கொழும்பு நகர்புற வீதிகளை கண்டு அச்சம் கொள்ளாதோர் யாரும் இருக்க முடியாது. இதில் மட்டக்குளி முதல் கொழும்பு கோட்டை வரையான வீதிகள், புளுமெண்டல் வீதி என்பன மிக மோசமான நிலையிலேயே இருக்கின்றது. வாகனசாரதிகள், பாதசாரிகள், பயணிகள் என சகலரும் நேரத்தையும் பணத்தையும் அதிகமாக செலவிடவேண்டிய துர்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது. இதுதவிர வீதிகளில் திடீரென ஏற்படுகின்ற தாழிறங்களிலும் வாகனங்கள் சிக்கிக்கொள்ளும் நிலையிருக்கிறது. அதைவிடவும் முன்னறிவிப்பின்றி தொடரும் நீர்வெட்டினால் மொத்த மக்களுமே கலங்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் என்ன?, வீதிகளில் அப்படி என்னதான் நடக்கிறது? எப்போதுதான் இந்த அவஸ்தைகளுக்கு தீர்வு? என்ற கேள்விகளே தொடர்ச்சியாக வீதிகளில் பயணிப்போரை ஆட்கொண்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான
நீர்வெட்டு, நீர்வெட்டின் போது மக்களுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல், விளம்பரங்கள், வீதிகளில் தோண்டப்பட்டு மூடப்படாத குழிகள், கொழும்பு 15 இல் முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட நீர்வெட்டு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடம்(CP/DGM/RTI12-2016/129/Appeal) வினவியபோது ஒருசில விடயங்களை திரட்டிக்கொள்ள முடிந்தது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் முன்னெடுக்கப்படும் திட்டமானது, எதிர்வரும் காலங்களில் கொழும்பு வாழ் மக்களின் நீர் தேவையை பூர்த்திசெய்யும் நோக்குடனேயே முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பு நகரின் 95 வீதமான நீர்வழங்கல் சேவைகள் குழாய் நீர் மூலமாகவே இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், குறைந்த, மாறுபடும் அழுத்த முறைமை மற்றும் விட்டுவிட்டு நடைபெறும் நீர்வழங்கலினால் நகரின் சில பிரதேசங்கள் உயர் பாவனை இல்லாத நேரங்களில் மட்டுமே நீரைப் பெறுவதுடன், மற்றைய பிரதேசங்கள் சராசரியாக 6 10 மணித்தியாலங்களுக்கே நீரைப் பெற்று வருகின்றன. கொழும்பு நகரில் அரசாங்கத்தின் வருமானத்துக்கு பங்கு செலுத்தாத நீரானது 49 வீதத்தை எட்டியுள்ளது. 2011 இல் கொழும்பு நகருக்கு நாளொன்றுக்கு 2,90,000 கபிக் மீற்றர் வீதம் வழங்கப்பட்ட நீரில் பாதியளவான நீருக்கு வருமானம் கிடைக்கவில்லை. கொழும்பில் தற்போது 1,40,000 சேவை இணைப்புகள் காணப்படுகின்றன. கொழும்பிலுள்ள 6,00,000 1 மில்லியன் வதிவிடங்களுக்கு தினந்தோறும் நீர்வழங்கல் சபையின் குழாய் மூலம் 2,00,000 3,00,000 கபிக் மீற்றர் நீர் வழங்கப்படுகிறது. எனினும், 2040 இல் நீரின் தேவை 4,76,000 கபிக் மீற்றராக காணப்படுமென கருதப்படுகின்ற நிலையிலேயே இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு நீர்விநியோக சேவை அபிவிருத்தி திட்டம் (The Colombo Water Supply Service Improvement Project - CWSSIP) 2022 ஆம் அண்டு முடிவுறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 40 பில்லியன் ரூபா செலவில் நான்கு பகுதிகளில் சுமார் 130 வருடங்கள் பழைமையான குழாய்த் தொகுதிகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு பகுதிகளிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் 2015 ஆம் ஆண்டும் தெற்கு, மேற்கு பகுதிகளில் 2017 ஆம் ஆண்டும் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் 700 கிலோ மீற்றர் நீளமான குழாய் இணைப்பு செயற்றிட்டத்தில் 450 கிலோ மீற்றர் வரை நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு இச்செயற்றிட்டத்தை நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுவிடும். இதன்மூலம் 70 80 சதவீதமான குழாய்த்தொகுதிகள் மீள்புதிப்பிக்கப்பட்டுவிடும்.
இந்நிலையில், சமீபகாலமாக கொழும்பு மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெறுகிள்ற நீர்வெட்டுக்கான காரணம் தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வினவியபோது, கொழும்பு மாவட்டத்துக்கு பாதுக்காப்பான குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டத்தின் காரணமாக நீர்வெட்டு ஏற்படுவதாகவும் மட்டக்குளி பகுதிக்கான திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாகவும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களான இலங்கை மின்சார சபை, கொழும்பு மாநகர சபையின் மற்றும் இன்னும் பல திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது குடிநீர் குழாய்களானது சேதமடைந்திருப்பது தொடர்பான முறையான வரைபடங்கள் இல்லை. அதனால் திடீரென குழாய்கள் சேதமடைந்தால் ஏற்படும் இடறுகளுக்காக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது நுகர்வோருக்கு மிக விரைவாக பாதுகாப்பான குடிநீரை தொடர்ந்து வழங்குவதற்கு முயற்சித்துவருகின்றது.
1800 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே ஆசிய நகரங்களில் குழாய் மூலமான நீர் விநியோகம் தொடங்கப்பட்டன. கொழும்பு நகரின் நீர் விநியோக வலையமைப்பின் 700 கி.மீற்றர் நீளமான குழாய்கள் 50 வருடங்களுக்கு மேல் பழைமையானவை. மத்திய கொழும்பிலுள்ள குழாய்கள் 100 வருடங்களுக்கு மேல் பழைமையானவை. இப்பழைமையான நீர்க் குழாய்களினால் சேவைத் திறனானது குறைவடைந்து சென்றிருக்கின்றது. போதியளவு தொழில்நுட்பத்திறன், நிதி ஒதுக்கீடு, உபகரணம் என்பன இல்லாமை காரணமாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொள்வது இயலாமல் போயிருந்தது. கொழும்புக்கு தினந்தோறும் விநியோகம் செய்யப்படும் நீரில் 33 வீதமானவை பழைமையான குழாய்கள் காரணமாக விரயமாகின்றன. அவை 3,00,000 கபிக் மீற்றர் நீராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது, செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் பகுதிகளில் நீர்வெட்டின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊடக அறிவித்தல்கள், துண்டுபிரசுரங்கள், தொலைபேசி அறிவித்தல்களுடாக பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதாகவும் சிலவேளைகளில் நீர்விநியோகத்திட்டம் இடம்பெறும் பகுதிகளில் சிலமணி நேரங்களுக்கு தடைபடுகின்ற நீர் விநியோகத்துக்காக மக்களுக்கு அறிவிக்கமுடியாத நிலையும் ஏற்படுகின்றது. இவ்வாறு தகவல்களை பரிமாறும்போது அதற்காக எவ்விதமான கட்டணங்களும் செலுத்தப்படுவதில்லை. கொழும்பு 15 இல் 29.06.2019 இரவு 9:15 12:30 வரையும் 30.06.2019 காலை 9:15 முதல் 01.07.2019 அதிகாலை வரை பொதுமக்களுக்கு அறிவிக்காமல் நீர்வெட்டை அமுல்படுத்தியது தொடர்பாக கேட்டிருந்த நிலையில், அக்காலப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் குழாய்களில் திருத்தப்பணிகள் முன்னனெடுக்கப்பட்டதாகவும் அக்காலப்பகுதியில் நீர்வெட்டு தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய குழாய் பொருத்தல் நடவடிக்கைக்காக தோண்டப்படும் வீதிகள் மீண்டும் முறையாக மூடப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுக்கு, ஒவ்வொரு நாளும் இரவு மற்றும் பகல் வேளைகளில் ஒழுங்குமுறையில் செயற்றிட்டத்தை முன்னெடுத்து விரைவாக முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் புதிய குழாய் பொருத்தல் நடவடிக்கை நிறைவடைந்த அதேநாளிலே வீதியை உடனடியாக புனரமைப்பு செய்வது சாத்தியமற்றது. தற்காலிகமான புனரமைப்பே மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் புதிய குழாய் பொருத்தல் நடடிக்கையின் காரணமாக இடர்பாடுகள் ஏற்பட்டாலும் கூட 2022 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பாதுகாப்பான குடிநீரை சகலவேளைகளிலும் தடையின்றி பெற்றுக்கொள்வதற்கு வழியேற்படும். பழைமையான விநியோகத்திட்டம், பழைய மாடி வீடுகளில் முறையற்ற குழாய் இணைப்புகள், சேரிப்புறங்களில் நிலைகுத்து கம்பங்கள் மற்றும் சட்டவிரோதமான இணைப்புகள் என்பன நகரத்துக்கான நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்டுள்ளன.
எனவே, இவை அனைத்தையும் சரிசெய்யவேண்டிய தேவையும் தற்போது ஏற்பட்டுள்ளது. அதேவேளை, கொழும்பு நீர் விநியோக அபிவிருத்தித் திட்டமானது, மந்தகதியில் நடைபெறுவதற்கு தகவல் இன்மையும், கட்டுமானப் பொருட்கள் பற்றாக்குறையும் பாரிய பிரச்சினையாக அமைந்திருக்கின்றன. இதுவே மக்களுக்கான அசௌகரியமாகவும் அமைந்திருக்கின்றது. 2020 ஆம் ஆண்டளவில் குழாய் மூலமான நீர் விநியோகத்தை 37 வீதத்திலிருந்து 60 வீதமாக உயர்த்த வேண்டுமாயின் கொழும்பு நகரமானது 100 வீதமான இணைப்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், 24 மணிநேர நீர்வழங்கலைக் கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகும். நீர்வழங்கல் சேவை மட்டங்களை முன்னேற்றி, நீர் கிடைக்கும் நிலைமையை அதிகரித்து சிக்கனமான ஒரு மட்டத்துக்கு அரச வருவாய் இழப்பை குறைக்கும் பொருட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பில் தற்போது 600,000 மக்கள் வசித்து வருகின்றார்கள். 400,000 பேர் பல்வேறு காரணங்களுக்காக தினமும் கொழும்புக்கு வருகை தருபவர்களாக இருக்கின்றனர். இதனால் கொழும்பில் ஒரு மில்லியன் பேர் தினமும் நடமாடுகின்றனர். தற்போதைய குழாய் இணைப்புகளை கொண்டு தற்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நகரத்தின் நீர் விநியோகத்தை மேற்கொள்ளமுடியாது. அதிகரிக்கும் சனத்தொகை மற்றும் துறைமுகநகரத் திட்டம் போன்றவற்றினால் நீர் விநியோக கட்டமைப்பை புதுப்பிக்கவேண்டிய தேவை இருக்கின்றது. தற்போது நகரின் பல பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் ஒருநாளைக்கு 6 10 மணித்தியாலங்களே நீரை ப் பெறுகின்றனர். பரபரப்பான நேரங்களிலும் கூட நீர் மட்டுப்படுத்தப்படுகின்றது. உயர்நிலப்பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்திலே நீர் விநியோகம் செய்யப்படுகின்றது. அதேவேளை புதுக்கடை, நாரஹேன்பிட்டி, தெமட்டகொட மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் பரபரப்பான நேரங்களிலும் துரிதமான நீர் விநியோகம் இடம்பெறுவதில்லை.
அம்பத்தல நீர் சுத்திகரிப்பு ஆலையில் தற்போது 550,000 கபிக் மீற்றர் (1 கபிக் மீற்றர் = 1000 லீற்றர்) நீர் ஒருநாளைக்கு சுத்திகரிக்கப்படுகின்றது. இதனை 50,000 கபிக் மீற்றரால் அதிகரித்து 600,000 கபிக் மீற்றராக அதிகரிப்பதற்கான செயற்றிட்டங்களுக்கான கேள்விமனு கோரல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் நிலவுமென எதிர்பார்க்கப்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக இன்னும் அதிகமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தேவைப்படுகின்றன. ஆனால் அவை முன்னெடுக்கப்படவில்லை. இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் வெளிவிட்ட நீர் விநியோகத் திட்டத்திலிருந்து ஆரம்பகட்டமாக 180,000 கபிக் மீற்றர் நீர் உற்பத்திசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கட்டுமானத்துக்கு தேவையான இடத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்நிலை காரணமாக இத்திட்டத்தை முன்னெடுப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் கொழும்பு நீர்விநியோக சேவை அபிவிருத்தி திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் நீர் விரயத்தினை 49 வீதத்திலிருந்து 18 வீதமாக குறைக்க முடியும். நீர்த்தேக்கம் சார்ந்த பகுதிகளில் அவசரகால இணைப்புகள் அமைத்தல். 24/7 அடிப்படையில் போதுமான அழுத்தத்துடன் சேவை மட்டத்தினை துரிதப்படுத்துதல். ஜிஸ் அடிப்படையான சொத்து முகாமைத்துவ அமைப்பு. இலகுவான வலய அமைப்புகள் மற்றும் நவீன நீர் இழப்பு முகாமைத்துவ அமைப்பு என்பவற்றை உருவாக்குதல். வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளுக்காக நவீன அமைப்பு நிலையங்களை விஸ்தரித்தல். விநியோக முறையை மேம்படுத்தல் போன்ற பல்வேறு அம்சங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அதேவேளை தற்போதைய கொழும்பு நீர்விநியோக சேவை அபிவிருத்தி திட்டத்தில் 960 கி.மீற்றர் நீளமான குழாய்கள் மீள்பதித்தல். கொழும்பு நகர எல்லைக்குள் 17 கணினி உள்ளீட்டு அளவு கருவி பொருத்தல். நீர்ப்பாவனை அளவு கருவியை இடமாற்றல் மற்றும் குறைபாடுள்ள நீர்பாவனை அளவு கருவியை புதுப்பித்தல். ஜிஸ் (GIS) வலைப்பின்னலை மேம்படுத்தல் மற்றும் அளவு திருத்தம், கட்டிடங்கள் நிர்மாணம் போன்ற பல்வேறு செயற்பாடுகளும் முனனெடுக்கப்பட்டு வருகின்றன.
நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் புதிய நீர் குழாய் பொருத்தல் நடவடிக்கையின் காரணமாக கொழும்பு நகர்புற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தாலும் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவற்றை சகித்துக்கொள்ளவேண்டியுள்ளது. அதேவேளை புதிய குழாய் இணைப்பு பணிகள் காரணமாக சேதமடைந்துள்ள வீதிகள் மற்றும் ஏனைய கட்டுமானங்களும் புனரமைக்கப்பட வேண்டும். தற்போதைய சேதமடைந்த வீதிகளின் காரணமாக ஏற்பட்டுள்ள தூசுகளினால் சுற்றுச்சூழல் பிரச்சினையும் சுகாதாரப் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதுடன், வாகன நெரிசலும் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் இவ்விரயங்களை தவிர்த்துக்கொள்வதற்கு 2022 ஆம் ஆண்டுக்குள் செயற்றிட்டத்தை முழுமைப்படுத்த தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் கொழும்பு மாநகர சபை என்பன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக