இலங்கையில் நிலவிய யுத்தகாலப்பகுதியில் படைகளிடம் சரணடைந்தவர்கள் மற்றும் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களில் பலர் தற்போது காணாமல் போனோராக அடையாளப்படுத்தப்படும் நிலையில் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதற்கு எந்தவிதமான பதில்களும் அரசாங்கத்திடம் இல்லை. காணாமல்போனவர்கள் என யாரும் இல்லை என்பதே அரசாங்கத்தின் தொடர்ச்சியான நிலைப்பாடாக இருக்கின்றது. இதனால் காணாமல் போனோர் தொடர்பாக உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு ஏற்ப அவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. மாறாக காணாமல்போனோரின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் நிவாரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளையே அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்திருக்கின்றது. அவ்வாறெனில் யுத்தகாலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டவர்கள், உறவினர்கள் முன்பாக சரணடைந்தவர்களின் நிலை என்ன?. படைகளிடம் சரணடைந்ததற்கான ஆதாரங்களை வைத்துக்கொண்டு கடந்த மூன்று வருடங்களுக்கும் மேல் போராடும் மக்களுக்கு தீர்வு தான் என்ன?. இலங்கையில் நிலவிய யுத்தத்தினை முன்கொண்டு சென்றவர்களில் அன்றைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முக்கிய பங்கு இருக்கும் நிலையில், யுத்தகாலப்பகுதியில் காணாமல்போனவர்கள் தொடர்பில் இவருடைய தீர்வு எவ்வாறானதாக இருக்கும்.
தற்போது யுத்தகாலப்பகுதியில் காணாமல் போனோராக அடையாளம் காணப்பட்டவர்களை கண்டறிவதற்காக அரசாங்கம் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவியிருப்பதாக குறிப்பிட்டாலும், இவ் அலுவலகத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பதோடு மட்டுமல்லாது, அதன் செயற்பாடுகளின் மீதும் நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக காணாமல் போனோரை கண்டடைவதற்கு உறவினர்களாலும் சமூக அமைப்புகளாலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் கூட அவை இன்று காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமாக பரிணமித்து 1000 நாட்களை தாண்டியும் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடமிருந்து (Office on Missing Persons) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை (OMP/ADM/25) மையப்படுத்தி இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
2018 பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இயங்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது, 2019 நவம்பர் 14 ஆம் திகதி வரையிலும் காணாமல் போனோர் தொடர்பாக 15,153 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டம் 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டம் (தாபித்தலும், நிருவகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்) இவ்வலுவலகத்தின் முக்கிய நான்கு பணிகளைக் குறிப்பிடுகின்றது. காணாமற்போன ஆட்களைத் தேடுதல் மற்றும் தேடிக் கண்டுபிடித்தல், மேற்படி காணாமற்போன ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சூழமைவுபற்றிய விடயங்கள் மற்றும் அவர்களின் நிலையை தெளிவுபடுத்துதல், காணாமற்போன ஆட்கள் பற்றிய சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இத்தகைய நிகழ்வுகள் மீள நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்புடைய நிறுவனங்களுக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல், உரிய இழப்பீட்டு மார்க்கங்களை அறிமுகப்படுத்தல் என்பவை அவையாகும்.
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டத்தின்மூலம் நிரந்தரமான அலுவலகம் ஒன்று நிறுவப்படுவதோடு காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் என்போர் யுத்தம், அரசியல் அமைதியின்மை அல்லது சிவில் கிளர்ச்சிகள், கலகங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்குதல் உட்பட்ட சூழ்நிலைகளில் "எவராவது ஓர் ஆளுக்கு ஏற்பட்ட நிலை அல்லது அவர் இருக்கும் இடம் நியாயமான முறையில் அறியவில்லையென நம்புகின்ற அந்த நபர்' என்ற வகையில் ஒருவர் வரைவிலக்கணம் செய்யப்படுகின்றார். இதுவரை காணாமல் போனவர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கின்றபோதும், கிடைத்துள்ள முறைப்பாடுகளின்படி காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது குறித்து பூர்வாங்க விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இந்நடவடிக்கைகள் மேலும் துரித கதியில் மேற்கொள்ளப்படும். விசாரணை அதிகாரிகளை இன்னமும் சேவையில் அமர்த்தவில்லை. அதன் காரணமாக அச்செயல்முறை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லையென காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலவலகத்தின் மூலம் சில விசேட சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விசாரணை மேற்கொள்வது உட்பட பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் பாதுகாக்கப்படுதலை உறுதிப்படுத்துவதற்கு அதன் அடிப்படை நடவடிக்கையான புலனாய்வு மற்றும் தேடல் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மூலம் மன்னார் கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய (சதொச) கட்டிடத்தில் உள்ள கூட்டுப் புதைகுழி தொடர்பாக அவதானிப்போடு அவற்றின் அகழ்வாராய்ச்சிகளுக்கும், மனித எலும்புக்கூடுகளை வெளியே எடுக்கும் நடவடிக்கைகளுக்குமான நிதி அனுசரணையையும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வழங்குகின்றது. இந்த நடவடிக்கைகளை நேரடியாகவும், தடைகளின்றியும் வெளிப்படைத்தன்மையோடும் தொடர்ச்சியாகவும் முன்னெடுப்பதை உறுதிப்படுத்துவதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் கருத்துக்களின்படி, காணாமல்போனோர் என்று யாரும் இல்லை என்று கூறப்படுகின்றது. அதேபோல காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒருபகுதியாக மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறெனில் காணாமல்போனோர் இறந்திருப்பதற்கும் வாய்ப்பிருப்பதற்கான சமிக்ஞையையா அரசாங்கமும் அதன் சார்பு நிறுவனங்களும் காண்பிக்க முற்படுகின்றன என்ற கேள்வியும் எழுகின்றன. ஆனால் காணாமல்போனோரின் உறவுகள் இன்னமும் தமது சொந்தங்கள் உயிருடன் இருப்பதாகவோ அல்லது மறைத்து வைத்திருப்பதாகவோ கருதுகின்ற நிலையில், இச்செயற்பாடுகள் அவர்களுக்கு எவ்விதமான பதில்களை தந்திருக்கும் என்று தெரியவில்லை.
காணாமல் போனவர்களின் குடும்பத்தாருடன் மேற்கொண்ட சந்திப்புக்களின் அடிப்படையில், நாடுபூராகவும் மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் 2147 நபர்களுடன் ஆறு பொதுமக்கள் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் மிகவும் கஷ்டமான பிரதேசங்களுக்கு நடமாடும் அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படுதல் மற்றும் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமற்போனோர் பற்றிய சம்பவத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுதல் என்பன கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் 2018 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் ஊடாக இழப்பீடுகள் தொடர்புபட்ட சட்ட பொறுப்புக்கள் சார்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கு செய்யப்படவேண்டிய சட்டதிருத்தங்கள் என்பன சம்பந்தமான அதன் சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நிதியுதவி நிகழ்ச்சித்திட்டங்கள், கடன்வசதி நிகழ்ச்சித்திட்டங்கள், வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான சலுகைகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்பயிற்சி மற்றும் வாழ்க்கைத்தரத்தை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பிலான சிபாரிசுகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த சிபாரிசுகளை ஆராய்ந்து பொருத்தமான தொடர் நடவடிக்கைகளை முன்மொழிவதற்கான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கான பிரேரிப்புக்கு 2018.09.18 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்தது.
அதன்பின்னர் 2019.09.03 ஆம் திகதி காணாமற்போனமைக்கான சான்றிதழை கொண்டுள்ள பயனாளிகளுக்கு 2019 அக்டோபர் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் 10 ஆம் நாள் நேரடி பண வைப்பின் மூலம் மாதாந்தம் 6000 ரூபா வீதம் இடைக்கால நிவாரணத்தினை வழங்குவதற்கும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் சார்பில் காணாமற்போனமைக்கான சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்குவதற்குமான பிரேரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இடைக்கால நிவாரணமானது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் வழங்குவதில்லை என்பதுடன் அந்நிகழ்வுக்கு பொறுப்பான அமைச்சின் மூலமாகவே அந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்படி, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு காணாமற்போனவர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள மரணச்சான்றிதழ்களை இரத்துச் செய்து "காணாமற்போனமைக்கான சான்றிதழை' வழங்குவதற்கும் இவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதமான இடைக்கால நிவாரணப்படியொன்றை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இவ்வாறு மரண சான்றிதழை இரத்துச் செய்து வழங்கப்படும் காணாமற்போனமைக்கான சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் இரண்டு வருடங்களாகும் என்பதனால் மரண சான்றிதழ்களை பெற்றுள்ள காணாமற்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறுபட்ட நிருவாக, சட்ட மற்றும் சமூக பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆதலால் 1955 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மரண பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மரண சான்றிதழ் ஒன்றில் மரணத்திற்கான காரணம் "காணாமற்போனமை' அல்லது "இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளமையினால் மரணம் அடைந்துள்ளாரென கருதப்படுகின்றார்' என்னும் கருத்தினை முன்வைக்கும் பதம் சேர்க்கப்பட்டிருந்தால் அல்லது 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரண பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழ் உரிய மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பின் "காணாமற்போனமைக்கான சான்றிதழுக்கு அமைவாக வழங்கப்படும் 6000 ரூபாவைக் கொண்ட மாதாந்த இடைக்கால நிவாரணப்படியை குறித்த ஆளின் குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு 2019.10.29 அன்று அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேற்கூறிய அமைச்சரவை அனுமதிகள் காணாமற்போன குடும்பங்களுக்கு நிவாரணங்களை மட்டும் வழங்கும் வகையிலேயே காணப்படுகின்றன.
காணாமற்போனோரின் குடும்பங்கள் பல வறுமையில் வாழ்வதும் உண்மையான விடயமாக இருந்தாலும் அவர்களின் எதிர்பார்ப்பு நிவாரணங்களை பெற்றுக்கொள்வதல்ல. காணாமல்போன உறவுகள் மீண்டும் கிடைக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்கொள்ள வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இதுவரையிலும் இடம்பெறவில்லை. பலநாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் காணாமற்போனவர்களின் குடும்பங்களை சந்தித்து பிரச்சினைகளை கண்டறிந்து கொண்டாலும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் அவர்கள் முன்வைத்த அழுத்தங்களும் பாரியளவில் தாக்கம் செலுத்தவில்லை. ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பாக பல முறை பேசப்பட்டிருந்தாலும் உலகில் பலம்வாய்ந்த நாடுகளால் கூட இவ்விடயங்களை வெற்றிகரமாக கையாளமுடியவில்லை.
தன் கண்முன்னே தம் உறவுகளை படைகளிடம் சரணடைய வைத்தமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருந்தும்கூட, இன்றும் அந்த உறவுகளை காணமுடியாது தவிக்கும் பலருடைய வாழ்க்கை கண்ணீருடனேயே செல்கின்றது. காணாமற்போன தனது உறவுகளை தேடி போராடிய பல தாய்மார்களும் இறுதிவரையிலும் பதில் கிடைக்காமல் மாண்டுபோனதுதான் மிச்சமாக இருக்கின்றது. தனது காணாமற்போன உறவுகளுக்காக நிகழ்காலத்திலும் உயிர் தியாகங்களை குடும்ப உறவுகள் செய்ய வேண்டியுள்ளது. 1000 நாட்களை கடந்துபோகும் இவர்களின் போராட்டமும் முற்றுபெறாமல் முளைத்துக்கொண்டே இருக்கின்றது. ஆதலால் காணாமல் போனோர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை வெளியிடவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு தற்போதும் இருக்கின்றது.
"ஒன்றுமில்லாத OMP அலுவலகம்'
கடந்த பத்து வருடங்களாக எமது உறவுகளை நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம் இருந்தும் அவற்றில் எவ்விதமான முன்னேற்றங்களும் இல்லை. இதை இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பார்த்துக்கொண்டிருக்கிறதே தவிர இதற்கு உரிய நீதியை பெற்றுத்தருவதற்கு எவருமே முன்வரவில்லை. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் எட்டு மாவட்டங்களுக்குரிய கட்டமைப்பினை உருவாக்கியே எமது போராட்டங்களை நாம் தனித்துவமாக உருவாக்கினோம். இந்த எட்டு மாவட்டங்களிலும் காணாமல்போனோரின் குடும்பங்கள் தங்களுடைய உறவுகளை தேடுவதில் பலத்துடன் இருக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் எங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் எங்களிடம் காணாமற்போனோர் தொடர்பில் 1300 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. காணாமற்போனோர் அலுவலகத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
நாங்கள் 12க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை சந்தித்திருக்கின்றோம். இறுதியாக ஜனாதிபதி ஆணைக்குழுவையும் சந்தித்திருந்தோம். எங்களுடைய கோரிக்கைகளையும் எங்களுடைய ஏக்கங்களையும் அவர்களிடம் தெரியப்படுத்தியும் சரியான ஆவணங்களை சமர்ப்பித்தும், அவர்கள் எங்களிடம் வந்து கோழி வேண்டுமா, ஆடு வேண்டுமா, வீடு வேண்டுமா என்று கேட்கின்றார்களே தவிர எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா என்பது தொடர்பில் தெரிவிக்க ஒருவரும் முன்வரவில்லை. ஒன்றுமில்லாத OMக அலுவலகத்தையே அரசாங்கம் நிறுவியிருக்கிறது. அதன்மூலம் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெற்றதாக தெரியவில்லை. இவ்வளவு காலமும் அந்த அலுவலகத்தால் என்ன செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் அலுவலகத்தில் வேலைக்காக பதியப்பட்டவர்கள் நல்ல சம்பளங்கள் பெறுகின்றார்கள் என்று அறிகிறோம். நாங்கள் இழப்பீடுகளை எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய பிள்ளைகளையே எதிர்பார்க்கின்றோம். எங்களுடைய உறவுகள் யுத்தத்தால் கொல்லப்படவில்லை. எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க இந்த அரசாங்கத்துக்கு பொறுப்பிருக்கிறது.
யோ.கனகரஞ்சினி
காணாமல்போனோர் சங்கத் தலைவி - கிளிநொச்சி மாவட்டம்
'OMP அலுவலகத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை'
காணாமல்போனரை தேடும் முயற்சியில் எங்களுக்கு தீர்வு கிடைத்தது என்று சொல்வதற்கில்லை. நாங்கள் தமிழ், சிங்களம் என்று பாராது பல அமைப்புகளுடன் இணைந்து காணாமல்போன உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் அவர்கள் எங்களை வைத்து உழைத்து தங்களுடைய வயிற்றை கழுவுகின்றார்கள் என்று தெரியவந்தபோது, நாங்கள் தனித்து வடக்கு, கிழக்கில் காணாமல்போனோரை கண்டறிவதற்கான அமைப்பினை உருவாக்கி போராட்டங்களை முன்னெடுத்து வந்ததுடன், இறுதியில் வீதியில் இருந்துபோராடுவதும் சர்வதேச சமூகத்துக்கும் தெரிந்த ஒரு விடயம். எங்களுக்கான நியாயமான தீர்வினை தந்திருந்தால் கடந்த இரண்டு வருடங்களாக வீதியிலிருந்து போராட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இந்த போராட்டத்துக்கான நியாயமான தீர்வினை இலங்கை அரசாங்கமும் சரி, இந்திய அரசாங்கமும் சரி தரவில்லை. ஆனால் தற்சமயம் ஜனாதிபதியாக இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தம் நடந்த காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
இவரும் இந்த அரசாங்கத்துக்கு வந்தும்கூட காணாமல் போனோர் எவரும் உயிருடன் இல்லை. அதனால் மரணச்சான்றிதழ் அல்லது எதாவதொரு சான்றிதழை பெறுமாறு கூறுகின்றார். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. காணாமல் போனோரோ அல்லது கடத்தப்பட்டவர்களோ உயிருடன் இல்லையென ஒரு ஜனாதிபதி கூறுவாறாக இருந்தால் நாங்கள் இலங்கை பிரஜைகளாக இருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. OMக அலுவலகத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காணாமல்போனோர் எவரும் இல்லையென்று கூறும்போது எதற்காக இந்த OMக அலுவலகம். இந்த அலுவலகத்தில் பதிபவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்கப்படுகின்றது. அது தேவையில்லை ஆனால் எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது. அதனை செய்ய யார் அனுமதி கொடுத்தது என்பதை அறிவதே எங்களின் தேவை. பொறுப்புகூறலையும் வெளிப்படைத்தன்மையையும் இந்த அரசாங்கம் கடைபிடிப்பதில்லை. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
நா.ஆஷா
கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குழுவின் தலைவி - திருகோணமலை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக