச்சிடமிருந்தும் பலாங்கொட தோட்ட முகாமைத்துவத்திடமிருந்தும் கட்டிடங்களை அமைப்பதற்கு என 64 ஏக்கர் காணியை சுவீகரித்துள்ளதாகவும் தற்போது வேறொரு 25 ஏக்கர் காணியை பலாங்கொட தோட்ட முகாமைத்துவத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் நடந்தவண்ணமுள்ளதாகவும் மேலும் பலாங்கொட தோட்ட முகாமைத்துவத்தின் வெல்லஸ்ஸ பிரிவிடமிருந்து மேலதிகமாக 12 ஏக்கர் காணியை பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத்துக்காக சுவீகரிப்பதற்காக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டுமாயின் தனியார் காணிகளை (பயிர் செய்கையற்ற) முறையான இழப்பீடுகளை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஆனால் 140 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில்புரிகின்ற தேயிலை காணியினை கையகப்படுத்துவதற்கான காரணம் என்ன?. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கான தீர்வு என்ன?. போன்ற பிரச்சினைகள் எழுவதுடன் தொடர்ச்சியாக பெருந்தோட்ட தொழிற்றுறையானது நலிவடைந்து செல்லும் நிலையும் காணப்படுகின்றது. ஏற்கனவே பெருந்தோட்டத்துறையினை விடவும் சிறுதோட்ட உரிமையாளர்கள் அதிக பங்கிளை வழங்குவதால் அரசாங்கம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலை காணப்படுகையில், இவ்வாறான நிலக் கையகப்படுத்தல்கள் பெருந்தோட்டங்களை இன்னும் இல்லாமல் செய்து, அதனை நம்பி வாழும் மக்களை மேலும் சிரமத்துக்குள்ளாகுகின்றது.
1992 ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கும்போது மொத்தமாக காணப்பட்ட 184,086 ஹெக்டேயர் காணிகளில் அரசாங்க நிறுவனங்களான ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் என்பவற்றிடம் மொத்தமாக 71.98 வீதமான (108,136 ஹெக்டேயர்) தேயிலைக்காணிகளும் மீதமான 28.02 வீதமான தேயிலைக்காணிகள் (75,950 ஹெக்டேயர்) மட்டுமே சிறுதோட்டங்களாக காணப்பட்டன. பெருந்தோட்டங்களை தனியார்மயப்படுத்தியதன் பின்னர் 1995 ஆம் ஆண்டளவில் அரச நிறுவனங்களிடம் 5.7 வீதமான காணிகளும் (10,650 ஹெக்டேயர்) கம்பனிகளிடம் 48.91 வீதமான காணிகளும் (85,200 ஹெக்டேயர்) 45.59 வீதமாக சிறுதோட்டங்களும் (82,919 ஹெக்டேயர்) காணப்பட்டன. 2016 ஆம் ஆண்டு அரச நிறுவனங்களிடம் 5 வீதமான காணிகளும் (9,313 ஹெக்டேயர்) கம்பனிகளிடம் 36 வீதமான காணிகளும் (73,756 ஹெக்டேயர்) 59 வீதமாக சிறுதோட்டங்களும் (120,955 ஹெக்டேயர்) காணப்பட்டன. இவ்வாறு பெருந்தோட்டங்கள் தொடர்ச்சியாக குறைவடைந்து சிறுதோட்டங்கள் அதிகரிப்பதற்கு தோட்டங்களை முறையாக பராமரிக்காமையும் முக்கிய காரணமாகும். அத்துடன் தற்போது அபிவிருத்திகளுக்காகவும் பெருந்தோட்ட தேயிலைக்காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கம்பனிகள் தமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காணியின் பரப்பளவான 92,108 ஹெக்டேயரில் சுமார் 1700 ஹெக்டேயர் பரப்பிலான காணிகளை கைவிடப்பட்ட காணிகளாக பராமரிக்க முடியாத நிலையில் ஒதுக்கி வைத்துள்ளனர். தனியார் மயப்படுத்தும்போது கம்பனிகளிடம் வழங்கப்பட்ட 151,017 ஹெக்டேயரில் சுமார் 37000 ஹெக்டேயர் பரப்புள்ள காணிகள் இன்று கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறுதி புள்ளிவிபரங்களின்படி, 23 கம்பனிகளிடம் 73,226 ஹெக்டேயர் பரப்பளவிலான காணிகள் மட்டுமே தேயிலை செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 50 வீதமான பரப்பில் 100 ஆண்டுகளுக்கும் பழைமையான குறைந்த விளைச்சல் தரும் தேயிலை செடிகளே காணப்படுகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களின் தேயிலைக்காணிகள் குறைவடைந்துவரும் நிலையில் அபிவிருத்திகளுக்காக எவ்விதமான முன்னாயுத்தங்களும் மேற்கொள்ளப்படாமல், சுவீகரிக்கப்படும் தேயிலைக்காணிகளுக்கு பதிலாக மீள்நடுகைகளும் மேறகொள்ளப்படாமல் தொடர்ச்சியாக தேயிலைக்காணிகள் கையகப்படுத்தப்படுவதால் எதிர்காலத்தில் பெருந்தோட்டங்களின் நிலை கேள்விக்குறியாகும் நிலை தோன்றியுள்ளது. அபிவிருத்திகளை விடவும் மக்களுடைய வாழ்வாதாரம் முக்கியமானதாகும். அவற்றை சிதைக்காமல் அபிவிருத்திகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக