இலங்கையில் வீதி விபத்துக்கு அடுத்தாக அதிகமான மரணங்கள் மின்சாரத் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு மின்சாரத்தினால் 180பேர் மரணித்துள்ளனர். சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட சுட்டியாக ஒரு மில்லியன் பேருக்கு ஒருவரே மரணிக்கக் கூடியதாக சாத்தியம் உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்ற போதும், இம் மரண விகிதாசாரமானது இலங்கையில் மிகவும் அதிகமானதாக கருத்தப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக பாடசாலை மற்றும் பொலிஸ், கிராம அதிகாரிகள் மட்டத்திலும் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுத்தமையினால் மின்சார இறப்பின் வீதம் குறைவாகி, இன்று ஆண்டுக்கு சுமார் 80 பேராகவுள்ளது என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியதுடன், இதனால் மின்சார செயற்பாடு குறித்து ஒரு நியமத்தை உருவாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் மின்சாரத்தை இலங்கை மின்சார சபையும், லேகோ (லங்கா தனியார் மின்சார கம்பனி) நிறுவனமும் விநியோகம் செய்து வருகிறது. மின்சார சபை மின்சாரத்தை பிறப்பித்தல், கொண்டுசெல்லல், விநியோகித்தல் ஆகியவற்றை மேற்கொள்கின்றது. லேகோ நிறுவனம் மின்சாரத்தை விநியோகித்தலை மட்டுமே செய்கின்றது.
இந்நிறுவனத்தினால் மின் விநியோகிக்கப்படும் இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது, பெரும்பாலும் வீடுகளிலேயே அதிகளவான மின்விபத்துக்கள் ஏற்படுகின்றன என அறியப்பட்டுள்ளது. வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் வீட்டிலுள்ள மின்மானி வரைக்கும் மின்சார சபை பொறுப்புடையதாகவிருந்தாலும், வீட்டிக்குள்ளே இணைக்கப்பட்டுள்ள மின்சாரத்தை கட்டுப்படுத்துவதற்கென பிரதான ஆளியும், டிரிப் சுவிட்ச்சும் (இடறு ஆளி) இருந்தாலும், இவற்றை பொருத்துவதற்கு பின்வருவன முக்கிய காரணமாக காணப்படுகிறது. பிரதான ஆளி தேவையேற்படும் போது மின்சாரத்தை துண்டித்துக்கொள்ளவும், டிரிப் சுவிட்ச் மின்சாரத்தில் கசிவு அல்லது மின் கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் அதுதானாகவே மின்சாரத்தை துண்டித்துக்கொள்ளும். சுமார் 54 வீதமான வீடுகளில் மின்சார டிரிப் சுவிட்ச் இல்லை அல்லது டிரிப் சுவிட்ச்சை சீராக இயக்குவதில்லை அல்லது மின்சாரத்திற்கு ஏற்ப அளவான நியமம் இல்லாத டிரிப் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது. வீடுகளில் மாதாந்தம் ஒரு முறையாவது டிரிப் சுவிட்சை பரீட்சித்துப் பார்க்க வேண்டியது எமது கடமையாகும். (டிரிப் சுவிட்சில் Test பொத்தான் ஒன்று உண்டு. அதனை அழுத்தவேண்டும். அப்போது டிரிப் off ஆகிவிடும்) இவற்றை கடைப்பிடித்தாலே மின்சாரத்தினால் ஏற்படும் மரணத்தை அதிகளவில் குறைக்கலாம் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வீட்டுப்பாவனைக்குரிய டிரிப் சுவிட்ச் 30 மில்லி அம்பியர் (MA)இருக்க வேண்டிய நியமம் உள்ளது. ஒரு மனிதனை பாதிக்காதளவு உள்ள மின்பாய்ச்சலின் அளவு 30 மில்லி அம்பியர் அலகு ஆகும்.கடைகளில் விற்கப்படும் டிரிப் சுவிட்ச் 30 மில்லி அம்பியர்க்கும் அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தொழிற்சாலைகளுக்கு இணைக்கப்படும் டிரிப் சுவீட்ச் 30 மில்லி அம்பியர் அளவுக்கு அதிகமானது. தொழிற்சாலைகளில் அடிக்கடி டிரிப்போனால் தொழிலுக்கு அது தடையாக அமையும். வீடுகளுக்கு 100மில்லிஅம்பியர் டிரிப் சுவிட்ச் இணைக்கப்பட்டிருந்தால் மின் கசிவு 100 மில்லி அம்பியர் அளவுக்கு வரும்வரை உடனடியாக டிரிப் சுவிட்ச் மின்சாரத்தை கட்டுப்படுத்த முடியாது இருக்கும். தொழிற்சாலைகளில் 30 மில்லி அம்பியர் டிரிப் சுவிட்ச் இணைக்கப்பட்டிருந்தால் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டுவிடும்.
வீடுகளில் மின் இணைப்பில் பிரதான ஆளி (Main Switch), டிரிப் சுவிட்ச் (Trip Switch) 30 மில்லி அம்பியர் இருந்தால் போதுமானது. எந்தவிதமான பாதிப்புமில்லை. வீட்டுக்குள் வயரிங் (மின் இணைப்பு) உட்பட அனைத்து சுவிட்ச்களையும் பொருத்துவது வீட்டு உரிமையாளரின் உரிமையும் கடமையுமாகும். சில மின்னியலாளர் சீரான மின் இணைப்பை மேற்கொள்ளதாத காரணத்தினாலேயே வீட்டில் மின்சார விபத்துக்கள் ஏற்பட காரணமாகின்றன. இவற்றை எல்லாம் கவனத்திற் கொண்டே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்னியலாளர்களுக்கு (Electrician) அனுமதிப்பத்திரம் (Licence) வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மின்னியலாளர்களுக்கு மின்னிணைப்பு குறித்து அனுமதிப்பத்திரம் இருந்தால் மின் இணைப்பை சீராகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்ள முடியும். மின்சார கசிவோ, மின் ஒழுக்கோ ஏற்படாத வண்ணம் வீட்டையும், வீட்டிலுள்ளவர்களையும் பாதுகாக்கமுடியும்.
இன்று அதிகமானோர் மின்னியலாளர்கள் என்ற பெயரில் செயற்படுகின்றனர். இவர்களை ஒருவரையறைக்குட்படுத்தி அவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தை கொடுக்க அரசாங்கம் இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மூலமாக நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. அதேநேரம் மின்சாரத்திலிருந்து தங்களை பாதுகாக்க மின் இணைப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளதோடு வீட்டில் பாவிக்கும் பிளக் மற்றும் சொக்கெட் பற்றியும் அவதானமாக இருக்கவேண்டும். இறக்குமதியாகும் அதிகமான மின் சாதனங்களுக்கு இரு பின்களே (செருகிகள்) இருக்கின்றன. சாதாரணமாக மூன்று பின்கள் இருக்க வேண்டும். உலோகத்திலானவைகளுக்கு மூன்று பின்களும், பிளாஸ்டிக் கவர் இருப்பவைகளுக்கு இரு பின்களும் காணப்படுகின்றன. பின்களை செருகும் போது அவை அசையக்கூடியதாக இருக்கும். இது மின் கசிவை ஏற்படுத்தக் கூடியது. இதனால் மல்டி (malty socket) சொக்கட் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. மல்டி சொக்கட் அனைத்தும் தரக்கட்டுப்பாட்டுக்கு கீழ்கொண்டுவரப்படவில்லை. மல்டி சொக்கட்டுக்கு தரச்சான்றிதழ் வழங்கவில்லை. தரச் சான்றிதழ் இல்லாத இவ்வாறான பயன்பாட்டினாலே அதிகமான மின் விபத்துக்கள் ஏற்பட காரணமாகின்றன. மல்டி சொக்கட்டுகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது மின் அதிகளவு கடத்தப்பட்டு, வெப்பம் அதிகரித்து மல்டி சொக்கட் உருகி, மின்கசிவு ஏற்படவும் வாய்ப்பு உருவாகிறது.
சாதாரணமாக ஒவ்வொரு பிளக்கிலும்(Plug)மூன்று துவாரங்கள் இருக்கும். அதில் ஒன்று மின்சாரத்தை வெளியேற்றாத லொக் முறையாகும். அதனை நாம் ஒரு பென்சிலை பயன்படுத்தி அதனுள் செருகி இரு பின்கள் கொண்ட பிளக்குகளை பயன்படுத்துகிறோம். அது போல மல்டிபிளக் (malty plug) பயன்படுத்தும் போதும் நேரடியாகவே மின்சார இணைப்பு இருக்கும். இவற்றினால் மின்சார தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றன.
இம்மாதிரியான விபத்துக்களை தடுக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் வட்ட வடிவிலான பிளக் மற்றும் சொக்கெட்டுகளை பாவிப்பதற்கும் விற்பனைக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கையில் ஒரே விதமான பிளக்கும் (plug - பொருத்தி), சொக்கட்டும் (socket - செருகி) இருக்க வேண்டும் என்ற நியமத்தின் அடிப்படையில் 13 அம்பியர் சதுரவடிவ, செவ்வகவடிவ பிளக் மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வருடம் முதல் சதுரவடிவ பிளக் மற்றும் சொக்கட் மட்டுமே விற்பனைக்கு அனுமதியளிக்கப்படும்.புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு சதுர வடிவத்திலான 13 அம்பியர் பிளக் மற்றும் சொக்கட் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இவற்றுக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி
அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றது. இறக்குமதி சலுகை காலம் ஒரு வருடம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர்31ஆம் திகதி வரை இறக்குமதி செய்யப்பட்டவை விற்பனைக்கான சலுகை காலம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் விற்பனை செய்வோருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுக்கும்.
இன்று அதிகமானவர்கள் எழுத்தறிவு குறைந்த மின்னியலாளர்களாக
செயற்படுகின்றனர். அவர்களால் வீடுகளுக்கு சிறிய அளவில் மேற்கொள்ளப்படும் மின் இணைப்புக்களினால் அதிகமான மின் விபத்துக்கள் ஏற்படுகின்றன.இவர்களை கட்டுப்படுத்த முடியாது. அவர்களின் வாழ்வாதாரம் முக்கியமானது. எனவே அவர்களை படிப்படியாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் தரப்படுத்தல் முறைக்குள் உள்வாங்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டம் வகுத்துள்ளது.
இலங்கையில் சகல மின்னியலாளர்களையும் தரப்படுத்தலுக்கு உட்படுத்தி அவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதற்கு செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் 2018 அக்டோபர் 26 ஆம் திகதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளினால் இவ்விடயம் தள்ளிச் சென்றுள்ளது. மின்னியலாளர்களுக்கான அனுமதி பத்திரம் வழங்கும் முறையானது ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர்
எஸ்.கிறிஷானந்த் தெரிவித்தார்.
1)பயிலுனர் (apprentice):பாடசாலை கல்வியை முடித்துவிட்டு மின்சார துறையில் ஈடுபடுவதற்கு முன்னேறிச் செல்வதற்கான ஆரம்பப்படியாக இதுவிளங்கும். இவர்கள் கனிஷ்ட மின்னியலாளர்களுக்கு உதவியாளர்களாகவும் செயற்படமுடியும். எதிர்காலத்தில் மின்சாரத்துறையை சிறந்த முறையில் கற்று முன்னேறுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
2)கனிஷ்ட மின்னியலாளர்: இவர் ஒரு வீட்டுக்குரிய மின்னிணைப்பு குறித்து வரைபு செய்யலாம். இவ்வளவு காலமும் பட்டய பொறியியலாளர்களே வரைவுசெய்தனர். கனிஷ்ட மின்னியலாளர்கள் சிங்கல் பேர்ஸ் (Single parse)மின்சார செயற்பாடுகளே முன்னெடுக்கலாம். 30 மில்லி அம்பியர்களுக்குட்பட்ட மின்சாரத்தை இணைப்பதற்கான லைசென்ஸ் (அனுமதிப் பத்திரம்)பெற்றவர்களாவர்கள். இவர்கள் NVQ-4 (National Vocational Qualification)தரத்தினை உடையவர்கள் என்று வரையறைக்குள்ளாக்கப்படுவர்.
3)சிரேஷ்ட மின்னியலாளர்கள்: இவர்கள் 60 மில்லி அம்பியர் மின்சாரத்தை வழங்கக்கூடிய லைசென்ஸ் உடையவர்கள். அதேநேரத்தில் இவர்களுக்கு மின்னிணைப்புக்கான வரைவுகளை முன்னெடுக்க முடியும். இவர்கள் NVQ -3தரத்தினை உடையவர்கள் என்று வரையறைக்குள்ளாக்கப்படுவர்.
4)உயர் மின்னியலாளர்கள்:இவர்கள் 60மில்லி அம்பியர்களுக்கு மேற்பட்ட மின்சாரத்தை வழங்கக் கூடிய லைசென்ஸ் உடையவர்களும் அதேநேரத்தில் மின்னிணைப்புக்கான வரைவுகளையும் மேற்கொள்ள அதிகாரமுடையவர்களாகவே காணப்படுவர்.
5) பொது பயன்பாட்டு (Utilities) மின்னியலாளர்கள்: மின்சார சபையில் பணிப்புரியும் மின்னியலாளர்களுக்கு இப்படியான லைசென்ஸ் கொடுக்கப்படும். இவர்கள் பிரதான மின்விநியோகம், மின்னிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரத்தில் மின்சார துறையில் மின்னியல் பொருட்களை திருத்தும் பணிகளை மேற்கொள்பவர்கள் பற்றி வினவிய போது,இவர்களுக்கு வயர்மென் (Wairmen) என்ற அங்கீகாரம் கொடுக்கப்படும். இவர்களும் பயிலுநர் மின்னியலாளர்களைப் போன்று செயற்படலாம். அதேநேரத்தில் கல்வித் தரத்தில் குறைவுள்ள, அதேநேரத்தில் பல வருடங்கள் மின்சார பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த அங்கீகாரமே வழங்கப்படும். இவர்களின் வாழ்வாதாரத் தொழில் பதிப்படையாவண்ணம் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும்,வீடுகளில் அல்லது தொழிற்சாலைகளில் மின்னிணைப்பு, மின்சாரத்துடன் தொழிற்புரிபவர் தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான பயிற்சி, பரீட்சை ஊடாக அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் எதிர்காலத்தில் பதவி ரீதியிலான அங்கீகரிக்கப்பட்ட மின்னியலாளர்களாக செயற்படுவதற்கு தேசிய ரீதியில் அங்கீகாரம் பெற்றவர்களாக திகழ்வார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக