இந்திய அரசாங்கத்தினால் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள தூரப் பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடுத்துவதற்காக இரண்டு தவணைகளில் 2009 ஆம் ஆண்டு 40 TATA
City Rider பஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அன்னை கோதை பொறுப்பு கம்பனியின் கீழ் இயங்கிய பஸ்கள் கம்பனி நட்டத்தில் இயங்குவதாக கூறி தனிப்பட்ட நபர்களுக்கு மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதில் அதிகமான பஸ்கள் முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் ஒருவருக்கு 3 மில்லியன் ரூபாவுக்கு வழித்தட அனுமதியுடன் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஒரு TATA
City Rider பஸ்ஸின் விலை 2 மில்லியன் ரூபாவாகும்.
இது காலங்கடந்ததொரு சம்பவமாக இருந்தாலும் நட்டத்தில் இயங்குவதாக கூறி விற்பனை செய்யப்பட்ட பஸ்கள் இலாபத்தில் இயங்கியமை முக்கியமாகும். ஆனால் இன்றுவரை 40 பஸ்களின் நிலை தொடர்பில் மௌனம் சாதிக்கப்பட்டே வருகின்றது. இதன்மூலம் பெருந்தோட்ட மக்களுக்கான வரப்பிரசாதம் இல்லாமல் செய்யப்பட்டமை தனிக்கதை. இந்நிலையில் தற்போது பெருந்தோட்டப் பகுதிகளின் அபிவிருத்திகளில் கவனம் செலுத்தி வரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனோடிணைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் போன்றவற்றின் கீழ் பாவனைக்குட்படுத்தப்பட்டு வருகின்ற வாகனங்களின் ஓட்டக்குறிப்புக்கள் வழங்கப்படாமை, ஒரு கிலோ மீற்றருக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகையினைவிடவும் அதிக தொகையினை செலுத்துதல், வாகனங்கள் பழுதுபார்க்கப்படாமை, அதிக கிலோ மீற்றர்கள் வாகனங்கள் செலுத்தப்பட்டிருக்கின்றமை போன்ற விவகாரங்களின் மூலம் வாகனங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
2017 ஆம் ஆண்டின் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்குரிய கணக்காய்வு அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அறிக்கையில் வாகனங்களின் பயன்பாடு எனும் தலைப்பின் கீழ் அமைச்சிற்கு மீளாய்வாண்டின் இறுதிவரையில் 122 வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் காணப்பட்டதுடன், அவற்றுள் அமைச்சிற்கு சொந்தமான வாகனங்கள் 30 மாத்திரமாவதுடன், 3 வாகனங்கள் வாடகை அடிப்படையிலும், எஞ்சிய 89 வாகனங்கள் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு உரித்தானவையாகும். மேற்படி 122 வாகனங்களில் 13 வாகனங்கள் அமைச்சால் ஒதுக்கப்பட்ட வாகனங்களாகவும், தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு சொந்தமான 84 உந்துருளிகள் இணைப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கமைய எஞ்சிய 25 வாகனங்களில் 03 வாகனங்கள் ஆண்டு முழுவதும் மற்றும் ஒரு வாகனம் 10 மாதங்களாகவும் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படாது இருப்பதுடன் எஞ்சிய 21 வாகனங்கள் குழாம் வாகனங்களாக பயன்படுத்தப்படுகின்றன. அந்த 21 வாகனங்களில் 4 வாகனங்களுக்காக ஆண்டு முழுவதும் மற்றும் 2 வாகனங்களுக்காக 9 மாதம் முதல் 6 மாதங்களுக்கு இடைப்பட்ட ஓட்டக்குறிப்புக்கள் பெறப்பட்டிருக்கவில்லை.
அமைச்சிற்கு மீளாய்வாண்டின் இறுதியளவில் 122 வாகனங்கள் காணப்பட்டதுடன், அந்த வாகனங்களில் கணக்காய்விற்கு தகவல் கிடைக்கப்பெற்ற 27 வாகனங்கள் (குத்தகை வாகனங்கள் தவிர) தொடர்பில் பின்வருமாறு 532,998 கிலோ மீட்டர்கள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், ஓட்ட நிலைமையிலுள்ள 19 குழாம் வாகனங்களுக்காக (2 குத்தகை வாகனங்கள் நீங்கலாக) எரிபொருள் மற்றும் உராய்வு எண்ணெய் ஆகியவற்றுக்காக ரூபா 1.94 மில்லியனும், 25 வாகனங்களை சேவைப்படுத்துவதற்காக ரூபா 11 மில்லியனும், பழுதுபார்த்தலுக்காக ரூபா 9.96 மில்லியனும் காப்புறுதி செய்வதற்காக ரூபா 2.06 மில்லியனுமாக ரூபா 24.96 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. எஞ்சிய 12 வாகனங்கள் தொடர்பில் இதற்கமைய அமைச்சினால் வாகனங்களை ஓட்டத்தில் ஈடுபடுத்துவதற்காக சாரதி சம்பளம் மற்றும் படிகள் நீங்கலாக ஒரு கிலோமீட்டருக்கு ரூபா 47 செலவிடப்பட்டிருந்தது. (அட்டவணை 01)
2017 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி வாகனத்தின் அறிக்கைக்கமைய ரூபா 4.5 மில்லியன் பெறுமதியுடனான ஜீப் வண்டியொன்றும் ரூபா 2.4 மில்லியன் பெறுமதியான காரொன்றும் முறையே 2016 ஜனவரி 6 ஆம் திகதி வரையிலும் பழுதுபார்க்கப்படாது விளைவற்றுக் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
2017 ஜூன் 28 ஆம் திகதிய 1/2017 ஆம் இலக்க சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் பிரகாரம் கொன்ரோல் ஜெனரல் அலுவலகத்திற்கு சொத்துக்கள் தொடர்பான தகவல்களை அனுப்பும் போது அமைச்சிற்கு சுவீகரிக்கப்பட்டுள்ள மற்றும் செலவீனம் மேற்கொண்டுள்ள சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழான 91 வாகனங்கள் தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டிராததுடன், கணக்காய்விற்கான அடிப்படையை முன்வைத்த வாகனங்கள் தொடர்பான தகவல்களில், சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் காணப்படும் 88 வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
நிதிப்பிரமாணம் 756 மற்றும் 757 இன் பிரகாரம் வாகனங்கள் தொடர்பான வருடாந்த பௌதீக மெய்மையாய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டிய போதிலும் வாகனங்கள் தொடர்பான மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
குத்தகை வாகனங்கள்
அமைச்சியால் செயற்பாட்டு குத்தகை முறைமையின் கீழ் 03 வாகனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன், அதற்கான குத்தகை தவணைகளாக ரூபா 1.02 மில்லியனும், எரிபொருள் மற்றும் உராய்வு எண்ணெய் ஆகியவற்றுக்காக ரூபா 99,067 தொகையும், குத்தகை முறைமையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களில் 5,759 கிலோமீட்டர்கள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய, அந்த வாகனங்களின் ஒரு கிலோ மீற்றர் ஓட்டத்திற்காக ரூபா 193 செலவிடப்படடிருந்தது. (அட்டவணை 02)
அமைச்சினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட செயற்பாட்டு குத்தகை உடன்படிக்கையின் பிரகாரம் வேன் வண்டிக்காக மாதாந்தம் 3000 கிலோ மீட்டர்கள் ஓட்டத்தில் ஈடுபடுத்துவதற்காக மாதமொன்றிற்கு ரூபா 169,900 தொகையான (வற் நீங்கலாக) ஆகக் குறைந்த தொகைக்கு அமைய மற்றும் அதிகரிக்கும் கிலோமீட்டரொன்றுக்காக ரூபா 20 (வற் நீங்கலாக) ஆக செலுத்துவதற்கு 2017 ஜூலை 07 ஆம் திகதி இணங்கியிருந்தது. அதற்கமைய ஜூலை முதல் டிசம்பர் வரையான ஆறு மாதங்களுக்கு ஓட்டத்தில் ஈடுபடுத்த வேண்டிய ஆகக்குறைந்த கிலோமீட்டர்களின் அளவான 18,000 கிலோமீற்றர்களுக்காக மாதாந்தம் ரூபா 355 முதல் ரூபா 1541 வரையான வீச்சுடையவாறு 6 மாதங்களுக்கு 5759 கிலோமீட்டர்கள் மாத்திரம் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு ரூபா 1,019,400 செலுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய அந்த வாகனம் ஒரு கிலோமீட்டர் ஓட்டத்தில் ஈடுபடுத்துவதற்காக ரூபா 177 எரிபொருள் செலவீனத்திற்கு மேலதிகமாக செலவிடப்பட்டிருந்தது.
அமைச்சினால் செயற்பாட்டுக் குத்தகை முறைமையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த இரண்டு டபள் கெப் வண்டிகள் 2017 ஆம் ஆண்டினுள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட கிலோமீட்டர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் அமைச்சிடம் இல்லாதிருந்ததாக கணக்காய்விற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி விடயங்கள் தொடர்பாக தேசிய கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையில் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சினால் வாகன ஓட்டத்துக்கான கணக்கறிக்கை இல்லையென கூறியிருப்பது வாகனங்கள் சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருத்தல் அல்லது குறித்த அளவினை விடவும் மேலதிக கிலோ மீற்றர்கள் ஓடியிருத்தல் அல்லது ஓடிய கிலோமீற்றர்களுக்கு அதிகமாக பணம் பெற்றிருத்தல் போன்ற காரணங்களின் விளைவாக இருக்கலாம் என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது. அத்துடன் வாகனத்தை ஒரு கிலோமீட்டர் ஓட்டத்தில் ஈடுபடுத்துவதற்காக 177 எரிபொருள் செலவீனத்திற்கு மேலதிகமாக செலவிடப்பட்டிருந்தது.
அதாவது வாகனம் 6 மாதங்களில் 5759 கிலோ மீட்டர்கள் ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்துக்கு மேலதிக கிலோ மீற்றர் 20 ரூபா அடிப்படையில் 115,180 ரூபா செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஓட்டத்துக்கு மேலதிகமாக 177 ரூபா செலவிடப்பட்டிருப்பதால் (1,019,400 ரூபா) மேலதிகமாக 904,163 ரூபா செலவாகியிருக்கிறது.
இக்கணக்காய்வானது அமைச்சினால் செயற்படுத்தப்படும் வாகனப்பயன்பாட்டில் மாத்திரம் பெறப்பட்டவையாகும். இன்னும் பல்வேறு செலவீனங்கள் தொடர்பாக கணக்கறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான விபரங்களை எதிர்வரும் வாரங்களில் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அமைச்சால் வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் ஊடாக பெறப்படும் தகவல்களை நாம் மீண்டும் வாசகர்களுக்கு வெளிப்படுத்தினால் கூட தவறு நம் மீது திணிக்கப்படுமே தவிர, அவர்கள் செய்த தவறுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதுவே இன்றைய யதார்த்தமும் கூட.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக