இலங்கையின் அஞ்சல் சேவையானது மிகவும் பழைமையானதாக காணப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவையானது இன்றும் மந்தகதியிலேயே காணப்படுகின்றது. தபால் விநியோகம் சீராக இன்மையால் பலர் பல வாய்ப்புக்களை இழக்கவேண்டிய நிலை இன்றும் காணப்படுகின்றது. தொழில்நுட்பங்கள் வளர்ந்து சென்றாலும் தபால் சேவையின் தனித்துவம் இன்றும் பேணப்பட்டே வருகின்றது. அரச சேவை தொடர்பான சகல அறிவித்தல்களும் கடிதம் மூலமே அனுப்பப்படுகின்றன. அதைவிடவும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் அறிவுறுத்தல்களும் கடிதம் மூலமே இன்னும் பெருந்தோட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலைமையில் பெருந்தோட்டங்களில் தபால் சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுவது அவசியமாகின்றது.
செய்தி 1: தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்மூட் தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு வந்த 500க்கும் மேற்பட்ட கடிதங்கள், உரிமையாளர்களுக்கு வழங்கப்படாமல் முடக்கப்பட்டிருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். குறித்த தோட்டத்தில் 185 குடும்பங்கள் வாழ்வதாகவும் கடந்த (2018) டிசம்பர் மாதம் முதல் அவர்களுக்கு வந்த அனைத்து கடிதங்களும் கொழுந்து நிறுவைசெய்யும் நிலையத்தில் போடப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தோட்ட நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள், கொழுந்து மடுவத்துக்குச் செல்லும்போது தத்தமது கடிதங்களைப் பார்த்து எடுத்து வருவதாகவும் எனினும் தோட்ட நிர்வாகத்துக்கும் கீழ் பணியாற்றாதவர்கள் கொழுந்து மடுவத்துக்குச் செல்லாதமையால் அவர்களது கடிதங்கள், வீடுகளுக்கு வந்து சேர்வதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. (06.06.2019)
செய்தி 2: பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பித்த அக்கரப்பத்தனை வேவர்லி போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு உரிய நேரத்தில் கடிதம் கிடைக்காததால் நேர்முகத்தேர்வை தவறவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜூலை மாதம் 19 ஆம் திகதி நேர்முகத்தேர்வுக்காக அம்மாதம் 8 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் குறித்த கல்லூரியிலிருந்து மாணவிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை உப தபாலகத்தின் ஊடாக அனுப்பப்பட்ட மேற்படி கடிதம் வேவர்லி தோட்ட காரியாலயத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் உரிய பெயர் கொண்ட நபர் இந்த தோட்டத்தில் இல்லையென அக்கடிதம் மீண்டும் அக்கரப்பத்தனை தபாலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் 30ஆம் திகதியன்றே கடிதம் உரியவரிடம் கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் நேர்முகத்தேர்வு 19.07.2019 அன்றே நிறைவுப்பெற்றிருந்தது.
இவ்வாறு பல சம்பவங்கள் பெருந்தோட்டங்களில் அதிகம் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன. இதற்கு தபாலகங்களுக்கும் தோட்டங்களுக்கும் இடையிலான தூரம் அதிகம், தபால் சேவகர்கள் நியமிக்கப்படாமை, தபால் உத்தியோகத்தர்களின் அசமந்தபோக்கு, மொழி அறிவின்மை, தோட்ட நிர்வாகங்களின் செயற்பாடுகள் என்பன காரணங்களாக அமைகின்றன. இவ்வாறு பெருந்தோட்டங்களில் தபால் சேவையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அஞ்சல் சேவைகள் அமைச்சிடம் (தற்போது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சு) 17.05.2019 விண்ணப்பத்தை சமர்ப்பித்தும் டிசம்பர் 16 ஆம் திகதியே சில தகவலை (13365/48) பெற்றுக்கொள்ள முடிந்தது. (தபால் திணைக்களத்திலிருந்தே தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன)
பெருந்தோட்டங்களில் தபால் விநியோகத்தை மேற்கொள்ள தபால் உழியர்கள் நியமிக்கப்பட்ட போது இன்றும் முறையான தபால் விநியோகம் இடம்பெறுவதில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளனவா, அவ்வாறாயின் அவற்றுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லையென்ற பதிலளிக்கப்பட்டுள்ளது. எனவே பெருந்தோட்டங்களில் தற்போது கடமையாற்றிவரும் தபால் சேவகர் நியமனம் கடந்து வந்தபாதை தொடர்பில் அறிவது அவசியமாகும்.
200 வருடங்களுக்கும் மேற்பட்ட பழைமையான வரலாற்றைக்கொண்ட இலங்கையின் தபால் சேவைத் துறையானது 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்டும் இயங்கி வருகின்றது. பெருந்தோட்டங்களில் தோட்டத்தில் வசிக்கும் சகல மக்களுக்குமான கடிதங்கள் தோட்ட அலுவலகத்தில் சேமிக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களிலேயே சகலருக்கும் விநியோகிக்கப்படும். அதனால் காலம் கடந்த கடிதங்கள் கூட கிடைக்கப்பெறும். காலப்போக்கில் தபால் சேவகர்கள் நியமனத்துக்குப்பின்னர் இல்லாமல் செய்யப்பட்டாலும் நியமனம் பெறாத தோட்டப்பகுதிகளில் இன்னும் இந்நிலைமையே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரத்தினூடாக 126 முகவர் தபால் நிலையங்கள் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டு அவற்றிற்குரிய உப தபால் அதிபர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் திறமையற்ற நிர்வாக செயற்பாடுகளின் காரணமாக 2006 ஆம் ஆண்டளவில் அந்நிலையங்களின் எண்ணிக்கை 69 ஆக குறைவடைந்திருந்தது. பிற்காலத்தில் அவை இன்னும் குறைவடைந்து தற்போது நுவரெலியா மாவட்டத்தில் 39, கேகாலை மாவட்டம் 2, களுத்துறை மாவட்டம் 3, இரத்தினபுரி மாவட்டம் 2, பதுளை மாவட்டம் 12 என மொத்தமாக 58 உப தபால் நிலையங்கள் அல்லது முகவர் தபால் நிலையங்களே பெருந்தோட்டப்பகுதிகளில் இயங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (பாராளுமன்ற ஹன்சார்ட் தொகுதி 272, இல.7)
இந்த 58 உப தபால் நிலையங்கள் அல்லது முகவர் தபால் நிலையங்களில் 24.13 வீதமானவை அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் செயற்பட்டுவருவதுடன் 13.79 வீதமானவை தனியாரின் கீழாகவும் 18.96 வீதமானவை தோட்ட நிர்வாகத்தின் கீழாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் செயற்பட்டு வருகின்றன. நுவரெலியா மாவட்டத்தில் 39 முகவர் தபால் நிலையங்களுக்கான கட்டிடங்கள் அவை முறையாக இயங்காமையின் காரணமாக அவற்றுள் 9 கட்டிடங்கள் கிராம உத்தியோகத்தர் காரியாலயங்களாகவும் 3 கட்டிடங்கள் உப பொலிஸ் காரியாலயங்களாகவும் அல்லது பொலிஸ் காவலரண்களாகவும் ஒரு கட்டிடம் அபிவிருத்தி உத்தியோகத்தர் காரியாலயமாகவும் 2 கட்டிடங்கள் கடைகளாகவும் 2 கட்டிடம் வீடுகளாகவும் 2 கட்டிடம் களஞ்சிய சாலைகளாகவும் ஒரு கட்டிடம் சாதாரண கூட்டம் நடத்துவதற்கான மண்டபமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது. கேகாலை மாவட்டத்தில் இரண்டு கட்டிங்கள் கட்டப்பட்டும் அவை செயற்பாட்டில் இல்லை. களுத்துறை மாவட்டத்தில் கட்டப்பட்ட மூன்று கட்டிடங்களில் ஒன்று கடையாகவும் மற்றொன்று கூட்டம் நடத்துவதற்கான மண்டபமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது. பதுளை மாவட்டத்தில் 12 உப தபால் நிலையங்கள் அல்லது முகவர் தபால் நிலையங்கள் செயற்பட்டிருந்த போதும் அவற்றில் ஒரு கட்டிடம் கிராம உத்தியோகத்தர் காரியாலயமாகவும் ஒன்று வீடாகவும் ஒன்று ஆரம்ப பாடசாலையாகவும் ஒன்று தோட்டத்தில் கொழுந்து நிரப்பும் மடுவமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் 2 தபால் நிலையங்கள் அமைக்கப்பட்டபோதும் அவற்றில் ஒன்று இயங்குகின்ற நிலையிலும் மற்றொன்று வீடாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுவே இன்றைய மலையக தபால் சேவையின் முன்னேற்றமாக காணப்படுகின்றது.
இவ்வாறு பெருந்தோட்டத்துறையில் தபால் சேவையானது, சீரற்ற நிலையில் காணப்படுவதையும் கடிதங்கள் மற்றும் தபால் மூலமான ஆவணங்கள் அனைத்தும் தமதமாகவே மக்களுக்கு கிடைக்கும் நிலையினை மாற்றியமைக்கவும் 2008 ஆம் டிசம்பர் மாதம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு 369 பேருக்கு தபால் சேவகர்கள் நியமனம் வழங்கப்பட்டன. ஆகக்குறைந்த கல்வித்தரம் தரம் 8 என்ற அடிப்படையில் 35 வயதுக்குட்பட்ட மலையகத் தோட்டப்பகுதிகளை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை மொத்தமாக 400 பேர் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றபோதும் அநேகமானோர் பல்வேறு காரணங்களுக்காக தமது சேவையிலிருந்து விலகிச்சென்றுள்ளதாக தபால்சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது கண்டி மாவட்டத்தில் 29 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 132 பேரும், பதுளை மாவட்டத்தில் 110 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 31 பேரும், கேகாலை மாவட்டத்தில் 09 பேருமாக மொத்தம் 324 பேர் தபால் சேவகர்களாக (தகவல்: RTI) சேவையற்றி வருகின்றனர்.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் பதவிக்கு 500 பேரைச் சேர்த்துக் கொள்வதற்காக 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதிய அமை/07/1281/319/005 ஆம் இலக்க அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்டிருந்த 2008.11.04 ஆம் திகதிய கடிதத்தின்படி, முதற்கட்டமாக 400 பேரை மட்டுமே நியமிப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தது. அதன் பிரகாரம் 2008 ஆம் ஆண்டு 369 பேரும் 2010 ஆம் ஆண்டு ஒருவரும் 2011 ஆம் ஆண்டு 29 பேரும் 2012 ஆம் ஆண்டு ஒருவரும் என மொத்தமாக 400 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக 100 பேரை 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நியமிப்பதற்காக அனுமதியானது கிடைக்கப்பெற்றிருந்த போதும், அக்காலப்பகுதியில் எவரும் நியமிக்கப்படாததன் காரணமாக மீண்டும் அமைச்சரவை அனுமதி பெறவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதாக தபால் சேவை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வழங்கப்படவிருந்த 500 தபால் சேவகர்கள் நியமனத்தில் 344 பேருக்கான நியமனங்கள் மாத்திரமே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் கண்டி மாவட்டத்தில் 20 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் பதுளை மாவட்டத்தில் 116 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பேரும் கேகாலையில் 11 பேரும் கொழும்பில் 7 பேரும் களுத்துறையில் 13 பேரும் மாத்தறையில் 6 பேரும் காலியில் 4 பேருமென மொத்தமாக 344 பேருக்கு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அமைச்சரவைப்பத்திரத்தின் பிரகாரம் இன்னும் 156 வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் 2019.07.09 ஆம் திகதி பாராளுமன்ற உரையின் போது பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்திருந்தார். (பாராளுமன்ற ஹன்சார்ட் தொகுதி 272, இல.7)
அத்துடன் தற்போது பிராந்திய தபால் சேவை நிலையங்களில் தபால் சேவகர்களுக்கான வெற்றிடங்கள் பின்வருமாறு காணப்படுவதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி 2, நுவரெலியா 9, பதுளை 7, இரத்தினபுரி 1, கேகாலை 2 என மேற்படி மாவட்டங்களில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
எனவே தற்போது பெருந்தோட்டங்களில் தபால் சேவகர்கள் பதவிக்கு காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் இருவேறு கருத்துக்கள் காணப்படுவதால் அவை தொடர்பாக இலங்கை அஞ்சல் திணைக்களம் விளக்கமளிக்க வேண்டும். மலையகத்தில் தபால் சேவை மந்தகதியில் இருப்பது போலவே, அஞ்சல் திணைக்களம் தகவல்களை வழங்குவதிலும் மந்தகதியிலேயே செயற்படுகின்றது. எனவே இனிமேலும் தாமதப்படுத்தாமல் தபால்துறையில் காணப்படும் வெற்றிடங்களை பொருத்தமானவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும். அதேவேளை பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது கடிதங்களை தபாலில் சேர்ப்பதற்கு வசதியாகத் தோட்டப் பகுதிகளில் தபால் பெட்டிகளை பொருத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். தற்போது மக்கள் தபால் செலவைவிட நகர்புறங்களிலுள்ள தபால் நிலையங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்துக்கே அதிக தொகையினை செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை இனங்கண்டு தமிழ்மொழி மூலம் சேவையாற்றக்கூடியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவை மலையக தபால் சேவையினை விரைவுபடுத்துவதற்கு வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக