கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

29 ஏப்ரல், 2019

அதிர வைத்த கைது

அரம்பேவெலகே தொன் லக்ஷத் பெர்னாண்டோ , கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செய்தி பரவத் தொடங்கியதோடு முழு நாடும் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சொத்தி உபாலி என்ற பாதாளக்குழு தலைவனின் பெயர் அடிப்படத் தொடங்கியமையே நாடு அல்லோலக்கல்லோலப்படக் காரணமாகும். லக்ஷித பெர்னாண்டோ , சொத்தி உபாலியின் மூத்த மகன் என்பதை பொலிஸார் அறிந்துகொண்டது, அவனை கைது செய்ததன் பின்பேயாகும். லக்ஷித பெர்னாண்டோவுடன் சேர்த்து 2.5 கிலோ ஹெரோயினும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த ஹெரோயின் வியாபாரம் தொடர்பில் முதல் தகவல் , கொழும்பு மாவட்ட பொறுப்பதிகாரி , பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கே கிடைக்கப்பெற்றிருந்தது.

டிலான் என்ற ஹெரோயின் வியாபாரி கொழும்பிலுள்ள ஹெரோயின் வட்டத்துக்குள் பெரியவனும் பிரதானியுமாவான். தற்போது வெலிக்கடை சிறையிலேயே டிலான் இருக்கின்றான். சிறைச்சாலையானது ஹெரோயின் வியாபாரிகளுக்கு மட்டுமல்லாது பாதாளக் குற்றவாளிக்கும் தங்களது குற்றச்செயல்களை எந்த வித தொந்தரவுகளும் இன்றி பாதுகாப்புடன் மேற்கொள்ள உகந்த இடமாக மாறிப்போயுள்ளது. டிலான் என்ற ஹெரோயின் வியாபாரியின் திட்டமிடலுக்கேற்ப குழுவொன்று கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் வெற்றிகரமாக ஹெரோயின் விற்பனையை மேற்கொண்டு செல்வதாக பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சிலரை இந்த வியாபாரிகளை கைது செய்யும் திட்டத்தில் உள்ளடக்க பொலிஸ் மா அதிபர் முடிவு செய்தார்.  இந்த சந்தர்ப்பத்திலிருந்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் டிலானின் ஹெரோயின் குழுவை சுற்றிவளைக்கத் திட்டமிட்டனர். டிலானின் ஹெரோயின் தொகை கொள்வனவு செய்யப்பட்டு மொரட்டுவ பிரதேசமெங்கும் விநியோகம் செய்யும் நபரொருவர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. அத்தகவலுக்கிணங்க விசேட பொலிஸ் குழுவொன்று மொரட்டுமுல்ல பிரதேசத்தை சில நாட்களாகவே கண்காணித்து வந்தது. அந்த நபர் யார் என்பதையும் எப்படியாவது அவனை கைது செய்யவேண்டுமென்ற நோக்கிலுமே சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.


பொலிஸாரின் திட்டம் வெற்றியடைந்தது. மொரட்டுமுல்ல பிரதேச வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸ் அதிகாரிகள் 3 கோடிரூபாவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் டிலானின் ஹெரோயின் குழுவின் பிரதானி ஒருவனையும் கைது செய்தனர். இந்தத் திட்டத்திற்கு கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரி  முதித புஸ்ஸல்ல மற்றும் மொரட்டுமுல்ல பொலிஸ் தலைமை அதிகாரி சேனாநாயக்க ஆகியோர் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கினர். கைது செய்யப்பட்ட லக்ஷித பெர்னாண்டோவிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே அவன் சொத்தி உபாலியின் மூத்த மகன் எ ன்பதை பொலிஸார் அறிந்துகொண்டனர். சொத்தி உபாலி என்பவன் இந்நாட்டு பாதாளத்தை ஆட்சிசெய்த ஒருவனாவான் . லக்ஷித உபாலியின் 2 ஆவது பிள்ளை. சொத்தி உபாலிக்கு 4 பிள்ளைகள். அவர்களில் இருவர் ஆண்கள். இவனது இடதுகை அங்கவீனம் காரணமாகவே அவனுக்கு சொத்தி உபாலி என்ற பெயர் வந்தது. கத்திவெட்டுடொன்றால் ஏற்பட்ட காயம் மூலம் அவனது ஒரு கை அங்கவீனமடைந்தது. பொரளை கோதமி வீதியே சொத்தி உபாலியின் பாதாள இராசதானியாகும். ஒரு காலத்தில்  கோதமி வீதி என்றால் மக்கள் பீதியடைவர். அந்தளவுக்குசொத்தி உபாலி தனது இரசதானியை ஆண்டு வந்தான்.  முன்னாள் பிரதமராக ரணசிங்க பிரேமதாச இருந்த டிகாலத்திலேயே இவனின் பாதாள செயற்பாடு அரங்கேறியது. சொத்தி உபாலியின் மூத்த சகோதரன் காலஞ்சென்ற விஜய குமாரதுங்கவின் கட்சியில் உறுப்பினராகவிருந்தவர். அதனால் பிரபல அரச அதிகாரிகள் யாருடன் நெருக்கமான உறவை பேணி வந்தார். பிரேமதாச காலத்தில் இருந்த பிரபல அரசியல்வாதி சிறிசேன குரே , சொத்தி உபாலியை அறிந்துகொண்டது அவனது மூத்த சகோதரன் ஊடாகவே.


ரணசிங்க பிரேமதாச ”கம்உதாவ”  திட்டத்தை நாட்டின் பிரதான விழாவாக கொண்டாடினார். அதற்காக பெருமளவு பணத்தை அவர் செலவு செய்தார். இந்த சந்தர்ப்பத்திலேயே விழாவுக்காக புற்களை விநியோகம் செய்யும் ஒப்பந்தம் சொத்தி உபாலிக்கு கிடைக்கப்பெற்றது. அது அவனிடம் காணப்பட்ட அதிகார பலத்தினாலாகும்.  கம் உதாவ விழாவுக்காக இலட்சக்கணக்கில் புற்களை விநியோகம் செய்த சொத்தி உபாலி , கோடிகணக்கான ரூபாய்களை புழங்கத் தொடங்கினான். ஆரம்பத்தில் பிடலி உபாலி என்றே அழைக்கப்பட்டான். பின்னர் பாதாள இராசதானியை ஆக்கிரமித்துக்கொண்டதால்  சொத்தி உபாலி என அழைக்கப்பட்டான். முக்கிய  அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகிய சொத்தி  உபாலி பிரபலமானவனாக அறியப்பட்டான். தனது பாதாள அதிகாரம் காரணமாக பொலிஸார் சிலரையும் தன்வசப்படுத்தினான். ஒரு சில உயர் பொலிஸ் அதிகாரிகள் கூட அவனைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இவனது குடும்பம் பொரளை கோதமி வீதியில் அமைந்திருந்ததால் அடிக்கடி பொரளை பொலிஸ் நிலையத்துக்குச் செல்வழ வழக்கமாகியிருந்தது. பொரளை பொலிஸ் நிலையத்துக்குச் செல்வது வழக்காமாககியிருந்தது.  பொரளை பொலிஸ் தலைமையதிகாரி பொலிஸ் மா அதிபருக்கு மேலான கௌரவத்தையே சொத்தி உபாலிக்கு பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பாரிய பாதாள இராசதானியையே சொத்தி உபாலி உருவாக்கியிருந்தான். அதற்கு  அரசியல் பாதுகாப்பு மட்டுமல்லாது உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆசீர்வாதமும் அமோகமாக கிடைக்கப் பெற்றிருந்தது. இந்த பாதாளக் குழுவில் மாலு நிஹால் , சீனா , ரங்கனாத் கருணாரத்ன , காத் சோம ஆகிய பெயர்போன குற்றவாளிகள் பலர் இணைந்திருந்தனர். அன்று சொத்தி உபாலியின்  பிரதான எதிரணிக் குழுவாக இருந்தது. நாவல நிஹால் மற்றும் நொயெல் அமரசிங்க தலைமையின் கீழ் செயற்பட்ட பாதாளக் குழுவாகும். இந்தக் குழுவில் சிந்தக அரசிங்க, தம்மிக அமரசிங்க , கலு அஜித் உள்ளிட்ட பெயர்போன குற்றவாளிகள் இருக்கின்றனர். நொயயெல்  அமரசிங்கவின் பிரபல பாதாளக் குழு தனது இராசதானியை அமைந்திருந்தது. ராஜகிரிய, ஒபேசேகரபுரத்திலாகும். கோதமி பாதையில் தனது இராசதானியைக் கொண்டிருந்த சொத்தி உபாலி அடிக்கடி ராஜகிரிய ஒபேசேகர பகுதியில் தாக்குதலை மேற்கொண்டிருந்தான். ராஜகிரிய இறைச்சிக்கடை ஏலத்துக்காக இவர்கள் முரண்பட்டுக்கொண்டனர். இனந்தெரியாத துப்பாக்கிதாரர்கள் நாடு முழுவதும் கொலை செய்து சொத்துக்களை நாசமாக்கி முழு நாட்டையும் பீதிக்குள்ளாக்கியிருந்தனர்.  இறைச்சிக்கடை ஏல விற்பனையின் முரண்பாடு காரணமாக நொயெல் அமரசிங்கவுக்கு மரண பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.  தனது பாதாளக் குழுவினருடன் ராஜகிரிய , ஒபேசேகரபுர பகுதிக்கு நுழைந்த சொத்தி உபாலி பட்டப்பகலில் நொயெல் அபேசேகர உள்ளிட்ட குடும்பத்தாரை கொலை செய்தனர். சொத்தி உபாலி உள்ளிட்ட அவனது குழுவினர் ஒபேசேகரபுரவிற்குள் நுழைந்து பாரிய மோசடியை செய்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் யாரும் சம்பவ இடத்துக்குச் செல்லவில்லை.

நொயெல் அமரசிங்க அவரது சகோதரர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 6 பேரை சுட்டு வெட்டியும் குண்டு வீசியும் கொலை செய்த சொத்தி உபாலியின் பாதாளக் குழுவினர் அவரது சகோதரியான ஈவா அமரசிங்கவை கடத்திச் சென்றனர். ஈவா அமரசிங்க பிரதான பாதையில் வைத்து 7,8  பேரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் முழு பிரதேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. பின் அவர் கைகள் , கால்கள் கட்டப்பட்டு , வடிகாலுக்குள் போடப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பின்னர் ராஜகிரிய பகுதி முழுவதையும் இரண்டாக்கிவிட்டு அங்கிருந்து சொத்தி உபாலி உள்ளிட்ட குழுவினர் தப்பிச் சென்றனர். ஈவா அமரசிங்கவின் இரு புதல்வர்களும் இந்தப் பிரயோகத்திலிருந்து நூழிழையில் உயிர் தப்பிக் கொண்டனர். சிந்தக தம்மிக என அழைக்கப்பட்ட இவர்களிருவரும் பிற்காலத்தில் பிரசித்திபெற்ற பாதாளக்  குற்றவாளிகளாவர். சொத்தி உபாலியிடமிருந்து தங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இவர்களிருவரும் தங்களது நெருங்கியவர்களுடன் இணைந்து சீதுவ , ரத்தொழுகம பிரதேசத்துக்கு தப்பிச் சென்றனர். சொத்தி உபாலி மேற்கொண்ட இந்தக் குற்றம் தொடர்பில் அன்று பொலிஸார் எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. எந்தவொரு பொலிஸ் முறைப்பாட்டுப் புத்தகத்திலும் இவனது பெயரல் இருக்கவில்லை.  மனிதக் கொலை , கப்பம் பெறல், தாக்குதல் , சொத்துக்களை அழித்தல் போன்ற பல குற்றங்களை புரிந்துவிட்டு எந்தவித களேபரமும் இன்றி சாதாரண பொதுமகன் போன்று இருந்தான். மேலும் அரசாங்க அதிகாரிகள் அமைச்சர்களுடனும் ஒன்றாகவே இணைந்திருந்தான்.

1988,1989,1990 காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய கலவரத்தில் இலட்சகணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர். கறுப்பு நாய்கள் என்ற துப்பாக்கிதாரிகள் அந்தக் காலத்தில் அதிகரித்திருந்தனர். சொத்தி உபாலி தலைமையிஙல் அரச அனுசரணையுடன் குழுவொன்று இயங்கியது. இந்தக் குழுவில் எத்தனை அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர் என்பதை  முடியாது. சொத்தி உபாலியின் பிள்ளைகள் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்றாலும் அந்த நால்வருக்கும் கல்வியறிவு பூச்சியமே. இவ்வாறானவர்களின் காலத்தை ஹெரோயின் , கொக்கெய்ன், அசீஸ், ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் நம் நாட்டில் ஆக்கிரமித்திருக்கவில்லை. இவர்களின் காலத்தில் இருந்தது கசிப்பு மற்றும் கஞ்சா வியாபாரங்களாகும். இந்த வியாபாரங்களால் பாரியளவில் நிதி திரட்ட முடியாத காரணத்தால் பாதாளக் குழுவின் பிரதானிகள் இதில் தலையிட்டிருக்கவில்லை. சொத்தி உபாலி தனது எதிரணிக் குழுக்களை ஒருபோதும் ஆடவிட்டு வேடிக்கைப் பார்க்கவில்லை.  தன்னை எதிர்ப்பவனை ஒரு கணம் கூட யோசிக்காமல் பரலோகம் அனுப்பிவிடுவான். ரணசிங்க பிரேமதாச இறந்ததன் பின்னர் சொத்தி உபாலியின் அதிகாரபலம் செயலிழந்தது. டீ.பீ. விஜேதுங்க அரசாங்க காலத்தில் சிறகுடைந்த பறவையானான் சொத்தி உபாலி. தான் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு சிறையில் இருந்த அவன் , மீண்டும் பொரளைக்கு வந்தது ஒன்றுமில்லாதவன் போலேவே அவனிடம் இருந்து பாதாள அதிகாரபலம் அப்போது அவனிடம் இருக்கவில்லை.

தம்மிக அமரசிங்க , சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் பிரபல அமைச்சரொருவரின் நெருங்கிய உதவியாளனாக நியமிக்கப்பட்டிருந்தான். தனது குடும்பத்தை நாசமாக்கிய சொத்தி உபாலியை கொலை செய்ய திட்டம் தீட்டினான். இவனைக் கொலை செய்வதில் அதிக ஆர்வம் காட்டியது கடுவல வசந்தவே. இவனின் சகோதரன் சில வருடங்களுக்கு முன்னர் சொத்தி உபாலி உள்ளிட்ட பாதாளக் குழுவினால் கொலை செய்யப்பட்டிருந்தான். அதனால் பழியை தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான். இராணுவ விசேட அதிரடிப்படையிலிருந்து தப்பிவந்த இராணுவச் சிப்பாயொருவர் கடுவல வசந்தவின் குழுவோடு சம்பந்தப்பட்டிருந்தான். அஜித் என்ற அந்த இராணுவ வீரர் திறமையான துப்பாக்கிதாரர். அதனால் சொத்தி உபாலியை கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தை கடுவல வசந்த அஜித்துக்கு பெற்றுக்கொடுத்தான்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையொன்றுக்காக உபாலி வந்து கொண்டிருப்பதாக கடுவல வசந்தவுக்கு தகவலொன்று கிடைத்தது. அஜித்தை அழைத்து உபாலியை கொலை செய்துவிட்டு வருமாறு கூறினான். அஜித் உள்ளிட்ட வசந்தவின் உதவியாளர்கள் 7, 8  பேர் பிலியந்தலை நோக்கி சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் சொத்தி உபாலி பிலியந்தலையில் கொழும்பு நோக்கிச் செல்லும் பொருட்டு பஸ்ஸில் ஏறியிருந்தான். பஸ்ஸுக்குள் நுழைந்த கமுவல வசந்தவின் சகாக்கள் சொத்தி உபாலியை தாக்கி பஸ்ஸிலிருந்து கீழே இழுத்துத் தள்ளினர். பின்னர் உபாலியை வானொன்றுக்குள் அடைத்து பிலியந்தலை போகுன்தர பிரதேசமயானப் பகுதிக்கு கொண்டுவந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட சொத்தி உபாலி நினைவிழுந்து காணப்பட்டான். பின்னர் அவனை வானிலிருந்து இழுத்து கீழே போட்டு சுட்டுத்தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சொத்தி உபாலி கொலை செய்யப்பட்ட பின்னர் அவனது மனைவியும் நான்கு பிள்ளைகளும் அநாதரவாகினர். அவர்களுக்கு வாழ்க்கையை கொண்டு செல்ல ஒழுங்கான வருமான மார்க்கம் கூட இருக்கவில்லை.  வாழ்க்கையை வெற்றிகொள்ளும் நோக்கில் சொத்தி உபாலியின் இரு மகன்மாரும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினர். லக்ஷித பெர்னாண்டோ சிலகாலம் டுபாய்க்கு சென்று தொழில் புரிந்தான். பல வருடங்களாக அங்கு வேலை செய்த அவன் நாட்டுக்குத் திரும்பியது வியாபாரமொன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயாகும்.

மாதாந்த தவணைக்கு வானொன்றை கொள்வனவு செய்த லக்ஷித , கட்டுநாயக்க விமான நிலைய வாடகை வாகன நிலையத்துக்கு கொடுத்தான். சிலகாலம் இந்த வாடகை சேவையில் ஈடுபட்ட அவனுக்கு வருமானம் போதாமல் இருந்தது. அவனது வாகன தவணைப் பணத்தைக் கூட அவனால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் வருமான மார்க்கத்தை அவன் தேர்ந்தெடுத்தான். ஹெரோயின் வியாபாரமே அதிக பணத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரே வழியென லக்ஷித அறிந்து வைத்திருந்தான்.  கொழும்பு ஹெரோயின் வியாபாரத்தில் பிரசித்திபெற்ற டிலானுடன் சின்னதாக ஒரு நட்பு லக்ஷிதவுக்கு ஏற்பட்டிருந்தது. அதன்போது டிலான் சிறையிலேயே இருந்தான். வெலிக்கடை சிறையில் இருந்து கொண்டே தனது ஹெரோயின் வியாபாரத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்திச் சென்றான் டிலான்.

கைத்தொலைபேசியூடாக டிலானின் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொண்ட லக்ஷித அவனது ஹெரோயின் வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டான். டிலானுக்குரிய ஹெரோயின் தொகையை மொரட்டுவ , மொரட்டுமுல்ல, ரத்மலானை , கல்கிஸ்ஸ போன்ற பிரதேசங்களெங்கும் விநியோகிக்கும் பொறுப்பு லக்ஷிதவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. மொரட்டுவ, லக்ஷபத்திய பிரதேசத்தில் வாடகை வீட்டில் இருந்த லக்ஷித , மொரட்டுமுல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி கொண்ட வீட்டை ஹெரோயின் விற்பனைக்காக வாடகைக்குப் பெற்றுக்கொண்டான். டிலானின் ஹெரோயின் வியாபார சகாக்கள் தொகை தொகையாக ஹெரோயினை கொண்டுவந்து லக்ஷிதவிடம் கொடுத்தனர்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு லக்ஷித தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றது இந்த சந்தர்ப்பத்திலேயாகும். பொலிஸ் அதிகாரிகள் லக்ஷதவின் வீட்டை சுற்றிவளைத்து பரிசோதனை மேற்கொண்டனர். வீட்டிலிருந்து ஹெரோயின் மற்றும் ரிஜீட்டர் ரக துப்பாக்கியொன்றையும் மீட்டனர். லக்ஷிதவின் இளைய சகோதரன் அந்த சந்தர்ப்பத்தில் விளக்கமறியலில் இருந்தான். இவனும் பிரதான ஹெரோயின் வியாபாரியாவான். ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இவன் மஹஉலுகெதர சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். சொத்தி உபாலி தனது பாதாள அதிகாரம் மூலம் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து மிரட்டிய காலமொன்று இருந்தது. இருப்பினும் அவனது இறுதிக்காலம் மயானத்திலேயே முடிவடைந்ததுதான் சோகக் கதை.

எந்தவொரு பாதாளக் குழு உறுப்பினருக்கும் இதுதான் தலையெழுத்து . இது முழு பாதாளத்துக்கும் பொதுவான தண்டனையாகும். தனது தந்தையின் வழி சென்று ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு , பாதாள உலகை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் சொத்தி உபாலின் புதல்வர்களுக்கு என்றோ ஒரு நாள் இதே கதிதான் ஏற்படும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக